Penmai Special - Newyear Contest!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,050
Location
Coimbatore
#1
பெண்மை தோழமைகளுக்கு அன்பு வணக்கம்...!

கிறிஸ்துமஸும், புத்தாண்டும் இணைந்து நம் இதயத்தில் நேர்மறை எண்ண அதிர்வுகள் (Positive Vibes) ஊற்றெடுக்க வைக்கும் காலம். கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான போட்டியை அறிவிக்கும் தருணம் இது.

இந்தப் போட்டி இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. இரு பகுதிகளிலும் போட்டியாளர்கள் பங்கு பெற வேண்டும்.

பகுதி - 1 : பிரார்த்தனை (Prayer)

நாம் கடவுளிடம் ஆரோக்கியம், அமைதி, செல்வச் செழிப்பு மற்றும் பாதுகாப்பு கருதி அனுதினமும் பிரார்த்தனைகள் செய்கிறோம். மேலும், நமக்காக மட்டுமின்றி உற்றார்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமுதாயதிற்காகவும் பிரார்த்தனைகளை கடவுளிடம் வைக்கிறோம். மற்றவர்களுக்கு நாம் உடலாலும், பொருட்களாலும் உதவமுடியாத தருணங்களில், கடவுளிடம் பிரார்த்திப்பதன் மூலம், அவர்களுடைய தேவைகள் பூர்த்தியடையும் மற்றும் துயரங்கள் நீங்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. உங்களது பிரார்த்தனைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை இங்கு, உங்களது சொந்த நடையில் பதியுங்கள்.

பகுதி - 2 : புத்தாண்டை வரவேற்றல் (Welcoming The New Year):

புத்தாண்டு எல்லோருக்கும் எப்பொழுதும் சந்தோஷத்தையும், வளமையையும் கொடுக்கும். பழையன மறந்து, புதிய வாழ்கையில் அடியெடுத்து வைக்கும் தருணம் இது. இந்தப் புத்தாண்டில் நாம் ஒவ்வொருவரும் புதிய தீர்மானங்களை ஏற்று, நம்பிக்கை விதைகளை விதைத்து உயர்ந்த நோக்கங்களுடன் புது வாழ்க்கை ஆரம்பிப்போம் அல்லவா? அப்படி புத்தாண்டை வரவேற்பதில் உள்ள உங்களின் தனித்துவமான வரிகளை இங்கே பகிருங்கள்.

உங்களின் பகிர்வுகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ இருக்கலாம்.

விதிமுறைகள்:

1. இரு பகுதிகளிலும் உங்களின் பங்கேற்பு இருக்கவேண்டும். ஒரு உறுப்பினருக்கு ஒரு பதிவு மட்டுமே அனுமதிக்கப்படும்.
2. பதிவு உங்களின் சொந்த கருத்துக்களாக, துல்லியமாக இருக்கவேண்டும். கட்டுரை போன்று போன்று இருக்கக் கூடாது.
3. போட்டியில் பங்கேற்க கடைசி நாள் 2016 ஆம் வருடம் ஜனவரி மாதம் 5-ஆம் தேதி.

இந்த போட்டியில் யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். உங்களின் பதிவுகளைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,050
Location
Coimbatore
#2
Dear Penmaities,

Now it is time to announce the contest. Christmas & Newyear are on their way and the Positive vibes of Bells have started ringing in our hearts. So Lets Pen down your thoughts to make the sound of those bells louder.

Our contest is composed of two phases. You have to take part in Both!

A. Prayers are essentially placing our requests, concerns before the God and We trust Him unconditionally. At times We pray for blessings - peace - protection - prosperity. Whatever it may be, Praying for others is the best thing to do when we can’t do any more for them. Thats The best gift, Anyone can give!

What you should do is : Simply Post "Your Prayer to God" here. You can make your Prayer : Serious, joys and sufferings, whatever you wish!

Your writeup should be Either in English or in Tamil.

B. New Day, New thing, New Year will always bring happiness and prosperity in everyone’s lives. Forget the Old Year's resolutions! Its time to bid adieu to the Odd things & welcome the New year in a new Hope. It's time of high anticipation and new expectations.

Everyone has unique way of welcoming New Year! OK, "How You Welcome New Year?" Share with us here :)


Your writeup should be Either in English or in Tamil.

Rules
1. Members have to take part in Both Phases! Only one entry per member is allowed.
2. Your write up should be your own, precise and should not be like an Article.
3. Last Date of Submission - 5th January 2016.

This contest is open to all members. We are waiting for your amazing entries :)
 
Joined
Dec 30, 2015
Messages
1
Likes
11
Location
chennai
#3
my 1st post for this contest.
A. My prayer for the world. We suffered a lot in this chennai rainfall and flood. So praying to nature not to make our world suffer.

B. As a part of praying to nature, i try to live with nature not to use plastics and make my place clean.
 

SinduLakshmi Jagan

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 31, 2015
Messages
820
Likes
2,866
Location
Chennai
#4
பகுதி 1:


என்னுடைய வேண்டுதல்கள் பல.... அதில் மிக முக்கியமானது இரண்டு. ஒன்று, என்னுடைய தந்தைக்கு உடல் நலம் பெற வேண்டும். அவரின் உடல் நிலை மேலும் மோசமாகாமல், சீராக வேண்டும். :pray1:


இன்னொன்று இயற்கை தாய் மனம் இறங்கி, 2016ல் எந்த இயற்கை பேரிடரையும், தராமல் இருக்க வெண்டும். 2015ல் நடந்த பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இதுவே, என் பிரார்த்தனை!!!! :pray1: :pray:பகுதி 2:


2016ல்,என் தன்நம்பிக்கையும் திறமைகளையும் கூட்டி,
தேவையில்லாத கவலைகளை கழித்து,
அன்புக்குறியவர்களின் மகிழ்ச்சியை பெருக்கி,
இல்லாதவர்களுடன் செல்வத்தை பகிர்ந்து,
என்னுடைய வாழ்க்கை கணக்கை நேர் பண்ணுவேன் என நம்பிக்கையுடன்
புத்தாண்டை ஆவலுடன் வரவேற்கிறேன்!!!!


கடைசியில் வாழ்க்கையும் ஒரு கணக்கு பாடம் தானே?


ஆகையால், கூட்டி கழித்து பாருங்கள்..... கணக்கு சரியாக வரும்....!! :p ;) :cheer:
 

sriju

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 6, 2012
Messages
6,781
Likes
15,676
Location
coimbatore
#5

வணக்கம் பெண்மை மக்களே :)

பிராத்தனை


சக்தி இல்லாமல் இந்த உலகம் இயங்காது, இது நம் எல்லாருக்கும் தெரிந்தது தான். நமக்கு மேல் இருக்கிற ஒரு சக்தியிடம் நமக்கு தேவையானதை, ஆசைப்படுகிற ஒன்றை வேண்டுவது அனைவரின் இயல்பு. அந்த வேண்டுதல் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். என் வேண்டுதல் எப்போதும் அனைத்தும் தொட்டும் இருக்கும். சிறு வயது முதல் பழகிய ஒன்று. ஆண்டவனிடம் வேண்டும் போது நமக்காகவும், நம்மை சார்ந்திருப்போரையும் எப்போதும் உடலுக்கும், மனதுக்கும் தீங்கு இல்லாமல் காப்பற்றுமாறே பெரும்பாலும் வேண்டுவது. இதற்கு பிறகு வருவது எல்லாம் தான் செல்வம், கல்வி, மனை மக்கள் எல்லாம். இந்த வருடம் அனைவர்க்கும் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் அள்ளி வழங்கி நினைத்தது எல்லாம் விரும்பியவாறே நடக்கவே எனது பிராத்தனைகள் இருக்கும். மக்களை போல நம் நாடும் எல்லா வளங்களும் சிறப்புகளும் பெற்று மேலும் பல சாதனைகள், வெற்றிகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்ல வேண்டும். மறக்காமல் புது ஆண்டில் இயற்கை அன்னையை வணங்குவது மிகவும் அவசியம். இயற்கை சீற்றங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை வேறு நாடு, மாநிலங்களில் கண்டிருந்த போதிலும் நம் ஊரில் வரும் போதே அதன் பாதிப்பு உணர முடிகிறது. அது ஏற்படுத்தும் வலி இனி நம்மில் எவருக்கும் வரக்கூடாது என பிராத்தனை செய்வேன்.:pray1:

புத்தாண்டை வரவேற்றல்


புத்தாண்டை வரவேற்க எப்போதும் போல் மகிழ்ச்சியாய் இந்த வருடமும் தயாராகி விட்டாயிற்று. முந்தைய ஆண்டின் மகிழ்ச்சி நலமாய் தொடர, இன்னல்கள், துன்பங்கள் பாடமாய் அமைய புத்தாண்டை புது ஆசை, தைரியம், துணிச்சல், திறமை கொண்டு எதிர் நோக்கி காத்திருக்கிறேன். மலரும் ஆண்டு நமக்கு என்ன வைத்திருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. கேள்விக்குறிக்கு விடைகளை தாங்கி வரும் ஆண்டு நல்லதையே கொடுக்கும் என்ற நம்பிக்கை கொண்டு வரவேற்போம்.

அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பெண்மை தோழமைகளே!!! :)
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,837
Location
Sri Lanka
#6
பகுதி - 1 : பிரார்த்தனை

உயிர்களை படைத்தருளும் இறைவனிடம் வேண்டுகிறேன்...

அனர்த்தங்களின்போது பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளும், ஏதேதோ காரணங்களினால் பெற்றோரால் கைவிடப்பட்ட மழலைகளும் சீரழிந்து போகாது, அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிடைக்க அருள் செய்ய வேண்டும்.

செய்யும் தவறுகளுக்கு தண்டனைகளை மறுபிறவிக்கு எடுத்துச் செல்லாது, இப்பிறவியிலேயே கொடுத்துவிடவேண்டும். முற்பிறவிப் பயன் என்று அறியாப் பிஞ்சுகளை தண்டித்துவிடாதே.

கள்ளமில்லா குழந்தைகளை காத்து நல்வழி காட்டிடு.


பகுதி - 2 : புத்தாண்டை வரவேற்றல்

புதிய ஆண்டின் முதல் பக்கத்தில்...

இயற்கையுடன் சமாதான உடன்படிக்கை எழுதுகின்றேன்.
இயற்கையுடன் இணைந்து வாழ்வேன்.
பசுமையை பாதுகாப்பேன்.
சுற்றுச் சூழல் மாசடைவதை தவிர்ப்பேன்.
நீர் வீணாவதை தடுப்பேன்.
அராஜகத்தை காணுமிடத்தில் தட்டிக் கேட்பேன்.

இறைவனிடம் கோரிக்கை வைக்கின்றேன்.
பொறுப்பற்று திரியும் கணவன் மனைவிக்கு குழந்தைப் பாக்கியம் கொடுத்துவிடாதே.
பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான வாழ்வுக்கு வழி காட்டிடு.

புத்தாண்டே! அடுத்துவரும் உனது பக்கங்கள் புதிய சரிதம் படைத்திட உன்னை வாழ்த்தி வரவேற்கிறேன் :) :welcome:.
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,143
Likes
14,769
Location
California
#7
Part -1:
கடவுளே,
முதல்ல என்னோட நன்றி. ஏன்னா இது வரைக்கும்( யார் செய்த புண்ணியமோ) தாங்கக்கூடிய கஷ்டத்த மட்டும் தான் எனக்கு தந்திருக்க. அதுக்கு மேல தர்றத இருந்தா அத தாங்குற சக்தியும் மன திடத்தையும் கொடுதுரப்பா.

உன்கிட்ட இந்த புது வருஷத்துல என்ன புதுசா கேட்டுரப்போறேன். எப்பயும் பாடுற அதே பல்லவி தான். கொஞ்சம் மாத்திக்கிறேன். ஊற காப்பாத்து உலகத்த காப்பாத்துன்னு மொட்டையா உன்கிட்ட இந்த தடவ கேக்க மாட்டேன். ஏன்னா நீ எப்படியும் செய்றத செஞ்சிட்டு தான் இருக்க போற. அதோட என்ன சுத்தி இருக்குறதையே என்னால சரியா வச்சிக்க முடியல இதுல நான் எங்க இருந்து உலகத்துக்காக யோசிக்கிறது. இந்த தடவை என்னோட வேண்டுதல் முழுக்க முழுக்க எனக்கே எனக்காக மட்டும் தான்.

மனசு பூரா ரொம்ப ஈகோ, கோபம், பயம் இந்த மாதிரி எதிர்மறையாவே நிறைச்சு வச்சிருக்கேன். அது என்ன போட்டு ஆட்டுவிக்குது. அது போட்ற ஆட்டத்துக்கெல்லாம் ஆடிட்டு, கொஞ்ச நேரத்துலையே மனசாட்சி வந்து " எல்லாரோட நிம்மதியும் கெடுக்கிரியே, நீ பண்றது உனக்கே சரியா"ன்னு சட்டைய பிடிச்சு கேட்டு என்ன ரொம்ப கொல்லுது. இப்படியே இந்த வட்டத்துக்குள்ளையே (கோபம், அதன் எதிரொலி/reaction, குற்றஉணர்வு/guilt) சிக்கிக்கிட்டு இருக்கேன். வெளிய வந்தாலும், அது என்ன மாயமோ, சீக்கிரம் அந்த வட்டத்துக்குள்ள மீண்டும் சிக்கிடுவேன் . ஈகோ, கோபம் எல்லாம் முழுசா குறைக்க முடியாட்டியும், குறைஞ்ச பட்சம் நான் உடனுக்குடன் நம்ம கேப்டன் மாதிரி ரியாக்ட் பண்ணி நொந்து போற அவல நிலைமை வராம இருந்தாலே போதும்.

அப்புறம்.... என் பிள்ளைகளுக்கு சினிமா கதைல வர்ற அம்மா மாதிரி "சூப்பர் மாம்"மா இருக்கணும்னு எல்லாம் நான் பேராசை படல (வீட்ல கூட , பிள்ளைங்க உட்பட, யாருக்கும் அந்த பேராசை கிடையாது ). எங்க அம்மா அடிக்கடி "நாங்க தான் சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணி உங்கள சரியா நடத்துல. நீங்களாவது அந்த தப்பெல்லாம் பண்ணாதீங்க"ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அவங்க சொல்ற அளவுக்கு நடந்துக்க கூடாது. என் பிள்ளைகள்கிட்ட பிற்காலத்துல நான் வருந்துற நிலை வரக்கூடாது.

அடுத்து..... நான் செய்ற தப்ப என் அன்பானவர்கள் சுட்டி காட்டும்போது "அவன நிறுத்தசொல் நான் நிறுத்தறேன். இவன நிறுத்தசொல் நான் நிறுத்துறேன்"ன்னு நாயகன் ஸ்டைல்ல எதிர் கேள்வி கேட்டு என்னைய நியாயப்படுத்திக்கிட்டு இருக்காம, அத ஏத்துக்கிட்டு தேவையான மாற்றங்கள என்கிட்டே இருந்து ஆரம்பிக்க மன உறுதிய கொடு.

என்னை சுத்தி நடக்குற சிலத ஏத்துக்க முடியல. அதெல்லாம் மாறணும்ன்னு முட்டி மோதிக்கிட்டிருக்கேன். சில விஷயங்கள் நம்மால ஏதும் செய்ய முடியாது. அப்படி ஒன்னும் பாதிப்பில்லாத விஷயத்த கண்டும் காணாம இருக்கவும், பாதிப்பு தர விஷயத்த முடிஞ்சா மாத்தவும், முடியாட்டி அதில் இருந்து என்ன தள்ளி வச்சு பாக்குற மன பக்குவத்தையும் கொடு.

மொத்ததுல, இந்த வருஷமாவது என் மனசாட்சி என்னை காரி துப்புரது குறையுற அளவுக்கு நடந்துக்கணும். உன்னைய முழுசா நம்பி உன்கிட்ட சரணடையுற மனநிலைய (வரத்த) கொடப்பா.
 
Last edited:

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,143
Likes
14,769
Location
California
#8
Part 2
காலம் தான் எல்லாத்துக்கும் தீர்வுன்றனால 2016 உன்ன, ரொம்ப எதிர்பார்ப்போட வரவேற்கிறேன். உன்னுடைய மூத்தவன்(2015) கூட பயணம் செஞ்சப்ப, பாதி நாள் பின்னாடி (கடந்த காலத்த) பார்த்துட்டே தான் பயணம் போனேன். அதுனால எனக்கு முன்னாடி இருந்த தடை எல்லாம் சரியா கவனிக்காம ,அடிப்பட்டு, அங்கங்க தேங்கி நின்னு என் பயணம் முழுசும் மெதுவா தான் போச்சு.


இந்த தடவ, உன்னோட போகபோற பயணம், எந்த இடத்துலையும் தேங்கி குட்டையா நின்னுடாம, தெளிவான நீரோடை போல ஓடிட்டே இருக்கணும். இந்த பயணம் முடியுறப்ப(2016 இறுதி) நான் திரும்பி பார்த்து "பரவால்ல இந்த வருஷம் நல்லாவே முன்னேறி இருக்குற"ன்னு நானே என் காலர தூக்கி விட்டுக்குற நிலை வரணும்.
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#10
வந்தனம் பெண்மை மக்களே, Bye

பிரார்த்தனை:

எப்போதும் வேண்டுவதையே இந்த முறையும் வேண்டுகிறேன்.
இறைவா எந்த ஒரு சுக துக்கமோ அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன் அனைத்தையும் நீயே வழிநடத்து. எதையும் தாங்கும் மன அமைதியையும், மன தைரியத்தையும் தா. அதே போல உலகில் வேண்டுவர்கள் அனைவருக்கும் இயன்ற வரை வேண்டுவதை தா..... அனைவரையும் நலமாய் வாழ வை.


புத்தாண்டை வரவேற்றல்:

மலர்ந்த இந்த புதிய வருடம் எதை தருகிறதோ அறியோம் ஆயினும் இனிதே பயணப்படுவோம் அவளோடு இனிமையாக, சந்தோஷமாக, துன்பத்தையும் ஏற்கும் மனதோடு நம் அழகிய உறவுகளுடன் கைக்கோர்த்து.


ஒன்றினை மட்டும் செய்ய எண்ணி உள்ளேன். என் பிள்ளைகளுக்கு இயற்கையை காக்கும் முறையையும், இயன்ற வரை உதவும் மனதினையும் உள்ளத்தில் பதிய வைக்க எண்ணுகிறேன், அதனை அவர்கள் செயல்படுத்தவும் ஆவன செயப்பேன். அடுத்த வருடத்தில் இதை செய்தேன் என்னும் படி இருந்தால் மிக்க மகிழ்ச்சி.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:):)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.