Penmai eMagazine June 2016

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine June 2016.

உங்களோடு சில நிமிடங்கள்,
தமிழ்நாட்டில் பரபரப்பாக தேர்தல் முடிந்து மிகுந்த எதிர்மறையான கருத்துகள் இருந்தும் கடந்த 5 வருடங்களாக ஆட்சி செய்தவர்களே மறுபடியும் ஆட்சியை பிடித்து அரியணையில் ஏறியுள்ளனர். ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே பல நல்லத் திட்டங்களைத் துவக்கியுள்ளனர், எதிர்பாராத நல்ல மாற்றங்கள் என்று பல செய்து பலரது எதிர்பார்ப்பினை நிறைவேற்றி உள்ளார்கள். இவைத் தொடங்குவதோடு இல்லாமல் நாடாளும் அடுத்த 5 வருடங்களும் தொடர்ந்து நடைமுறைப் படுத்தி மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்தால் நாட்டிற்கு ஜெயம் என்றும்!

தேர்தல் பரபரப்பைத் தாண்டி நாளிதழ்களில் பெரும்பாலும் இடம் பிடத்த சிலைக் கடத்தல் ஆன்மீக ஆர்வலர்களிடம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எத்தனை எத்தனை சிலைகள் பணத்திற்காக பல வெளிநாடுகளுக்கு அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்போடு திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெரும்பாலும் கடத்தப்படும் சிலைகள் பணக்காரர்களின் வீடுகளை அலங்கரிக்கவே. நாம் கடவுளாக பார்க்கும் சிலைகள் கடத்தப்பட்டு உல்லாச வீடுகளில் ஒய்யாரமாக அழகுப்பொருளாகவே வைக்கப்பட்டு வருகிறது. அழகு பார்க்க என்ன விலை என்றாலும் பரவாயில்லை என்று பல கோடி விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க, அரசு முறைப் பயணமாக அமெரிக்காச் சென்றுள்ள பிரதமர் மோடியிடம் 670 கோடி மதிப்புள்ள 200 சோழர் கால சிலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது இன்று நேற்றல்ல பல நூற்றாண்டு காலங்களாகவே தொடர்ந்து நடைபெற்று வரும் மூன்றாம் தர வர்த்தகமே! விழித்தெழும் அரசாங்கம் இந்தச் சிலை கடத்தலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து கோவில்களின் பாதுகாப்பை அதிகப்படுத்த நடவடிக்கை இனியாவது எடுக்க வேண்டும்.

நாகரீகம் மற்றும் பண்பாட்டை தெரிந்த மன்னர்கள் அவர்கள் காலங்களில் எதிரி நாட்டு மன்னர்களை அடியோடு ஒழித்து, மாடமாளிகைகளை மண்ணோடு மண்ணாக்கியவர்கள் கூட இறைவனின் ஆலயத்தில் செங்கலைப் பெயர்தததில்லை. மீறி சிலர் சிலைகளை எடுத்து வந்தாலும் கூட அவர்களின் கோயில்களில் தான் வைத்தார்கள்.

கடத்தப்படும் சிலைகள் வெறும் கற்கள் அல்ல. அவை நம் நாட்டின் பாரம்பரியம், நம் கலைகள் மற்றும் நம் நம்பிக்கைகளைச் சுமந்துள்ள இந்தியாவின் பொக்கிஷங்கள். நம் கலையுணர்வையும், அறிவியல் அறிவையும் உலகத்திற்கு எடுத்துரைக்கும் காலக்கண்ணாடி.
...உங்கள் தோழி இளவரசி


Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#6
Very nice edition :thumbsup Recipe of the month superb kudos to all the contributors. :cheer:
 

kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,418
Likes
16,820
Location
Singapore
#7
TFT Karthy! @gkarti

தலையங்கம் பிரமாதம், இளவரசி @Penmai

எப்பவும் போல magazine அழகா வந்திருக்கு. Kudos to Penmai Team:thumbsup:thumbsup
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#8
Thanks for tagging me karti, Nachunu oru thalayangam, kudos to illavarasi, aa usual rocking penmai team.:thumbsup
 

Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#9
அருமையான தலையங்கம்...விழிப்புணர்வை ஏற்படுத்தும்....
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,269
Likes
25,774
Location
Sri Lanka
#10
கலையுணர்வையும், அறிவியல் அறிவையும் உலகத்திற்கு எடுத்துரைக்கும் காலக்கண்ணாடி.
அருமையாக சொன்னீர்கள் இளவரசி. விலைமதிக்க முடியாத இந்த பொக்கிஷங்களை காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும்.

நன்றி கார்த்தி.........
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.