Penmai eMagazine March 2016

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here,
Penmai eMagazine March 2016.

உங்களோடு சில நிமிடங்கள்,
சமீப காலங்களில் கொலை, தற்கொலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில் ஒரு ஆண்டில் 8-9 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்றால் அதில் 10 சதவிகிதம் இந்தியர்களின் உயிர்களே! அதிலும் இளைஞர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

இங்கு தான் வாழ்வை ஆரம்பிக்கும் சிறு பிள்ளைகள் முதல் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அதிகாரிகள்,காவலர்கள், IAS அதிகாரிகள் என்று பலர் இந்த சமூக பந்தத்தில் இருந்து விடுபட்டுக் கொண்டு வாழ்வை முடித்துக்கொள்கின்றனர்.

கொலைகள் மட்டும் சமூகக் குற்றம் அல்ல! தற்கொலைக்கு தள்ளப்படும் ஒவ்வொரு மனிதனின் மனநிலையும் இந்தச்சமூகத்தின் குற்றம் தான்! ஆம், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்படும் ஒரு தாய் தன் பிள்ளையோடு தற்கொலை செய்வது இந்த சமூகத்தின் குற்றமே! அவர்களை ஆதரிக்காமல் இருக்கும் அந்த பெண்ணின் தாய், தந்தை மற்றும் சமூகத்தின் குற்றமே! அவரிடம் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்தும் கணவன் மட்டும் புகுந்த வீட்டின் குற்றமே!

பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பில் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்த மாணவனின் தற்கொலை இந்த சமூகத்தின் குற்றமே! அந்த மாணவனை ஆதரிக்காத, மதிப்பெண்களை மட்டுமே குறிவைக்கும் ஆசிரியர் மற்றும் பள்ளியின் குற்றமே! அந்த மாணவனுக்கு படிப்பைத் தவிர உலகம் மிகவும் பெரியது. கல்வி இல்லையென்றாலும் சாதிக்க முடியும் என்று உணரவைக்காத பெற்றோறின் குற்றமே! எப்போது பார்த்தாலும் என்ன ரேங்க், என்ன மதிப்பெண், எந்தplacement தேர்ச்சி பெற்றாய் என்று அவனை நிலைகுலைய வைக்கும் உறவினர்கள் மற்றும் சமூகத்தின் குற்றமே!

சக மாணவன் ராகிங் மூலம் அசிங்கப்படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தூண்டுவது ஒழுக்கம் மற்றும் மனிதநேயத்தைப் போதிக்காமல் வளர்த்த பெற்றோர், மற்றும் ஆசிரியர்களின் குற்றமே!

வேலை இல்லாமல் தன் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் இழக்கும் உயிர் இந்த சமூகத்தின் குற்றமே! அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தாத இந்த அரசாங்கத்தின் குற்றமே!

விவசாயிகள் கடனாளிகளாக தற்கொலைச் செய்து கொள்ளும் இழிநிலைக்கு தள்ளப்பட்ட்டது இந்த அரசாங்கத்தின் தோல்வியே!

இப்படி நேரடியாக வரதட்சணை, கல்வி, மதிப்பெண்கள், வேலை வாய்ப்பு, வங்கிக் கடன்கள் மறுக்கப்படுதல், ஆண் ஆசிரியர்கள், உடன் பணி செய்யும் ஆண் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத் துறையினரின் பாலியல் தொல்லை, ராகிங் கொடுமைகள் சார்ந்த மன அழுத்தங்கள் எனக் காரணங்களின் பட்டியல் நீள்கிறது.

ஒவ்வொரு தற்கொலையும் ஒரு சமூகக் குற்றமாகப் பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு தற்கொலையின் பிரச்சினையை சமூக அக்கறையோடு ஆய்வு செய்து தற்கொலைக்கான காரணங்களை வேரோடு களைவதற்கான அறிவுப்பூர்வமான நிரந்தர தீர்வுகளைக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு அனைத்திற்கும் இயங்கப்படாத சட்டங்கள் அமலில் இருக்கின்றது! அவற்றை முறைப்படுத்துவதினால் மட்டுமே ஒரு நல்ல ஜனநாயக இந்தியாவை உருவாக்க முடியும்.


...உங்கள் தோழி இளவரசிThanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

sriju

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 6, 2012
Messages
6,781
Likes
15,675
Location
coimbatore
#2
Hi Ila akka n @Penmai team :)

Valakam pola romba arumaiyana magazine...

Thalaiyangam romba valiya iruku ka... Tharkolai kal kandippa epdiyavathu thadukka pada vendiya visayam... Theervu kaaga poruthirupom ka..

Kudos to penmai team :thumbsup
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,494
Likes
148,303
Location
Madurai
#3
Wonderful Write Up Kaa.. :) Thats the Fact la.. And thanks much for the Extra pages.. Design, as Usual :thumbsup

Cheers to all the Contributors :)
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#4
A very perfect magazine hats off to the team :thumbsup
 

kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,418
Likes
16,820
Location
Singapore
#5
Wonderful Editorial இளவரசி! ரொம்ப சரியாக சொன்னீர்கள். எல்லாம் சமூகத்தின் குற்றம் தான் என்றாலும் இந்த மாதிரி இக்கட்டுகளை எதிர்கொண்டு சமாளிக்கும் திறமையை வளர்த்து விடாததும் சமூகக் குற்றமே....

என் மகளின் ஸ்கெட்ச் வெளியானது இன்ப அதிர்ச்சி... :cheer::cheer:அவளுக்கும் எனக்கும்.

எப்பவும் போல நமது moderators ரொம்பவே மெனக்கெட்டுள்ளது நன்றாகத் தெரிகிறது. இதே போல பெண்மை மேலும் மேலும் ஜொலிக்க வாழ்த்துக்கள்!:thumbsup
 

chira

Friends's of Penmai
Joined
Jan 26, 2015
Messages
304
Likes
600
Location
chennai
#6
ஆழமான கருத்துக்கள் கொண்ட தலையங்கம் ,வரதட்சணை பிரச்னை எழும் போது , அந்த பெண்ணை ஆதரிக்காத பெற்றோர் குற்றம் புரிந்தவர்கள் என்ற கருத்து அருமை , அதில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு , திரும்பி போக வழி இல்லாமல் வாழவும் வழி இல்லாமல் பல மரணங்கள் சம்பவிக்கிறது .
பெண்மை இ மகசின் கலர்புல்லா இருக்கு, சுவாரிசியமான பல குட்டி குட்டி விஷயங்கள் , அருமை . it was a pleasure to read .
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,863
Likes
140,750
Location
Madras @ சென்னை
#7
மார்ச் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். பங்குனி உத்திரம் செய்திகள் மற்றும் மற்ற செய்திகள், சிறப்பு பகுதியுடன் 70 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.

 

Attachments

Last edited:

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#8
arumayan thalayangam, azhagana azhamana karuthukkalai konda thalayangam. padikkunbodhe varuthama irukku. ella pagesum arumai. Hats off to penmai team. wishes to all the contributors. penmai men melum milirattum.:thumbsup:thumbsup:thumbsup:thumbsup:thumbsup
 

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,916
Location
nederland
#9
எப்போதும் போல அழகான மின்னிதழ்! ஆசிரியர் தலையங்கம் 'நச்'

என் பிட்டு செய்முறையும் இருப்பதைப் பார்த்து ஹாப்பி..ஹாப்பி .

மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் பெண்மை .

கார்த்தி tag செய்ததுக்கு நன்றிடா
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,010
Location
Atlanta, U.S
#10
வழக்கம்போல அருமையான தலையங்கம்... சூப்பர் இளவரசி அக்கா & பெண்மை டீம்.... :thumbsup
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.