Penmai Special Contest July Month - இனி ஒரு விதி செய்வோம்!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,030
Likes
17,171
Location
Coimbatore
#1
அன்பு பெண்மை தோழமைகளுக்கு வணக்கம்,

இந்த முறை சற்றே வித்தியாசமான பெண்மை சிறப்பு போட்டியுடன் உங்களை சந்திக்கிறோம். இனி ஒரு விதி செய்வோம்!!!

இன்று நம் இந்திய நாட்டில் விவாதங்களுக்குரிய பிரச்சனைகள் பல வேரூன்றி மேலோங்கி இருக்கின்றன, இதில் முக்கியமான மூன்றிற்கு நல்லதொரு தீர்வு காணும் முயற்சியில் அவற்றை இப்போது உங்கள் முன் வைக்கிறோம். இதோ,

சுற்றுச்சூழல் - Environment

கல்விமுறை - Education System

ஊழல் / அரசியல் - Corruption / Politics


இந்த தலைப்புகள் சாதாரண தலைப்பு போல் தான் தெரியும், ஆனால் இவைகள் தான் நம் வாழ்வாதாரங்கள். இந்த மூன்றிலும் தேவையான கவனம் செலுத்தப்படாமல் இருப்பதால் தான், நம் நாடு இன்னும் வளர்ச்சியில் பின்தங்கியே உள்ளது.

இனி ஒரு விதி செய்வோம் என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இம்மூன்றில் எதாவது ஒரு பிரச்சினைபற்றியும் அதற்கான தீர்வுகளை பற்றியும் உங்கள் கருத்துக்களை கூறுவதே இந்த மாத பெண்மையின் சிறப்பு போட்டி.

முக்கியக் குறிப்புகள்:

  • போட்டியில் பங்கேற்பவர் இங்கே கொடுக்கப்பட்டுள்ள எதாவது ஒரு தலைப்பை எடுத்துக் கொள்ளலாம்.
  • நீங்கள் பேச எடுத்துக் கொண்ட பிரச்சினையைக் களைவதற்கு தனிமனிதன் பங்கு என்ன; அரசாங்கத்தின் பங்கு என்ன; சமுதாயத்தின் பங்கு என்ன; என்று உங்கள் கருத்துக்களை கூறவேண்டும்.
  • எந்த தலைப்பை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
  • உங்கள் கருத்து தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்.
  • உங்கள் கருத்துக்களை பதிவிட கடைசி தேதி: ஜூலை 31.
  • உங்கள் சொந்த கருத்துக்களை மட்டும் பகிர வேண்டும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
24,439
Likes
34,349
Location
mysore
#3
Very nice topics. thank you Ilavarasi for announcing such a unique contest.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,084
Likes
141,071
Location
Madras @ சென்னை
#4
சூப்பர் இளவரசியாரே!

:thumbsup

ஆனால் அரசியல் என்றால் எனக்கு பயம்!

:behindsofa:
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,084
Likes
141,071
Location
Madras @ சென்னை
#5
ஊழல் விசயத்தில், பொருளோ, நிலமோ, நகையோ வாங்குவது இருந்தால் ரூபாய் ஆயிரம் மேல் பணமாக கொடுக்க கூடாது. மிதி பணத்தை காசோலையாக அல்லது வரைவு சோலை கொடுக்கவேண்டும். அப்படிதான் ஊழல் ஒழிக முடியும்.

:thumbsup

:cheer::cheer:

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Aug 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

gshanthi

Friends's of Penmai
Joined
Jul 9, 2013
Messages
204
Likes
513
Location
chennai
#6
A wonderful timely topic for this month....I would like to share my opinion on the issue of the Environment....THREE KEY WORDS TO REMEMBER are REDUCE , REUSE , RECYCLE....These three magic words are not only for the use of Plastic but also in all aspects of our life ...by following these three rules , we can save a lot in our home , society and thus our environment ....We can also feel satisfied with ourselves when we are able to contribute to the noble cause....Let us start now itself...come on get set ....go....

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Aug 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

redbille

Citizen's of Penmai
Joined
Mar 20, 2010
Messages
964
Likes
1,739
#7
அன்புள்ள பெண்மை தோழமைகளுக்கு வணக்கம்

மீண்டும் ஒரு புதிய பதிவில் பெண்மை தோழமைகளை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாரதியின் வரிகளை தலைப்பாய் கொண்டு இந்த புதிய மாற்றங்களை சமூக தளங்களில் ஏற்படுத்த முயற்சிக்கும் பெண்மைக்கு என் வாழ்த்துக்கள்.

சமூக மாற்றங்களை, புரட்சிகளை, தேச வளர்ச்சியை, தனி மனித முன்னேற்றதை கொண்டுவரும் வரும் கல்விமுறையை பற்றி இந்த களத்தில் விவாதிக்க விழைகிறேன்.

நான் கல்வியாளன் இல்லை,என்னிடம் எந்த ஆய்வு அறிக்கைகளும் இல்லை, இருப்பினும் இந்த கல்விமுறையில் படித்தவன் என்ற அடிபடையிலும், என் இந்திய சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளை கல்வியின் வளர்ச்சியோடு பின்னிபிணைந்தவை என்ற அடிப்படையிலும், அதன் ஏற்ற தாழ்வுகளை அறிந்தவன் என்ற முறையிலும் எழுதுகிறேன்

“Education is the most powerful weapon which you can use to change the world.”
கருப்பின தலைவர் மண்டேலாவின் வார்தைகள் இவை,


கற்காமல் இருப்பதைவிட பிறவாமல் இருப்பதே மேல் என்று – கல்வியும் அதன் மூலம் அகற்றபடுகின்ற அறியாமை திரையை பற்றி இப்படி சொல்வார் ப்ளேட்டோ அத்தகையது கல்வி

பாரத தேசத்தில் அறிஞர்களும், மேதைகளும் பல்கி பெறுகி பண்டைய காலம் தொட்டு இன்று வரை விளங்கி வருகிறார்கள். பயன்பாட்டு அறிவியலும், நகர் நிர்வாகமும் சிறந்து விளங்கிய சிந்து சமவெளி நாகரீகம் முதல், பிறகு நாளந்த, விக்ரமசீலா பல்கலைக்கழகமும், இந்தியாவின் பொற்காலம் எனப்படும் குப்தர் காலத்தில் மருத்துவம், வானியல்,கணிதம், , metaphysics,இலக்கியம் என பல்துறைகளில் சரகர், சுஸ்ருதர், தன்வதரி, ஆர்யாபட்டா, காளிதாசர், பாஸ்கரர், தண்டி என்று வடக்கிலும், கட்டடகலை, நிர்வாகம், இலக்கியம், பயன்பாட்டு அறிவியல் (applied science),ஆன்மிகம் என தென்னகமும் சிறந்து விளங்கியது பாரதம் முழுமைக்கும் இவை முறையே உள்நாட்டு கல்விமுறை (indigenous) மற்றும் informal முறையில் கல்வி கொள்கைகளை கொண்டு இயங்கி வந்தது.

இந்த கல்வி முறைகள் அனைத்தும் மனிதனை முடிந்த வரை இயற்கை வழியில் இருந்து வாழ பழக வைத்துள்ளது, இயற்கையோடு மனிதன் வாழ பெரும் முயற்சிகளும் இந்த கல்வி முறைகள் மேற்கொண்டன.ஆசிரிய-மாணவ உறவுகளை எப்படியெல்லாம் மேம்பட வைக்க வேண்டுமோ அவை அது குறித்த தேடலில் வெற்றியும் பெற்றது. தனிமனித முன்னேற்றம் என்ற ஒன்றை மட்டும் கணக்கில் கொள்ளாமல் ஓட்டு மொத்த சமுகத்தின் மேம்பாட்டுக்காக உழைத்தது அன்றய கல்வி முறை.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Aug 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

redbille

Citizen's of Penmai
Joined
Mar 20, 2010
Messages
964
Likes
1,739
#8
பிறகு மாறிய சமூக, அரசியல் காரணங்களில்னால் உயர் ஜாதியினர்க்கும், அரச மரபினர்க்கும் மட்டும் உரியது ஆனது கல்வி முறை. கி.பி 1000 வாக்கில் ராஜ ராஜ சோழனின் காலத்தில் மேல் ஜாதியினர் தவிர மற்றவர் கல்வி கற்க்கும் உரிமை மறுக்கபட்டது கிட்டதட்ட 1000 ஆண்டுகள் ஆனது மீண்டும் தமிழன் கல்வி கற்க.
ஆயினும் இன்னும் முழுமை பெறவில்லை.

1830 இல் மீண்டும் கிடைத்தது கல்வி, வேறு வழியில் British government மூலமாக Macaulay கல்வி முறையில். இவை தயாரிக்க பட்டதான் நோக்கம் இந்தியன் கல்வி பெற வேண்டி அல்ல British Government இல் கடைநிலை வேலைகளுக்கு (clerical) இந்தியனை அமர்தத கொண்டுவந்ததே இந்த கல்வி முறை. இது குமாஸ்தாகளை உருவாக்குகின்ற கல்வி முறை என்று உருவான காலம் முதல் விமர்சிக்க படுகிறது.இதை கொண்டு வந்தவர் வேறு யாரும் அல்ல இந்தியா தண்டனை சட்டம் உருவாக்கிய (IPC ) Thomas Bobington Mcaulay தான்!!!

பிறகு குழந்தைகளுக்கு Montessori முறை, Gandhi Wardha Educational Plan(கைதொழிலுடன் கல்வி),Tagore Educational Plan (குருகுலம்) முறை, Rajaji குல கல்வி முறை, Aravindharன் ஆஸ்ரம கல்வி என பல்வேறு திட்டங்கள் இருந்த போதிலும் இன்று வரை M ccaulay முறையிலான கல்வி முறையே நாம் பின்பற்றி வருகிறோம்.

இந்த கல்வி முறை மனிதனை இயற்கை வழியில் சிந்திக்கும் திறனை குறைத்து, இயற்கையோடு வாழும் மனோ நிலையை உடைத்து வெறும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் முறையை மட்டுமே மேற்கொள்கிறது

இந்த கல்வி முறையில், மரம் நட்டாள் கிடைக்கும் ஆயிரம் பயன்கள் பற்றி சொல்லும் ஆனால் தனி ஒரு மனிதனை ஒரு மரத்தை கூட நட வைக்காது.

இந்த கல்வி முறை சமூகத்தின் மீது பழி போடும் முறையை அழகாக சொல்லி தருகிறது. சமூகத்தில் மனிதன் மீதான கடமையை சொல்லி தர அழகாக மறந்து விடுகிறது.

பெற்றவர்களும் நம் குழந்தைகளுக்குத் தேவையானதை கற்றுதருகிறோமா? உண்மையிலேயே அவர்கள் அதை புரிந்துப் படிக்கிறார்களா? என்ற எண்ணதோடு கல்விமுறையை பார்க்க இயலாமல் செய்கிறது.

நம் கல்விமுறை ஒரு திணிப்பு முறை இது தனி மனிதனின் திறமையை (inter Personal Skills) ஊக்குவிக்காத ஒரு கல்வி முறை. சைக்கிள் ஓட்டிக்கொண்டு விழாமல் ஸ்கூலுக்கு கூட போக தெரியாத பிள்ளைகளுக்கு இது தான் உன் எதிர்காலம் இது இல்லை என்றாள் உன் வாழ்க்கையே காலி என்று பயமுறுத்தி விருப்பம் இல்லாமல் ஏற்றுக்கொள்கிற முறை. தன் சொந்த திறனை கொண்டு சாதிக்க முடியும் ஒரு செயலை செய்ய விடாமல் சமூகத்தின் போக்கில் மூலம் தன் எதிர்காலம் தீர்மானிக்க படுகின்ற ஒரு பயங்கரம் இந்த கல்விமுறையில் இருக்கிறது.

இந்த கல்விமுறையில் சமுகத்திற்க்கு ஒரு மனிதனை ஈன்றெடுபதற்க்கு பதிலாக ஒரு நிறுவனதிற்க்கு ஊழியனை, பணம் சம்பாதிக்கும் தொழில்நுட்பமாகவே இவை பார்க்க படுகிறது.

இந்த கல்விமுறை எளிதில் பாரதத்தின் கலாசாரத்தை, தத்துவ கல்வியை, ஆன்மீக முறைமையை, உள்ளநாட்டு(vernacular) மொழிகளை அழிப்பதற்க்கும் உறுதுணையாக இருந்தது.

பெரும்பாலும் நம் கல்வி முறையில் படித்த மனிதர்களுக்கே இவை தன்னம்பிக்கை, நடைமுறை வாழ்க்கையை பழக கடினமாக தோன்றவைக்கிறது. Bank ல challan fillup பண்ணும்போதும், ஒரு application form fillup செய்யும் பொது கூட நம் கல்வி மீது நமக்கே சந்தேகம் அளிக்க வைக்கிறது. இந்த கல்வி முறை அறிவாளிகளை உருவாக்குவதில்லை அதை போன்ற தன்மை இருபவர்களாக காட்டிக்கொள்ள வைக்கிறது. இது தான் அரைகுறை அறிவு இவை நுனி புல் மேய்வதை போல.


creativity, original thinking, research and innovation இந்த வார்தைகள் எல்லாம் இந்த கல்வி முறையில் முழுமை பெறாது. நல்ல உதாரணம் Project,Thesis, Research Paper தயாரிக்கும் போது இவை விளங்கும். பெரும்பாலும் control, x,c,v (cut,copy,paste) keyboard பட்டன் இல் எழுத்து தேய type செய்தவர்களுக்கு தெரியும் நம் கல்வி முறை பற்றி

அரசும் கல்வி மேம்பட (ICSE). (CBSE) போன்ற நிறுவனங்களும், 10+2+3, முறையே பட்ட மேல் படிப்பு, ஆராய்ச்சி என்ற வகையில் அமைத்து தந்து கல்வி வளர்ச்சிக்கு பாடு படுகிறது. Compulsory Education, CCE , laptop, மதிய உணவு என கல்வி திட்டதிற்க்கு நிதி ஒதுக்கி செய்தாலும் பெறபடுகின்ற கல்வி சமூக வளர்ச்சிக்கு முழுமையாக அமையவேண்டும்

இந்த கல்வி முறை படிக்காத பெற்றோரின் ஏக்கதில் வாழ்கிறது,வசதி வாய்புகள் பெற வேண்டிய அடிப்படை அலகு என்ற நினைப்பு மாறி, மானுடம் தழைக்கும் ஒரு காரணியாக, அறிவின் வளர்ச்சி, சமுக வளர்ச்சி இவைகளை அடிபடையாக கொண்டு கல்வி அமைய வேண்டும் என்ற அறிவின் முதிர்ச்சி வரும் போதும் இது தானே மறையும். மாற்றபடவேண்டியது இந்த கல்வி முறையில் செய்முறை அறிவியல், Moral கல்வி, தனி மனித அறிவின் சாரம் உணர்ந்த தன்மை, ஆசிரிய மாணவ உறவு மேம்படும் நிலை, இயற்கையோடு ஒட்டிவாழவேண்டும் என்ற அறிவு முதிர்ச்சி, சமுகத்திற் க்கு அற்பணிக்கும் தன்மை இவை மாறினால் சமூகம் மாறும் தேசம் மாறும், இந்த உலகமும் மாறும்.

வாய்ப்பளித்த பெண்மைக்கும் நன்றி
ஜெய் ஹிந்த்!!!

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Aug 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,292
Likes
149,873
Location
Madurai
#9
Well Said Surya Sir!! Yes, you are right that there should be some changes in the education system. Our present education system is defective. Our students do not get proper moral values from our education so we should include the education which may teach some lesson about morality so that our society may get a right direction.

Education with moral values is the only true education otherwise it can be dangerous to us. Some vocational education should also be included in our educational system.

Students become happy by getting huge numbers but become disappointed when looking for a job. So a change in education system is necessary. But, there should be proper balance in practical and theoretical part. We, the common people of India, have no way to take part in making education policy. But, we may raise our voice in social forums and networking sites. Experts in science of education may lead us. Waiting for a wave in the web-world regarding this.

மாற்றபடவேண்டியது இந்த கல்வி முறையில் செய்முறை அறிவியல், Moral கல்வி, தனி மனித அறிவின் சாரம் உணர்ந்த தன்மை, ஆசிரிய மாணவ உறவு மேம்படும் நிலை, இயற்கையோடு ஒட்டிவாழவேண்டும் என்ற அறிவு முதிர்ச்சி, சமுகத்திற் க்கு அற்பணிக்கும் தன்மை இவை மாறினால் சமூகம் மாறும் தேசம் மாறும், இந்த உலகமும் மாறும்.


Read more: http://www.penmai.com/forums/specia...special-contest-july-month.html#ixzz2ZrNmNo4C
 

kurinji

Guru's of Penmai
Joined
Nov 27, 2011
Messages
5,059
Likes
16,943
Location
chennai
#10
வணக்கம் சூர்யா அவர்களே ,
உங்கள் கருத்து மிகவும் அருமை ..........
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.