Penmai eMagazine September - 2014!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Download Penmai eMagazine here,
Penmai eMagazine September 2014

உங்களோடு சில நிமிடங்கள்,

வாழ்க்கை இனிமையான கலை! நாம் தான் நம்முடைய வாழ்க்கையை ஆனந்தமாக அமைத்துக் கொள்ள வேண்டும். வாழும் கலையைக் கற்றவர்கள் நீண்டநாள் ஆரோக்கியமாக மனநிம்மதியுடன் கூடிய வாழ்கையை வாழ்கின்றனர். அதன் ரகசியத்தையும் நம் முன்னோர்கள் நம் வாழ்கை முறையிலேயே நமக்கு கற்பித்து சென்றுள்ளனர்.

அதிகாலை துயில் எழுவது முதல், உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பண்டிகைகள் என பலவற்றிலும் அதன் உண்மை மறைந்து உள்ளது. ஆனால் நாம் தான் பழைய பஞ்சாங்கம் என்று சொல்லி அவர்களின் அறிவார்ந்த சொற்களை மதிப்பதில்லை.

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் எண்ணிலடங்காதவை. வாழ்க்கையில் உயர விரும்புவர்களை உயர்த்தும் பொழுதல்லவா! இரவில் சரியான நேரத்தில் உறங்குவதால் உடல் உறுப்புகளுக்கும் தேவையான ஒய்வு கிடைக்கும்.

உணவில் நம் முன்னோர்களின் அறிவு எண்ணிலடங்காதவை. இரவில் எளிதில் ஜீரணம் ஆகாத கீரைகள், தயிர் உண்ணக்கூடாது என்பது தொடங்கி அடுக்கிக் கொண்டே போகலாம். நவீன காலம் என்னதான் முன்னேறி விட்டாலும், கடலை மிட்டாய் கொடுக்கும் சத்தை கண்டிப்பாக மினுமினுப்பான கலர் உடை அணிந்த சாக்லேட்டாலோ, கேழ்வரகு அடை கொடுக்கும் போஷாக்கை போன் மூலம் ஆர்டர் கொடுக்கும் பிட்சா, பர்கரால் கொடுக்க முடியாது.

அடுத்து அர்த்தமுள்ள பண்டிகைகள் விநாயகர் சதுர்த்தி மற்றும் கொலு பொம்மைகளை களிமண்ணால் செய்வதன் மூலம் நீர்நிலைகளை தூர்வாறும் மறைமுக உத்திகளே. ஆனால் அதுவும் இன்று பாரீஸ் சாந்து (Plaster of Paris) என்று மாறிவிட்டது. மேலும் கொலு பொம்மைகள் மூலமே நம் பாரம்பரிய கதைகள் சொல்லும் விந்தைகள் எந்த youtube videoவாலும் கொடுக்கமுடியாது. தீபாவளி, கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றி மாசடையாமல் மழை காலத்தில் காற்றில் இருக்கும் கிருமிகளைக் கொல்லும் உத்தியோடு கொண்டாடியதை இன்று பட்டாசு வெடித்து ரசாயனப் புகையால் மாசுபடுத்தி விட்டோம்.

நவீன மனோதத்துவ நிபுணர்கள், மேடை பயம் குறைய பாட்டு வகுப்பிற்கு அனுப்பப் பரிந்துரைகின்றனர். இதனையே நாம் வழிபாடு மூலம், குழந்தைகளுக்கு பக்தி, பாடல்களில் ஆளுமைத்திறன் வளர்த்தல், பிறரோடு சுமுகமாக பழகுதல் போன்றவற்றை பழக்கினோம். ஆனால் இன்று அர்த்தம் புரியா வன்மவார்த்தைகள் உள்ள திரைப்பாடல்கள் அவர்களை வாழ்க்கை முழுவதும் வாழவிடாமல் முனுமுனுக்க வைக்கிறது.

கலாச்சார மாற்றத்தால் சமுதாயத்திற்கு தேவையில்லாத பலவற்றைப் புகுத்தி சமுதாயத்தை மாற்றிவிட்டோம். இனியாவது நம்மால் இயன்ற அளவு சமுதாயத்திற்கு பயனுள்ளதை நம் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்லி வளர்ப்போம். வீழ்ந்த நம் கலாச்சாரத்தை மீட்டெடுப்போம். பாரெங்கும் பாரத கலாச்சாரத்தை பரவச் செய்வோம்!Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Super Moderator team who helped to bring out Perfectly!!!Read it and drop your comments here!!!
 

Attachments

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,916
Location
nederland
#2
ஹாய் இளவரசி ,

''உங்களோடு சில நிமிடங்கள்,''எவ்வளவு அருமையாக சொல்லி இருக்கீங்க ...

நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் நினைத்தால் ...திக்குத் தெரியாம திக்கு முக்காடும் தமிழ் கலாச்சாரத்தை மீட்டெடுக்கலாம் .நம் பிள்ளைகளுக்கு நல் வழி காட்டுவதன் மூலம்...

ஆனால் என்ன...'' முடியுமா?'' என்று கேள்வியே கேட்காம முயன்று பார்க்க எல்லோரும் தயாராக வேண்டும் ..அவ்வளவே...

இம் மாத மின்னிதழுக்கு வாழ்த்துக்கள் ...
:thumbsup
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,926
Location
Chennai
#3
Hi Penmai,
Eppodhum pola asathalana september idhazh. koodudhala navarathiri mahalayam pathina vivarangal. pandigai recipes vera, adhila ennoda neyappam vera. :)
Sandoshama irukku padika padika thigatama mangaiyar malaruku inaiya aagi kittiruku penmai idhazh. vaazhthukkal
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,655
Likes
140,723
Location
Madras @ சென்னை
#4
செப்டம்பர் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். நவராத்திரி மற்றும் மகாளய அமாவாசை சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.

பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்! 

Attachments

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#6
ஹாய் இளவரசி ,

''உங்களோடு சில நிமிடங்கள்,''எவ்வளவு அருமையாக சொல்லி இருக்கீங்க ...

நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் நினைத்தால் ...திக்குத் தெரியாம திக்கு முக்காடும் தமிழ் கலாச்சாரத்தை மீட்டெடுக்கலாம் .நம் பிள்ளைகளுக்கு நல் வழி காட்டுவதன் மூலம்...

ஆனால் என்ன...'' முடியுமா?'' என்று கேள்வியே கேட்காம முயன்று பார்க்க எல்லோரும் தயாராக வேண்டும் ..அவ்வளவே...

இம் மாத மின்னிதழுக்கு வாழ்த்துக்கள் ...
:thumbsup
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி ரோசி!

நினைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை, மறக்க முடிந்த நம்மால் மீண்டும் உயிர்பிக்கவும் முடியும். நம்மால் இயன்றதை நம் சந்ததியினருக்கு, சொல்லிக்கொடுத்தாலே போதும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.