Penmai eMagazine May - 2014!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

அன்பு பெண்மை தோழமைகளுக்கு வணக்கம்,

Download Penmai eMagazine here,
Penmai eMagazine May 2014

உங்களோடு சில நிமிடங்கள்,

நம் பெண்மை தோழி இணைய உலகில் கால் பதித்து ஆறு வருடங்களை வெற்றிகரமாக கடந்து, ஏழாவது அகவையில் (மே 20) அடியெடுத்து வைக்கப் போகும் இந்த இனிய தருணத்தில், பெண்மையின் ஆக்கப் பாதையில் உறுதுணையாக இருந்த நம் இணைய நல்லுறுப்பினர்கள், வழிகாட்டிகள், தலைமை வழிகாட்டிகள் மற்றும் பெண்மை தளத்தின் நலம் விரும்பிகள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பால் மட்டுமே பெண்மையின் இத்தகைய வளர்ச்சி சாத்தியம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இந்த இனிய தருணத்தில் மற்றுமொரு மகிழ்ச்சியான விஷயம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நாம் வளரும்போது நம்மைச் சேர்ந்த நம் சமுதாயத்திற்கும் நம்மால் முடிந்த அளவு பயன்தக்க செயல் செய்யவேண்டும் என்று மனதில் என்றோ போட்ட வித்து இன்று முளை விட்டு உங்கள் முன் துளிர் விட்டுள்ளது. ஆம்... பெண்மை அறக்கட்டளை! நம் சமுதாய நலனுக்காக நம்மால் இயன்ற முயற்சிகள் எடுக்கவும் செயல்படவும் பெண்மை அறக்கட்டளையை நிறுவி உள்ளோம்.

பெண்களை பொருளாதாரத்தில் உயர்த்தும் பொருட்டு, அவர்கள் மேற்கொள்ளும் சுயதொழிலுக்கு உதவுவது. "தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற நம் முண்டாசுக் கவி பாரதியின் தார்மீகக் கோபத்திற்கு பதிலளிக்கும் விதமாக பசி, வறுமையை ஒழிப்பது. மற்றும் வறுமையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான உணவும் மருத்துவ உதவிகளும் செய்வது. ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது. பூமி வெப்பமயமாதலை தவிர்க்கும் பொருட்டும், சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டும் செடிகள் மற்றும் மரக்கன்றுகளை நடுவதுடன், அவற்றின் வளர்ச்சியை கண்காணித்து, பாதுகாத்து வளர்ப்பது. நம் வாழ்வுடன் இரண்டற கலந்துவிட்ட பல கோயில்கள் இன்று சிதிலமடைந்து, உருக்குலைந்து உள்ளன. அத்தகைய கோயில்களைத் தேர்ந்தெடுத்து புதுப்பிப்பது.

நல்லதோர் இம்முயற்சிக்கு தன்னார்வலர்கள் எங்களுடன் கைக்கோர்த்து உங்கள் ஆதரவை பெண்மை இணையத்திற்கு தந்தது போல் அறக்கட்டளைக்கும் தருவீர்கள் என்று நம்புகிறோம். எங்கள் செயல்திட்டங்கள் யாவும் ஒரே நாளில் செயல்படுத்தப்படக் கூடியதல்ல. ஆனால் இனி வரக்கூடிய நாட்களில் மேற்சொன்ன திட்டங்கள் யாவையும் செம்மையுற செயல்படுத்துவோம்.

பெண்மை அறக்கட்டளையின் தொடக்க விழா, மே மாதம் 20-ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. உங்கள் அனைவரையும் இவ்விழாவிற்கு இனிதே வரவேற்கிறோம்.

அறமே அகிலம் காக்கும்! அறம் செய்ய கரம் கோர்ப்போம்!!

Formal Invitation to my beloved fellow members!

Penmai Foundation Inaugural Invitation.jpg1.jpg
Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Parasakthi and Sumathi Srini who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#2
எது வேண்டுமோ இங்கே பெண்மையில் காணலாம் என்னுமளவுக்கு அனைத்தும் இங்கே சங்கமம்.

அழகிய மிடுக்கோடு இன்னும் ஒரு வருடம் கடக்கிறாள் மேலும் அழகினை கூடிக்கொண்டே. ஆம் அரக்கட்டளையை தான் சொல்லுகிறேன்.

தளத்திற்கு தந்த, வந்த அதே வரவேற்ப்பும், ஆதரவும் என்றும் அவளின் செல்ல பிள்ளைக்கும் எங்களிடம் என்றும் உண்டு.

வான் முட்டும் சிகரம் எட்டட்டும் என்றென்றும் :thumbsup என அவளை வாழ்த்துகிறேன்.

பெண்மை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)

அழைப்பிதழுக்கு நன்றி :)
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#3
Thanks for the invitation. penmai menmelum valarnndhu in the Dharani muzhuvadhum pugaz parappa vendum enna vazthugiren. proud to be a member of penmai.:thumbsup

:cheer::cheer::cheer: to PENMAI.
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,926
Location
Chennai
#4
Hi Penmai Team,
Well done again. Informative, useful, creative, spiritual and yummy kalavai.
Trust aarambikka enadhu manamaarndha vaazhthukkal.
Keep going. Best wishes..
Tamil New year contest winner aakinadhuku meendum our murai ingeyum thanks koorikolla virumbugiren
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,724
Location
Madras @ சென்னை
#5
மே மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். அறுபது பக்கத்துடன் டுடே Vs 2020 சிறப்பு செய்திகளுடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்!


graphics-flowers-457890.gif
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#6
ஹாய் ஷக்தி

இந்த மாதம் emagazine புத்தகத்தில் வந்த வைபவலக்ஷ்மி பற்றிய செய்தி மிகவும் அருமை. நான் இப்போது தான் அந்த பூஜையை பற்றி தெரிந்து கொண்டேன். இதை எங்களுக்கு சொன்ன உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

இந்த மாத புத்தகம் மிகவும் அருமை. அதை வடிவமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.