Pickle - அன்றாட உணவில் ஊறுகாய் சேர்ப்பது ஏன் ஆர&#301

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1

இந்தியாவில் ஊறுகாய் மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருள். அத்தகைய ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். சிலருக்கு சாப்பிடும் போது ஊறுகாய் இல்லாவிட்டால் சாப்பாடே வயிற்றில் இறங்காது. அந்த அளவில் ஊறுகாயானது அதன் சுவையால் பலரை அடிமையாக்கி வைத்துள்ளது.
ஊறுகாயில் பல வெரைட்டிகள் உள்ளன. மேலும் இந்த உணவுப் பொருள் தான் எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் அதில் சேர்க்கப்பட்டுள்ள பதப்படுத்தும் பொருட்கள் தான். என்ன தான் ஊறுகாயை தினமும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டாலும், அது கொஞ்சம் கொஞ்சமாக உயிரை கொல்லும்.இப்போது ஊறுகாயை அன்றாடம் எடுத்து வந்தால், என்ன பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருளான சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமைக்கு உள்ளாகக்கூடும்.

ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து, இதய நோய்க்கு வழிவகுக்கும்.

ஊறுகாய் சாப்பிடுவது கெட்டதா? ஆம். ஏனெனில் ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிக அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை அன்றாடம் எடுத்து வரும் போது, அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.

அதிக அளவில் உப்பு எடுத்தால், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். ஆகவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிப்பது தடுக்கப்படுவதோடு, அதனால் இதய நோய் வருவதையும் தவிர்க்கலாம்.

ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்

என்ன தான் ஊறுகாய் உணவின் சுவையை அதிகரித்தாலும், இவற்றை அன்றாடம் உணவில் சேர்ப்பது நல்லதல்ல. அதற்காக ஊறுகாயை சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. அன்றாடம் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள்.
 

Attachments

Last edited:

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#2
Re: Pickle - அன்றாட உணவில் ஊறுகாய் சேர்ப்பது ஏன் ஆர&

nice info dear....
 

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,283
Likes
2,986
Location
Singapore
#3
Re: Pickle - அன்றாட உணவில் ஊறுகாய் சேர்ப்பது ஏன் ஆர&

Thank u kalai.. for sharing an valuable information.. this is really useful..most of us dontknow abt the harmful things...
 

bookslover

Citizen's of Penmai
Joined
Jul 29, 2011
Messages
737
Likes
408
Location
chennai
#4
Re: Pickle - அன்றாட உணவில் ஊறுகாய் சேர்ப்பது ஏன் ஆர&

thanx for sharing
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5
Re: Pickle - அன்றாட உணவில் ஊறுகாய் சேர்ப்பது ஏன் ஆர&

Thank u sis...
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#6
Re: Pickle - அன்றாட உணவில் ஊறுகாய் சேர்ப்பது ஏன் ஆர&

Thank u kalai.. for sharing an valuable information.. this is really useful..most of us dontknow abt the harmful things...
Always my pleasure sis......
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#7
Re: Pickle - அன்றாட உணவில் ஊறுகாய் சேர்ப்பது ஏன் ஆர&

Most welcome......
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.