Polio -இளம்பிள்ளை வாதம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இளம்பிள்ளை வாதம் என்கின்ற போலியோவை உலகத்தை விட்டே விரட்ட வேண!டும் என்பதே உலக மருத்துவர்களின் ஆவல்.

அதற்காக நம் அரசாங்கம் இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கி வருகிறது. இருந்தாலும் இளம்பிள்ளை வாதம் ஆங்காங்கே தென்படத்தான் செய்கிறது. இதற்கு சித்த மருத்துவத்தில் சித்தர்கள் கூறும் கருத்து என்ன என்று பார்ப்போம்.

குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள்தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன. இந்த வாயுக்கள் நிலை மாறும் போது தான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த இளம்பிள்ளை வாதம் எதனால் ஏற்படுகின்றது என்பதை அகத்தியர் தெளிவாக விளக்கியுள்ளார். அவற்றை எட்டு வகையாகவும் பிரித்து கூறியுள்ளார். அதில் முதல் வாதமான சுரவாதத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.

‘குத்திடும் நகங்கள் எல்லாம்
கொடும் சுரம் கோபம் ஆகி சுற்றிடும
அதிரத்துள்ளே சுழன்றுபோய் வாந்தி
உண!டாகும்இத்திகை மலம்
விடாது. இருப்போடு பாதம் தன்னில்
வற்றிய வாலர் மெய்யில் வரும்
சுரவாதம் தானே‚“

-அகத்தியர் பாலவாகடம்

பொதுவாக குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலில் பலவகையுண!டு. இதில் குழந்தையின் வயிற்றில் அஜீரணக் கோளாறு உருவாகி புளிப்புத் தன்மை ஏற்பட்டுவிடும். இதனால் உடல் அலர்ஜி ஆகி சளிபிடித்து காய்ச்சல் உருவாகும். இந்த காய்ச்சலானது 3 முதல் 8 நாட்கள் வரை தொடர்ந்து இருக்கும். நாளுக்கு நாள் காய்ச்சலின் வேகம் அதிகரித்து நரம்பு மண!டலங்களைத் தாக்கும். அப்போது குழந்தைகளின் ஈரல் பாதிக்கப்படும். ஈரல் பாதிப்பால் மலச்சிக்கல் உருவாகும். இந்த மலச்சிக்கலால் வயிற்றில் வாயுக்கள் சீற்றமடையும். இதனால் அருகு பற்றி வர்மம் (அருகு பற்றி வர்மம் என்பது இடுப்புப் பகுதியில் விசை நரம்பு என்ற வில்விசை நரம்பு சேரும் இடம்) பாதிக்கப்படும்.

விசை நரம்பு என்பது இடுப்புப் பகுதியில் இருந்து முதுகு வழியாக கழுத்துப் பகுதியில் கத்திரிக்கோல் மாறாக தலையின் பின்புறம் முகுளம் பகுதியில் சேரும் நரம்பாகும். ஈரல் பாதிப்பால் அருகு பற்றி வர்மம் பாதிக்கப்பட்டு விசை நரம்பு உலர்ந்து முறுகும் தன்மையடையும். இதனால் குழந்தையின் நரம்பு மண!டலம் பாதிக்கப்படும்.

முதலில் சளி உருவாகி காய்ச்சலாக மாறி மலச்சிக்கல் ஏற்பட்டு விசை நரம்பு பாதிக்கப்பட்டு இடுப்புப் பகுதி செயலிழந்து காய்ச்சலின் தன்மை கடுமையாகும். இதை அகத்தியர் வாத தன்மை கொண!டது என்கிறார். இதற்கு சுரவாதம் எனவும் பெயரிட்டுள்ளார்.

சுரவாத காய்ச்சலுக்கான அறிகுறிகள் :

* குழந்தை எப்போதும் அழுதுகொண!டே இருக்கும்.

* மலச்சிக்கல் உருவாகும்.

* 3 முதல் 8 நாட்கள் வரை காய்ச்சல் தொடர்ந்து கொண!டே இருக்கும்.

காய்ச்சலின் வேகம் அதிகரிப்பதால் இடுப்புப் பகுதி செயலிழந்துவிடுகிறது. வாதத்தில் அதிகம் பாதிக்கப்படும் வாதம் சுரவாதம் என்பதால் இதனை முதலில் வைத்துள்ளனர்.

இந்த சுரவாதமானது தாயின் வயிற்றில் கரு உற்பத்தியாகும்போதும், 10 மாதம் வயிற்றில் வளரும்போதும் அந்த தாய்க்கு மன அழுத்தம், மனக்கவலை, மன உளைச்சல், திடீர் அதிர்ச்சி, பயம், காமம், கோபம் போன்றவற்றால் உடலில் உள்ள தச வாயுக்கள் பாதிப்படைகின்றன.

தாய்க்கு மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை இருந்தால்கூட குழந்தை பிறந்த பிறகும் இந்த சுரவாத நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இளம்பிள்ளை வாதம் என்பது உலகையே ஆட்கொள்ளும் கொடிய நோயாகும். இந்த நோயின் தன்மை பற்றி அகத்தியர் எழுதிய நூல்கள் அனைத்தும் நமக்குக் கிடைத்த பொக்கிஷம் ஆகும்.

குழந்தை தொப்புள் கொடி சுற்றி பிறப்பதும் இந்த பாதிப்பால்தான். அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுப்பதும் இத்தகைய பாதிப்பால்தான்.

அளவுக்கு அதிகமான கால்சியம், இரும்பு, வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதால் தாயின் குடலில் புண! ஏற்பட்டு அதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.

சுரவாத காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் :

* ஈரத்தலையுடன் பால் கொடுப்பதால் சுரவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

* பொதுவாக இந் நோயானது கருவிலிருக்கும்போது இருக்கும். குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் அருந்தும்போது தாய்க்கு உடலில் நோய் தாக்கினால் அது பாலின் வழியாக குழந்தைக்கு சென்று தாக்கும்போது சுரவாதத்தின் தன்மை வெளிப்படும்.

வாத நோய் தடுப்பு கஷாயம் :

அதிமதுரம் - 5 கிராம், நற்சீரகம் - 5 கிராம், ஜடமாஞ்சி - 5 கிராம், சாரணைவேர்- 5 கிராம், வில்வவேர் - 5 கிராம், முடக்கத்தான் - 5 கிராம், குறுந்தொட்டி - 5 கிராம் இவற்றை இடித்து சலித்து 1 லிட்டர் தண!ணீரில் கொதிக்க வைத்து 200 மிலி ஆகும் பக்குவம் வரை காய்ச்சி பின் இளநீர் விட்டு மீண!டும் சிறிதுநேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்பு வடிகட்டி காலை அல்லது மாலை ஒருவேளை மட்டும் 100 மி.லி. அருந்தி வர வேண!டும். கசப்புத் தன்மை இருக்காது. இந்த கஷாயத்தை கர்ப்பமான நான்காவது மாதத்திலிருந்து வாரத்திற்கு இருமுறை குழந்தை பிறக்கும்வரை அருந்தி வந்தால் குழந்தையை எந்தவிதமான வாத நோயும் தாக்காது.

சுரவாத காய்ச்சல் வரும்முன் காக்க :

கருவில் குழந்தை வளரும்போது தாய்க்கு எந்தவிதமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண!டும்.

இதற்காகவே நம் முன்னோர்கள் கர்ப்பிணிப் பெண!களுக்கு வளைகாப்பு என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். சுற்றத்தாரும், சொந்தங்களும் அப்பெண!ணை வாழ்த்தும்போது அவள் உள்ளம் மகிழும். அப்போது குழந்தை நன்கு ஆரோக்கியமாக வளரும்.

மலச்சிக்கல் ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாயுவை உண!டாக்கும் பொருட்களை சாப்பிடக் கூடாது.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.