Penmai Foundations - Lets do it Together!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
பெண்மையின் அன்புத் தோழமைகளுக்கு வணக்கங்கள்!

பெண்மை இணைய தளம், இணைய உலகில் அடி எடுத்து வைத்து ஐந்து ஆண்டுகளைக் கடந்து, வெற்றி பாதையில் பயணிக்கிறது. இவை அனைத்திற்கும் நம் இணைய உறுப்பினர்கள், வழிகாட்டிகள், தலைமை வழிகாட்டிகள் மற்றும் பெண்மை தளத்தின் நலம் விரும்பிகளின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

நாம் வளரும்போது நம்மைச் சேர்ந்த நம் சமுதாயத்திற்கும் நம்மால் முடிந்த அளவு பயன்தக்க செயல் செய்யவேண்டும் என்று மனதில் என்றோ போட்ட வித்து இன்று முளை விட்டு உங்கள் முன் துளிர் விட்டுள்ளது.

ஆம்... பெண்மை அறக்கட்டளை. நம் சமுதாய நலனுக்காக நம்மால் இயன்ற முயற்சிகள் எடுக்கவும் செயல்படவும் பெண்மை அறக்கட்டளையை நிறுவ உள்ளோம்.

பெண்மை அறக்கட்டளையின் முக்கிய குறிக்கோள்கள்:

“இன்னறுங் கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்னசத்திரம் ஆயிரம் கட்டுதல்
ஆலயம் பதினாயிரம் நாட்டுதல்
அன்ன யாவினும் புண்ணியங கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”

என்றார் எழுச்சிக்கவி பாரதி, அவரின் சொற்படி.

  • ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது...
  • பூமி வெப்பமயமாதலை தவிர்க்கும் பொருட்டும், சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டும் செடிகள் மற்றும் மரக்கன்றுகளை நடுவதுடன், அவற்றின் வளர்ச்சியை கண்காணித்து, பாதுகாத்து வளர்ப்பது...
  • பெண்களை பொருளாதாரத்தில் உயர்த்தும் பொருட்டு, அவர்கள் மேற்கொள்ளும் சுயதொழிலுக்கு உதவுவது...
  • கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ ‘கோயில் இல்லா ஊர் பாழ்’; என்பது நம் சான்றோர் வாக்கு. ஆனால் கால மாற்றத்தால் கோயில்கள் பாழடைந்துள்ளன. நம் தமிழகத்தின் அடையாளம் கோயில்கள். நம் கலை, இலக்கியம், ஆன்மிகம், விஞ்ஞானம், கருவூலம் ஆகியவற்றின் மொத்த ஊற்றாக திகழ்பவை கோயில்கள். நம் வரலாற்றை நாம் கோயில்களை மையமாக வைத்தே இதுவரை அறிந்து வந்திருக்கிறோம். இப்படி நம் வாழ்வுடன் இரண்டற கலந்துவிட்ட பல கோயில்கள் இன்று சிதிலமடைந்து, உருக்குலைந்து உள்ளன.. அத்தகைய கோயில்களை தேர்ந்தெடுத்து புதுப்பிப்பது...
  • "தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற நம் முண்டாசுக் கவி பாரதியின் தார்மீகக் கோபத்திற்கு பதிலளிக்கும் விதமாக பசி, வறுமையை ஒழிப்பது... மற்றும் வறுமையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான உணவும் மருத்துவ உதவிகளும் செய்வது.
போன்ற நற்செயல்களை செய்ய விழைகின்றோம்.

இவ்வமைப்பை கடந்த வருட நம் பெண்மையின் பிறந்த நாளன்றே (anniversary) அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் என்று எண்ணி தவிர்க்க முடியாத காரணங்களால் செயல்படுத்த முடியவில்லை. இவ்வருடம் நம் ‘பெண்மை’யின் தினத்தில் (anniversary) இருந்து பெண்மை அறக்கட்டளை முறையாக அறிவிக்கப்பட்டு செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவை அனைத்தும் செம்மையுற நடைபெறுவதற்கு உங்களின் ஆலோசனைகளும், வழிகாட்டல்களும், மனித சக்தியும் தேவைப்படுகிறது. நல்லதோர் இம்முயற்சிக்கு தன்னார்வலர்கள் எங்களுடன் கைகோர்த்து உங்கள் ஆதரவை பெண்மைக்கு இணையத்திற்கு தந்தது போல் அறக்கட்டளைக்கும் தருவீர்கள் என்று நம்புகிறோம். எங்கள் செயல்திட்டங்கள் யாவும் ஒரே நாளில் செயல்படுத்தப்படக் கூடியதல்ல. ஆனால் இனி வரக்கூடிய நாட்களில் மேற்சொன்ன திட்டங்கள் யாவும் செம்மையுற செயல்படுவோம்.

நிதி மிகுத்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்!
- பாரதி


குறிப்பு:

பெண்மை அறக்கட்டளை மேன்மைபடுத்த உங்கள் அனைவரின் கருத்துகளும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய ஆலோசனைகளை வருகிற ஏப்ரல் 30-ம் தேதிக்குள் எங்களுக்குத் தெரிவிக்கவும்.

We welcome all your Suggestions and Opinions. But, please let us know your suggestions/opinions before April 30[SUP]th[/SUP] 2014.
 
Last edited by a moderator:

Prathyuksha

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 21, 2013
Messages
6,226
Likes
15,285
Location
Chennai
#4
வாழ்த்துக்கள் பெண்மை... நானும் பெண்மையில் ஒரு உறுப்பினர் என்பதில் பெருமைக் கொள்கிறேன்...

எவ்வளவுப் பெரிய முயற்சி இளா கா... இப்படி யோசித்ததற்குப் பாராட்டுக்கள்... நல்லதோர் தொடக்கம்...

-Prathyuksha
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#5
சமூகத்தை உயர்த்தும் பொருட்டு தாங்கள் மேற்கொண்டுள்ள இந்நல் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.

மேலும் இது இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான விஷயமே. தாங்கள் மேற்கொண்டுள்ள இந்த மாபெரும் முயற்சிக்கு ராமாயணத்தில் அணில் ஆற்றிய சிறு தொண்டைப்போல், எங்களால் இயன்ற உதவிகளை எல்லா வகையிலும் நல்கி, நாங்களும் இத்தொண்டில் பங்கு பெறுவோம்.
 
Joined
Feb 4, 2012
Messages
17
Likes
41
Location
Chennai
#7
வணக்கம் பெண்மை இளவரசி

உங்களுடைய உயரிய நோக்கத்திற்கும் ஆக்கத்திற்கும் இப்பணியில் நீங்கள் சிறந்து செயல்படவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,259
Likes
25,767
Location
Sri Lanka
#8
இளவரசி அவர்களே, தங்களது நற்பணி சிறப்புடன் வளர்ச்சி பெற்று நலிந்தவர்கள் பயன் பெற்று வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#9
பெண்மை -யின்
இந்த
முன்னேறிய பயணத்திற்கும்
தொலைநோக்கு பார்வைகொண்டு
சமூதாய நற்சிந்தனை கொண்டு
அறம் செய்ய விரும்பும்
இந்த எண்ணதாக்கதிற்கும் தியாக உள்ளத்திற்கும் வாழ்த்துக்கள்.

மானுடம் சமூகம் பயனுற
வளம் பெற

இந்த

பெண்மை

பெருந்தொண்டாற்றிட என் உளங்களிந்த நல்வாழ்த்துக்கள்.

*****
 
Last edited:

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,011
Likes
37,629
Location
karur
#10
வாழ்த்துக்கள் இளவரசி......இது போன்ற எண்ணங்கள் பலருக்கு இருந்தாலும் செயலில் கொண்டு வருவது ஒரு சிலரே...அதில் எனது பெண்மையும் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது .

இந்த நோக்கம் அனைவர்க்கும் பயனுள்ள வகையில் அமைய எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம்.

தொடரட்டும் பெண்மையின் இந்த சீரியபணி ....மனதார வாழ்த்துகிறோம்.:cheer:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.