Precautions - while travelling to doctor appointments

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#1
மருத்துவ பரிசோதனைக்கு பயணம் செய்யும் பொழுது எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பேருந்து, இரயிலில் செல்லலாமா ?
பேருந்து, இரயில் போன்ற பொது ஊர்திகளில் செல்லும் பொழுது கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் கொஞ்சம் கவனமாக எச்சரிகையாக இருந்தால் எளிதாக பயணம் செய்யலாம்.

  • உங்கள் டாக்டர் அப்போயன்ட்மென்ட் எல்லோரும் வேலைக்கு செல்லும் நேரத்தில் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.
  • நீங்கள் பேருந்து/இரயில் இல் செல்லும் பொழுது, பேருந்தில் உள்ளவர்களிடம் இருக்காய் கேட்டு அமர்ந்து கொள்ளுங்கள். அதை எப்படி கேட்பது என்று தயங்க வேண்டாம்.
  • பெண்களுக்கான பகுதியில் இடம் இருக்கிறதா என்றும் பாருங்கள்.
  • கையில் கிருமி நாசினி(hand sanitizer ) அல்லது antibacterial wipes வைத்து கொள்ளுங்கள். உங்களை infectionil இருந்து தவிர்க்க உதவும்.
  • வேகமா இல்லமால் கொஞ்சம் மெதுவாகவே பேருந்தை விட்டு ஏற இறங்க முயற்சி செய்யுங்கள்.
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#2
ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்க்ஷாவில் செல்லும் பொழுது:


  • உங்கள் துப்பட்டாவையோ அல்லது மெல்லிய கை குட்டையோ வைத்து மூக்கை மூடி கொள்ளுங்கள். வெளியே உள்ள மாசு காற்றை அப்படியே சுவாசிக்க தவிர்க்கவும்.
  • நீங்கள் செல்லும் வாகன ஓட்டுனரை கொஞ்சம் மெதுவாக செல்ல சொல்லுங்கள். மேடு பள்ளம் மற்றும் வேக தடையை பார்த்து செல்லுமாறு கேட்டு கொள்ளவும்.
  • நீங்க செல்லும் வாகனத்தில் உள்ள பிடி கம்பியை கட்டாயமாக பிடித்து கொள்ளவும்.
  • உங்களால் செலவு செய்ய முடிந்தால், கால் டாக்சி யில் சென்று வரலாம்.
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#3
நீங்களே கார் ஒட்டிசெல்வதற்க்கு எந்த தடையும் இல்லை. ஆனால் சில முனெச்சரிக்கை வகைகளை பின்பற்ற வேண்டும்.

  • எப்பொழுதும், சீட் பெல்ட் அணித்து தான் காரில் பயணம் செய்ய வேண்டும். சீட் பெல்ட் உங்களையும் உங்கள் குழந்தையையும் சாலையில் இருக்கும், குண்டு குழியில் இருந்தும், திடீர் என்று போடும் ப்ரேக்கில் இருந்தும் காப்பாற்றும்,
  • நீங்கள் டாக்டரிடம் செல்லும் பொழுது உங்களுடன் உங்கள் நண்பரையோ அல்லது உங்கள் உறவினரையோ துணைக்கு அழைத்து செல்லுதல் நல்லது. ஏன் என்றால் ஒரு வேலை உங்களுக்கு பாதி வழியிலோ அல்லது திரும்பி வரும்போதோ வாகனம் ஓட்ட முடியவில்லை என்றால் உதவிக்கு ஒரு நபர் பக்கத்தில் இருப்பார்.
  • உங்கள் காரில் எக்ஸ்ட்ரா கார் டயர் இருக்கிறதா என்று பார்த்து கொள்ளவும்.
  • எப்பொழுதுமே சாலையில் உள்ள நிர்ணயிக்க பட்ட வேகத்திலே ஒட்டவும். சாலை விதிகளை கடைபிடிக்கவும்.
  • சரியாக பராமரிக்க படாத சாலையையும், போக்குவரத்து அதிகமாக உள்ள சாலையையும் தவிர்க்கவும். அதனால் கிளம்புவதற்கு முன் போக்குவரத்து செய்திகளை கேட்டு கொண்டு செல்லவும.
எப்பொழும் வெளியில் கிளம்பும் பொழுது உங்களிடம், உங்கள் மருத்துவ கோப்புகளை எடுத்து கொண்டே செல்லவும். திடீரென்று மருத்துவ உதவி தேவை பட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ அது உதவியாக இருக்கும். அந்த கோப்பில், உங்கள் மருத்துவ ஹிஸ்டரி, தொடர்பு கொள்ள வேண்டிய முக்கியமான நபர் அதாவது உங்கள் கணவரோ அல்லது அவசர தேவையின் பொழுது கூப்பிட கூடிய நபரின் தொலைபேசி ஏன் கட்டாயம் இருக்க வேண்டும் மற்றும் உங்கள் மருத்துவ மனையின் தொடர்பு விவரங்களும் கட்டாயம் இருக்க வேண்டும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.