Pori Vegetable Fruit Salad for Weight Loss - பொரி - வெஜிடபிள் ப்ரூட் சாலட்--எடை க

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,084
Likes
20,708
Location
Germany
#1
பொரி - வெஜிடபிள் ப்ரூட் சாலட்


தேவையான பொருட்கள் :

பொரி - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்துக் கொள்ளவும்)
திரட்சை - அரை கப் (சிகப்பு, பச்சை)
மாதுளம் பழம் - பாதி
பேரீச்சம் பழ விழுது - 2 ஸ்பூன்
கரம் மசாலா - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
அம்சூர் பவுடர் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
சேவ் - அரை கப்
ஆலிவ் ஆயில் - அரை ஸ்பூன்

பேரீச்சம்பழ விழுது செய்முறை :

பேரீச்சம் பழம் 1 கப், புளி சிறிதளவு, வெல்லம், புதினா அனைத்தையும் நன்றாக அரைத்து விழுது.

செய்முறை :

• ஒரு கடாயில் அரை ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி அதில் மஞ்சள் தூள் சிறிதளவு போட்டு அதன் பின் பொரியை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

• வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், கேரட், கொத்தமல்லி தழை வேக வைத்த உருளைக்கிழங்கு போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• மாதுளம் பழத்தில் இருந்து முத்துக்களை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் பொரி, திராட்டை, மாதுளை முத்துக்கள், பேரீச்சம்பழ விழுது போட்டு அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ளவற்றை போட்டு நன்றாக கிளறவும்.

• பின்னர் அதனுடன் சேவ், அம்சூர் பவுடர், உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

• இந்த பொரி - வெஜிடபிள் ,ப்ரூட்சாலட் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இந்த சாலடை செய்து குளிர் பதன பெட்டியில் வைத்து விடவும்

நான்கு மணிக்கு ஒரு முறை ,பசி இருந்தால் மட்டும், ஒரு சிறிய தட்டில் (200 கி )அளவில் சாப்பிட்டு நிறைய தண்ணீர் குடிக்கவும்

பொரியும் சாலடும் பசி போக்கி விடும்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.