Placebo medicine

Joined
Sep 8, 2013
Messages
3
Likes
12
Location
dindigul
#1
தமிழ் இணைய பல்கலைகழகம் பிளாசிபோ (PLACEBO) என்பதன் தமிழாக்கத்தை 'ஆறுதல் மருந்து' அல்லது போலி மருந்து என்று குறிப்பிடுகின்றது. இவ்வகை மருந்துகள் அறிவியல் மருத்துவத்தில் இரண்டு விதமாக பயன்படுகின்றன. ஒன்று-ஒரு நோயாளி ஒரு சில நோய் அறிகுறிகளோடு அறிவியல் மருத்துவரை அணுகும் போது அந்த அறிவியல் மருத்துவர் அந்த குறிப்பிட்ட நோய் அறிகுறிக்கு எந்தவித 'வேலை செய்யும் மருந்தும்' (Pharmacologically active) தேவையில்லை என்று கருதுகிறார் எனில் அப்போது மருத்துவர் 'Placebo' மருந்துகளை பரிந்துரைப்பார். அது எந்த விதமான வேலையையும் செய்யவில்லை என்றாலும் ஒரு வித மனநிறைவை நோயாளிக்கு வழங்குகிறது. வாகனத்தின் முன்பு எலுமிச்சை பழத்தினை கட்டுவதனால் வாகனம் நன்றாக வேலை செய்யும் என்பது போல Placebo மருந்துகளும் ஒரு வித மனநிறைவை வழங்குகிறது.இரண்டாவது அறிவியலில் ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்கப்படும் போது அது வேலை செய்கிறதா? இல்லையா? அதன் பக்க விளைவுகள் என்ன? என்று ஒப்பிட்டு பார்க்க புதிய மருந்தானது ‘பிளாசிபோ’('Placebo’) மருந்துகளோடு ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக இரத்த அழுத்தத்திற்கு ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்கப்படும் போது இரத்த அழுத்தம் அதிகமுள்ள ஒரு குழுவினை தேர்ந்தெடுத்து அதில் ஒரு சிலருக்கு உண்மையான மருந்தினையும் ஒரு சிலருக்கு 'Placebo' மருந்துகளையும் கொடுத்து இரண்டும் ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றது.மனிதன் ஒரு விடயத்தை நம்பி விட்டால் அவனுடைய மனது மாற்றங்களை இயல்பாக உருவாக்கும் என்று அடிப்படையில் இவ்வகை 'Placebo' மருந்துகள் வேலை செய்கின்றன. ஆனால் அனைத்து நோய்க்கும் 'பிளாசிபோ' தீர்வாகாது.
 
Joined
Sep 8, 2013
Messages
3
Likes
12
Location
dindigul
#2
சிறு குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, வாந்

சிறு குழந்தைகளுக்கு ஆகார விகற்பத்தின் காரணமாக வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்படுவதுண்டு. இதற்குப் பல வகையான மருந்துகள் உண்டு என்றாலும் புதினாக்கீரைக் கஷாயம் கைகண்ட மருந்தாக இருக்கிறது. புதினாக்கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு அம்மியில் வைத்து லேசாக நைத்து, அதை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து, நன்றாக வதக்கி அதில் ஆழாக்களவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அரை ஆழாக்களவாகச் சுண்டியபின் சட்டியை இறக்கி வடிகட்டி, அதில் வேளைக்குச் சங்களவு வீதம் காலை மாலையாக மூன்று வேளை கொடுத்தால் போதும், வயிற்றுப் போக்கு, வாந்தி நின்று விடும்.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,750
Location
Madras @ சென்னை
#3
Goodonyaa

t1612.gif
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
Really amazing to know about these Placebo medicine. My homeopathic doctor also some times give this empty sugar globules to convince the patients who are coming to the doctor for imaginary diseases or reasons. Definitely human mind plays a vital part in curing most of the diseases. thank you!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.