priyachandran`s poems

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#1
காவியமோ! கற்பனையோ?
நீ காவியம் படைக்க ஆசைப்படுகிறாய்
ஆனால் நான் உன்னை
காவியத்தின் தலைவனாக்க விரும்புகிறேன்!

நீ படைக்கும் காவியத்தை விட
இந்த உலகம் உனக்காக
படைக்கும் காவியத்தை காண விரும்புகிறாள்
இந்த ஆரூயிர் தோழி..!!
 

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#2
இதயம் என்ற காதலன்
கண் என்ற காதலியிடம்.....
நான்
சிரிக்கும் போது
சிரித்த நீ - இன்று நான்
அழும்போது மட்டும்
அழ மறுப்பது ஏனடியோ..!!
கண்கள் பொய் பேசுமா??
இல்லை நான்(இதயம்)
உணர்ந்தது பொய்யா..!!
 

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#3
உன் உள்ளத்தின் வலியை
உணர்த்துவது - உன் கண்கள்
பேசும் பாஷையா?? இல்லை

எழுத்து வடிவத்தில் வரும்- உன் விரல்கள் பேசும் பாஷையா??இல்லை


ஒலி வடிவத்தில் வரும்- உன்
இதழ்கள் பேசும் பாஷையா!! இல்லை


இவைஅனைத்தும் தேவையில்லை என்
மௌன மொழியே உனக்கு
பதில் என்கிறாயா!! நீ என் அருகில்
இருந்தால் அந்த மௌன பாஷை போதுமே .....
 

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#4
என் வார்த்தைகள்....
உன்னை மட்டும்
காயப்படுத்தவில்லை ..என்னையும்தான்
நீ தான் அதே மலர்களை
மாலையாக தொடுத்து என்
இதயத்தில் அம்பு எய்துவிட்டாயே!! நான் என்னை அறியாமல்
காயப்படுத்தினேன்- ஆனால்
நீயோ அது என் உயிர்பை
தொலைத்துவிடும் என்று
தெரிந்தும் காயபடுத்தினாய்.. ஆனாலும் - என் மனம்
உன்னை தேடுகிறது!!

உன்னிடம் நட்பை யாசிக்க எனக்கு விருப்பமில்லை
உன்னை நேசிப்பேன் இறுதிவரை ....
 

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#5
என் கேள்விகளில் நீ! [SUB][SUP]உன் பதில்களில் நான்.[/SUP][/SUB] உன் கேள்விகளை வைத்து
உன்னை எடைப்போடுவது அறியாமல்
என் பதில்களை வைத்து
என்னை எடைப்போடுகிறாய் நீ !!
 
Last edited:

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#6
என் மனதை படித்தவளே...... என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவளே ! உன்னை அழைக்கின்றேன் என் உதடுகளால் அல்ல இதயத்தால் !


உன்னை வர்ணிக்கின்றேன் எழுத்துகளால் அல்ல கண்களால் ! உன்னை என் மனதில் கைதுசெய்த என்னால் வார்த்தைகளில் கைதுசெய்ய இயலவில்லை -இருந்தும் முயல்கிறேன்! நீ தாயாக அன்பு காட்டிய போது .... நான் உன் குழந்தையாகிறேன்!

நீ தந்தையாக திட்டி வழிநடத்தும் போது நான் என் அகங்காரத்தை (ஈகோ) கைவிடுகிறேன் ! நீ என் தோழியாக பேசும்போது...... நான் உன் தோழனாகிறேன் ! நீ என் காதலியாக இருந்த போது..... நான் உன்னவனாகிறேன் ! நீ என் மனைவியான பின்பு ..... நான் உனக்கு அனைத்துமாகிறேன் !!
 

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#7
friends,
I am posting my love poem in english . Its my first try.
love has no Grammar and so if there is any grammatical mistake in my poem pls forgive me. waiting for ur comments....


why it is? Do anyone know?


I am unable to express this feeling in terms and at the same time
I am unable to conceal this feeling...
I asked myself why it is..?Do anyone know?

we are not strangers but
we are behaving like strangers..
I asked myself why it is..?Do anyone know?

I got excited when his eyes started looking at me
I got more excited when he read my eyes silently...
I got excited when he silently crossed me but
I didnt stop him or speak..
we speak everything but not what we feel...
I am unable to see his eyes continously but
My eyes captured him even in a crowd.
I asked myself why it is..?Do anyone know?


If anyone ask what we spoke,
There is no answer in me ...
Although I am recalling my sweet nothings..
My lips are making sounds happily
What am I doing? Am I laughing....
Only smile occupies my lips
I asked myself why it is? Do anyone know?

More than his lips his eyes spoke..
More than his eyes his soul spoke
More than his soul his touch spoke
More than spoken words his unspoken words express his feeling....

Now only I understand what is the feeling?
What changes me?
What makes me restless?
Why I am speaking and smiling lonely?
Why I am in a separate world?
Why I feel safe ,trust when he stands beside me?

That is love....
Now I feel his immense love and
I completely submissive (not to him) to his love...!!
 

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#8
தனிமை ...
மனசாட்சியை உறங்க வைக்கும் சில நேரங்களில்
மனசாட்சியை உணர்த்தும் சில நேரங்களில்

விடையில்லா கேள்விகளுக்கு பதில் தரும் சில நேரங்களில்

விடையுள்ள வினாக்களுக்கு மறு வினா தொடுக்கும் சில நேரங்களில்

புரியாத புதிராக குழப்பம் தரும் சில நேரங்களில்

புதிரின் முடிச்சை அவிழ்த்து தெளிவு கிடைக்கும் சில நேரங்களில்

இழப்பை எண்ணி ஏக்கம் கொள்ளும் தனிமை சில நேரம்
இருப்பை எண்ணி கலக்கம் கொள்ளும் தனிமை சில நேரம்

சில நேரம்
தற்கொலை தூண்டும் தனிமை
தற்காப்பும் தரும் தனிமை

சில நேரம்
காதல் கொள்ளச் சொல்லும் தனிமை
உயிரோடு உள்ளமும் சேரும் தனிமை

பயம் தரும் தனிமை -குழந்தை பருவம்
ரசிக்க தூண்டும் தனிமை- காதல் பருவம்

பிறப்பிலே தனிமை கொடுமை!
முதுமையில் தனிமை கொடுதிலும் கொடிது !

சிலர்
உன்னை தனிமைப்படுத்துகிறார்கள் என்றால் பலர் உன்னை அரவணைக்க காத்திருக்கிறார்கள் !
தனிமை உலகத்தை விட்டு, பறந்து கிடக்கும் உலகத்தை பார் !
வானத்தை போல் உன் மனதை விசாலமாக்கு !

சார்ந்து நில் ! தனித்து தெரி !

தனிமையை தனிமைப்படுத்த கற்றுக்கொள் !
 
Last edited:

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#9
மனமே மனமே வியன்குகிறேன் உன்னை எண்ணி !


புது புது பிறவி எடுக்கும் மனமே
என் அடையாளம் தொலைந்தது ஏனோ !


அலசுகிறேன் என்னையே எனக்குள்
தேடுகிறேன் எனக்குள் உன்னை !
தேடிய மனதை அலைபாய வைத்தாய்....


மெழுகாய் உருகுகிறேன் மனமே
அணையாத ஜோதியாய் என்னுள் நீ


என் கேள்விகள் சாகாது மனமே
உன் பதில்கள் பிறக்காதவரை....


அலைபாயும் மனமும் உன்னுள்
இளைபாறுதல் எப்பொழுது?


இளைப்பாறும் மனமும்
உன்னுள் நிலைத்திருப்பது எப்பொழுது?


பகலில் மகிழ்ச்சியாக வாழ தெரிந்த மனமே,
இரவில் ஏன் மாறுகிறாய்!


இரவில் சோகத்தில் வாழ தெரிந்த மனமே,
பகலில் வாழ ஏன் மறுக்கிறாய் !


ஜோதியை என் மனதினுள் ஏற்றியவனே
அணையும் முன் வருவாயோ!


புது பிறவி தேவையில்லை மனமே
என் அடையாளத்தை எனக்கு தருவாயா!


என் கேள்விகள் சாக
உன் பதில்கள் பிறக்க வருவாயா..


மனமே! மனமே! நான் உறையும் முன்னே
எனக்குள் உறைவையா ..!!
 

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#10
என்னை கொண்டாட பிறந்தவனே ...

உன்னை சிறு தளிர்

என்று நினைத்தேன் - ஆனால் நீயோ
நிழல் தரும் மரமானாய் ....

தாய் பறவையின் சிறகில்

அடைக்கலம் அடையும்
சிறு பறவையாக நீ - ஆனால்
அடைக்கலம் கிடைத்ததோ தாய்பறவைக்கு ....


என்னை எனக்கே அறிமுகபடுத்தியவனே ...

என்னை எனக்குள் புதைத்தவனும் நீயே ...

தாயின் கருவறை புனிதம்தான் ..

நட்பும் புனிதம்தான் ..
காதலும் புனிதம்தான் ...

இதில் எது என்று பகுத்து பார்க்க விருப்பம்மில்லை ...

உன்னால் பகுத்து அறியமுடிந்தால்
பகுத்து பார் .

என்றும் "உண்மையானவளாக"

என் உயிர் "பிரியும்வரை" - உன்னிடம்
"பிரியாவிடை" கொடுக்க விரும்பாத
உன் "பிரியமானவள்"
என்றென்றும் "ப்ரியமுடன்" ....

 
Thread starter Similar threads Forum Replies Date
K Poems 3
B Poems 2
R Poems 18
saidevo Poems 17
priyachandran Poems 21

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.