Problems for not conceiving

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=3]கருத்தரிப்பது கடினம் என்ற நிலைக்கு சில அறிகுறிகள்[/h]பொதுவாக கர்ப்பமாவதற்கு 20-25 தான் சரியான வயது. ஆனால் தற்போது நிறைய பெண்கள், எதிர்காலத்தை மனதில் கொண்டு, வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின், குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பர்.
இதனாலேயே பல பெண்கள் 30 வயதுகளில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்தால், இறுதி மாதவிடாய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டு, பின் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். மேலும் தற்போது நிறைய பெண்களுக்கு சீக்கிரமே இறுதி மாதவிடாயானது ஏற்படுவதால், விரைவில் திருமணம் செய்து, கருத்தரிப்பதே சிறந்தது.

இறுதி மாதவிடாய் நெருங்கி, கருத்தரிப்பது கடினம் என்ற நிலை ஏற்படுவதற்கான சில அறிகுறிகளைப் பார்ப்போம்.
• இறுதி மாதவிடாய் என்பதற்கான முதல் அறிகுறி ஹாட் ஃப்ளாஷ் (Hot Flash) எனப்படும் உடலில் ஏற்படும் ஒருவித வெப்பமாகும். இந்த நிலை வந்தால், வயதாகிவிட்டது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்பதற்கான ஒரு அறிகுறியாகும். இந்த நிலை வந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.

• 30-35 வயது வரை இனப்பெருக்க உறுப்பான எந்த ஒரு வேலையும் செய்யாவிட்டால், கருப்பையில் நார்த்திசுக் கட்டிகள் வளர ஆரம்பிக்கும். இதனால் கருப்பையின் உள்ளே விந்தணு செல்வதில் தடை ஏற்பட்டு, கருத்தரிப்பதில் சிரமம் ஏற்படும்.
• ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இறுதி மாதவிடாய் நெருங்கினால், சில சமயங்களில் அதிக சந்தோஷத்துடனும், சில நேரங்களில் அதிக மன வருத்ததுடன் இருப்பது போன்றும் உணர நேரிடும். இத்தகைய நிலை பொதுவாக மாதவிடாய் ஏற்படும் முன்பு ஏற்படுவது சாதாரணம் தான். இருப்பினும் இறுதி மாதவிடாய் என்றால், இது இன்னும் வேறு மாதிரியாக இருக்கும்.

• முறையற்ற மாதவிடாய் சுழற்சி சில இளம் பெண்கள் முறையற்ற மாதவிடாயினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதிலும் 34 வயது வரை சீரான மாதவிடாய் சுழற்சியையும், அதற்கு பின் முறையற்ற மாதவிடாய் சுழற்சியும் இருந்தால், கவலைப்பட வேண்டிய நேரம் தான்.

• உடலுறவில் ஆர்வமின்மை எப்போது உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போகிறதோ, அதுவும் இறுதி மாதவிடாய்க்கான நேரம் நெருங்கிவிட்டது என்பதற்கான அறிகுறியே.

• எடை அதிகரித்தல் 20-30 வயதுகளில் உடல் எடை அதிகரிப்பது சாதாரணமானது தான். ஆனால் அதற்கு மேல், எதுவும் செய்யாமல் உடல் எடையானது தானாக அதிகரித்தால், அது இறுதி மாதவிடாய் வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும்.
• தைராய்டு தைராய்டு சுரப்பியானது சரியான செயல்படாததால், தற்போது பிரச்சனையின்றி கர்ப்பமாவது என்பது கஷ்டமாகிறது. ஏனெனில் தைராய்டின் போது எப்போது வேண்டுமானாலும் இரத்தப்போக்கு ஏற்படுவதால், எதையும் சரியாக கண்காணிக்க முடியாத நிலை ஏற்படுவதோடு, சில சமயங்களில் தைராய்டு இருந்து கொண்டே கர்ப்பமானால், குழந்தை பிறக்கும் போது மனநிலை பாதிக்கப்பட்டு பிறக்கும்
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: Prolapsed Uterus - கருப்பை இறக்கம்

[h=3]ஆண், பெண் மலட்டுத்தன்மை பற்றிய ஒரு விரிவான பார்வை[/h]மலட்டுத் தன்மை என்றால் அடிப்படையில் கர்ப்பம் தரித்தலில் இயலாமை ஆகும்.

ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதையும் மலட்டுத் தன்மை என்று கூறலாம்.

ஒரு வருடம் முழுவதும் முயன்றும் கர்ப்பம் ஆகவில்லை என்றால் அதனை மலட்டுத் தன்மை என்று சொல்லலாம். அதே போல் 35 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 6 மாதங்கள் முயன்றும் கர்ப்பமாகவில்லை என்றால், அதையும் கூட மலட்டுத் தன்மை என சொல்லலாம்.

ஒரு பெண் கரு தரித்தாலும் கூட, அவளால் கருவை சுமக்க முடியவில்லை என்றாலும் அதனை மலட்டுத் தன்மை என கூறலாம். மலட்டுத் தன்மை என்றால் பிரச்சனையானது பெண்களிடம் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
ஆண் பெண் என இருவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம். இப்பிரச்சனை மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஏற்படுகிறது. மற்றொரு பங்கு ஆண்களுக்கு ஏற்படுகிறது. கடைசி பங்கு ஆண் பெண் என இரண்டு பேருக்கும் தெரியாத காரணங்களால் ஏற்படுகிறது. மலட்டுத் தன்மையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்….

* மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் அவசியம். அது கர்ப்பம் தரிக்க சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுக்கும். குழந்தை பெற்றெடுக்க திட்டம் போட்டிருந்தால், இது முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி நிதானமாக இருங்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். மேலும் நல்ல புத்தகங்களை படியுங்கள்.

* மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கு தோராயமாக 15%-18% காரணமாக இருப்பது குழாயில் நோய்கள் இருப்பதால் தான். ஃபாலோபியன் குழலில் ஏற்படும் அடைப்பு தான் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம். அதற்கு சில சோதனைகள் செய்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* வயதுக்கும் மலட்டுத் தன்மைக்கும் நேரடி தொடர்பு உள்ளது. உடல் வலிமை, எதிர்ப்பு சக்தி, தடுப்பாற்றல் மற்றும் ஹார்மோன் அளவுகள் எல்லாம் வாலிப வயதில் உச்சத்தில் இருக்கும். அதனால் இதனை முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் உடலின் வலிமையானது வயது ஏற ஏற குறையத் தொடங்கும். அதனால் மலட்டுத் தன்மை சம்பந்தமான சிகிச்சையை சீக்கிரம் ஆரம்பிப்பது அவசியம்.

* நல்ல தூக்கம் இல்லாமல் போவதற்கும், மலட்டுத் தன்மைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது. அடிக்கடி பார்ட்டிக்கு சென்று தூக்கத்தை இழப்பவரா? கவனமாக இருங்கள். இரவு வேளை நீண்ட நேரம் கண் விழித்திருந்தால், ஹார்மோன் அளவுகளில் பல அடிப்படை மாற்றங்கள் ஏற்படும்.அதனால் அது மலட்டுத் தன்மையை ஊக்குவிக்கும். போதிய தூக்கம் இல்லாமல் இருப்பவர்கள் பல உடல்நல கோளாறுகளை சந்திக்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவையில் முக்கியமான ஒன்று தான் மலட்டுத் தன்மை.

இது மலட்டுத் தன்மைக்கு உறுதுணையாக, உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையை பாதிக்கும். மலட்டுத் தன்மையை நீக்க அதன் காரணத்தை முதலில் கண்டறிந்து, பின் அதற்கான சிகிச்சைகளை முடிவு செய்ய வேண்டும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.