Pregnancy pain symptoms

Gathya

Friends's of Penmai
Joined
Mar 15, 2014
Messages
213
Likes
603
Location
Krishnagiri
#1
கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவ வலி ஏற்படப் போவதற்கான அறிகுறிகள்:



கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவ வலி ஏற்படப் போகிறது என்றால் அதற்கு சில அறிகுறிகள் உண்டு. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே மருத்துவமனைக்கு சென்று விடலாம்.

அவை:

  • பெண்களுக்கு பிரசவ வலி வருவதற்கான அறிகுறிகளில் முக்கியமானது முதுகு வலி தான். எப்போது முதுகு வலி சாதாரணமாக வரும் வலியை விட அதிகமாக வருகிறதோ, அதை வைத்து பிரசவ வலி வரப்போவதை அறிந்து கொள்ளலாம்.
  • பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது குழந்தையின் வளர்ச்சியால் கருப்பை விரிவடையும். அதுவே குழந்தை வெளியே வரப் போகிறதென்றால், அதாவது பிரசவ வலி ஆரம்பிக்கப் போகிறது என்றால், அந்த கருப்பை சுருங்குவதற்கு ஆரம்பமாகும். அவ்வாறு கருப்பை சுருங்கும்போது எந்த ஒரு வலியும் இருக்காது. ஆனால் நன்கு கூர்ந்து கவனித்தால் கருப்பை சுருங்குவதை அறியலாம். ஆகவே அதை வைத்து நன்கு அறிந்து கொள்ளலாம்.
  • கருப்பை வாய் குழாயிலிருந்து அதிகமான அளவில் சளி போன்ற திரவம் வெளியேற ஆரம்பிக்கும். அவ்வாறு வருவதைப் போல் தெரிந்தால் அதை வைத்தும் அறிந்து கொள்ளலாம்.
  • சில நேரம் கருப்பையிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பிக்கும். அவ்வாறு நிகழ்ந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
  • ஏழாவது மாதத்திற்கு மேல் அடிக்கடி சிறுநீர் அதிகமாக வருவது போல் இருக்கும். ஆனால் அதுவே பிரசவம் நிகழப் போகிறது என்றால், அப்போது சற்று வித்தியாசமாக உணர்வீர்கள். சொல்லப்போனால் வயிற்றில் ஒன்றுமே இருக்காது, இருப்பினும் அவசரம் என்பது போல் இருக்கும். ஏனெனில் அது வயிற்றில் இருக்கும் குழந்தை வெளிய வருவதற்கான ஒரு அறிகுறி.
  • ஏழாம் மாதத்திலிருந்து வயிற்றிலிருக்கும் குழந்தையின் அசைவை நன்கு உணர முடியும். ஆனால் பிரசவ வலி வருவதற்கு முன், குழந்தை அசைவு குறைந்து விடும். ஏனெனில், அப்போது குழந்தை வெளியே வருவதற்கு சரியான ஒரு நிலை அமைந்து இருப்பதே காரணம்.

மேற்கூறியவையே பிரசவ வலி வருவதற்கான அறிகுறிகள். ஆகவே இந்த மாதிரியான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனே நீங்கள் மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

Moderator Note:

This Article has been published in
Penmai eMagazine July 2014. You Can download & Read the magazines HERE.

 

Attachments

Last edited by a moderator:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Hi Gathya, Very useful and essential information you have shared. thank you!
 

Gathya

Friends's of Penmai
Joined
Mar 15, 2014
Messages
213
Likes
603
Location
Krishnagiri
#3
Thank you Sumitra sister.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#4
Thanks for the Very useful share Gathya.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.