Penmai eMagazine September 2016

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,986
Likes
16,986
Location
Coimbatore
#1
Dear friends,

Download Penmai eMagazine here, Penmai eMagazine September 2016.

நடந்தாய் வாழி, காவேரி! பாய்ந்து வந்த போது ‘நடந்தாய் வாழி’ என்று வாழ்த்திய குற்றத்திற்காக இன்று நடந்து கூட வர மறுக்கிறாள்!

உலகின் நீளமான நைல் நதி 11 நாடுகளின் வாழ்வாதாரமாக உள்ளது. எகிப்து, எத்யோப்பியா, சூடான் நாடுகள் நதியை பங்கிட்டுக் கொள்வதில் சுமூகமான தீர்வை எட்டி விட்டு, பங்கிட்டு வாழ்கின்றனர். ஆனால், ஒரே நாட்டிற்குள் உள்ள 4 மாநிலங்கள், தண்ணீரைப் பங்கிட்டுக் கொள்வதில் நூற்றாண்டுக்கணக்கில் பிரச்சனைகள்.

'தமிழகத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் நீர் வழங்குங்கள். அவர்களை வாழவிடுங்கள்' என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இவற்றை மீறி வன்முறையில் ஈடுபடுவதும், அதனைக் கண்டிக்க மறுக்கும் அரசும், நாம் சுதந்திர இந்தியாவில் தான் வாழ்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது. PETA, கேஸ் போட்டால் ஜல்லிக்கட்டை தடை செய்து நீதியை நிலைநாட்டும் அரசாங்கமும், சட்டமும் மனிதனிடம் ஏன் மௌனித்து நிற்கிறது. இங்கு மாட்டினை அதை சார்ந்த அந்நிய வியாபாரத்தை விட விவசாயமும் அதைச் சார்ந்த மனித வாழ்வும் தரம் தாழ்ந்து விட்டதா?

மழை பொய்க்கும் போதெல்லாம் இந்த காவிரிப் பிரச்சனை வந்து பல உயிர்களையும், உடைமைகளையும் பறித்துக் கொள்ளும். இது, இன்று நேற்றல்ல... கி.பி. 11ம் நூற்றாண்டிலிருந்தே இருக்கிறது. அப்போதைய மைசூர் அரசு காவிரியைத் தடுத்து அணைகட்டி அன்றே தமிழர்களுக்கு சோதனை ஏற்படுத்தியது. அப்போது முதலில் இரண்டாம் இராஜராஜசோழன் பெரும் படையுடன் சென்று தடுப்புகளை தடுத்தும், அதன் பிறகு அவர்களின் முயற்சிக்கு 17ம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாளும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும் பெரும் படையுடன் புறப்பட்டனர். படை செல்லும் முன்பே கடும் மழையால் அணை உடைந்த வரலாறும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மொத்த அரிசியில் பாதிக்கு மேல் காவிரி டெல்டா பாசனப்பகுதியின் மூலமாகத்தான் உற்பத்தியாகிறது. உணவை உற்பத்தி செய்த தஞ்சைப் பகுதி விவசாயிகள் சிலர் சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட உண்பதற்கு உணவின்றி எலியைச் சாப்பிட்டு வாழ்வை நடத்தினர், சிலர் அந்த இழிநிலை எதிர்த்து இன்னுயிர் நீத்தனர். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு விவாதிக்க வேண்டும். நமது மாநிலத்தை அவர்கள் வடிகாலாகத்தான் பார்க்கிறார்கள். மாநிலங்கள் தண்ணீர் பிரச்சனையை அரசியலாக்காமல் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண விழைய வேண்டும்.

ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று; - புறநானூறு பாடல்

நாம் இழிந்தும் இறைஞ்சி விட்டோம்! இங்கு கொள்ளெனக் கொடுத்து உயராமல் ஈயேன் என்று சொல்லி இழிந்துவிட்டனர்!

...உங்கள் தோழி இளவரசி

Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!

[/FONT]
 

Attachments

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,872
Likes
76,677
Location
Hosur
#2
நச் தலையங்கம் இளவரசி.

நாம் இழிந்தும் இறைஞ்சி விட்டோம்! இங்கு கொள்ளெனக் கொடுத்து உயராமல் ஈயேன் என்று சொல்லி இழிந்துவிட்டனர்!
படிக்கும்போதே மனம் துக்கம் அடைகிறது. நாட்டில் நடக்கும் வன்முறைகளை பார்க்கும்போது மனது கனத்துப் போகிறது. எவ்வளவு பொருட்களை நாசம் செய்கிறார்கள்!!!
 

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,854
Location
Chennai
#5
Super Ilavarasi Mam... Thalaiyangam arumai... mukkiyamaai antha puranaanutru paadal...


ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று; - புறநானூறு பாடல்

நாம் இழிந்தும் இறைஞ்சி விட்டோம்! இங்கு கொள்ளெனக் கொடுத்து உயராமல் ஈயேன் என்று சொல்லி இழிந்துவிட்டனர்!


 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#6
இயற்கை அளிக்கும் வளங்கள் எல்லோருக்குமே பொது என்பதை ஏன் இவர்கள் ஏற்க மறுத்து, ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். மனித நேயம் கூட மறந்து விட்டதே... கொடுமைதான்.....

அருமையான மற்றொரு தலையங்கத்துடன், சிறப்பாக இருக்கிறது, இம்மாத இதழ்..
:thumbsup
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#8
just now i read penmai e-mag of this month....

my full appreciaitons go to entire penmai team... lovely creation.... each page glitters with information.

nalla thalaiangam, as usual, congrats ji.

kitchen pages are really good.... (my recipies... two of them got published...(kashmiri pulav nd karachara kaaigari pulav...) and a few of my neeya naana review also had got published...
a special thanks for that...)

beauty tips are wonderful...

mohenjadaro review was good.

in hsort, our mag is very, very lively...!!
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,842
Location
Madras @ சென்னை
#9
செப்டம்பர் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன்.அணைத்து செய்திகள் 81 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.

பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.


 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,727
Likes
140,842
Location
Madras @ சென்னை
#10
My special thanks to all goodhearted members who comes to my posts and gave likes to my posts.


Welcome again!!!

:pray1:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.