Plant-based 'eggs' for vegetarians - தாவர முட்டை

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
சைவ பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக கோழி முட்டைக்கு பதிலாக தாவர முட்டை தயாரிக்கப்படுகிறது.முட்டை சைவ உணவா? அல்லது அசைவ உணவா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. எனவே, கோழி முட்டைக்கு பதிலாக தாவரத்தில் இருந்து சைவ முட்டை தயாரிக்கும் பணி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

முட்டையில் எண்ணை மற்றும் தண்ணீர் கல்ந்த பொருட்கள் உள்ளன. அதுபோன்ற பொருட்களை தாவரங்களில் இருந்து கண்டெடுத்து முட்டை தயாரிக்கும் முயற்சி நடைபெறுகிறது.


இப்பணியில் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள 'ஹாம்டன் கிரீக் புட்ஸ்' நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் ஜோஷ் டெட்ரிக் கூறியதாவது:-

''சைவ பிரியர்கள் முட்டை மற்றும் இறைச்சிக்கு மாற்றான பொருட்களை எதிர்பார்க்கின்றனர். எனவே, அவர்களின் தேவையை நிறைவேற்ற நாங்கள் முயன்று வருகிறோம். தற்போது தூள் வடிவில் முட்டை தயாரித்துள்ளோம். அவை சில பேக்கரிகளில் முட்டைக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை கோழி முட்டை தரத்தில் அதேபோன்று வழங்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#2
அவர்களது முயற்ச்சி வெற்றி பெற வாத்துகிறேன் ..!!!
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#4
அட... ஆச்சரியமா இருக்கே... முயற்சி வெற்றிபெற்று, பொருள் சந்தைக்கு வந்தா ஒரு கை பாத்துட வேண்டியது தான்
.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.