Penmai's Special Father's Day Contest

saranyaraj

Penman of Penmai
Blogger
#23
ஹாய்.. ப்ரிண்ட்ஸ்...

இந்த போஸ்ட் பார்த்தவுடன் என்னால் பகிர்ந்துக்காமா இருக்க முடியலை..

என் அப்போவோடு என் நினைவுகளை பற்றி...

சிறுவயதில் இருந்து ஒரே பெண் (ஒரு அண்ணன் இருக்கான் அது வேற.. பெண் குட்டி நான் மட்டுமே..) அப்படின்னு ரொம்ப செல்லம்.. எது கேட்டாலும் உடனே கிடைக்கும்.. எங்க வீட்டுக்கு மட்டுமில்லமா எங்க அத்தை மாமா, அப்போவோட நண்பர்கள் இப்படி எல்லோருமே ரொம்ப செல்லம் கொடுத்து கொடுத்து கெட்டு போன பொண்ணு..


நான் ஒருத்தருக்கு சின்ன வயதில் பயபடுவேன் என்றால் அது அப்பாவுக்கு தான்... பேசவே மாட்டார் ஆனா கண்களால் பார்த்தாவே பயந்துடுவேன்.. அப்பா வேலைக்காய் அதிகமான நாட்கள் வெளியே தான் இருப்பார்.. அவர் வரும் சமயம் புல்லெட் சத்தம் கேட்கும்.. உடனே புத்தகமும் கையுமா சமத்தா உட்கார்ந்துடுவேன்..

அப்படி ஸ்ட்ரிக்ட் ஆபீசர் அப்படின்னு நாங்களே நினைத்து கொள்வோம்.. அந்த வயதில் அவர் அப்படி ஓடிக் கொண்டிருந்தார்.. எங்களோடு நேரம் செலவளிக்க முடியவில்லை.. ஆனால் கேட்டது எல்லாம் கிடைக்கும்..

இன்னும் நினைவில் இருக்கு.. எங்க வீட்டின் ஏர் குலர் மீது நோட்டு புத்தகமும் பணமும் இருக்கும்.. வேணும் போது எடுத்துக் கொண்டு எதற்காய் எடுத்தேன் என்று குறிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார் அந்த ஆறு வயதில்.. அது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பொதுவான விதி.. அந்த வயதிலே எப்படி செலவழிப்பது, எது வீண் செலவு என்றும், கணக்கை சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்..

அவரும் நிறைய செய்வார்.. ஆனால் ஏதோ வாரத்தில் ஒரு நாள் இரண்டு நாள் பார்பவரின் மீது பயம் கலந்த மரியாதை வருமே அதே மாதிரி தான் எங்களுக்கும் இருந்தது..

சில சமயம் அம்மாவிடம் சொல்லுவாராம், இரண்டும் என்னிடம் ஓட்டவே மாட்டங்குதென்று... அதனால், அவர் வெளியே செல்லும் வேலைககளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார்..

எங்களுக்காய் நிறைய நேரத்தை ஒதுக்கினார்..

அப்போது தான் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு வந்தது... எங்களை படியென்று எங்கள் வீட்டில் யாரும் சொன்னதில்லை.. அப்பாவை பொறுத்தவரை, பள்ளியில் படிப்பதே போதுமானது.. வீட்டில் படித்து கஷ்டப்பட வேண்டியதில்லை என்பார்.. நன்றாக விளையாடு, நிறைய பொதுஅறிவு சார்ந்த புக் படி என்று அவரின் புத்தகங்களை தருவார்..

அதோடு சில சமயம் அவர் சாண்டில்யனின் கதைகளையும் கல்கியின் கதைகளையும் உணர்வு பூர்வமாக சொல்வார்.. இன்னும் நினைவில் இருக்கிறது அவர் சொன்ன கடல் புறா கதையின் கத்தி வீச்சு.. தளபதி ராஜாவை நாட்டிய ஆரங்கத்தில் காக்கும் நிகழ்வு.. படத்தில் பார்த்து நினைவில் கொள்வதை விட அவர் சொன்னதில் அவரின் கற்பனை அதிகமாய் ஈர்த்து எங்களை அதில் ஆழ்த்தியது....

அந்த சமயம் தான் கொஞ்சமாய் கொஞ்சமாய் அவரிடம் ஈடுபாடு தோன்ற ஆரம்பித்தது... (என்னடா இவ... கதையா எழுதற அப்படின்னு நினைக்காதிங்க... டியர்ஸ்...)..

நானும் கொஞ்சம் நல்லாவே படிப்பேன்.. நல்ல மார்க் எடுத்து, என்ட்ரன்ஸ் எல்லாம் எழுதி அரசு கல்லூரியில் தொழில் நுட்ப கல்வி கிடைக்க, போக மாட்டேன் என்று சொல்லி, ஊரில் உள்ள கல்லூரியில் தான் சேர்வேன் என்று அடம்பிடித்தேன்..

அதற்கு காரணம் வேறொன்றுமில்லை.. ஹோச்டேல சேர்ப்பேன் என்று சொன்னாங்க.. நமக்கு தான் வீட்டில் ராஜா வாழ்க்கை..அதை விட்டு எப்படி போக முடியும் சொல்லுங்க... அப்போது வரை எனக்கு தலைக்கு குளித்து விடுவதில் இருந்து சாப்பாடு ஊட்டி விடுவது வரை அம்மாவும் அத்தையும் செய்வார்கள்.. அதோடு லீவ் நாள் அப்படினா அப்போவோட ப்ரிண்ட் வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவாங்க...அபப்டி இருக்க நான் எப்படி ஹொஸ்டலில் போய் சேருவது.. சொல்லுங்க.. இந்த சுகம் எல்லாம் அங்கே கிடைக்குமா...

ஒரே பிடிவாதம் தான்.. எல்லோரும் திட்டும் போதும்.. அப்பா "உன் இஷ்டம்... ஆனால் என்ன படிக்கணும்.. அப்படின்னு நீயே முடிவு செய்.. உன் வாழ்க்கை உன் முடிவு.." என்று சொல்லிவிட்டார்..

அவரை பொறுத்தவரை மற்றவர் விருப்பங்களில் தலையிட கூடாது என நினைப்பார்.. அதனால் என் விருப்பபடியே அனைத்தும் நடந்தது..

ஆனால் அப்பா அம்மாவிடம் அவளை அவள் வேலைகளை தனியாக செய்து பழக்கு என்று சொன்னார்.. ரொம்ப பெரிய வேலையெல்லாம் இல்லை.. நானே சாப்பிடறது.. தலை சீவுவது...காலேஜ் பாக் நானே எடுத்துட்டு பஸ் ஏறுவது அது மாதிரி தான்.. இதுக்கே இந்த பில்ட்-அப்னா கேட்காதிங்க.. என்னோட எல்லா உறவினரும் ஒரே இடத்தில் அருகருகே இருப்பதால், எனக்கு ஒரு வேலையும் செய்ய வேண்டியதில்லாமல் போய் விட்டது..

நான் அதுவரை படித்தது பெண்கள் மட்டுமே இருக்கும் பள்ளி.. அதனால் நான் பெண்கள் கல்லூரியை தேர்தெடுக்க, அப்பாவோ என்னை இருபாலர் சேர்ந்து படிக்கும் கல்லூரியில் தான் சேர்ப்பேன் என்று சொல்லி சேர்த்தார்..

அப்போது தான் இருவரும் சமநிலை என்பதை உணர முடியும்... அதோடு அனைவரை பற்றியும் அறிய முடியும் என்று சொல்லி சேர்த்தார்.. அது மாதிரி தான் நடந்தது.. எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை வளர்ந்தது..

கிணற்றில் வாழும் தவளை போல் இல்லாமல் இருக்க, தினமும் நிறைய கதை பேசுவார்..

அவர், தன்னுடைய இளவயதில் இருந்து, ஒவ்வொரு நாளும் எப்படி கழிந்தது, எத்தனை பிரச்சனைகள், எப்படி தீர்த்தார் என்றெல்லாம் கதை கதையாய் பேசுவார்.. எந்த நிலையிலும் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்லமால், கதையை சொல்லிவிட்டு, இதற்கு நீ என்ன தீர்வு செய்ய நினைப்பாய் என்று கேள்வியாய் முதலில் கேட்பார்.. சிந்திக்க வைத்தார்..

இப்படியே போக, மேற்படிப்புக்கு வெளியூர் தான் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டார்.. அதுவும் நல்ல பெரிய கல்லூரியில் தான் உன் முயற்சியில் பெற வேண்டும் என்று கூறிவிட்டார்..

ஒவ்வொரு முறையும் கிழே விழும் போது கை கொடுத்தார்.. ஆனால் நீயே முயற்சி செய்து எழு என்பார்..

அதனால் தான் என்னவோ அவர் நினைத்தது போல் மேற்படிப்பு படிக்க வெளியே வந்தேன்.. என்னவொரு மாற்றம் மூன்று ஆண்டுகளில்...

புது ஊர், தனிமையான வாழ்க்கை, என் வாழ்க்கை என்று என்னை ஒவ்வொன்றையும் உணரச் செய்தார்.. எப்படி வாழ வேண்டும் என்று பழக சொன்னார்...

இப்பவும், உன்னுடைய வாழ்வு உன் கையில் என்று சொல்லி, பின்னிருந்து நம்பிக்கை அளித்து கொண்டே இருக்கிறார்..

அவர்களால் தான் நான் இந்த அளவு வந்தது..

அவர் மட்டுமில்லை.. அப்பாவோடு அம்மாவை பிரித்தே பார்க்க முடியாது.. இருவருமே காரணம் என்றாலும் அம்மா அமைதியாய் ஆறுதல் அளிப்பார்.. அப்பா எப்படி இருக்க வேண்டும் என்று எங்களுக்கு வழி வகுத்து கொடுத்தார்..

அன்பு, அறிவு, வாழ்க்கை முறை, நியதி என அனைத்தையும் கற்று தந்த குருவும் அவரே...

அவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்... அப்பாவின் நினைவுகள் என்பது என்னுளே இதயத்தில் உளி கொண்டு செதுக்கப்பட்ட நிகழ்வுகள்..
அது என்றும் மறக்காது..


அப்பா...
உங்களை பற்றி என்ன சொல்வது என யோசிக்க தேவையில்லை எனக்கு...
ஏனெனில் எனது யாதுமாகி இருந்து எங்களை வழி நடத்துவது நீங்கள் தான்...

உங்களின் சிரிப்பும், கனிவு பேச்சும் தான் எங்களை இந்த அளவு வரவைத்து இருக்கிறது..

உங்களுக்கு நன்றி என்று எதையும் சொல்ல இயலாது..

ஆனால்

அடுத்த ஜென்மமென்று ஓன்று இருந்தால் அதிலும் உங்களுக்கும் அம்மாவுக்குமே நான் மகளாக பிறக்க வேண்டும் என்ற பிராத்தனையோடு இந்த பகுதியை முடித்து கொள்கிறேன்...

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Jul 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

saranyaraj

Penman of Penmai
Blogger
#24
கோவா லேஸ்... ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க... emotionally blocked me.. mm..

snofy... superb.. point by point locked the corner abt dad..thanks dear...

priya... small n sweet .. arumaiyaana vithathail ungal appavai patri solli engalai athil althitinga..

kirithika.. hats off to yr dad dear.. ammavum irunthu seiyarathu romba kastam.. thanks a lot to share with us dear...
my pray to god, that yr dad to be long lived with all the happiness dear..

femila... superbly narrated da.. the confidence u have, and the way u expressed is so nice.. advance bday wishes for yr dad dear...


gowry.. appavai patriyum nalla appa eppadi irukanum patriyum arumaiya solli irukinga...
 
Last edited:

saranyaraj

Penman of Penmai
Blogger
#25
My dad..

is the mentor
when i need a advice

is the savior
in my difficult time

is the devotee
when it comes to family

is the first criticizer
to express his thoughts on my action...

is my friend
indeed to help and sharing the friendly hood..

is my strength
when am finding difficult to sustain..

is our sun..
we all revolve around him as planets..

he is the one who given light to our life..
enlightened us with his strength..

after writing so much too..
still feel like i dint expressed properly..
this is because,
you given everything what we need..
you thought everything what we required
you made us to surf the people's mind
to understand the ethics..
you taken us so many places to
realize the worlds wonder..
you cultivated us as
fresh flowers from the buds
No words to express
how we feel about you..
No sentence will make life
for your worth..!!!
the warmth of your hands while holding
is the strength of our life..
please lead us as always until our end together with mom..
thats our pray...

i love you dad ..... 
Last edited:

sujibenzic

Penman of Penmai
Blogger
#26
இப்படி ஒரு நல்ல தலைப்பினை சிந்தித்து தந்தையர்களை கௌரவிக்க களம் அமைத்து கொடுத்த இளவரசி அவர்களுக்கு என் முதற்கண் நன்றிகள்.


' அப்பா' - என் வாழ்வில் இறைவன் பரிசளித்த பெரும் வரம் என்று சொல்வதில் எப்பொழுதுமே வற்றாத பெரும் மகிழ்ச்சி. அந்த நன்மைக்கு பிரதிபலனாக தினம்தோறும் இறைவனுக்கு நன்றி செலுத்த தவறியதேயில்லை.


அப்பாவுடன் செலவழித்த ஒவ்வொரு நிமிடமும் பொக்கிஷம்தான். அவர்களின் குடும்ப பற்றைக்கண்டு நான் வியக்காத நாளே இல்லை எனலாம். சிறு வயதில் இருந்தே நான் என் தந்தையிடம் கண்டு வியக்கும் பண்புகளில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவை, அவர்களது பொறுமை, நேர்மை, மனிதநேயம், பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் உதவும் நற்பண்பு, அடுத்தவர்களுக்காக தன உடல் வருத்தம் பாராமல் முயல்வது, எவ்விவித பிரதிபலனும் எதிர்பார்க்காத நல்மனம் , பிறர் மனதை புண்படுத்தாத பண்பு, போன்றவை. அந்த பண்புகளை நானும் கற்றுக்கொள்ள இன்றுவரை முயன்று கொண்டிருக்கிறேன்.


இயல்பிலேயே என் தந்தை பொறுமைசாலி, சட்டென கோபம் வராது. ஆனால் ' சாது மிரண்டால் காடு கொள்ளாது ' என்ற பழமொழி அவர்களுக்கு வெகு பொருத்தம். இதுவரை என் வாழ்வில் ஒரே ஒரு முறை என் ஆறாவது வயதில், என் அப்பாவிடம் ஒரே ஒரு அடி வாங்கியிருக்கிறேன். எனக்கு சின்ன வயதில் ஒரு பழக்கம், சாப்பாட்டை கண்டவுடன் ஓயாமால் அழுவேன். பல நாள் எச்சரித்தும் கேளாததால், ஒரு நாள் கோபம் எல்லை மீறி என்னை அடித்து விட்டார்கள் . அன்று விட்டது தான்,சாப்பாட்டை மீதம் வைப்பதையும், தட்டின் முன் அழுவதையும். அதன் பின் எந்த ஒரு சூழ்நிலையிலும் அடித்ததில்லை.

ஆனாலும் அப்பா மீது என்றுமே எனக்கு பயம் இருந்ததில்லை. எனக்கு ஒரு உற்ற தோழன் அவர். அவர்கள் தலை முடியில் ஹேர் கிளிப் அணிவிப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. :) :)என் பெற்றோருக்கு நான் ஒரே மகள். அதற்காக கேட்டவை எல்லாம் வாங்கி கொடுத்து பழக்காமல், நான் கேட்கும் பொருளின் அவசியதன்மையை என்னையே ஆராய வைத்து, அது கண்டிப்பாக தேவையென்றால் அதை எனக்கு மறுக்காமல் பெற்று தருவார் என் தந்தை. சந்தோசம் என்பது மனம் சார்ந்த விஷயம், அது பணத்தினாலோ பொருட்களினாலோ வருவதில்லை. எப்போதும் நிறைவாக இருந்தால் மகிழ்ச்சி தானாகவே தேடி வரும் என்ற நேர்மறை சிந்தனையை எனக்கு ஊட்டி வளர்த்தவர், என் அப்பா. இந்த பழக்கத்தால், இன்று, ஆசைகளை பகுத்தறிய பழகி, கிட்டாதபோது அதற்காக பெரும் வருத்தமுற்று ஏமாறாமல், நிறைவாக இருக்கும் மனம் கொண்டு வாழ பழகியிருக்கிறேன்.


இவையெல்லாம் தாண்டி,
1.அப்பாவின் மாறாத அன்பு,
2.என் மீது வைத்த நம்பிக்கை ( இந்த நம்பிக்கை தான் என்னை எந்த தவறான செயலையும் செய்ய விட்டதே இல்லை)
3.எனக்களித்த சுதந்திரம்,
4.நானே என் மீது நம்பிக்கையற்று போகும் சமயங்களில் கூட,அவர்கள் என் மீது கொண்ட நம்பிக்கை
5.நேர்மறையாக எதையும் அணுக கற்று கொடுத்தது,
6.தனது வேலை காரணமாக நேரமின்மை இருந்தாலும், குடும்பத்திற்காகவும் எப்போதும் நேரம் ஒதுக்கியது
7.சின்ன சின்ன வெற்றிகளையும் பாராட்டுவது
8.யாவரையும் சமமாக பாவிக்கும் தன்மை, சமூக அக்கறை வேண்டும் என்று வலியுறுத்துவது
9.படிக்கும் காலத்திலும், வேலைக்கு செல்லும் போதும், குடும்ப வாழ்விலும், எப்போது என்ன உதவியோ, வழிகாட்டுதலோ தேவைப்பதும் சமயம், எப்போதும் எனக்கு தூணாக இருந்து ஒரு பாதுகாப்பு உணர்ச்சியினை என் மனதில் வேரூன்ற செய்தவர்,
10. பெண் என்று பேதம் பாராமல், என் தந்தைக்கு ஒரு ஆண் மகன் இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்களோ அதற்கு மேல் எனக்கு எல்லா செயல்களையும் பார்த்து பார்த்து செய்பவர்.


மேலும் சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கும் எழுதி கொண்டே இருக்க ஆசை தான். இருந்தாலும் கூட இந்த முக்கியமான பத்து தன்மைகள் உடைய தந்தை அமைய பெற்றாலே , அவரகளுடைய பிள்ளைகளாக இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்.


இன்று என் மகனுக்கு தாத்தாவான பின்னும் கூட, என் தந்தைக்கு நானும் சிறு குழந்தை தான். எனக்கு செய்தவற்றை எல்லாம் இப்போது தன பேரனுக்கு செய்து மகிழ்கிறார்கள்.

இந்த நேரத்தில் இன்னொரு தந்தையை பற்றியும் இங்கு அவசியம் குறிப்பிட வேண்டும். அது என் மகனின் தந்தையாகிய என் கணவர். ஒரு தனி மனிதனாக சுதந்திரமான மனபோக்கு கொண்டு வாழ்ந்து , ஒரு பெண்ணுக்கு கணவனாகி, பின் பொறுப்பும் பாசமும் மிக்க ஒரு தந்தையாக மாறும் ஆண்களின் அழகான வாழ்கை சுழலை என் கணவரின் மூலம் கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் ஒருங்கே கொள்கிறேன் நான். அவரும் ஒரு சிறந்த தந்தை என்பதை மறுக்கவே முடியாது.

கோடி நன்றிகள் கூட ஈடாகாது எனினும் என் மனதில் தோன்றிய சில வார்த்தைகள் கோர்த்த ஒரு கவிதை, அப்பா உங்களுக்காக....


உயிர் தந்து
உணமையான அன்பும தந்து
உயர்ந்த கல்வி தந்து
ஒவ்வொரு வளர்ச்சியிலும்
உறுதியான தூணாய் நின்று
உவகையில் உளம் மகிழ்ந்து
சோகங்களில் சுமை பகிர்ந்து
நேர்மறை சிந்தனைகள் நிதமும் தந்து
உயரங்கள் நான் எட்டும் போது
ஒப்பிலா இன்பம் கொண்டு
சின்ன சின்ன ஆசைகளையும்
சிரமேற்கொண்டு நிறைவேற்றி
என்னை ஒளிமயமாக்க
தன்னை உருக்கி உழைக்கும்
இறைவன் அருளிய அற்புத வரம்
என் தந்தை!

இந்த உலகத்தில் உள்ள அனைத்து அன்பான தந்தையருக்கும் என் நெஞ்சார்ந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்!


Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Jul 2013. You Can download & Read the magazines
HERE.

 
Last edited by a moderator:

sujibenzic

Penman of Penmai
Blogger
#27
Hi friends,

Lakshmi, Snofy, Priya, Gowry, Krithika, Saran, innum yaaraiaachum vitukkenaa nu theriyala, aanaal ellarum solvathai kettu romba negizhhiyaa irukku.. Romba azhagaa velippaduthiyirukkeenga...

so emotional...Ippove enga appaava paarkanum pola irukku..:( :( :(
 

sumitra

Registered User
Blogger
#31
My dad..

is the mentor
when i need a advice

is the savior
in my difficult time

is the devotee
when it comes to family

is the first criticizer
to express his thoughts on my action...

is my friend
indeed to help and sharing the friendly hood..

is my strength
when am finding difficult to sustain..

is our sun..
we all revolve around him as planets..

he is the one who given light to our life..
enlightened us with his strength..

after writing so much too..
still feel like i dint expressed properly..
this is because,
you given everything what we need..
you thought everything what we required
you made us to surf the people's mind
to understand the ethics..
you taken us so many places to
realize the worlds wonder..
you cultivated us as
fresh flowers from the buds
No words to express
how we feel about you..
No sentence will make life
for your worth..!!!
the warmth of your hands while holding
is the strength of our life..
please lead us as always until our end together with mom..
thats our pray...

i love you dad .....Dear Saranyaraj, really wonderful. thank you
 

sumitra

Registered User
Blogger
#32
Hi Friends, very nice thread .....Thank you Ilavarasi Mam....

I love my dad a lot..... who does not ..... it is a very special relationship between a dad and his daughter...... one which is to be cherished and nurtured all through our lives...

He is my first role model in life....

He was never vocal in expressing his love but his actions spoke more than the words... all the love , care ,attention, sacrifice ...no words can express how i feel....

I'm still his little girl even though i am a mum now .....

Always been there in each and every step of my life.....

Appa/Dad/Papa/ Nana /Pithaji/ Paji - so many ways to address one's dad..... whichever way you address let there always be love in your voice....

Love you Dad now and always........
Happy Father's day to all lovely Dad's....

Dear Priya Gautham, your narration is fantastic. thank you
 

sumitra

Registered User
Blogger
#34
என் அப்பா: சில நேரங்களில் எனக்கு அம்மா , கஷ்டமான நேரங்களில் எனக்கு நம்பிக்கை கொடுக்கும் தோழன், சில நேரங்களில் எனக்கு சிறு பிள்ளையாகவும் தெரிபவர் தான் என் அப்பா.


சிறு வயதில் தெய்வ நம்பிக்கை கொடுத்தவர் அம்மா தான், ஆனால் இடையில் அனைத்தையும் வெறுத்த எனக்கு கஷ்டங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி அதை எதிர்கொள்ள தெய்வ நம்பிக்கையும் வேண்டும் என்று கற்று கொண்டது என் அப்பாவிடம் தான்.


எங்கள் வீட்டில் நாங்கள் (நான் & என் தங்கை) இருவருமே பெண் பிள்ளைகள் தான், இதுவரை ஆண் பிள்ளை இல்லை என்று வருத்தமே பட்டிராத என் அப்பாவிற்கு நான் சொல்ல/ தர விரும்புவது உங்களுக்கு நான் என்றென்றைக்கும் துணையாக இருப்பேன், கடைசி வரை உங்களை கஷ்டப்படாமல் பார்த்து கொள்வேன் என்ற நம்பிக்கையை தான்.என் அப்பாவுடன் இருந்த/ இருக்கும் எல்லா தருனங்கலுமே அருமையானவை தான்.ஒரு சிலவற்றை மட்டும் நான் இங்கு பகிர்கிறேன்.


பதினேழாவது வயதில் என் அம்மாவை ஒரு விபத்தில் இழந்துவிட்டோம். என் தங்கைகு பதினைந்து வயது. ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தாயின் அரவணைப்பும், அறிவுரையும் , வழிகாட்டுதலும் தேவை படும் சமயம்.


அந்த பொறுப்பை அழகாக எடுத்துக்கொண்டு தேவையான சமயங்களில் தேவைப்பட்ட அறிவுரைகளை வழங்கி இன்று வரை நெறி தவறாமல் வளர்த்தவர் தன என் அப்பா.


அன்று வரை எங்களை போல அப்பாவும் சிறு பிள்ளையாக இருந்தவர் தான். விவசாயம் மட்டுமே தெரியும், மற்றைய குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பார்த்துகொன்டவர் அம்மா தான்.


சமையல் கூட எங்கள் மூவருக்கும் தெரியாது, அன்றைய நிலையில் இனி இந்த குடும்பம் என்ன ஆகுமோ என்று வருதியவர்கள் ஏராளம்.
ஆனால் இன்று அணைத்து துக்கங்களையும் விழுங்கி இன்று ஒரு நல்ல நிலையில் இருப்பதற்கு ஆதாரமாக இருப்பவர் என் அப்பா மட்டுமே.
முதல் நாள் கூட இருந்த அம்மா இல்லை, அடுத்த நாள் பள்ளியில் பரிட்ச்சை, 19 வருட திருமண வாழ்க்கையில் அனைத்துமாக இருந்த மனைவியை இழந்திருந்தாலும் , தன்னை உடனே சமன் படுத்திக்கொண்டு , நடந்ததை நினைத்து ஓயிந்து போகாமல் படிப்பில் கவனத்தை செலுத்த செய்தவர் அவர்.


இன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம்மாக இருக்கும், எப்படி நம்மால் முடிந்தது என்று, காரணம், அப்பா அம்மா மேல் வைத்திருந்த அன்பை பற்றி நான் அறிவேன்.ஒரு சிறு கருத்து வேறுபடும் கொண்டதில்லை அவர்களுக்குள்.
பெண் இல்லாத வீடு மதிப்பு இல்லாதது என்று ஒரு பாலஸ்தீன பழமொழி உண்டு.


ஆனால் இன்று எங்கள் ஊரில் உள்ளவர்கள் மட்டும் இன்றி , உறவினர்களும் தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக சொல்ல கூடிய அளவுக்கு எங்களை வளர்த்த பெருமை அப்பாவையே சேரும்.


இன்று வரை நாங்கள் என் அப்பாவிற்கு பயந்தது இல்லை. எதற்கு பயப்பட வேடும் அவர் ஒன்றும் மூன்றாம் மனிதர் அல்லவே, இந்த எண்ணத்தினால் இன்று வரை நாங்க எந்த ஒரு விஷயத்தையும் அவரிடம் மறைத்ததும் இல்லை.


அவர் இதுவரை பெரிதாக நேரடி அறிவுரை கூறியதில்லை. பள்ளி கல்லூரிகளில் நடக்கும் சிறு சிறு விஷயத்தையும் அன்றே வந்து வீட்டில் கூறும் பழக்கம் எங்களுக்கு உண்டு. அப்பொழுது அவரின் கருத்துக்களை கூறி மறைமுகமாக விஷயங்களை எடுத்து கூறுவார்.
தோழிகள் செய்யும் தவறுகளை சுற்றி காட்டி இது தவறு, இப்படி செய்ய கூடாது என்று நீ எடுத்து சொல் என்று காரண காரியங்களை எனக்கு விளக்குவார். இது தோழிக்கு மட்டும் அல்ல, எங்களுக்கும் சேர்த்தே தான் என்று தெரியும். இது தான் என் அப்பா.
இப்படி தான் எங்களுக்கு maturity வந்தது எனலாம்.


கல்லூரியில் கடைசி வருட படிப்பின் பொழுது campus interview நடந்தது. முதல் தேர்வில் தோற்று வருந்திய பொழுது, தோல்வியை கண்டு துவளாமல் தனம்பிக்கை கொடுத்து அடுத்தடுத்து இரண்டு MNC கம்பனியில் தேர்வானதற்கு என் அப்பாவின் உறுதுணையும், அம்மாவின் ஆசியுமே காரணம்.


தஞ்சாவூரில் தேர்வு. எங்கள் ஊரில் இருந்து 4 மணி நேர பிரயாணம். காலை 9 மணிக்கு அங்கு இருக்க வேண்டும் என்றார்கள். என் ஊர் கிராமம் என்பதால் மயிலாடுதுறைக்கு விடியற்காலையில் நேரடி பேருந்து இல்லை. என்ன செய்வது என்று தவித்த பொழுது, எப்படியாவது செல்ல வேண்டும் என்ற உறுதியான எண்ணம். விடியற்காலை 3 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி 6 KM சைக்கிள் பயணம், பின்பு வேறு ஊருக்கு (சுற்று வழி)பஸ் பிடித்து இறுதியில் சரியான நேரத்துக்கு என்னை அழைத்து சென்றார்.


அன்றைய நிலையை இப்பொழுது நினைத்தாலும் கண்கள் கலங்கி விடும்.காரணம் தெரு விளக்குகள் இல்லாத இருட்டில், அப்பாவுக்கு அப்பொழுது சற்று கண் பார்வை குறைபாடு வேறு, அத்தகைய நிலையிலும் உறுதி குலையாமல் , என்னை cycle lil அழத்து சென்ற என் அப்பா என்றுமே எனக்கு ஒரு வரம் தான்.


இன்றும் நான் ஊருக்கு செல்லும் பொழுது என் அப்பாவுக்கு குளிக்கும் பொழுது தலை தேய்த்து விடுவேன், அது எனக்கு பிடித்தமான செயலும் கூட. :)
வேலை பார்க்கும் பொழுது சென்னையில் இருந்து வாங்கி செல்லும் திண் பண்டங்களை என் தங்கையுடன் அவர் ஆர்வமாக உண்ணும் பொழுது இத்தனை maturity கொடுத்த அப்பா சிறு பிள்ளையாகவே என் கண்களுக்கு தெரிவார்.அவரே குடும்ப தலைவர், அவர் நினைத்தால் நினைத்த பொழுது நினைத்ததை சாபிடலாம், ஆனால் ஒருநாளும் எங்களை விட்டு அவர் எதையும் உண்டதில்லை.அந்த அன்பு ,அது போன்ற தருணங்கள் மிகவும் அற்புதமானவை.


ஒரு குழந்தைக்கு அதன் பெற்றோர்களே முதல் குரு ஆவார்கள்.
என்னை பொறுத்தவரை ஒரு நல்ல தந்தை என்பவர்,


* தன குழந்தைகளின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். என் பிள்ளை தவறு செய்ய மாட்டான்/மாட்டாள் என்று. அந்த நம்பிக்கை நிச்சயமாக அந்த பிள்ளையை நேர் வழியில் இட்டு செல்லும்.


* ஒரு நல்ல அப்பா குழந்தைக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். நல்ல பழக்கங்களை கொண்டிருக்க வேண்டும். அவரை பார்த்தே பிள்ளைகள் வளர்வதால் தந்தை செய்யும் கெட்ட விஷயங்களை பார்க்கும் குழந்தைகள் " நம் அப்பா வே செய்றார் நாம் ஏன் செய்ய கூடாது" என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.


* அந்தந்த வயதிற்கு உரிய சுதந்திரத்தை குழந்தைகளுக்கு தர வேண்டும்.
சிறு பிள்ளைகளுக்கு படிப்பதென்பது சற்று கஷ்டமானதாக இருக்கும், விளையாடுவது பிடித்திருக்கும். அப்பொழுது அப்பிள்ளைகளுக்கு எடுத்து கூறி படிக்க சொல்லலாம்.அனால் அதே பிள்ளையை கல்லூரியில் சேரும் வயதிலும் நம் என்னத்தை அவர்களிடம் திணிக்க கூடாது. அவர்களில் ஆர்வத்தை பொருத்து அதன் நன்மை தீமைகளை எடுத்து கூறல் வேண்டும்.


* தோல்வி உற்ற நேரங்களில் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை அளித்து
"தோல்வியே வெற்றியின் முதல் படி" என்று புரிய வைக்க வேண்டும்.


* தான் பெற்ற கஷ்டங்கள் தன பிள்ளைகள் பெற கூடாது என்று நினைக்கும் அப்பா/அம்மா அந்த கஷ்டத்தை அவர்களுக்கு சொல்லி வளர்க்கலாம்.அது அவர்களின் நல வாழ்க்கைக்கு உறுதுணையாக அமையும்.


* ஒரு நல்ல அப்பா நிச்சயம் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தோழனாக இருத்தல் வேண்டும் , காரணம் அது பிள்ளைகளுக்கு ஒரு பலத்தை கொடுக்கும் என்பதே என் கருத்து.


* குடும்ப விஷயங்களில் பிள்ளைகளின் கருத்துகளையும் கேட்க வேண்டும். அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இது பிற்காலத்தில் அவர்களின் முடிவெடுக்கு திறனை அதிகரிக்கும்.


* குடும்பத்தின் மீது பற்றுதல் உண்டாவதற்கு ஒரு தந்தையின் செயல்பாடுகளும் முக்கிய காரணியாக விளங்கும் என்றே எண்ணுகிறேன். ஒரு தந்தை பொறுப்பில்லாமல், ஊதாரியாக இருப்பதை பார்த்து வளரும் பிள்ளைகள் அதையே பின்பற்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


இவை அனைத்தும் ஒரு தந்தை, ஒரு சிறந்த தந்தையாக இருக்கும் காரணிகளாக எண்ணுகிறேன்.


எனக்கு சிறு வயதில் இருந்தே பெரிதாக பொருள் வசதிகளை கொடுக்கவிடுனும், மிக அருமையான அப்பா அம்மா வை கொடுத்த இறைவனுக்கு என்றென்றும் என் நன்றியை சொல்ல கடமைபட்டுள்ளேன்.


என் அப்பா பற்றிய என் நினைவுகளையும் , கருத்துக்களையும் இங்கு பதிய வாய்பளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
Dear Kirthika, very nice way of expressing gratitude to your father. thank you
 

sumitra

Registered User
Blogger
#35
எனது அப்பாவைப் பற்றியும், ஒரு அப்பா எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிய எனது கருத்துக்களும்;

ஒழுக்கம், அடக்கம், கல்வி, நேர்மை, தன்னம்பிக்கை புகட்டி, சுயமாக வாழ வழிகாட்டி, மனம்போல் வாழ்க்கை தேடித்தந்த பாசமான உறவு, என் அப்பா.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாது எல்லோரையும் எங்காவது வெளியில் - கடற்கரை, பூங்கா, உறவினர்/நண்பர்கள் வீடு, சினிமா, இசை நிகழ்ச்சி - அழைத்துச் செல்வார். ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும், 1 கிழமை/10 நாள், ஊருக்கு அழைத்துச் செல்வார். அந்த இனிமையான தருணங்களை மறக்க முடியாது.

1. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை குடும்பத்துடன் செலவழிப்பது.

2. தினமும் பிள்ளைகளிடம் நண்பர்கள் போல் பழகி, அன்றைய நாள் எப்படிக் கழிந்தது என்று அறிவதுடன், அன்று நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை குடும்பத்துடன் பகிர்வது.

3. நேர்மையாக, நாணயமாக, பண்பாக, அன்பாக நடந்து, பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருப்பது.

4. பிள்ளைகளின் திறமைகளை இனம் கண்டு ஊக்குவிப்பது.

5. பிழைகளை இதமாக சுட்டிக்காட்டி மாற்று வழிகளைக் கூறுவது.

6. தோல்விகளின்போது முகம் சுழித்துப் பேசாது, தன்னம்பிக்கை ஊட்டி தட்டிக்கொடுப்பது.

7. விடுமுறை காலத்தில் அவர்கள் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்வது/நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவது.

8. மேற்படிப்புக்கான துறைகளை தெரிவுசெய்வதில் அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து வழிகாட்டுவது.

9. உறவுகள் சொந்தங்களின் தேவையை உணரும் விதமாக நடப்பது.

10. கஷ்டப்படுவோருக்கு உதவி செய்வதையும் பக்தி மார்க்கத்தையும் தான் கடைப்பிடித்து பிள்ளைகளுக்கு வழிகாட்டுவது.
Dear Gowrymohan, oh! very very nice, your way of expressing your gratitude to your father is simply unique. thank you
 

sumitra

Registered User
Blogger
#36
Dad – who is the first hero for each & every child..

Its quite natural if there exists affection between father and child during small age.. but it is great & precious if the same exists even after the child understand what the world is.. this happens only because of dad's nature..


I can hear from everyone tat, evryone’s dad holds patience, ability to solve any problem effectively, steadiness, will power, boldness etc.. eventhough I see the same in my father.. he seems to be unique to me..


I often used to wonder.., what a man he is.., how a man can be like this eventhough he travels through a critical situation.. example: once my papa met with an accident & had a severe head injury.. we (me, mom & brother) were shocked.., and in the hospital we were crying by standing near my papa on the way to the operation theatre.. he was suffering a lot due to pain & cant able to open his eyes, & also to speak but at that time too, he told to us with a smile.. dnt fear my dears, papa will be back soon, after the operation, when I open my eyes I should see u all smiling & bold.. he said and went..


In that situation I didn’t get what he told.. but after he arrived home after he was normal, and when I analysed what had happen n those days.. really I cant find words to express.. till now I used to wonder…


He is more confident on my talents than myself..In some work I used to loose my patience and will start to leave that in half way.. bt my papa used to guide me in those situation by saying that its not must to win pappa… but just try till the end.. Many times I used to get angry on him whenever he advise me and whenever he takes care of me thinking me as a child.. He wont refuse whenever I say to him, Papa am going to study tis, just he says me to find whether it suits me and if he finds it as a good course he will ask me to proceed, eventhough he finds its hard to manage,. He used to indulge me in all family situations and ask my decisions too.. Eventhough i hurts him a lot till now he never utter a single word harshly to me.. really hatsoff papa..

I wish to share one more thing.. the day we celebrate father’s day tis year is my dad’s birthday too…
Dear femila, I am not finding suitable words to explain my feelings to express about your narration in your post. Really superb. thank you
 

sumitra

Registered User
Blogger
#37
அப்பா .......இந்த வார்த்தை நான் உச்சரிக்கும்போதே என் உடல் சிலிர்க்கும் .

எனக்கு என் அப்பாவை மிகவும் பிடிக்கும் .அதற்காக அவர் என்னை தூக்கி கொஞ்சியது இல்லை.நான் கேட்டதை எல்லாம் வாங்கி தந்ததும் இல்லை .அவரை பார்த்தலே நாங்கள் பேச பயபடுவோம் .ஆனால் அவர் எங்களை வளர்த்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது .

என் அப்பா ஒரு சாதாரண வேலையில் இருந்து படிப்படியாக முன்னேறி உயர்ந்த நிலைக்கு வந்தவர் .எங்களுக்கு சிறு வயதிலயே அதை சொல்லி தான் வளர்த்தினார்.பணம் என்பது நாம் பார்த்து சம்பாரிப்பது.அதற்காக யாரிடமும் உங்கள் நிலையை விட்டு இறங்கிடாதிங்க என்று அடிக்கடி சொல்லுவர் .

சில முடிவுகள் அவர் எடுக்கும்போது மிகவும் கடினமாக இருக்குமானால் அதன் விளைவுகள் நமக்கு நன்மையே அளிக்கும் .துரதிஷ்டவசமாக என் அப்பா இறந்த பின்பு தான் நான் இதை உணர்ந்தேன்.

எங்களிடம் பணம் குறைவு..ஆனால் எங்களின் எண்ணங்களும் கனவுகளும் பெரிது.அதற்க்கு காரணம் என் அப்பா.

மாலை 6 மணிக்கு மேல் வெளியே அனுப்ப மாட்டார் .ஆனால் அவர் அனைத்து இடங்களுக்கும் அழைத்து செல்வார்.பார் பெண் கள் இது போல் தைரியமாக வெளியே வர வேண்டும் என தைரியத்தை சொல்லி வளர்த்தினார் .

உன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து சந்தோசபடு.மற்றவர்கள் பொருளுக்கு ஆசைபடாதே என எங்களுக்கு சொல்லி வளர்த்தினார்.

இதுவரை நான் யாரிடமும்,துணிகளோ,நகையோ வாங்கி அணிந்தது இல்லை.என் தங்கையும் நானுமே அப்ப டி அணிந்தது இல்லை.யாருக்கு என்ன இருக்கிறதோ அதை மட்டுமே பயன்படுத்துவோம் .

எனக்கு திருமணதிற்கு பின்பு இந்த பழக்கம் எனக்கு மிகவும் உதவிய இருந்தது.

அதே போல் மற்றவர்களுக்கு உதவும் குணம் எங்க அப்பா எங்களுக்கு விட்டு சென்ற சொத்து .
என் முதல் வருமானத்தில் நான் செய்த நல்ல காரியம் ஒரு குழந்தையை கல்விக்காக தத்து எடுத்தது.இது நான் என் அப்பாவிடம் இருந்து கற்று கொண்டது.

நீ 100 ரூபாய் சம்பாதித்தால் அதில் 10 ருபாய் மற்றவர்களுக்காக செலவிடு .இந்த 90 ருபாய் உனக்கு நிலைத்து நிற்கும் என்று கூறுவார் .நாங்கள் 3 பெரும் இதை செய்து வருகிறோம் .

என் அப்பா இறந்து வீட்டில் இருந்து எடுத்து சென்று விட்டார்கள் .வீட்டில உறவினர்கள் நிரம்பி இருந்தனரப்போது கால் ஊனமுற்ற ஒருவர் ,அவர் மாணவி ,அவர் குழந்தை 3 பெரும் வந்தனர்.அப்பா இல்லை...எடுத்து சென்று விட்டார்கள் என்று தெரிந்தது கதறி அலுது,என் மகள் படிப்பிற்கு உதவி செய்தவர்..அவரை பார்த்தே ஆக வேண்டும் என்று அந்த இடத்திற்கே சென்றனர்.இன்று அதை நினைத்தாலும் எனக்கு உடல் சிலிர்க்கும்.என் அப்பா என்ற பெருமை வரும்.

பல இடங்களில் கஷ்டம் என்று நாங்கள் வந்து நின்றால் நான் இருக்கிறேன் என்று நினைப்பதால் தானே வருகிறாய்.இல்லை என்று நினைத்து பார்.அப்போ நீ என்ன செய்வியோ அதை செய் என்று சொல்லுவார் .அப்போது இதை கேட்க மிகவும் கஷ்டம்மாக இருக்கும்.ஆனால் அந்த விஷயத்தில் நாங்கள் ஜெயித்த பிறகு வரும் பாரு சந்தோசம்....சான்சே இல்ல FRIENDS ..அது முழுக்க முழுக்க எங்கள் வெற்றி.....இதை தான் எங்க அப்பா எங்களுக்கு கற்று கொடுத்தார் .

படிக்கும் வயதில் எங்களை ஊக்குவித்து வழிகாட்டியாக இருந்தவர்

பதின்ம வயதில் இப்படி தான் இருக்க வேண்டும் என கண்டிப்பு காட்டி,அதே நேரத்தில் தைரியத்துடன் எப்படி வாழ் வேண்டும் என்பதயும் எங்களுக்கு சொல்லி கொடுத்தவர்...

திருமண வயதில் ஒரு பெற்றவர்களின் கடமை என்ன என்பதை எங்களுக்கு தெரியவைத்தவர்...
திருமணம் ஆனா பின்பும் வரும் பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்வது என்பதை தனது கடுமையான முடிவால் எங்களுக்கு புரிய வைத்தவர் .

எங்களுக்கு அன்பு காட்ட அம்மா,மற்ற எல்லாமுமாக என் தந்தை......

தந்தையே உங்களுக்கு குழந்தைகளாக பிறந்திட கண்டிப்பாக நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

என் அப்பாவை பற்றி என் மனதில் இருக்கும் எண்ணங்களை வெளி படுத்த உதவிய பெண்மைக்கும்,தோழி இளவரசிக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் :cheer::cheer:
Dear Lakshmi, very nice way of showing your gratitude to your father. thank you
 

sumitra

Registered User
Blogger
#38
My appa, the person who gave me the strength to pass through all my troubles.
As a teen, he was always there for me as a friend to lean on his shoulder. Whatever happens in life he gave me a strength that I am always with you. It doesn’t mean that he made me dependent but the moral strength to do things & trained me in different things.
An example is the incident below. Whenever I return from a competition, he gave me very different words which I never heard from others.
If I had won, he says keep it up. If I lose, you have gained more experience than winning that next time you can definitely win.
My appa is the best. I have my friend always with me. I love my friend.
According to me, a best dad (Father of a girl) should have the following characteristics
· Good understanding of your daughter
· Trust on your daughter
· Listen to her with an open heart
· Give her a feeling that you are always there for her
· While listening or talking to her be careful about your face reaction that your daughter can find even a small change in your reaction
· Get feedback of things you do for her
· Last but not least, love your daughter & express it in your little actions
Love you dad, Happy Father's day
Dear Snofy Dunston, very nice and superb. thank you
 

sumitra

Registered User
Blogger
#39
Hi Friends, very nice thread .....Thank you Ilavarasi Mam....

I love my dad a lot..... who does not ..... it is a very special relationship between a dad and his daughter...... one which is to be cherished and nurtured all through our lives...

He is my first role model in life....

He was never vocal in expressing his love but his actions spoke more than the words... all the love , care ,attention, sacrifice ...no words can express how i feel....

I'm still his little girl even though i am a mum now .....

Always been there in each and every step of my life.....

Appa/Dad/Papa/ Nana /Pithaji/ Paji - so many ways to address one's dad..... whichever way you address let there always be love in your voice....

Love you Dad now and always........
Happy Father's day to all lovely Dad's....

Dear Priya Gautham, simply fantastic. thank you
 

Sriramajayam

Registered User
Blogger
#40
யெஸ், எல்லாம் உங்க மாதிரி நண்பர்கள் மூலமாக வந்தது.. போய் பாருங்கோ, என்னுடைய மேடை பேச்சு, அதில் உங்கள் குழந்தைகள்ப்பற்றி சொல்லி இருக்கிறேன்..

View attachment 109418Thanks a lot dear Annaa.....annaa neenga super star aagittingalaaa? Wow..vaazhthukkal...naan gavanikkave illai...sorry for wishing you so late...Keep rocking bro...:thumbsup