Penmai eMagazine June 2015

Penmai

Administrator
Staff member
#1
Dear Friends...

Download Penmai eMagazine here, Penmai eMagazine June 2015.

உங்களோடு சில நிமிடங்கள்,
உணவே மருந்து, மருந்தே உணவு என்ற பழமொழியுடன் வாழ்ந்த மிக உயர்ந்த தமிழ் இனம் இன்று, துரித உணவினால், துரித வாழ்வு மற்றும் மரணத்துடன் வாழ்கிறோம்…

உறவினர்களின் விருந்தோம்பலுக்கு பெயர் போன நாம் இன்று அவசர யுகத்தில் உறவுகளுக்கான இடத்தை நோய்க்கும் மருந்துகளுக்கும் கொடுத்துவிட்டோம்.

உலகிலேயே அதிக அளவு துரித வகை உணவு விற்பனை செய்து கோலோச்சிய அமெரிக்காவின் MCdonald நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான அங்காடிகள் மூடப்பட்டது. இதற்கு அங்கு இயற்றப்பட்ட சட்டம் மற்றும் அதிபர் ஒபாமாவின் மனைவியின் துரித வகை உணவிற்கு எதிரான தீவிரப் பிரச்சாரமே காரணம்.

இது தவிர கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து, நார்வே, ஸ்வீடன், தாய்வான், மெக்ஸிகோ, பெரு, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகள் துரித வகை உணவுகளை பள்ளிகளில் விற்பனை செய்யத் தடை விதித்துள்ளன. மேலும் சில நாடுகளில் விளம்பரங்களுக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலாச்சாரத்தை அழிக்க நல்ல வழி, இதுபோல் நம் அரசாங்கமும் சட்டம் இயற்றுவதும் மற்றும் மாணவர்களுக்கும், சமுதாயத்திற்கும் விழிப்புணர்வு அளிப்பதுவேயாகும். சில வருடங்களுக்கு முன்பு, பிறந்த குழந்தைகளுக்கான பால்/உணவு பொருட்களுக்கான விளம்பரம் தடை செய்தது போல் இதற்கும் தடை செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் snacks & lunch-ல் கட்டாயம் பேக்கரி, பொரித்த உணவுகள், நூடுல்ஸ் போன்ற உணவுகள் கொடுக்கக் கூடாது என்று கூற வேண்டும்.

கலப்படம் மற்றும் உடலுக்குக் கேடான ரசாயனங்கள் துரித உணவில் மட்டும் இல்லை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களிலும் உள்ளது. இயற்கையின் படைப்பு, எங்கு என்ன என்ன விளைகிறதோ அது அந்த தட்பவெப்ப நிலையில் உள்ள உயிரினங்களுக்குப் போதுமானது. நம் நெல்லிக்கனியிலும், கொய்யா பழத்திலும் இல்லாத சத்தா, வெளிநாடுகளில் இருந்து ரசாயனங்கள் மற்றும் மெழுகு மூலம் பதப்படுத்தப்பட்ட ஆப்பிளிலும், ஸ்டாபெர்ரியிலும் இருந்து விடப் போகிறது? இயற்கை நம்மை அரவணைத்தே செல்கிறது. நாம் தான் அதனிடம் இருந்து எல்லாவற்றிலும் விலகிச் செல்கிறோம்.

இன்று நாம் நேரமின்மையால் துரித உணவு வாழ்க்கைக்கு அடிமைப்பட்டால், நாளை நாம் தான் அதற்கான மிக உயர்ந்த விலையான நம் ஆரோக்கியத்தை இழக்க நேரிடும்.


...உங்கள் தோழி இளவரசி...Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka and Kartiga who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

Sriramajayam

Registered User
Blogger
#3
ஜூன் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். உயர்நிலை படிப்புகள் மற்றும் மற்ற செய்திகள், சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.
பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.

 

Attachments

chan

Well-Known Member
#4
வார பத்திரிகை தரத்துடன் வந்துள்ளது ,ஒவ்வொரு மாதமும் நல்ல தரத்துடன் வருகிறது ,நாங்கள் story link எடுக்கும் ஒரு தளத்தில் கடந்த சில மாதமாக தமிழ் வர பத்திரிகை லிங்க் உடன் பெண்மை இதழ் link கும் வருகிறது ,நம் தளத்தை தாண்டி வேறு தளத்திலும் இடம் பிடித்ததை பார்க்க மகிச்சியாக இருந்தது
 

Penmai

Administrator
Staff member
#5
Thank you [MENTION=41663]gkarti[/MENTION]. :)

மிக்க நன்றி [MENTION=42765]Sriramajayam[/MENTION]. :)
 

Uma manoj

Well-Known Member
#7
இந்த மாத மின்இதழில் எங்கள் மகனின் ஓவியம் இடம் பெற்று இருந்தது மிக மிக சந்தோசம்...தேர்வு செய்த பெண்மை குழுவுக்கு மிக்க நன்றி....
 

Penmai

Administrator
Staff member
#11
வார பத்திரிகை தரத்துடன் வந்துள்ளது ,ஒவ்வொரு மாதமும் நல்ல தரத்துடன் வருகிறது ,நாங்கள் story link எடுக்கும் ஒரு தளத்தில் கடந்த சில மாதமாக தமிழ் வர பத்திரிகை லிங்க் உடன் பெண்மை இதழ் link கும் வருகிறது ,நம் தளத்தை தாண்டி வேறு தளத்திலும் இடம் பிடித்ததை பார்க்க மகிச்சியாக இருந்தது
மிக்க நன்றி தோழி [MENTION=27267]chan[/MENTION] பெண்மை மின் இதழ் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு. நாங்களும் ஒரு சில இணையத்தில் பகிரப்படுவதை கண்டோம், பெண்மை மின் இதழ் பெண்மை இணையத்தை தாண்டி பகிரப்படுவது அதன் தரத்தினால் என்பதை அறிந்து எங்களுக்கும் மகிழ்ச்சி.
 

Penmai

Administrator
Staff member
#12
sariyaana samayathil vanthu irukkum thalaiyankam....arumai ilavarasi.......
இந்த மாத மின்இதழில் எங்கள் மகனின் ஓவியம் இடம் பெற்று இருந்தது மிக மிக சந்தோசம்...தேர்வு செய்த பெண்மை குழுவுக்கு மிக்க நன்றி....
perfect thalayangam, sariyana samayathil correcta point out panni irukkeenga illavarasi, thanks. keep rocking.:thumbsup
உங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி தோழி [MENTION=16406]selvipandiyan[/MENTION], [MENTION=25359]Uma manoj[/MENTION] and @ kvsuresh. எங்களால் இயன்ற விழிப்புணர்வு. :)
 
#14
அருமையான, அவசியமான தலையங்கம் இளவரசி.....
இன்றைய காலகட்டத்தின் பிரதிபளிப்பு.....
 
#15
ஹாய் பெண்மை டீம்,

நல்ல தகவல்களுடன் கூடிய மிக பயனுள்ள மின்இதழ்:thumbsup..உங்க சேவை தொடர என் வாழ்த்துக்கள்:biggringift: ....
 

Penmai

Administrator
Staff member
#18
அருமையான, அவசியமான தலையங்கம் இளவரசி.....
இன்றைய காலகட்டத்தின் பிரதிபளிப்பு.....
மிக்க நன்றி தோழி சித்ரா, எங்களால் முடிந்த விழிப்புணர்வு :)
 

Penmai

Administrator
Staff member
#19
ஹாய் பெண்மை டீம்,

நல்ல தகவல்களுடன் கூடிய மிக பயனுள்ள மின்இதழ்:thumbsup..உங்க சேவை தொடர என் வாழ்த்துக்கள்:biggringift: ....
உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி தோழி [MENTION=26576]repplyuma[/MENTION].
 

Penmai

Administrator
Staff member
#20
It was very nice Ilavarasi sis...Congrats & Thanks to all friends who contribute for the e-magazine...Keep Rocking friends...:thumbsup:thumbsup:thumbsup

Thank you so much for your valuable comments [MENTION=18596]malbha[/MENTION]. :)