Penmai Special Independence Day Contest!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,988
Likes
16,991
Location
Coimbatore
#1
We are going to celebrate our 70th Independence Day on this 15th. For this forthcoming Occasion, we're sorting out an Unique contest as usual.

Is there any incident that stand out in your mind when you hear 'Independence Day'? Hold On, Here is a chance to Share your thoughts!


Our Contest Splits into 3 Parts...

Part I - This one is Purely Fictional. Which freedom fighter would you like/love to meet during that Period? And Mention, the questions you would be eager to ask him.
Part II - Have you ever wanted of adding any Rules and Laws in our Constitution ? If that Particular thing was to be staged, which law would you like to add in our country?
Part III - 70 years have been marked since got Freedom from British rule. Today, What does freedom Mean according to you? Write us!

Rules
1.Only 1 entry per member is allowed. It Should be either in Tamil or in English.
2. Contestants should participate in all the 3 Phases.
3. Last date of Submission - 31st August 11:59 PM IST.

Happy Independence Day!
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,988
Likes
16,991
Location
Coimbatore
#2
தோழமைகளுக்கு வணக்கம்!

வருகின்ற 15 ஆம் தேதி நாம் நமது எழுபதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கும் இந்த இனிய வேளையில், வழக்கம்போல் ஒரு சிறப்பான போட்டியை அறிவிக்கின்றோம்.

சுதந்திர தினம் என்ற உடனேயே உங்கள் எண்ணத்தில் உதிக்கின்ற கருத்துக்களை பின்வரும் மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பகிர்ந்து போட்டியில் கலந்து கொள்ளும்படி அழைகிறோம்.

பகுதி-1:
இந்தப் பகுதி முற்றிலும் கற்பனையே. தங்களைக் கவர்ந்த அல்லது தங்களுக்குப் பிடித்த எந்த சுதந்திரப் போராட்ட வீரரை தாங்கள் சந்திக்க விரும்புகிறீர்கள்? அப்படிச் சந்திக்கும் பட்சத்தில், நீங்கள் அவரிடம் கேட்க விரும்பும் கேள்விகள் யாவை?

பகுதி-2:
இந்திய அரசியலமைப்பில் தாங்கள் ஏதேனும் விதிகளையோ அல்லது சட்டங்களையோ சேர்க்க விரும்பினால், எந்தச் சட்டத்தை / விதியை சேர்ப்பீர்கள்?

பகுதி-3:
நமது நாடு சுதந்திரம் பெற்று எழுபதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய வேளையில், உங்களது பார்வையில் ‘சுதந்திரம்’ என்றால் என்ன? என்று பகிரவும்.

விதிமுறைகள்:

  • ஒரு போட்டியாளர் ஒரு பதிவை மட்டுமே போட்டிக்காக பகிரலாம்.
  • உங்களின் போட்டிக்கான பதிவு மூன்று பகுதிகளுக்கும் விடை அளிப்பதாக இருப்பதாக அமைய வேண்டும்.
  • போட்டியில் பங்கு பெறுவதற்கான கடைசி நாள்: ஆகஸ்ட் 31 11:59 pm IST
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,137
Likes
14,758
Location
California
#3
சந்திக்க விரும்பும் நபர் காந்தி . அவரிடம் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்...
1) தற்போதைய சூழலில், என்றாவது போராடி பெற்ற சுதந்திரத்திற்காக வருத்தப்பட்டதுண்டா ?
2) நேதாஜியை ஏன் புறக்கணித்தீர்கள்? அவரை புறக்கணித்ததற்கு எப்போது உண்மையில் வருந்தினீர்கள்? அவரை சந்திக்க நேர்ந்தால் என்ன சொல்வீர்கள்?
3) என்றாவது தேசத்தந்தை என்று நீங்கள் போற்றப்படுவதற்கு தகுதி அற்றவர் என்று எண்ணியதுண்டா? அப்படி என்றால் உங்கள் எண்ணத்தில் யார் உண்மையான தேசத்தந்தை?
4) உங்கள் கணிப்பு எப்போதாவது தவறி ,தவறான முடிவிற்கு வழி வகுத்திருக்கக் கூடும். அப்படி ஏதும் இருந்து, கால சக்கரத்தில் பின்னோக்கி சென்று மாற்றும் சக்தி இருந்தால் எதை மாற்றி இருப்பீர்கள் ?
5) இன்றைய இந்தியர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்ன ஒரு மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?


இந்திய அரசியலமைப்பை பற்றி முழுதாக தெரியாத போதும், நான் எதிர்பார்க்கும் முக்கிய சட்ட சீர்திருத்தம் ....
1) முதலமைச்சர் மற்றும் பிரதமரின் ஆட்சி காலம். ஒருவருக்கு அதிக பட்சம் 2 ஆட்சி காலங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. இதனால் குடும்ப அரசியல் மற்றும் அவர்களின் ஆதிக்கம் ஒழியும் என்று நம்புகிறேன்.

2) ஒவ்வொரு முறை சட்டம் இயற்றப்படும்போதும், அது அமுலுக்கு வரும்போதும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே, தற்போது, அதை ஆதரிக்கவும் எதிர்க்கவும் உரிமை இருப்பதாக நினைக்கிறேன். அப்போது மக்களுக்கு சட்டத்தை மாற்றியமைக்கும் உரிமை இல்லையா? மது விலக்கு போன்ற முக்கிய கோரிக்கைகளில் பொது மக்களின் தலையீடு இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் வரவிருக்கும் சட்டத்தின் மீது எதிர்ப்பு இருப்பின், பொது மக்களிடம் ஓட்டுக்கணிப்பு கண்டிப்பாக நடை பெற வேண்டும். பொது மக்களின் ஒப்புதல் ஒரு சட்டத்தை அமுல்படுத்தவோ தடுக்கவோ இருக்க வேண்டும்.




ஒரு இந்தியனாக என் பார்வையில் சுதந்திரம் என்பது .....
- சட்ட ஒழுங்கின் மீது நம்பிக்கை ஏற்பட்டு, எந்த வித பயமும் இன்றி முழு நம்பிக்கையுடன் என்று காவல்/நீதி துறையை நாடுகிறோமா அன்று தான் குடிமக்களாக நாம் முழு சுதந்திரம் பெற்றோம்.
- உள்ளாட்சியில் என்று நம் தலைமை தன்னலமற்ற முடிவுகளை, அரசியல் நெருக்கடிகளை பொருட்படுத்தாது எடுக்கிறதோ அன்று தான் இந்தியா முழு சுதந்திரம் பெற்றுள்ளது.
 
Last edited:

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#4
lovely topics..... yes.... my little brain starts working on this... i will come back soon on this thread to participate... with my views...
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,278
Location
bangalore
#5
Good contest Ilavarasi mam :thumbsup



ஒவ்வொரு கேள்வியும் நச்சுன்னு இருந்தது ரதி @RathideviDeva

மக்களுக்கு சட்டத்தை மாற்றியமைக்கும் உரிமை இல்லையா? மது விலக்கு போன்ற முக்கிய கோரிக்கைகளில் பொது மக்களின் தலையீடு இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் வரவிருக்கும் சட்டத்தின் மீது எதிர்ப்பு இருப்பின், பொது மக்களிடம் ஓட்டுக்கணிப்பு கண்டிப்பாக நடை பெற வேண்டும். பொது மக்களின் ஒப்புதல் ஒரு சட்டத்தை அமுல்படுத்தவோ தடுக்கவோ இருக்க வேண்டும்.


கண்டிப்பா இப்படி நடக்கணும்ன்னு நானும் விரும்புறேன். மக்கள் விருப்பம்னு சொல்லி எதை எதையோ நம் மீது திணிப்பதற்கு பதில் நம்ம விருப்பத்தை கேட்கலாமே....

ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க ரதி.... சூப்பர் :thumbsup
 

kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,420
Likes
16,824
Location
Singapore
#6
My Best Wishes to all the participants of this Contest.:thumbsup:thumbsup
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,137
Likes
14,758
Location
California
#7
Good contest Ilavarasi mam :thumbsup



ஒவ்வொரு கேள்வியும் நச்சுன்னு இருந்தது ரதி @RathideviDeva



கண்டிப்பா இப்படி நடக்கணும்ன்னு நானும் விரும்புறேன். மக்கள் விருப்பம்னு சொல்லி எதை எதையோ நம் மீது திணிப்பதற்கு பதில் நம்ம விருப்பத்தை கேட்கலாமே....

ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க ரதி.... சூப்பர் :thumbsup
ரம்யா இது சொந்த அறிவு இல்லை .


அமெரிக்காவில் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலின் போது , ஓட்டுபதிவில் இது போல் சில மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் சட்டங்களை இயற்ற மக்களின் வாக்களிப்பு இருக்கும். உதாரணத்திற்கு விற்பனை வரி சதவீத உயர்வு, உணவுப் பொருளின் மீது மரபணு மாற்றப்பட்ட பொருளா அல்லது இயற்கையான பொருளா என்ற முத்திரை அவசியமா? கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்கலாமா ? அந்த மாநிலத்தில் மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கலாமா?.... இப்படி அந்தந்த தொகுதி / மாநிலம் சார்ந்த ஒரு சில சட்டத்திற்கு பொது மக்களின் ஓட்டுப்பதிவு உண்டு. அந்த சமயங்களில் ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் மக்களிடம் தங்கள் கருத்துக்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க படாதபாடுபடுவார்கள். மக்களுக்கும் ஓரளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.


நம்மூர் சட்டமன்றத்தில் ஒரு கைகலப்பு, வேட்டி உருவல், போன்ற கலாட்டாக்கள் நடந்தால் தான் மக்களுக்கு என்ன நடக்கின்றது என்றே தெரிகிறது. அதே சமயம் தெரிஞ்சு என்ன ஆக போகிறது என்று மக்களுக்கும் ஒரு அலட்சியம். இதெல்லாம் மாற வேண்டும்.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#8
Good thread, thanks for tagging Karthi.

Rathi wonderful points :thumbsup

Good luck to all the participants.
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,278
Location
bangalore
#9
நான் சந்திக்க விரும்பும் தலைவர் திரு காமராஜர் அவர்கள்.

நான் அவரிடம் கேட்க விரும்பும் கேள்விகள்.


இப்ப இருக்கிற அரசியல்வாதிகளை(வியாதிகள்) பத்தி நீங்க என்ன சொல்வீங்க?


இப்ப வரை உங்க பேரை வச்சு அரசியல் பண்ணும் அரசியல்வாதிகள், இதுவரை உங்களின் ஒரு கொள்கையை கூட பின்பற்றாமலே இருப்பது பற்றி உங்கள் கருத்து?

நீங்க இறக்கும் போது உங்களிடம் இருந்த பணம் வெறும் 150 ரூபாய். ஆனால் இப்போது இருக்கும் அரசியல்வாதிகளிடம் (எத்தனை தலைமுறைகளுக்கு சரியா தெரியலை....) பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்பது மட்டும் தெரியும். பொது நலனுக்காக அரசியலுக்கு வந்த காரணம் போய்... சுயநலத்திற்காக மட்டுமே அரசியல் செய்யும் இன்றைய அரசியல் வாதிகளை பற்றி தங்கள் கருத்து?

உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காம நாட்டுக்காகவே வாழ்ந்து மறைந்த நீங்க.... இப்ப அதற்காக வருத்தபடுவது உண்டா?

எந்த சட்டத்தை புதிதாக கொண்டு வர விரும்புவேன்

சட்டம் என்பது எல்லோருக்கும் சரி சமமாக இருக்க வேண்டும். தவறு செய்பவன் பணக்காரன் என்றால்.... அவனால் தண்டனையில் இருந்து தப்ப முடியும்மென்றால்.... அந்த சட்டத்தால் என்ன பயன்?

பணம் கட்டி வெளியே வரமுடியாத ஏழை மட்டும் தண்டனை அனுபவிப்பான். பணக்காரன் வெளியே சுதந்திரமாக இருப்பான் என்றால்... தண்டனைக்கு எப்படி பயப்படுவார்கள்?

அதனால் பணக்காரனோ ஏழையோ தவறு செய்தால் தண்டனை என்பது வெறும் எழுத்தில் மட்டும் இல்லாமல்... நடைமுறையிலும் கொண்டு வர வேண்டும்.

சுதந்திரம் பெற்ற இந்த எழுபது ஆண்டுகளில் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்க இன்னும் நம்மால் முடியவில்லை. படிப்பு, வேலை, பதவி என்று எல்லாவற்றிலும் ஆணுக்கு நிகராக இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத நம் நாட்டின் நிலை மாறும்போது தான் நாம் பெற்ற சுதந்திரத்திற்கு அர்த்தம் உண்டாகும்.

இந்தியாவின் எந்த மூலைக்கும் பெண்கள் பயமில்லாமல் தனியாக சென்று வந்தாலே... நாம் முழுமையாக சுதந்திரம் பெற்றதாகும்.

 
Last edited:

shanthiudayappan

Friends's of Penmai
Joined
Jun 15, 2015
Messages
182
Likes
268
Location
Amsterdam
#10
I am new to this forum and I was trying to edit the post what I pasted here. Seems it doesn't work. so posted it again below. sorry for this!!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.