Porridge recipes - கஞ்சி வகை ரெஸிபிக்கள்

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,303
Likes
83,912
Location
Bangalore
#1
Hi friends,

Happy to meet you all again.

Though we enjoy many many varieties of foods, at times, all of us will be in necessity to take some or other Porridge .

So, let's help all our other friends with the awesome recipes of Porridge varieties.

The
Recipe of the month July 2018 is Porridge Recipes.

These Porridge varieties may not only be taken only when we are not well, but also for Health purposes. Many people are switching themselves to 'Healthy dishes only' due to lot of Health awareness. All the Children need to be given the healthy Porridge varieties for their body growth.


All these people are in search of lots of Porridge recipes.

All our members may come to their help with your awesome recipes..

One small request:

Please avoid Copy Pasting the Recipes from other sources.


தோழிகளே ,

மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி ..

இந்த மாத தலைப்பாக
கஞ்சி வகை ரெஸிபிக்கள் என்பதை வைத்துக் கொள்வோம் .

உடல் நலமில்லாத சமயத்தில் மட்டுமே உண்ணக் கூடியதல்ல இந்தக் கஞ்சி வகைகள் . எப்போதும் நல்ல உடல் நலத்தை பேண விரும்பும் பலரும் தற்காலத்தில் ஒரு வேளையாவது ஏதோ ஒரு வகை கஞ்சியை உண்ண விரும்புகின்றனர் .குழந்தைகள் அனைவருக்கும் சத்துள்ள கஞ்சி வகைகளையே கொடுத்து வளர்க்க வேண்டும் . அப்போதுதான் உடல் நலத்தோடு அவர்கள் வளர்ச்சி நன்றாக இருக்கும் .

அவர்களுக்கு உதவும் பொருட்டு , தோழிகள் அனைவரும் உங்களுக்குத் தெரிந்த அனைத்துக் கஞ்சி வகைகளையும் இங்கே தெரிவித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் ..

ஒருவர் சொன்ன அதே தலைப்பில் மற்றொருவரும் சொல்லலாம் . தடையேதுமில்லை .


ஒரே ஒரு விண்ணப்பம் :

இங்கே சொல்லப்படும் ரெஸிபிக்கள் வேறு எங்கிருந்தும் copy paste செய்யப்படாமல் நீங்களே சொந்தமாக எழுதியதாக இருத்தல் வேண்டும் .
 

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,305
Likes
3,016
Location
Singapore
#4
Hi na yenada son ku kodukira kanji enga solren. Actually it's like கூழ்.
ராகி 5 தேக்கரண்டி இரவில் ஊற வைத்து காலை நன்றாக கலைந்து விட்டு அரைகவும்.
இதை பிழிந்து பால் எடுத்து நன்றாக காய்ச்சவும்.
உப்பு சேர்த்து கொல்லவும்.
காய்சும் போது நன்றாக கிளறி விட்டு இறக்கவும்..
 

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
740
Likes
2,081
Location
Chennai
#5
Thanks for tagging me Jayanthi Mam! Definitely will come back soon with my recipes!
 

diyaa

Citizen's of Penmai
Joined
Oct 3, 2014
Messages
625
Likes
2,525
Location
Secunderabad
#6
Hi Aunty

கஞ்சி எங்க அம்மாவும் பண்ணுவாங்க
ரெம்ப ருசியா இருக்கும்

ரெண்டு வகை கஞ்சி பண்ணுவாங்க

1. இது காய்ச்சல் வந்தா பண்ணி தருவாங்க

அரிசியை வறுத்து ஒடச்சு தண்ணீர்விட்டு அடுப்பில வச்சு காச்சி தருவாங்க


2 .பால் கஞ்சி என்னோட பேவரிட்


சாப்பாட்டு அரிசி 1 டம்ளர்

தேங்காய் ஒரு மூடி துருவி பால் எடுத்துக்கொள்ளவும்

உப்பு

அரிசியை முதல்ல கொஞ்ச நேரம் ஊற வச்சுக்கணும்

பின் ஒரு டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பும் போட்டு குக்கர்ல நல்ல குழைய வேக வைக்கவும்.

பின் அதில் தேங்காய் பால் சேர்த்து அடுப்பில வச்சு கிளறி இறக்கவும் எத்தனை தேங்காய் பால் வேணும்னாலும் சேர்க்கலாம்

இது சாப்பிட செம டேஸ்ட் டா இருக்கும்

எங்க பக்கத்து வீட்டி ஆன்ட்டி சாதம் வேகும் போது உரித்த பூண்டு நெறைய போட்டு குக்கர்ல வைப்பாங்க

எங்களுக்கு பூண்டு பிடிக்கதனால போட மாட்டோம்

இதுல உடம்புக்கு என்ன சக்தின்னு தெரியாது ஆனா சாப்பிட ரெம்ப ருசியா இருக்கும்.

இதுக்கு தேங்காய் புளி உளுந்து வறுத்து அரைச்ச துவையல் செம காம்பினேஷன்.
 

kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,422
Likes
16,830
Location
Singapore
#7

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,337
Likes
25,837
Location
Sri Lanka
#9
உப்பு கஞ்சி

தீட்டல் பச்சை அரிசி(தவிடு நீக்கிய பச்சை அரிசி) - 1 கப்
வெந்தயம் - 1/4 தே. கரண்டி
பூண்டு - 3 பல்
தேங்காய்ப் பால் - 2 கப்
உப்பு தேவையான அளவு

தீட்டல் பச்சை அரிசி, வெந்தயம், சிறிது சிறிதாக நறுக்கிய பூண்டு இவற்றை நீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
வெந்ததும் தேங்காய்ப் பால், மீண்டும் சிறிதளவு உப்புசேர்த்து கொதிக்கவைத்து இறக்கி பரிமாறவும்.

உழுத்தங் கஞ்சி

உப்பு கஞ்சி செய்முறையில், தேங்காய் பால் சேர்க்கும் போது 1/4 கப் வறுத்த உழுத்தம் மாவும் சேர்க்க வேண்டும்.

முடக்கத்தான் கஞ்சி

உப்பு கஞ்சி செய்முறையில், தேங்காய்ப் பால் சேர்க்கும் போது இரண்டு கைப்பிடி கழுவிய முடக்கத்தான் இலைகளை சிறிதாக நறுக்கி சேர்க்கவேண்டும்.


நன்றி ஜயந்தி :). எப்படி இருக்கிறீங்க.... ரொம்ப நாளைக்கப்புறம் பார்க்கிறேன் :).
 

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
740
Likes
2,081
Location
Chennai
#10
இது நான் ஏற்கனவே பெண்மைல போஸ்ட் பண்ணினதுதான்!

சத்து மாவு கஞ்சி

தேவையான பொருட்கள்:

முளைகட்டி காய வைத்து வறுக்க வேண்டியவை:

கோதுமை - 1/2 kg
கேழ்வரகு - 1/2 kg
கருப்பு கொண்டைக்கடலை - 1/4 kg
பச்சை பயறு - 1/4 kg
சோயா பீன்ஸ் - 100 g

அப்படியே வறுக்க வேண்டியவை:

ஜவ்வரிசி - 100 g
பொட்டுக்கடலை - 100 g
புழுங்கலரிசி / சிகப்பரிசி - 50 g
மக்கா சோளம் - 50 g
பார்லி - 100 g
முந்திரி - 25 g
பாதாம் - 50 g
ஏலக்காய் - 10 nos

செய்முறை:

மேற்சொன்ன எல்லாவற்றையும் கூறியள்ளபடி எண்ணை விடாமல் வறுத்து ஆறவிட்டு மாவு மில்லில் கொடுத்து நைசான மாவாக அரைத்து காற்றுப் புகாத டப்பாவில் இட்டு பத்திரப் படுத்தவும்.


ஒரு ஸ்பூன் மாவுக்கு இரண்டு தம்ளர் தண்ணீர் என்ற அளவில் அல்லது உங்கள் விருப்பப்படி கஞ்சி தயாரிக்கலாம்.

உப்பு அல்லது நாட்டுச் சக்கரை சேர்த்து விரும்பியபடி பருகலாம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.