Please help me

U

Unregistered

Guest
#1
Hi Friends

நான் தினமும் சாமி கும்பிடும் போது கண் மூடி அந்த கடவுளை நினைத்து கும்பிடுவேன்.உதாரணமாக திருப்பதி பாலாஜியை முழு உருவத்தையும் நினைத்து கொள்வேன்.இந்த மாதிரி குலதெய்வம் சாய்பாபா மற்றும் பிற கடவுளை நினைத்து கும்பிடுவேன்.ஆனால் நேற்றில் இருந்து என்னால் இந்த முறையில் கும்பிட முடியவில்லை.கண் மூடினால் ஏதோ ஒரு உருவம் இடையில் வருகின்றது.கண்ணை மூடினால் அந்த உருவம் தான் தெரிகின்றது. எனக்கு மிகவும் பயமாக உள்ளது.please help me anybody.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,501
Likes
84,479
Location
Bangalore
#2
Hi friend,


இதுக்கெல்லாம் பெரிசா கவலைப்பட வேண்டாம்மா .

என்ன காரணமா இருக்கலாம்னா , உங்க மனசு வேற ஏதோ கவலையிலோ அல்லது வேறு ஏதோ விஷயத்தில் தீவிரமா மூழ்கி இருப்பதாலேயோ , நீங்க வழக்கம்போல சாமி கும்பிடும்போது கடவுளின் உருவம் மனசில் சட்டுன்னு நிக்க மாட்டேங்குது .


இப்போ இதையும் பத்தி மேலும் கவலைப்படுறதால ஒரு பிரயோஜனமும் இல்ல . இன்னும் குழப்பம் அதிகமாகி ,கடவுள் உருவும் மனதில் நிலைக்க மறுக்கும் .

சாமி கும்பிடும்போடும் கடவுள் உருவம் முழுக்க மனதில் நின்றால்தான் , நாம் பக்தி மிக்கவர்கள் , இல்லாட்டி கடவுள் ஏதாவது செய்துடுவார் இப்படின்னெல்லாம் நீங்களே நினைச்சுக்காதீங்க . கடவுள் மிகவும் கருணை மிக்கவர் . நீங்க எப்படி கும்பிட்டாலும் ஏத்துப்பார் . உங்களோட பக்தியை மட்டுமே அவர் பார்ப்பார் . வேறு எதுவும் பிரதானமில்லை .


வேணும்னா , சில நாளைக்கு கண்ணைத் திறந்துட்டே சாமியை கும்பிடுங்க . அதுல எந்தத் தப்புமில்லை .


இந்த உருவத்தை பத்தி கவலைப்படுவதை விட்டுவிட்டு ,வழக்கம்போல சாமி கும்பிடுங்க . இதுக்கு நடுவில் , உங்க மனசை ஆக்கிரமிச்சு இருக்கும் அந்தக் கவலையோ அல்லது வேறு ஏதாவதோ, தானே ஒரு முடிவுக்கு வரும் . அப்புறம் பாருங்க . திரும்ப கடவுளின் முழு உருவம் உங்க மனசை ஆக்ரமிக்கும் .
 
Last edited:
U

Unregistered

Guest
#3
Hi friend!

I totally agree with @jv66 who has given very good advice.
You can sit for few minutes with chin mudra to help you focus on your favorite God.
Chin mudra endraal unga iru kaigalin kattai viralin nuniyaal aal katti viralin nuniyai cherthu vaikannum. Matra viralgallai neeti vaithu irukanum. intha mathiri kattai viralgalayum aal kaati viralgaliyum oru round mathiri serthu vaithu konja neram utkarnthu irunthaal, full focus kidaikkum.
kavalayo, varuthamo vendaam. bhakthiyaga manathil ninaithaale pothum

God bless you!
 
U

Unregistered

Guest
#4
நான் தினமும் வீடு மற்றும் தலைவாசல் படிக்கு மஞ்சள் நீர் தெளித்து தினம்தோறும் விஷ்ணுசகஸ்ரநாமம் சுப்ரபாதம் கந்தசஷ்டி கவசம் இன்னும் நிறைய பக்தி பாடல்களை வீட்டில் ஒலிக்க விடும்போதே இப்படி ஒரு சம்பவம் நிகழும் பொழுது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமா போச்சு
 
U

Unregistered

Guest
#5
Thank you so much for your feedback.If I have any doubts i always post it here only and i will wait eagerly for reply especially jayanthi mam & sumathisrini mam.
 
U

Unregistered

Guest
#6
Jayanthi Mam,

என்னோட மாமனார் இறந்து 7 மாதங்கள் ஆகின்றது என்னோட கணவர் தான் சடங்கு செய்தார். இந்த சூழ்நிலையில் மஹாளய அமாவாசையில் காவிரி நதிக்கரையில் எங்களுடைய முன்னோர்கள் அனைவருக்கும் சேர்த்து எங்களுக்கு தெரிந்த மாதிரி எள் நீர் விட்டோம். நாங்கள் செய்தது சரியா தவறா ?

ஒரு வருடம் வரை என்ன என்ன செய்ய வேண்டும் செய்ய கூடாது please explain me.

We are Vaishnavas (தென்கலை ஐயர் not ஐயங்கார்)
 
U

Unregistered

Guest
#7
Last year sep my husband met an astrologer
He suggested some temples .On that time
My father in law was alive. Later when we planned
To visit temples that time my father in law passed away
After 3 months we started to visit temples
What we had done is correct or wrong ?
Bcz some members told we shouldn't visit temples
For 1yr.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,501
Likes
84,479
Location
Bangalore
#8
நான் தினமும் வீடு மற்றும் தலைவாசல் படிக்கு மஞ்சள் நீர் தெளித்து தினம்தோறும் விஷ்ணுசகஸ்ரநாமம் சுப்ரபாதம் கந்தசஷ்டி கவசம் இன்னும் நிறைய பக்தி பாடல்களை வீட்டில் ஒலிக்க விடும்போதே இப்படி ஒரு சம்பவம் நிகழும் பொழுது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமா போச்சு

நல்லது தோழி . ஆனால் , இப்படியெல்லாம் பக்திப்பரவசமாக வீட்டை வைத்திருந்தாலும் , நம் வாழ்வில் அவ்வப்போது நடைபெற வேண்டிய , நமக்கான கவலைப்படக்கூடிய விஷயங்கள் , அசம்பாவிதங்கள் எல்லாமே நமது ஊழ்வினைப்படி நடந்தே தீரும் . அதையெல்லாம் திண்மையான மனத்துடன் எதிர்நோக்கும் தைரியத்தையே , நமது கடவுள் பக்தி தரும் . பக்தி மிக மிகவே , கடவுள் நம்மை மேலும் சோதித்து புடம் போடுவார் .

நீங்கள் பயப்படுவது போல உங்கள் எண்ணத்தின் குறுக்கே வந்தது ஏதும் அரூபம் என்றெல்லாம் பயப்பட வேண்டாம் . கடவுள் என்றும் உங்களுக்குத் துணையிருப்பார் . கண்களை திறந்து கொண்டே கடவுளை வணங்குங்கள் .:pray1:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.