Penmai's Valentine's Day Contest - Feb 2014

vennila chandra

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 4, 2012
Messages
2,862
Likes
18,223
Location
coimbatore
#11
காதல்- இருவர் உணர்வுகளின் சங்கமம்....!!

ஒருவர் உணர்ந்ததை மற்றவருக்கு உணர்த்த செய்யும் லீலைகள் ஏராளம்....!!

சின்ன சண்டைகளும், செல்ல தீண்டல்களும், கள்ளப் பார்வைகளும் சந்திப்பை இனிதாக்கும்....!!

காதல் வந்தால் கைபேசி உடம்பின் மற்றொரு அங்கமாகும்...!!

காதல் வந்தால் பொய் அறியாத அரிச்சந்திரன் கூட வண்டி வண்டியாக பொய் உரைப்பான்...!!

ஊடலுக்கு பின் வரும் காதல் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பை துள்ளியமாக வெளிபடுத்தும்....!!

மனதுக்கு பிடித்தவரிடம் மனம் விட்டு பேச வைக்கும், தனிமையை இனிதாக்கும், காத்திருப்பை சுகமாக்கும்....!!

பிடித்தத்தை விட்டுக் கொடுக்க செய்யும், பிடிக்காததை ஏற்க செய்யும்...!!

மொத்தத்தில் ஒருவருக்காக ஒருவர் வாழும் சுகமான உணர்வு காதல்....!!
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,138
Location
Sri Lanka
#12
காதல்

ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காமம் கலந்த ஈர்ப்பே காதல்.

உரியவனை/உரியவளைப் பார்த்ததும் உணர்வுகளில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் காதலை உணர்த்துகின்றன.

தனக்குரியவனுக்கு/தனக்குரியவளுக்கு ஏற்படும் இன்னல்களில் தோள்கொடுக்க துடிக்கும் வேகம் காதலின் ஆழத்தை உணர்த்துகிறது.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பண்பு காதலின் மென்மையை உணர்த்துகிறது.

ஒன்றுசேரும் காலத்திற்காக காத்திருத்தல் காதலின் உறுதியை உணர்த்துகிறது.

இன்பங்களையும் துன்பங்களையும் பகிர்ந்து கொள்ள ஒருவரை ஒருவர் நாடுவது காதலின் புனிதத்தை உணர்த்துகிறது.

இவையெல்லாம் ஒன்றுசேர்ந்த மொத்த உணர்வே காதல்.


Moderator's Note:This Article has been published in Penmai eMagazine February 2015. You Can download & Read the magazines HERE.

 
Last edited by a moderator:
Joined
Sep 17, 2011
Messages
52
Likes
173
Location
Chennai
#13
பெண்மைக்கு வணக்கம்.
பெண்மையின் தொடர் வாசகியல்ல நான்.
எப்போதாவது மட்டுமே உணர்வுகளை பதிவிடும் வாசகி.காதல்
சிலருக்கு ஆக்கத்தையும்
பலருக்கு அழிவையும் தரும்
அஸ்திரம்.


இதுதான் காதலைப் பற்றி என்னுடைய முதல் கவிதை. 9th std படிக்கும் பொழுது எழுதியது. ஆக்கம் என்பதை விட காதல் அழிவையே தரும் என்று நம்பிய நாட்கள் அவை. அப்படி இருக்கும் என்னுள் காதலைப் பற்றிய தற்போதைய எண்ணத்தை நானே அறிந்து கொள்ளளும் ஒரு வாய்ப்பாகவே இதை நினைக்கிறேன். காதலைப் பற்றி என்னுடைய கருத்தை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்கிறேன். பொதுவானது அல்ல.

காதல் என்பதே உணர்சசிக் குவியல்; உணர்வுகளின் சங்கமம். இப்படி சொல்லிட்டே போகலாம். அதுவும் பதின்ம வயதில் அதிகமாகவே இருக்கும். அப்படி இருக்கும் போது அந்த உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் காதலை உணர்வதும் கடினமே.


மனசுக்குள் ஏதோ பாரம்;
மன்மதனின் பார்வை பட்டதாலோ?
அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்ததே!
அவன் அலையுண்ட சுருள்கேசம் கண்மறைத்ததாலோ?
காதல்கானங்கள் அனைத்தும்
காவியமாய் தோன்றியதே!
அம்மாவாசை கும்மிருட்டும்
அழகாய் இருந்ததே!
சிகப்பு நிறம் பிடிக்காத போதும்,
சிகப்பு ரோஜா பிடித்ததே!
இதுதான் காதலோ?
இல்லை! இல்லை!!
பிறகு தான் புரிந்தது
இது காதலின் சதி அல்ல;
ஹார்மோன்களின் சதி என்று.


இது ஒருசில வருடத்திற்கு முன்பு பெண்மை கவிஅந்தாதியில் எழுதியது தான். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் எந்த முடிவும் சரியாய் அமைவதில்லை. இதற்கு காதலும் விதிவிலக்கல்ல. அதற்காக எல்லா காதலர்களும் தவறான முடிவையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்று சொல்லவில்லை. எந்த ஒரு relationship layum நம்பிக்கை வருவது ஒரு commitment இருக்கும்போது மட்டும் தான். இவள்(ன் ) நமக்கானவள்(ன்) என்ற உறுதி வரும்போதுதான். நம்பிக்கையும் விட்டுக்கொடுத்தலும் அப்போதுதான் அதிகமாகிறது (vice versa ). என் கல்லுரி தோழிகள் பலர் காதலித்து விட்டு அவரச பட்டு முடிவெடுத்ததாய் சொல்ல கேட்டிருக்கிறேன். அவர்கள் சந்தோசமாய் இருப்பினும் கூட ஒருசில நிமிட உறுத்தல் இருப்பது உண்மையே.

ஆனால் இதுவே திருமணத்திற்கு பின்பான காதலில் விட்டுக்கொடுத்தல் அதிகமாகிறது. பிரச்சனைகள் குறைகிறது. பெற்றவர்கள் அந்நியமானாலும் கணவன் மனைவி இடையே அந்நோன்யம் அதிகமாகிறது. அந்த உறவில் பற்றும் பிடிப்பும் உறுதிபெறுகிறது. அது கடைசி வரை நிலைபெறுவதில் ஆச்சர்யமில்லை. திருமணத்திற்கு பின்பான காதல் அழகானது; அறிவானதும் கூட. என் பெற்றோரின் திருமண நாளில் எழுதிய வரிகள் இவை.

''காதல் அழிவிற்கே என்று எழுதிய கைகள்
காதல் ஆக்கத்திற்கெ என்று மாற்றி எழுதுகின்றன.
ஆம் ! திருமணத்திற்கு பின்பான காதல் ஆக்கத்திற்கே;
உங்களிருவரையும் உணர்ந்த பிறகு.''

திருமணத்திற்கு பின்பு மட்டுமே உண்மையான காதல் என்றும் சொல்லிவிட முடியாது. பெற்றோர் சொல்லி கேளாமல் காதலி சொன்னவுடன் வேலைக்கு செல்லும் காதலனும்; காதலனை பிரிய மனமின்றி அவன் வெளிநாடு சென்றால் அவளும் வெளிநாடு செல்ல வேண்டி எக்ஸாம் எழுதுவதும் இந்த இளம்பிராயத்து காதலில் தான் உண்டு. இளமை என்றாலே energy தான். அதுவும் காதலுடன் இளமை, எட்டாத உயரத்தையும் எட்டி பிடிக்கும் என்பது உண்மை. எந்த ஒரு உணர்வு தற்கொலைக்கு தூண்டாமல் தன்னை தற்காத்துக் கொள்ள உதவுகிறதோ, கடற்கரை மணலோடு நில்லாமல் கடல் தாண்ட சொல்கிறதோ, நிலவோடு உருவகப் படுத்தாமல் நிலவை சென்றடைய உக்குவிக்கிறதோ அதுவே காதல். அப்போதுதான் நிழல் உருவமாய் இருந்த காதல் நிதர்சன உண்மையாகிறது.

மனிதன் பிறந்தது முதல் காதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் விதைக்கப்பட்டு துளிர் விட்டு மலர்கிறது. அப்படி பார்த்தால், விதை இளமைக்கால காதல்; விருட்சம் திருமணத்திற்கு பின்பான காதல்.
 

Geetha A

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 29, 2011
Messages
634
Likes
1,454
Location
France
#14
அன்புள்ள நண்பர்களே!!

வணக்கம்.

அறிவிற்க்கு ஆயிரம் கண்கள். அது காரணக் கண்கள்.
இதயத்திற்க்கோ ஒரே கண், அது காதல் கண்.
--- இங்கர்சால்.

அன்னை தெரசா என்ற ஒரு அன்பு தேவதை எத்தனையோ நாடுகள் இருக்க. புண்ணிய பூமியான நம் மண்ணை மிதித்தார். தெருவொரங்களில் இருந்த தொழு நோயாளிகளை தன் கரங்களால் ஏந்தி அவர்களுக்கு வழி காட்டினார். தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே செலவிட்டு, தன் நாட்டிற்க்கும் போகாமல் இங்கேயே உயிர் விட்டாரே. அந்த தேவதைக்கு உத்வேகம் கொடுத்தது எது?

அன்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
--- தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

அன்பிற்க்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே(உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

சமீபத்தில் வட மாநிலத்தில் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சி. தன் கணவர் நோயில் இருக்கும் பொழுது மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார் ஒரு பெண்மணி. உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்க்கு 5000 ரூபாய் தேவைப் படுவதாகவும் மருத்துவர் கூறிவிடுகிறார். அந்த ஊரில் ஓட்டப்பந்தய போட்டி நடக்கிறது. அதன் பரிசுத்தொகை 5000 ரூபாய். அந்தப் பெண் கலந்துக் கொள்ள முடிவெடுக்கிறாள். வீட்டில் உள்ளவர்கள் தடுக்கிறார்கள். வேண்டாம் ஓடி உனக்கு பழக்கமில்லை, உன்னிடம் நல்ல செருப்புக் கூட இல்லையென்று. ஆனால் அவள் மறுத்து கலந்து கொண்டு, வெற்றுக் காலோடு ஓடி அந்த பரிசுத் தொகையை வென்று கணவனை காப்பாற்றுகிறாள். அந்த 60 வயதில் வெறும் காலோடு எந்த உணர்வு அவளை ஓடி ஜெயிக்க வைத்தது?

உலகிற்க்கு மூலதனம் என்ற அரிய நூலை அளித்தவர் காரல் மார்க்ஸ். இவரை காதலித்து மணந்த கோடிஸ்வரி மற்றும் பேரழகி ஜென்னி. திருமணம் ஆன நாளில் இருந்து வருமை, போராட்டம், தலைமறைவு வாழ்க்கை பின் மரணம் இது மட்டுமே பார்த்தவர். வறுமையின் கொடுமையால் தன் குழந்தையும் அவர் இழக்கிறார். பின் அவரும் இறக்கிறார். இவ்வளவு கஷ்டங்களிலும் உன்னுடன் இருக்கிறேன் என்று கடைசி வரை காரல் உடன் இருந்தாரே அந்த உணர்விற்க்கு பெயர் என்ன?

ஒரு உண்மைச் சம்பவம், ஒரு ஓவியர் அவரது காதல் மனைவியும் மகிழுந்துவில் பயணம் செய்யும் பொழுது விபத்து நடந்து விடுகிறது. விபத்தில் கழுத்துக்கு கீழே மனைவியின் உடல் தன் செயலை இழந்து விட்டது. அவரை குளிக்க வைத்து, அவரது காலைக் கடன்களை முடித்து, அவருக்கு உணவூட்டி இப்படி எல்லா வேலைகளையும் ஒன்றல்ல, இரண்டல்ல 35 வருடங்கள் அந்த ஓவியரை செய்ய வைத்ததே. அந்த உணர்வின் பெயர் என்ன?
ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன?
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
-- கவியரசு கண்ணதாசன்

இதேப் போல என் மாமனார் படுத்த படுக்கையாகி 15 வருடங்கள் ஆகிறது. ஆனால் என்னுடைய மாமியார் அனைத்து அவரது காலைக் கடன் முதல் இரவு அவரை படுக்க வைப்பது வரை செய்கிறார்.ஆசிரியராகவும் பணிபுரிகிறார். எந்த உணர்வு இவர்களுக்கு இந்த புத்துணர்ச்சியை தருகிறது?

ஒரு வீட்டில் 10 குழந்தையை பெற்றிருந்தாலும் அந்த தாயின் அன்பு அனைவரின் மேலும் சமமாக இருக்கும். நம்ம அம்மா நம்ம கிட்ட எப்பயும், நாம எப்படி நடந்து கிட்டாலும் நல்லவன், கெட்டவன், திருடன், பொய் சொல்றவன் எப்படி இருந்தாலும். நம்ம கிட்ட அதே மாறாத செயல். அம்மாவின் அந்த நிலையான தன்மைக்கு காரணம் என்ன?

கண் தெரியாத என் தோழியை காதலித்து ஒருவர் மணக்கிறார். அவருக்கும் சிறிது கண்ணில் பிரச்சினை. நாம் பார்க்க முடியாத இந்த உலகை தங்கள் காதல் கண் கொண்டு பார்க்க வைக்கிறதே அது எந்த உணர்வு?

பாசம், காதல், கருணை, பந்தம், இரக்கம், நேசம்,தியாகம், விட்டுக் கொடுத்தல் மற்றும் நேசித்தல் இவை யாவும் அன்பு என்ற மரத்தின் வெவ்வேறு கிளைகள். இந்த மரத்தின் ஒவ்வொரு கனியும் அத்தனை இனிமையும், வாழ்வின் அர்த்தத்தையும் தரும் சுவையுடையது. நம் வாழ்வை மட்டுமல்ல, நாம் நேசிக்கும் அந்த உயிரின் வாழ்விலும் பெரும் அர்த்தத்தை ஏற்படுத்தும். ஒரு செடியுடன் காட்டும் காதல் கூட ஒரு பூவாக வெளிப்படும்.

வள்ளுவனின் மனைவி வாசுகியின் அன்பைப் பற்றி எப்பொழுதுமே ஒரு உயர்வான கருத்து உள்ளது. கோவலன் மாதவியுடன் தன் காதலை பகிர்ந்த பொழுதும், தன் கணவன் மேல் கொண்ட காதலை ஒரு உமி அளவும் மாற்றாதவள் கண்ணகி.

மேலை நாடுகளில் குறட்டை விடுவதற்க்கே விவாகரத்து செய்கிறார்களாம். ஆனால் குடிகார கணவன், சண்டைக்கார மனைவி, கோபக்கார கணவன், பொறுப்பில்லா மனைவி இப்படி எப்படி இருந்தாலும் ஏதோ ஒரு கணத்தில் நம்முள் நுழைந்து , நீறுபூத்த நெறுப்பாக இருக்கும் அந்த காதல் எத்தனைக் காலம் ஆனாலும் அது உள்ளே ஒளிர்ந்து வாழ்வை பிரகாசமாக்குகிறது. உலகில் உலாவரும் கருத்து ஒன்று உண்டு. சொர்க்கம் என்பது, அமெரிக்க சம்பளம், சீன உணவு அப்புறம் இந்திய மனைவி :)

காதல் இல்லாமல் இந்த உலகில் எந்த உயிரினமும் இருக்க முடியாது. காதல் உணர்வு என்பது

கோழையை வீரனாக்கும்...
மாவீரனய் கோழையாக்கும்...
நிமிடத்தை ஆண்டாக்கும்...
ஆண்டை நொடியாக்கும்...
உலகமே அழகானதாய் தோன்றும்...
வாழ்வே ஆனந்தமாய் இருக்கும்...
பசி இருக்காது...
புன்னகை நிரந்தரமாய் இருக்கும்...
புதிதாய் பிறந்தது போல் இருக்கும்...
தன்னலம் பார்க்காது...
தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும்...


காதல் இல்லாமல் வாழ்ந்தால் கோவிலும் கல்லறைதான்.
காதலி ஒருத்தி தூங்குவதால் கல்லறையும் கோவில்தான்.
--- யாரோ(தாஜ்மகால்)

நம் நாட்டின் காதல் சின்னமும், உலக அதிசயமுமான தாஜ்மகால் சொல்லும் விஷயம் ஒன்றுதான் அது காதல். மொழி, இனம், ஜாதி, மதம், நிறம், நாடு, தேசம்,ஏழை,பணம், ஏன் கண்டம் இவையெல்லா தடைகளையும் தகர்த்தெறியும் ஒரு அன்பு ஆயுதம்தான் காதல்.

முடிவாக கவிப்பேரரசு வைரமுத்து சொல்லுவது போல்,

காதலித்து பார்,
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்
உலகம் அர்த்தபடும்
ராத்திரியில் நிலம் விளங்கும்
உனக்கும் கவிதை வரும்
கையெழுத்து அழகாகும்
தபால்காரன் தெய்வம் ஆவான்
உன்பிம்பம் விளைந்ததே கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒலிகொள்ளும்
காதலித்து பார்..

ஏனெனில் இந்த உணர்வை உணரவே முடியும்.

"காதல்" உலகத்தின் இனிமையான கனவு.
அதை விட இனிமையான பொருள் இந்த உலகத்தில் ஏது?
---லைமூர்.

அனைவருக்கும் என் காதலர் தின வாழ்த்துக்கள். வாய்ப்பிற்க்கு நன்றி.


வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!

 
Last edited:

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#18
hi my dear friends, I am happy to see u all after long time..... today only i logged in ...vanthu paarthaal love subject oduthu....love is colorful and so unka views are so colorful. I really enjoyed it......soon iwill meet u with my views ...
my best wishes for u all ...

thanks penmai team and dear sakthi....
 

naanathithi

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
4,608
Likes
15,109
Location
jAFFNA
#19
காதல் என்று எழுதச்சொன்னீர்கள் என்வரையில் காதலை ஒரு கடிதமாய் எழுதியிருக்கிறேன்! :)என்னவருக்கு!


இதுவரை காதல் என்று தலைப்பு கொடுத்தால் அடுத்த நிமிடமே மூன்று பக்கங்கள் எழுதிதள்ளும் நான் மூன்று நாட்களாய் ஒற்றை சொல்லும் எழுதாமல் விழித்துக்கொண்டிருக்கிறேன் என்பதே எனக்கும் காதல் வந்திருக்கிறது என்று எனக்கு உணர்த்தியது!

நீ நானாக தெரிந்தெடுத்தவனில்லை.
என் தந்தை தந்த பரிசு!
பதட்டத்தோடு தான் பிரித்துப்பார்த்தேன்!
ஒவ்வாமைகளின் எண்ணிக்கை கண்டு அதிர்ந்து நின்றேன்!
கண்ணீர் குளத்தில் முழுகிக்கொண்டிருந்தேன்!


ஒற்றை கையாலும் நான் நீந்த முயலவில்லை. ஒவ்வொரு அசைவையும் எனக்காய் நீயே அசைத்தாய்! உயிர் கொடுத்தாய், நமக்கு முகம் ஏதோ புகையில் செய்த ஓவியமாய் தான் நினைவிருந்தது. குரல்கள் மட்டும் தான் எங்கள் உறவு வீணைக்கு நாதம் இசைத்தன!

காதல் யார் மீதும் வரலாம்!
எப்படியும் வரலாம்!
முகமோ தோற்றமோ அவசியமில்லை!
உன்னுடையது என்ற உணர்வு தோன்றி விட்டால்
மீதியை காதல் பார்த்துக்கொள்ளும்!

தொலைபேசி வழியாய் ஒவ்வொரு நாளும் நமக்குள்ள முரண்பாடுகளையும் மீறி எனக்குள் நீ வந்து கொண்டிருந்தாய்! காதல் பக்கங்கள் என்னுள் வெறுமைஎன்று நண்பிகளால் கிண்டல் செய்யப்பட்ட நான் உன் குரல் கேட்க ஒவ்வொரு நாளையும் செலவு செய்து கொண்டிருந்தேன்! காலை எழுந்ததும் நீ முதல் நாளிரவு பேசிய பேச்சுக்களை எண்ணி உதட்டில் சிரிப்புடன் அலுவலகம் செல்வதும் அங்கே உன் அதட்டலுக்காயே வேளா வேளைக்கு உணவுண்பதும் உன் குறுஞ்செய்திகளை படித்துக்கொண்டு கவனமின்றி இருந்துவிட்டு பறந்தடித்து வீடு வந்து கைபேசி முன் தவம் கிடப்பதுமாய் எப்படி நான் மாறிப்போனேன்! சிலசமயம் அலாரம் வைத்து குட் மார்னிங் குறுஞ்செய்தி டைப்பி விட்டு மறுபடியும் தூங்கியதும் நடந்தது. நாளின் பிறப்பே இரவில் கேட்கும் உன் குரலுக்காய் தான் என்பது எழுதா விதியானது! என் பொழுதுபோக்குகள், எழுத்து, கல்வி அத்தனையையும் புறம் தள்ளி நீயும் உன் சார்ந்த நினைவுகளும் மட்டும் போதுமாயின! இத்தனை மாற்றத்தையும் உன் வெறும் குரல் தான் செய்தது! உன் முகம் எனக்கு தேவைப்படவே இல்லை!

உன் உலகத்தை தலைகீழாய் புரட்டிப்போட்டு விட்டு
காலாட்டி அமர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிட காதலால் தான் முடியும்!
நீயும் ஒத்துழைப்பாய்!

சில சமயங்களில் உனக்கு அதிகம் வேலையாகும், நள்ளிரவில் உன் களைத்த குரல் கேட்டு தூங்க சொல்லிவிட்டு வீணாய்ப்போன அந்த நாளை எண்ணி தூங்காமல் விழித்திருப்பேன் நான். நீயே சொல்வது போல் நான் ஒரு மௌன ராகம் தான்! உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாத ஊமை, தொலைபேசியை அணைக்காமல் என்னோடு பேசு என்று சண்டையிட்டிருந்தால் நீ மகிழ்வாய் என்பது புரியாமல் போனது! உன் தூக்கம் கெடுமே என்று உனக்காய் பார்த்துக்கொண்டிருந்தேன்!

நீ என்னை பார்க்க வருகிறேன் என்று சொல்லி முடியாமல் போனதுக்காய் வருத்தமாய் பேசுவாய், என் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு உனக்கு ஆறுதல் சொல்வேன்! எனக்கு கொஞ்சமும் வருத்தம் இல்லையென்று நீ ஊடல் கொண்டாய்!

காதலுக்கும் தாய்மைக்கும் வித்யாசம் அன்று புரிந்தது!
உரிமை கோருவது!

தலையே போனாலும் நீ எனக்கு இதை செய்து தான் ஆகவேண்டும் என்று துணையின் தொல்லை கூட உதட்டில் சிரிப்பையும் பரவசத்தையும் தருவது காதலில் மட்டும் தான்!

துணையின் மேல் உரிமை கொண்டாடுவதும் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் காதலுக்கே உரியது!

உனக்காய் பார்க்காமல் எனக்கு வேண்டியதை அடம் பிடித்து பெற்றுக்கொள்ள நீ அன்று கற்றுத்தந்தாய்!


கடைத்தெருவில் எனக்கு என்று வாங்கும் போது கண்ணில் படும் விலைப்பட்டியல் உனக்கு வாங்கும் போது மட்டும் கண்ணில் படுவதில்லையே! என்னால் முடிந்த சிறந்ததைஎல்லாம் உனக்கு தந்து விட வேண்டும் என்ற உணர்வும் காதலல்லவா? குழந்தை கெட்டுவிடும் என்று பெற்றோர் கூட கண்டிப்பு காட்டுவார்கள்! காதல் தான் கேட்காததையும் செய்யும்! சீதை கேட்டதற்காய் ராமன் மானின் பின்னே போகவில்லையா?


காதல் என்பது முழுக்க முழுக்க கொடுப்பது!
அது எவ்வளவு தூரம் திரும்பி வருகிறது என்பது துணையை பொறுத்தது!
கடுகே கிடைத்தாலும் அதை மலையாய் எண்ணி மகிழ்ந்து போவதும்
காதலில் தானே சாத்தியம்!


காலையில் இருந்து மாலை வரை நடந்ததையெல்லாம் உன்னிடம் ஒப்புவிக்கிறேன்! தொலைவில் இருந்தாலும் உன்னோடு வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில்! கடுகளவு மனகசப்பு யாருடனாவது வந்துவிட்டால் பூவென ஊதிச்செல்பவளுக்கு உன்னிடம் ஒப்புவிக்கும்போது மட்டும் அதெல்லாம் மலையளவு மாறி கண்ணீரையும் கொண்டு வந்து விடுகிறதே! நீலிக்கண்ணீர் தான்! அப்போது தானே நீ பதறி அழாதே செல்லம் வெல்லம் என்றெல்லாம் ஆறுதல் சொல்வாய்! காதல் திருட்டுத்தனமானது!


நீ திட்டுவாய் என்று தெரிந்தும் பிடிக்காததை செய்து விட்டு நீ திட்டும் போதும் ஆனந்தமாய் கேட்டுக்கொள்கிறேன்! உன்னிடம் திட்டு வாங்குவது ஏதோ விருது வாங்குவது போலல்லவா இனிக்கிறது!

உயிர் நண்பியிடம் கூட பலவீன தருணங்களை மறைத்து இரும்பு போல் நிற்பவள் அனைத்தையும் உன்னிடம் ஒப்புவித்து பூனைக்குட்டியாய் உன் முகம் பார்த்து நிற்கின்றேன்!

குழந்தை போல என்று யாரும் சொன்னால் புலிபோல் சிலிர்த்துக்கொள்பவள் சொல்பவன் நீ என்றால் அப்படியே மகிழ்ந்து போய் மானசீகமாய் ஓடிவந்து உன் மடியில் படுத்துக்கொள்கிறேன்!


நீ நீயாய் இருக்க முடிவது காதலில் தான் சாத்தியம்!
உன் முழு பலவீனங்களையும் அறிந்து தாங்குவதும் காதல் தான்!
ஆரம்ப படிகளில் ஈகோ இருக்கலாம்,
இறுக இறுக சுவடற்று உதிர்ந்து விடும்!

காதல் என்று கேட்டதும் நீ கற்றுத்தந்த காதலை பற்றித்தான் நான் இவ்வளவு நேரம் பேசினேன்! நீ என்னை பற்றி என்ன நினைக்கிறாயோ உணர்கிறாயோ எனக்குத்தெரியாது! எனக்கு புரிந்ததெல்லாம் நான் உன்னை காதலிக்கிறேன்! உலகத்தில் காதலின் வரலாறோ யார் யாருக்கு என்ன செய்தார்கள் என்றோ எனக்குக்கவலையில்லை! இது என் காதல்! எனக்கு மட்டுமே சொந்தமான காதல்! என்னிடம் உனக்காய் பிறந்த எனது காதல்! நீ கூட தலையிடமுடியாத நேசம்! எனது காதலை வேறு யாருடனும் ஒப்பிடக்கூட எனக்கு பிடிக்கவில்லை! கைரேகை எப்படி தனித்துவமோ காதலும் தனித்துவமானது! என் காதலை என் உணர்வுகளை நீங்கள் உணர முடியாது! அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானது! பரவசம் மட்டும் தான் பொதுவானது! என்னை விட என் காதலை யாரும் அதிகமாய் காதலிக்க முடியாது!

வன்முறையாய் பேசுகிறேனா???
இதுவும் காதல் தான் எனக்கு கற்றுத்தந்தது!
இந்த நிமிர்வும் பெருமையும்!
ஒவ்வொருத்தனையும் ஒவ்வொருத்தியையும்
எந்த ஒப்பீடும் இன்றி
நாயகர்களாக்கும் உன்னத தயாரிப்பாளர் காதல்!

இறுதியாய் சொல்கிறேன்! என் எண்ணங்கள் ஆசைகள் அத்தனையும் விட்டு உன்னை மட்டுமே முதன்மை ஆக்கிக்கொண்டிருக்கிறேன்! என் இறுதிவிழி மூடும் வரை உன் முகத்தில் ஒரு சிணுக்கம் கூட இன்றி நெஞ்சத்தில் பொத்தி வைத்து காக்க நினைக்கிறேன்! பதிலாக எனக்கு உன் நெஞ்சத்தின் ஓரத்தில் கொஞ்சமாய் நேசம் போதும்!

என் பிறந்த நாளை மறந்து விட்டாயா? போடா எருமை என்று திட்டிவிட்டு போய்விடுவேன்! யாரும் சொன்னதற்காய் வைரமோதிரம் வாங்காதே! என்னால் தாங்கிக்கொள்ள முடியாது!


எனக்கான ஒவ்வொன்றும் உன்னிடமிருந்து மட்டுமே வரவேண்டும்!
நீயாய் உணர்ந்து செய்ய வேண்டும்!
கடுகத்தனை இருந்தாலும் மலையென மகிழ்ந்து போவேன்!
மொத்தத்தில் நீ என்னிடம் நீயாய் இரு....
அது போதும்!


-உன் காதலி

வாய்ப்புக்கு நன்றி!

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine February 2015. You Can download & Read the magazines HERE.


 

Attachments

Last edited by a moderator:

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#20
காதல்
[SUP][SUB]
[/SUB]கண்களால் [/SUP]
கைது செய்து; [SUP][SUB]மௌன யுத்தம்[/SUB][/SUP] தொடர்ந்து;
[SUP][SUB]முகவரி[/SUB][/SUP] தொலைத்து;
[SUB][SUP]நொடிகள்[/SUP][/SUB] யுகமாக தவித்து ;
[SUB][SUP]நினைவுகளை[/SUP][/SUB] களவாடி; [SUP][SUB]இதயத்தில்[/SUB][/SUP] நுழைந்து
[SUB][SUP]சுவாசமாய் [/SUP][/SUB]கலந்திடும் காதல்! !

some says life is beautiful
some says love is beautiful
I am not saying , but I believe in the saying ‘love makes life beautiful’.
Whether We are just living, just leading a life….how many days it will run….

like, love, live , alive …I think these words are interrelated.
We are living , liking life, loving to make it alive .எனக்கு ஆங்கிலத்தில் அவ்வளதாங்க பேசமுடியும் ....ஆனால் இந்த காதலை பேச மொழி தேவையாங்க ...
காதல் ஒரு அழகிய மொழி
அதற்க்கு உரை எழுத மொழி தேவையா ..!!


ஹே , பயப்படாதிங்க என்னடா இவ மொழி தேவையா சொல்றா நம்மட மௌன மொழில பேசுறேன்னு வெத்து காகிதத்த நீட்டுவாளோன்னு......

ச ச .... உங்கள்ட மௌன மொழியா ? உங்களை நான் என்ன காதலிக்கவா செய்றேன் ...ஹி ஹி ...(சொல்ல முடியாதுங்க , இது எழுதி முடிக்கும் தருவாயில் ஒன்னு நீங்க என்னை(என் எழுத்தை )காதலிக்கலாம் , நான் உங்களை விரும்புகிறேன் என்று சொன்னாலும் சொல்லலாம் ) ;) அதனால சின்ன அட்ஜஸ்ட்மென்ட் நமக்குள்ள .... கொஞ்சம் ஆங்கிலமும் , கொஞ்சும் தமிழும் கலந்து ...ஒகே ..


அவனிடம் ,
எத்தனைமுறை என் மனதை எழுத நினைத்தேன்
அத்தனை முறையும் குப்பைக்கூடையை மட்டுமே நிறைத்தேன் . ...
ஒருமுறை ஒன்றும் எழுதாமல் வெற்று காகிதத்தை நீட்டினேன்
“என்றென்றும் காதலுடன் “ என்று எழுதி தந்த நொடி
நான் இல்லை என்னிடமே ..!!!


பூட்டி வைப்பதும் காதல் தான் எத்தனை பூட்டு போட்டு பூட்டினாலும் திறந்திடும் கள்ள சாவி காதல் .

பாரதியார் காதல் கவிதைகள் படித்ததில்லை , வைரமுத்து கவிதைகள் படித்ததில்லை இன்னும் வரிசியா சொல்லிடு போயிட்டே இருக்கலாம்க .... காதலுக்கு உதரணாமாக சொல்லும் இவர்களின் கவிதைகளை படித்ததில்லை.
ஆனால் படித்த்தேன் காதலை , படித்துகொண்டிருக்கிறேன் காதலை , படித்து கொண்டே இருப்பேன் ...

ஒவ்வொரு மனிதனுக்கும் இறந்த காலம் உண்டு , நிகழ்காலம் உண்டு , எதிர்காலம் ?????????நிச்சயமில்லாத எதிர்கால வாழ்விலும் ‘காதலை படித்து கொண்டே இருப்பேன்’ என்று சொல்ல வைக்கும் ஒரு பிடிமானம் , பிடித்தம் தருவதே காதல் என நான் எண்ணுகிறேன் .

மற்றவங்களுக்கு ? எனக்கு தெரியலப்பா ....(எனக்கு தேவை இல்லாததும் கூட ) காதல் மன்னன் ஜெமினி கணேசன் காலத்திலிர்ந்து, கமலகாசன் , விஜய் , அஜித் , சிம்பு, தனுஷ், ஆர்யா .......யாரையோ விட்டுபிட்டேனோ ? :rolleyes:
அட ஆமா , நம்ம mkt....பாகவதர் எப்படி மறந்தேன் ..... எதுக்கு இப்ப முறைக்கிறீங்க? என்ன இருந்தாலும் நம்ம பாகவதர் பாடி பாடி காதலிச்சதை மறக்க முடியுமா ..!!! (நீங்க வேற யாரயும் நினைசிர்த்திங்கன்னா நீங்களே fill up பண்ணிகொங்க .....no probs):wink:


இப்ப அது இல்லைங்க மேட்டர் . இவங்கள பார்த்து இவங்கள மாதிரியே தன்னை ஹீரோ ஹீரோயனா நினைச்சு , நிஜ வாழ்க்கையிலும் நிழல follow பண்ணுதுங்க பாருங்க , அதுக்கு பேர் லவ் இல்லைங்க torture. ஏங்க, (ஹீரோ ஹீரோயின்ஸ்) அந்த நிழலே, நிஜ வாழ்க்கையில அப்படிலாம் பண்ணிர்பாங்களா ?? அப்படியும் இருக்கலாம் , அப்படி இல்லாமலும் இருக்கலாம் .

காதல் தனித்துவம் வாய்ந்தது .....பரவசம் ஒன்றுதான் என்றாலும் வெளிபடுத்தும் உணர்வுகளும் , உள்வாங்கும் உணர்வுகளும் வேறுவேறு .
உங்கள் வாழ்க்கை அதில் உங்கள் துணையை மனம் தேடுவதே காதல் . அந்த துணையிடம் நாம் பகிர்ந்து கொள்ளும் கோபம், தாபம், அழுகை, மகிழ்ச்சி, சின்ன சின்ன குறும்புகள் , சண்டை,சமரசம், ஆசை , ஏக்கம் , காமம் ...etc etc அனைத்தும் உள்ளடக்கிய உணர்வு தான் காதல் .

ஒன்றை பிடித்திரிக்கிறது என்று சொல்வதற்கும் , அதை விரும்புகிறேன் என்று சொல்வதிற்கும் வித்தியாசம் இருக்கிறது . அது நூலிலைவில் விருப்பபாமாக மாறலாம் , மாறாமலும் போகலாம் .

முதல் முதல் நாம் காதல் வயப்படுவது அம்மா,அப்பாவிடம்விடம் தான். அக்கா தங்கை , அண்ணன் தம்பி , நண்பன், நண்பி அனைவரிடம் தோன்றும் அன்பும் ஒரு வகையில் காதல் தான் ...... அன்பான உறவுகளிடம் தோன்றுவதே காதல் ..... அன்பு ஆங்கிலத்தில் வார்த்தை love.


காதலில் ஒருவருக்கு பிடித்தது , பிடிக்காதது , தானாக உணர்ந்து சில சில மாற்றங்கள் தம்மில் கொண்டு வந்து மெருகேற்றுவதும் காதல் தான் .

எனக்காக நீ மாற வேணாம் , நீ நீயாக என்னிடம் இரு என்று சொல்லாமல் சொல்வதும் காதல் தான் .

காதல் பரிமாணங்கள் சொல்லி கொண்டே போகலாம்.

இது தான் காதலின் பரிமானமா?
தந்தையை கண்டேன் உன் உருவத்தில்!
தாயை கண்டேன் உன் பாசத்தில்!

தோழனை கண்டேன் உன் பேச்சில்!
காதலை கண்டேன் உன் கண்களில்-
இத்தனையும் கண்டேன் உன் மனைவியாக!!

இதில் காதல் ஒருமுறைதான் பூக்கும் என்று சொல்வதில் நம்பிக்கை இல்லை .காதலுக்கு மருந்து காதல் தான் . சில முட்டாள்தனம் நிறைந்ததே காதல் .

என் காதலுனுக்காக......

அந்தி நேரம்......
உன்னை பார்த்த நேரம்
அழகிய தருணம்
அழகே உன்னை நானும் என் விழியும் தீண்டிய தருணம்
ஆழ மூச்செடுத்து முத்தெடுத்த நேரம்
அணைத்த உன் கரங்கள் ....
அலைபாய்ந்த எந்தன் கண்கலில்
பதித்த முதல் முத்தம் பார்த்த
பார்வை போதும் என்று இமைக்க மறந்தேன் ....
வேறென்ன வேணும் என் கண்ணா ..
கொஞ்ச நேரம் கொஞ்சி பேச நெஞ்சில் ஏக்கம் கண்ணா ....

எந்த காரணமுமில்லாமல் ஈர்த்து , பிடித்து விருப்பம் வருவதே காதல் கோபத்திலும் தனித்து விடமால் அக்கறை காட்டுவதே காதல் .அந்த அக்கறை மென்மையாவும் வரலாம் , முரட்டுத்தனமாகவும் வரலாம். ஒரு முறை காதலை ஆழமாக உணர்ந்து விட்டால் , முரட்டுத்தனமும் மென்மைதான்.


I am unable to express this feeling in terms and at the same time
I am unable to conceal this feeling...
I asked myself why it is..?Do anyone know?
More than his lips his eyes spoke..
More than his eyes his soul spoke
More than his soul his touch spoke
More than spoken words his unspoken words express his feeling....
Now only I understand what is the feeling?
What changes me? What makes me restless?
Why I am speaking and smiling lonely?
Why I am in a separate world?
Why I feel safe ,trust when he stands beside me?
That is love.... Now I feel his immense love and I completely submissive (not to him) to his love...!!

இது காதலினால் ஏற்படும் இனிமையான அவஸ்தைகளா ...
இல்லை ஹார்மோனின் கூட்டு சதியா ..!!
எவருக்கும் எதுவாகவோ இருந்துவிட்டு போகட்டும் .....ஆராய விருப்பமில்லை . வாழ்வின் அன்றாட தேவை போல வாழ்கையின் பிடிமானம் , பற்றுக்கோலே காதல் ....
நான் காதலிப்பது என் மணாளனை மட்டுமல்ல ....இயற்கையை காதலிக்கிறேன் .....என் பிடித்த எழுத்தளாரின் எழுதுக்களை காதலிக்கிறேன் , எனக்கு பிடித்த விளையாட்டை காதலிக்கிறேன் , என் கடவுளான கண்ணனை காதலிக்கிறேன் ..... என்னுள் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள் ...என்னுள் ஆக்ரமிக்கும் உணர்வுகளை காதலிக்கிறேன் . ஆக மொத்தத்தில் காதலை காதலிக்கிறேன் ....

முன்பு ஒரு முறை , கோவலனின் கண்ணகி காதல் சிறந்ததா ? மாதவி கோவலன் காதல் சிறந்ததா ? என்று பட்டிமன்றம் .....
எனக்கு இந்த தலைப்பே சிரிப்பே வரவைத்தது . காதலை காதலாக பார்க்காமல் , உள்ளே நுழைந்து ஒப்பிட்டு பார்க்கும் அதிகாரம் யார் கொடுத்தது .... இருவரின் காதலும் தனித்துவம் வாய்ந்தது ....ஒப்பிட இங்கே என்ன இருக்கிறது என்று எனக்கு புலப்படவில்லை .

காதலுக்கு உதாரணமாக ரோமியோ ஜூலியட், அம்பிகாவதி அமராவதி etc etc என்று எவரையும்
எங்கள் காதலுக்கு முன் உதாரணமாக தேவையில்லை ..

எனக்கு அவனே பிரதானம்
அவனுக்கு நானே ...

இன்னொருவரின் காதல் சின்னமான தாஜ்மாஹளும் காதல் பரிசாய் பெற விருப்பமில்லை ..... அடுத்தவருக்காக அல்லாமால் , எனக்காக நீ தரும் சின்ன சின்ன பரிசும் ,இந்த நொடி காதலும் என் நினைவில் பொக்கிசமாய் ..!!

 
Last edited by a moderator:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.