Preparing the Children to go to School after the Vacation-பள்ளிக்குப் போகலாம் கைவீசு!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பள்ளிக்குப் போகலாம் கைவீசு!
ஆர்த்தி

மனநல ஆலோசகர்
ரண்டு மாத விடுமுறை முடிந்துவிட்டது. ஜாலியாகவும் சோம்பலாகவும் கழித்த விடுமுறை நாட்களுக்குப் பிறகு குழந்தைகளை எப்படி பள்ளிக்குத் தயார்ப்படுத்துவது, பள்ளி வாழ்க்கைமுறைக்கு எப்படிப் பழக்குவது? ஆலோசனை தருகிறார் மனநல ஆலோசகர் ஆர்த்தி.


தூக்கத்தைச் சீரமைத்தல்
பிள்ளைகள் தூங்கும் நேரமும், தூங்கி எழும் நேரமும் ஒரு வரைமுறையில் இல்லாமல் இருந்திருக்கும். பள்ளி திறக்கும் ஒரு வாரத்துக்கு முன்பே, முன் தூங்கி முன் எழும் பழக்கத்துக்கு அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். சீக்கிரம் எழுந்து, ரிலாக்ஸ் செய்த பின், பள்ளிக்குத் தயாராவது போன்ற அட்டவணைக்குக் குழந்தைகளைத் தயார்ப்படுத்தலாம். பள்ளி தொடங்குவதற்கு 10 நிமிடங்கள் முன்பே, வகுப்பு அறையில் இருந்தால், அன்றைய தினம் மனஅழுத்தம் இல்லாமல் சுமுகமாகத் தொடங்கும்.

சீரான உணவு இடைவேளை
காலை மற்றும் மதிய உணவைச் சரியான நேரத்துக்குக் கொடுத்துப் பழக்க வேண்டும். இதனால், பசிக்கவில்லை என்று குழந்தைகள் காலை நேர உணவைத் தவிர்ப்பது, மதியம் சாப்பிடாமல் தூக்கிக் கொட்டுவது தடுக்கப்படும். காலை உணவைக் கட்டாயமாக்குவது, குழந்தைகளின் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும். அரை மணி மதிய உணவு வேளையில், நன்றாக மென்று தின்ன அறிவுறுத்தலாம். வேளைக்குத் தரும் உணவுகள் சமச்சீரானதாக இருந்தால்தான், அன்றைய பாடத்தைப் பிள்ளைகளால் கவனிக்க முடியும்.

கழிப்பறைப் பழக்கம்
குழந்தைகள் சிறுநீர், மலம் வந்தாலும் அவற்றைக் கழிக்காமல் அடக்கிவைப்பதோடு, வெளியில் சொல்லவும் கூச்சப்படுவர். ‘இது இயற்கைக் கழிவு. உடல் இயங்குதலின் சுழற்சிமுறை. இதனால், சிறுநீர்த் தொற்று, நோய்கள் எல்லாம் வரும்’ எனச் சொல்லித்தரலாம். இயற்கைக் கழிவை வெளியேற்ற, ஆசிரியரிடம் தயக்கமின்றி கேட்கச் சொல்லித்தர வேண்டும். கழிப்பறைக்குச் சென்றால் தண்ணீரை நன்றாக ஊற்றுவது, தன்னைச் சுத்தம் செய்துகொள்வது போன்றவற்றை, குழந்தைகளுக்கு முன்பே பழக்கிவிடலாம்.

உணர்வுபூர்வமானப் புரிதல்
கல்வி, ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். மதிப்பெண்கள் என்ற முறை, குழந்தைகளின் அறிவுத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தாது. அதனால், பிள்ளைகள் முதல் ரேங்க் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் எந்த அளவுக்கு அவர்களின் சிந்தனைகள் வளர்கின்றன, அறிவு மேம்படுகிறது என்பதே முக்கியம். பள்ளிக்குப் போக அடம்பிடிக்கும் பிள்ளைகளிடம், ‘இந்தப் பள்ளிக்கூடம் உன் அறிவை மேம்படுத்துவதற்கான பயிற்சிக்கூடம் மட்டுமே. உன் திறமையை அங்கீகரிக்கும் இடம் இல்லை’ என்று புரியவைக்கலாம். ‘உன்னால் முடிந்ததைக் கவனி, எழுது, கற்றுக்கொள், மதிப்பெண்களைப் பற்றி கவலைப்படாதே’ என்ற நேர்மறைச் சிந்தனைகளுடன் வளர்க்கலாம். இதனால், பள்ளியின் மேல் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், பயம் விலகும்.


விரல் வலிக்க எழுத வேண்டாம்
பென்சிலைப் பிடித்து எழுதுவதற்கான சரியான வயது ஐந்து. பள்ளியில் தரும் வீட்டுப் பாடத்துடன் சேர்த்து, பெற்றோரும் குழந்தையை எழுதவைத்துக் கஷ்டப் படுத்தக் கூடாது. பெரிய பிள்ளைகளுக்கே, வேகமாக எழுதுவதற்குக் கால அவகாசம் தேவை. பள்ளி தொடங்கியவுடன் ‘படி, எழுது’ என்று சொல்லாமல், பொறுமையாக அவர்கள் பின்பற்றுவதற்கான நேரத்தை ஆசிரியரும் பெற்றோரும் தர வேண்டும்.

புதிய சூழல்... புதிய அனுபவம்
‘புதிய நட்பும் சூழலும் உருவாகும், புதுப் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும், தனித்திறமையை வளர்த்துக் கொள்ளலாம்’ என்பனபோன்ற எண்ணங்களை மனதில் பதிய வைக்கலாம். பிள்ளைகளுக்கு ஆர்வமும் உற்சாகமும் ஏற்படுகிற மாதிரியான எண்ணங்களை விதைக்கலாம். முதன்முதலாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தையின் பெற்றோர், மனதளவில் பள்ளிக்குச் செல்லத் தயார்ப்படுத்த வேண்டும். அதாவது, சாப்பிடும்முறை, சீரான தூக்கம், சுகாதாரம், தனிமையை எதிர்கொள்ளுதல் போன்ற அனைத்துக்கும் குழந்தையும் பெற்றோரும் சேர்ந்து தயாராகுவது நல்லது. பள்ளியின் ஆசிரியருடன் குழந்தையும் பெற்றோரும் நட்புடன் பழகுவது நல்லது. குழந்தைக்கு இருக்கும் பிரிவு பயம் (Seperation anxiety) உள்ளிட்ட குழப்பங்களைப் போக்கிய பின்னரே, பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ‘உன்னுடன் வகுப்பில் இருக்கப்போகும் பிள்ளைகளுக்கும் இதுதான் முதல் நாள். அவர்களுடன் நன்றாகப் பழகி நண்பராகி விடு’ எனப் புரியவைக்கலாம்.

புதுசு தரும் உற்சாகம்
சீருடை, காலணி, பேக், லஞ்ச் பாக்ஸ், நோட் புக்ஸ் போன்ற பொருட்களைப் புதிதாக வாங்கிக்கொடுத்து உற்சாகப்படுத்தலாம். பள்ளிக்குச் சென்றாலும் ஞாயிறு அன்று வெளி இடங்களுக்குச் செல்லலாம் என, ரிலாக்ஸ் தருணங்களையும் சொல்லலாம். பள்ளிக்குச் சென்றதும், ‘அங்கு என்ன நடந்தது? யார் என்ன சொல்லித்தந்தார்கள்’ போன்றவற்றை ஒரு கையேட்டில் பதிவு செய்யச் சொல்லலாம். அதனை, பெற்றோர் தினமும் வாசிக்க வேண்டும். பெற்றோர் தரும் லஞ்ச் பாக்ஸ் பையினுள், ‘ஐ மிஸ் யூ, உனக்குப் பிடித்த உணவு இது. நன்றாகச் சாப்பிடு, இதே நேரத்தில் நானும் உன்னுடன் சாப்பிடுகிறேன்’ என எழுதிவைக்கலாம். இதனால், குழந்தைகள் உற்சாகம் அடைவதுடன், உணவையையும் வீணாக்காமல் சாப்பிடுவர்.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.