Penmai eMagazine September Month!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear Friends...

Happy to meet you all again with our
September month eMagazine - Finishing a year with this magazine!!!

Here is the link for the magazine.

Direct Download Link:
View attachment Penmai eMagazine September 2013.pdf

Penmai-eMagazine-September-2013.jpg
உங்கள் அனைவரையும் பெண்மை மின்னிதழின் 12 வது இதழோடு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆம், இந்த இதழ் பெண்மை மின்னிதழின் ஒரு வருடத்தினை நிறைவு செய்கிறது. இதுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்த வாசகர்கள் மற்றும் பெண்மை உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெண்மை மின்னிதழை அறிமுகப்படுத்த எண்ணம் எழுந்த போது, நிச்சயமாக இத்தகைய ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இன்று எதிர்பார்த்ததை விடவும், பெண்மை மின்னிதழுக்கு நீங்கள் அனைவரும் அளித்த ஆதரவிற்கும் வரவேற்பிற்கும் நன்றிகள் பற்பல.

பெண்மை இதழின் மிக சிறப்பான பகுதிகளான குழந்தை வளர்ப்பு, ஆன்மிகம், சமையல், நீயா நானா, இனி ஒரு விதி செய்வோம், பொழுதுபோக்கு அம்சங்கள், கதைகள் மற்றும் கவிதைகள் என்று பலவற்றிற்கும் உங்களிடம் இருந்து பதிவுகள் மற்றும் மின்னஞ்சல் மூலம் வரும் ஊக்கங்களுக்கும், பாராட்டுகளுக்கும் எங்களின் நன்றிகள் பல. உங்களுடைய கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் எங்களை மென்மேலும் மெருகேற்றிக் கொள்ள பேருதவி செய்தது.

இல்லத்தரசிகள், பணி செய்யும் பெண்கள், கல்லூரி மங்கைகள் மற்றும் அனைத்து வாசகர்களாலும் விரும்பிப் படிக்கப்படும் ஒரு இதழாக விளங்குவதில் எங்களுக்கும் பெருமகிழ்ச்சியே. இன்றைய இளைய தலைமுறை, மற்றும் இதற்கு முன் நமக்கு வழிகாட்டிய நம் மூத்த தலைமுறையினர்கள் இதில் எழுதுவதும் வாசகர்களாக இருப்பதும் எங்களுக்கு பெருமைக்குரியதே...

இந்தப் பெண்மை மின்னிதழில் தங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பல தோழமைகள் தங்களுடைய கதை, கவிதை, கைவினைப் பொருட்கள், சித்திரங்கள் போன்றவற்றை உருவாக்கி தாங்களும் தங்களின் திறமையை மெருகேற்றிக்கொண்டு, இந்த இதழையும் தங்களின் படைப்புகளால் அலங்கரித்தார்கள். அதைப்போல் இனி வருங்காலத்திலும், நம் உறுப்பினர்கள் தங்களிடம் ஒளிந்திருக்கும் திறமையை வெளிப்படுத்தி உயரவேண்டும் என்பதே எங்களின் நோக்கமும் விருப்பமும்.

உங்கள் அனைவரின் ஆதரவோடு உங்களுக்காக, உங்களிடமிருந்து அளிக்கப்படும் கருத்துக்களின் பொக்கிஷ புதையலான பெண்மை மின் இதழ், இனி வரும் வருடங்களிலும் மேலும் மெருகு கூடியும் சிறப்புடனும், பொலிவுடனும், புதுமையுடனும் மிளிர்வாள். உங்கள் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பில்லாத அன்பிற்கு மீண்டும் எங்களின் நன்றிகள் பல.

This copy can be downloaded and read through offline, you can also share it with your friends through email.

Once again, thank you Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your encouraging words and thoughts. My special thanks to Parasakthi and Sumathi Srini who helped to bring out Perfectly!!!

Read it and drop your comments here!!!
:)
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#3
Hi shakthi,

super super adhukkula oru vayasagiducha? nammbave mudiyale? namma kaile thavazhndha kuzhandhai inimel menmelum valarndhu aadi odi thriya aasigal pal. super engalukkellam birthday gift enna?
 

kavitha_rishi

Commander's of Penmai
Joined
Jun 7, 2012
Messages
1,902
Likes
8,517
Location
doha
#4
Hi penmai team, intha minnidhazh arambithu oru varudathil antha ovvoru idhazhilum mattranghalai seithu enghalai maghizvithathirku nanri.ithupol melum pala idhazhghalai thanthu yenghaluku arputhamana pala minnidhazhkalai palavarudanghaluku tharumaru ketukolkirom.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#7
செப்டம்பர் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்' யே


படித்தேன். ரசித்தேன். அறுபது பக்கத்துடன் அழகா,


நேர்த்தியாக வந்து உள்ளது. சூப்பர்.


பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி,


மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு


பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக


இனிய கனிந்த வாழ்த்துக்கள்!

graphics-flowers-105175.gif
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,925
Location
Chennai
#8
Hi Penmai Team,
Congrats on completing first anniversary of e magazine. Best wishes for more and more achievements. I feel honoured to be a part of Penmai.
It gives me great pleasure being here.

Ippodhaan september madha idhazhai padithu mudithen. romba informative and entertaining. niraiya useful infos. navarathiri golu sameebikkum indha nerathil adhai patriyum koori irupadhu mikka nanraaga ulladhu. mothathil palasuvai kodiya virundhu sapaadu pola manam niraindhadhu.
Jokes and kavidhais are really good.
 
Last edited:

poovizi

Friends's of Penmai
Joined
Aug 6, 2011
Messages
305
Likes
557
Location
chennai
#9
பெண்மை இதழோ அழகு
அதன் சுவையோ கரும்பு
இது எங்களுக்கு விருந்து
இதை வழங்கிய உங்களுக்கு வாழ்த்து


பரிசு பெற்ற தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் .
என்னுடைய கீரை ரெசிபியை வழங்கியதற்கு நன்றி
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#10
Wishes for completing the first year and many more happy returns to emag...
excellent job done by our members who posted excellent articles which has made emag a magazine with good and quality content!!! And kudos to emag team and my fellow mods to keep on encouraging for the quality articles.


My wishes again!!!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.