Penmai eMagazine November 2015

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine November 2015
.

உங்களோடு சில நிமிடங்கள்,

பெண்மை தன் மாத இதழின் நான்காவது மலரோடு பயணிக்கிறாள்! இதற்கு உறுதுணையாக இருந்த தோழமைகளுக்கும், பெண்மையின் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

இயற்கையின் படைப்பில் உலகில் உள்ள அனைத்தும் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான படைப்புகளே! எவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தாலும் இயற்கையால் படைக்கப்பட்டதை முழுவதுமாக மனிதனால் படைக்க முடியாது.

இந்த பரந்த உலகமும் பிரபஞ்சமும் மனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இங்கு படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களுக்கும் இந்த உலகம் சொந்தம். ஒன்றின் வாழ்விற்காகவே மற்றொன்று படைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் எந்த ஒன்றை அழித்தும் மற்றொன்று வாழ முடியாது. அப்படி வாழும் வாழ்க்கை என்றும் நிலைக்கவும் செய்யாது! நாம் அனைவரும், இங்குள்ள அனைத்தும் சங்கிலித்தொடர் போல் இயற்கையோடு இணைக்கப்பட்டுள்ளது.

இயற்கை அளித்த மரங்கள், வற்றாத ஆறுகள், கனிமவளங்கள் போன்றவற்றை மனிதனின் தேவை மற்றும் பணத்திற்காக அழித்து அதையும் தாண்டி இன்று, நாம் தினசரி உண்ணும் உணவுக்குக் காரணமாக இருக்கும் உயிரினங்களையும் ஒழித்துக் கட்டிக் கொண்டிருப்பது, கொடுமைகளின் உச்சம்.

"இந்த சின்னஞ்சிறு உயிரினம் மட்டும் பூமியில் தோன்றியிருக்காவிட்டால், பூமியின் முகம் இப்படி இருந்திருக்காது" என்று மண்புழுவைப் பற்றி பரிணாமவியலாரின் தந்தை என்று அழைக்கப்படும் சார்லஸ் டார்வின் வியந்துள்ளார். இவருக்கு அடுத்து, "தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!" என்று அணு இயலின் தந்தை என அறிவியல் அறிஞர்களால் போற்றப்படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதியுள்ளார்.

தேனீக்கள் தான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம் தேனீக்கள்தான். அவற்றின் ஞாபகசக்தி மற்றும் தகவல் பரிமாற்ற முறை துல்லியமானது.

கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் இந்தத் தேனீக்கள் கூட்டம் கூட்டமாக காணாமல் போய்விடுகின்றன அல்லது செத்து விழுகின்றன. இது தொடர்பாக நடந்த ஆய்வில் தேனீக்களின் இறப்பிற்கு முக்கியமாகக் கூறப்படுவது மரபணு மாற்றுப் பயிர்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்கள். இதில் உள்ள வேதிப்பொருள் தேனீக்களின் நினைவுத்திறனை மழுங்கச் செய்வதால் அவைகள் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடுகின்றன. வேளாண் பொருளா-தாரத்தில் பெரும் அழிவை சந்தித்த அந்த நாடுகள் விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு என்று ஆய்வின் மூலம் தெரிந்து கொண்டு, அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள், பூச்சிகொல்லிகள் போன்றவற்றைத் தடை செய்து விவசாய உற்பத்தியை பெருக்குகின்றனர்.

இயற்கை தன்னை பாதுகாத்துக்கொள்ளத் திருப்பி அடிக்கவும் செய்யும்! அதுவரை செல்லாமல், இயற்கை தன்னை சரிசெய்து கொள்ள நம்மால் ஆன உதவிகள் செய்வோம்! இவையும் சங்கிலித்தொடர் தான். நாம் ஒன்றை சரி செய்தால் இயற்கை தன்னை பத்து மடங்கு சரி செய்து கொள்ளும்!
...உங்கள் தோழி இளவரசிThanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#2
[FONT=verdana, Tahoma, Calibri, Geneva, ]நீங்கள் சொல்வது போல் இயற்கை எவ்வளவு அழகாக ஒவ்வொரு உயிரினத்தையும் மற்றதின் மீது சார்ந்து வாழும் சங்கிலி தொடர்பான வாழ்க்கையை கொடுத்துள்ளது. [/FONT]
[FONT=verdana, Tahoma, Calibri, Geneva, ]
[/FONT]
[FONT=verdana, Tahoma, Calibri, Geneva, ]சமீபத்தில் தோழி துர்கா கூட தேனியை பற்றியும் அதன் இன்றியமையாமை பற்றியும் விரிவாக இங்கு பகிர்ந்தார். [/FONT]
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,438
Likes
148,249
Location
Madurai
#3
// பெண்மை தன் மாத இதழின் நான்காவது மலரோடு பயணிக்கிறாள்! //

Huhuhu.. Congo Kaa! Thanks for your Continued Inspiration :)

And the Outlook is Awesome.. Liked much your Last Statement! Design is fantabulous Kaa, Esp that Design for Milk-ghee Recipes :thumbsup Cheers!
 

malarbharath

Ruler's of Penmai
Joined
Sep 22, 2011
Messages
18,031
Likes
9,184
Location
toronto
#4
Congrats Penmai for 4th eMagazine ,Thanks for the wonderful design and look Ila sis... Thanks and congrats for all the contributors who make it happen...Special thanks to our lovely Moderators Karti,Sumi sis and Jayanthi sis... my wishes for all our Penmai's future success ...:cheer::cheer::cheer:
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,467
Likes
140,711
Location
Madras @ சென்னை
#5
நவம்பர் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். கார்த்திகை தீபம் செய்திகள், பால் மற்றும் நெய் சமையல் குறிப்புகள் மற்றும் மற்ற செய்திகள், சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.​Thx u GK 4 tagging
 

Attachments

kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,418
Likes
16,820
Location
Singapore
#6
Congratulations Penmai Team.

The November month magazine has come out well as usual.

Keep it Up!:thumbsup
 

ishitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 22, 2014
Messages
2,089
Likes
6,607
Location
tirunelveli
#7
congrats penmai team for 4th e-magazine:cheer:!

asusual kalakkal magazineHi 5

:thumbsup ilavarasi sis!
 

sharamsn

Commander's of Penmai
Joined
Aug 4, 2015
Messages
1,344
Likes
2,124
Location
puducherry
#8
Congrats penmai team for 4th e-magazine :cheer::cheer:.
It has come out well asusal.very nice.
Thnx for the wonderful design and content :).
Keep it up...:thumbsup
 

ilakkikarthi

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 27, 2014
Messages
882
Likes
2,180
Location
delhi
#9
congrats penmai team for 4th e-magazine..............
keep it up....................:thumbsup
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,438
Likes
148,249
Location
Madurai
#10
Dear @ishitha @sharamsn @ilakkikarthi

Its not Just the 4th e-Mag Yaar. Our Penmai's e-Mag is Stepping into the 4th Year. நமது இதழ் மூன்று வருடங்களைக் கடந்து, நான்காம் மலரோடு அடியெடுத்து வைக்கிறது :)
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.