Physical chemistry-சிறப்பான எதிர்காலம் தரும் இயற்பிய வே&am

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#1
சிறப்பான எதிர்காலம் தரும் இயற்பிய வேதியியல் படிப்பு


இயற்பியலின் கொள்கைகள் மற்றும் விதிகளைப் பயன்படுத்தி வேதிப் பொருட்களின் அமைப்பு, மூலக்கூறு அமைப்பு மற்றும் அணுவகத் துகள்கள் (Subatomic Particle) ஆகியவற்றைப் பற்றி படித்தறிய உதவும் வேதியியலின் ஒரு பிரிவே இயற்பிய வேதியியல் (Physical chemistry). வேதிப் பொருட்களிடையே நடைபெறும் வேதிவினைகள், அந்த வினைகள் நடைபெறும் வேகம் ஆகியவற்றைப் பற்றி மிகவும் துல்லியமாக அறிந்துகொள்ள உதவும் துறை இது.



வேதிவினைகள் நடைபெறுவதால்தான் அனைத்து உயிரினங்களும், இவ்வுலகமும் இயங்குகின்றன. வேதிவினைகள் நடைபெறவில்லையெனில் ஒரு பொருளிலிருந்து ஆற்றலோ அல்லது மற்றொரு பொருளோ உண்டாகாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இத்துறையில் உள்ள கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்து விரிவாக விளக்குகிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார்.

இவ்வுலகை கட்டமைக்கின்றன. அனைத்து செயல்களுக்கும் மூலாதாரமாக விளங்குபவை வேதிவினைகள். வேதிவினைகள் மூலம்தான் தாவரங்களால் உணவு உண்டாக்கப்படுகின்றது. அதே வேதிவினைகளால் தான் உயிரினங்கள் உணவுப் பொருளானது சிதைக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகின்றது. வேதிய இணைப்பு என்னும் செயலால்தான் அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன.

இல்லையெனில் பொருள் என்ற ஒன்று இல்லாமலே போகும். வேதி வினைகள் மாற்றப்படும்போது அது பொருட்களிலும், உயிரினங்களிலும் பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. வேதிவினை மாற்றங்கள் குறித்து படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் இத்துறையைத் தாராளமாகத் தேர்ந்தெடுக்கலாம். இத்துறையில் தற்போதைக்கு இளநிலைப் படிப்புகள். பி.எஸ்சி. முடித்தவர்கள் முதுநிலைப் படிப்பை எடுத்துப் படிக்கலாம்.

இயற்பிய வேதியியல் துறை சார்ந்த படிப்புகள்/பிரிவுகள்

* Thermodynamics வெப்ப இயக்கவியல்
* Quantum Chemistry - குவைய வேதியியல்
* Statistical Mechanics - விசைப் புள்ளியியல்
* Electro Chemistry - மின் வேதியியல்
* Thermo Chemistry - வெப்ப வேதியியல்
* Quantum Mechanics - குவைய விசையியல்
* Spectroscopy - நிறமாலையியல்
* Chemical Kinetics - வேதி இயக்கவியல்
* Chemical Thermodynamics - வேதி வெப்ப இயக்கவியல்
* Surface Chemistry - தள வேதியியல்

இந்தப் பிரிவுகளில் படிக்கலாம்
M.Sc., M.S., M.Phil., Ph.D., D.Phil., D.Sc.

இயற்பிய வேதியியல் துறையைக் கொண்ட சிறந்த கல்வி நிறுவனங்கள்

* யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ், சென்னை
* பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
* தி இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், மும்பை
* ஆக்ரா காலேஜ், உத்திரப்பிரதேசம்
* அனுராக் நாராயண் காலேஜ், பீஹார்
* காலேஜ் ஆப் பேசிக் சயின்சஸ் & ஹியூமானிட்டிஸ், ஹரியானா
* கவர்ன்மென்ட் விதர்பா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் & ஹியூமானிட்டிஸ், மஹாராஷ்டிரா
* குருநானக் கல்சா காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் & சயின்ஸ், மஹாராஷ்டிரா
* கிஷின்சந்த் செல்லாராம் காலேஜ், மும்பை
* சனதான் தார்ம் பி.ஜி. காலேஜ், உத்திரப்பிரதேசம்

இயற்பிய வேதியியல் துறை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள்

* கேட் ஃபெல்லோஷிப், ஏ.ஐ.சி.டி.இ., புதுடெல்லி
* இன்ஸ்பையர் ஃபெல்லோஷிப், டி.எஸ்.டி., புதுடெல்லி
* ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப், சி.எஸ்.ஐ.ஆர்., புதுடெல்லி
* ராஜீவ்காந்தி ஃபெல்லோஷிப் ஃபார் எஸ்.சி., எஸ்.டி., யு.ஜி.சி., புதுடெல்லி
* மௌலானா ஆசாத் ஃபெல்லோஷிப் ஃபார் மைனாரிட்டி ஸ்டூடண்ட்ஸ், யு.ஜி.சி., புதுடெல்லி
* இந்திராகாந்தி ஃபெல்லோஷிப் ஃபார் சிங்கிள் கேர்ள் சைல்டு, யு.ஜி.சி., புதுடெல்லி
* ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஃபெல்லோஷிப், எம்.ஓ.இ.எஃப், புதுடெல்லி
* ஃபெல்லோஷிப் ஃபார் ஓ.பி.சி. ஸ்டூடண்ட்ஸ், யு.ஜி.சி. புதுடெல்லி
* மெரிட் ஃபெல்லோஷிப், யு.ஜி.சி., புதுடெல்லி
* நேஷனல் ஃபோஸ்ட் டாக்டோரல் ஃபெல்லோஷிப், டி.எஸ்.டி., புதுடெல்லி

இயற்பிய வேதியியல் துறை மாணவர்களை உற்சாகப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்புகள்



* நேஷனல் சயின்ஸ் ஃபவுண்டேசன், இந்தியா
* இண்டியன் நேஷனல் சயின்ஸ் அகாெடமி, புதுடெல்லி, இந்தியா
* அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி, அமெரிக்கா
* ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரி, இங்கிலாந்து
* தி ராயல் ஆஸ்திரேலியன் கெமிக்கல் சொசைட்டி, ஆஸ்திரேலியா
* ஜெர்மன் புன்சன் சொசைட்டி ஃபார் பிசிக்கல் கெமிஸ்ட்ரி, ஜெர்மனி
* சொசைட்டி ஆப் பிசிக்கல் கெமிஸ்ட்ரி செர்பியா, செர்பியா
* கொரியன் கெமிக்கல் சொசைட்டி, கொரியா
* யூரோப்பியன் சொசைட்டி ஃபார் அப்ளைடு பிசிக்கல் கெமிஸ்ட்ரி, இங்கிலாந்து
* இண்டர்நேஷனல் சொசைட்டி ஆப் எலக்ட்ரோ கெமிஸ்ட்ரி, அமெரிக்கா

இயற்பிய வேதியியல் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரங்கள்

* டாக்டர். ஜே.சி. கோஸ் மெடல், இந்தியா
* இண்டியா சயின்ஸ் அவார்டு, இந்தியா
* பாரத ரத்னா விருது, இந்தியா
* இன்போசிஸ் பரிசு, இந்தியா
* ராமானுஜன் பரிசு, சாஸ்த்ரா யுனிவர்சிட்டி, தமிழ்நாடு
* மார்லோ அவார்டு, இங்கிலாந்து
* நோபல் பரிசு, ஸ்வீடன்
* எர்ன்ஸ்ட் அஃப்பே அவார்டு, அமெரிக்கா
* பால்-பங்கே பரிசு, ஜெர்மனி
* எவால்டு-விக்கே பரிசு, ஜெர்மனி

இயற்பிய வேதியியல் துறை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகளும் உத்தேச மாதச் சம்பளமும்
* கல்லூரி ஆசிரியர் - 50,000-1,50,000
* சயின்டிஸ்ட் - 50,000-2,00,000
* கெமிஸ்ட் - 35,000-1,50,000
* ஆசிரியர் (பள்ளி) - 30,000-75,000
* அசிஸ்டென்ட் - 25,000-50,000
* ரிசர்ச்சர் - 35,000-60,000
* டெக்னிக்கல் ஆபிசர் - 40,000-1,00,000
* டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 30,000-65,000
* ரிசர்ச் ஆபிசர் - 50,000-1,25,000
* ரிசர்ச் சயின்டிஸ்ட் - 35,000-75,000

இயற்பிய வேதியியல் துறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் அமைப்புகள்

* பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர், மும்பை
* டிபார்ட்மென்ட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, புதுடெல்லி
* அரசு மற்றும் தனியார் பள்ளிகள்
* அரசு மற்றும் தனியார் கல்லூரிகள்
* உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஆய்வு நிறுவனங்கள்
* இண்டியன் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், புதுடெல்லி
* கவுன்சில் ஃபார் சயின்டிபிக் & இண்டஸ்டிரியல் ரிசர்ச், புதுடெல்லி
* ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்தியா
* உரத் தொழிற்சாலைகள்
* வேதியத் தொழிற்சாலைகள்


உயிரினங்களிலும் பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. வேதிவினை மாற்றங்கள் குறித்து படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் இத்துறையைத் தாராளமாகத் தேர்ந்தெடுக்கலாம். இத்துறையில் தற்போதைக்கு இளநிலைப் படிப்புகள். பி.எஸ்சி. முடித்தவர்கள் முதுநிலைப் படிப்பை எடுத்துப் படிக்கலாம்.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,938
Location
Chennai
#2
Re: Physical chemistry-சிறப்பான எதிர்காலம் தரும் இயற்பிய வ&#3015

Nice sharing ji :thumbsup Chemistry is a wonderful subject :)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.