Penmai eMagazine October 2015

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine October 2015.

உங்களோடு சில நிமிடங்கள்,

டிஜிட்டல் இந்தியா என்றால் என்னவென்று தெரியாமலே பலரின் ஆதரவுகள்! உலகம் அதி நவீன தொழில் நுட்பத்தால் மின்னல் வேகத்தில் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் இதன் பலன்கள் எல்லா மக்களுக்கும் கிடைப்பதில்லை. இதனை களைவதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம், தகவல் தொழில் நுட்பத் துறையை முறையே மேம்படுத்துவது, அரசு வழங்குகிற சேவைகள் அனைத்தையும் ஆன்லைனுக்கு மாற்றுவது, கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி (கிராமங்களுக்கு பிராட்பேண்ட் நெடுஞ்சாலைகள்), வயர்லெஸ் இணைய வசதி, இணையம் மூலம் அரசு சேவைகள், இணையக் கல்வி, இணையம் வழி மருத்துவம், டிஜிட்டல் லாக்கர், அனைவருக்கும் தொலைபேசி, அதிக அளவில் வேலை வாய்ப்புகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் இந்திய சமூகத்தில் உள்ள கடைகோடி மனிதனுக்கும் டிஜிட்டல் சேவைகளைக் கொண்டு சேர்ப்பதாகும். ஆமாம்! கால் வயிற்றுக் கஞ்சிக்கு வழி இல்லாமல் இருப்பவனுக்கும் டிஜிட்டல் சேவைகளைக் கொண்டு சேர்ப்பது. சாலைகளே இல்லாத கிராமங்களுக்கு பிராட்பேண்ட் நெடுஞ்சாலைகள் அமைப்பது. ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லாத ஊர்களில் பிரசவங்களுக்கு பெண்களைக் கயிற்றுக்கட்டிலில் வைத்து பொடிநடையாக அருகில் உள்ள டவுன்களுக்கு சுமந்து செல்லும் மக்களுக்கு இணைய வழியில் மருத்துவம் செய்வது என்பது முரண்களாகவே உள்ளது. கருத்தளவில் பார்க்கும் போது மட்டும் இந்தத் திட்டம் தேசத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வருவதாக உள்ளது. ஆனால் இந்த மாற்றங்கள் கடை கோடியில் உண்ண உணவு இன்றி, உடுத்த உடையின்றி, இருக்க இடமின்றி வசிப்பவர்களுக்கு!?

இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் கடும் வறட்சி ஏற்படும், நாம் உணவுக்காக பல அந்நிய நாடுகளை நாடும் அவல நிலையில் உள்ளோம். மரங்கள் பெருகுவதற்கான திட்டங்களையும், இயற்கை வளங்களைக் காப்பதற்கான திட்டங்களையும், நதி நீர் இணைப்புக்கான திட்டங்களையும், நாளும் தற்கொலை செய்து வறண்ட பூமியில் விடியா உறக்கம் கொள்ளும் விவசாயிகளின் மரணத்தை தடுக்கும் திட்டங்களையும் எதிர்கொண்டு இருக்கும் மக்களுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டம் கனவாக மட்டும் இருந்துவிட்டால் நன்மையே!

சமூக இணையதளங்கள் உபயோகிப்பதில் இந்தியா தான் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இணையப்பயன்பாட்டில் மூன்றாவது இடம். இங்கு நாம் மூன்றாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்தில் இருப்பது சீனா விலகியதால்தான்! ஆம் சீனாவில் முகநூல் (facebook)தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பயனீட்டாளர்களை பயன்படுத்திக்-கொண்டு முகநூல் போன்ற பெரிய நிறுவனங்கள் மக்களை எப்போதும் அதன் அடிமைகளாகவே வைக்க "net neutrality" போன்றவற்றிற்கு எதிர்ப்பாக உள்ளது. மற்ற மனிதனும் மனிதன் கண்டுபிடித்த சாதனங்களும் நாட்டை ஆளலாம், நம்மை ஆள நாம் சந்தர்ப்பம் கொடுக்கக்கூடாது. ஏற்கனவே குனிந்த தலை நிமிராமல் எப்போதும் அலைபேசியின் திரைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இளைய சமூகம் எங்கும் எப்போதும் இலவச இணையம் என்றால்!

இந்தியா டிஜிட்டல் மயம் ஆகும் முன், மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற வேண்டும்! உணவின்றி உறங்கச் செல்லும் 20 கோடி மக்களுக்கு உணவு, சுத்தமான குடிநீர், மின் இணைப்பு, தடையில்லாத மின்சாரம், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் இல்லா கிராமங்களுக்கு பள்ளிக்கூடம் போன்ற இன்றியமையாத வசதிகளைச் செய்த பின் நாங்கள் டிஜிட்டல் இந்தியாவை வரவேற்கிறோம். நாம் இணையத்தில் பசியாற முடியாது, மரம் வளர்க்க முடியாது, விவசாயம் செய்ய முடியாது என்ற நிதர்சனத்தை உணர வேண்டும்!

...உங்கள் தோழி இளவரசி
Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
 

Attachments

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#3
Semma thalaiyangam! :thumbsup

நாம் இணையத்தில் பசியாற முடியாது, மரம் வளர்க்க முடியாது, விவசாயம் செய்ய முடியாது என்ற நிதர்சனத்தை உணர வேண்டும்!
Nachnu sollitteenga!!! vazthukkal penmai team!!:thumbsup


 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#4
arumai!!! enakkum ithe karuththuthaan...kazippidankalum thevai...pottil adichaa mathiri sollittinga......vaazthukkal......
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,953
Location
Atlanta, U.S
#5
நாம் இணையத்தில் பசியாற முடியாது, மரம் வளர்க்க முடியாது, விவசாயம் செய்ய முடியாது என்ற நிதர்சனத்தை உணர வேண்டும்!நெத்தியடி..... அருமையான தலையங்கம்.... சூப்பர் ....
 

ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,037
Likes
29,954
Location
CVP
#7
அருமையான தலையங்கம் .............thanks for tagging ..........
நம்ம வளத்தை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் இல்ல ........சுதந்திரம் பெற்ற இவ்வளவு நாளில் ........வெள்ளைக்காரனிடம் இருந்து கொள்ளைக்காரர்கள் ட்ட கொடுத்து இருக்கிறோம் போல ...........
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#8
தலையங்கம் அருமையான கருத்துக்களை வலியுறுத்தியுள்ளது.
பாதிக்கு பாதி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள நாடுகளினல் இது போன்ற இலவச இணையதளம், எந்த ஒரு முன்னேற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மைதான்.
 

ishitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 22, 2014
Messages
2,089
Likes
6,607
Location
tirunelveli
#9
எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய நிதர்சனத்தை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க இளவரசி அக்கா Hi 5

முகப்பு பக்கம் அருமை :thumbsup
 

Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#10
அருமையான தலையங்கம் இளவரசி...டிஜிட்டல் இந்தியா பற்றி தங்கள் கருத்து மூலம் அருமையா சாடிஇருக்கீங்க...கனவாக கற்பனையாக அல்லாமல் எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நம்முடையவர்கள்..

வழக்கம்போல் மின்னிதழ் கலக்கல்..என்னுடயை சமையல் குறிப்பை தேர்ந்துஎடுத்த பெண்மை குழுவினருக்கு மிக்க நன்றி:)..
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.