Problems of Premature Babies-குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குறைப்பிரசவத்தால் கூடுது பிரச்னை!


குறை மாதத்தில் பிறப்பவர்கள் வளர்ச்சி குறைந்தவர்களாக இருப்பார்கள் என்பது ஏற்கனவே நிரூபணமான உண்மை. இப்போது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் மூளையின் இணைப்புகள் (Brain network) பலவீனமாக இருப்பதால் கவனக்குறைவு மற்றும் கற்றல் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் மனநல மருத்துவத்துறை பேராசிரியரான டாக்டர் சிந்தியா ரோஜர்ஸ் தன் குழுவினருடன் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவு இது.‘‘இந்த குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு மூலகாரணம் குறைப்பிரசவமே. மூளை வளர்ச்சிக் குறைவினால் ஏற்படும் ஆட்டிசம் (Autism), கவனம் மற்றும் அதிஇயக்க சீர்கேடு (ADHD) போன்ற மனநல குறைபாடுகளுக்கும், பதற்றம் (Anxiety), மனஅழுத்தம் (Stress) போன்ற உளவியல் பிரச்னைகளுக்கும் குறைப்பிரசவமே காரணமாகிறது’’ என்கிறார் சிந்தியா.

இவரது குழுவினர் முழுமையான பிரசவத்தில் பிறந்த 58 குழந்தைகளையும், பிரசவ தேதிக்கு 10 வாரங்களுக்கு முன்பாகவே பிறந்த 76 குறைப்பிரசவ குழந்தைகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, அவர்களின் மூளை செயல்பாடுகளை FMRI (Functional Magnetic Resonance Imaging) ஸ்கேன் செய்து சோதித்தனர். இதில் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளிடத்தில் தகவல் தொடர்பு, கவனம் மற்றும் உணர்ச்சிகளின் செயல்பாடுகளுக்கு காரணமான மூளையின் இணைப்புகள் பலவீனமாக இருப்பதும், மூளையின் நெட்வொர்க்கில் முக்கியப் பங்காற்றும் வெள்ளை நாளங்களும், அதில் உள்ள நரம்பிழைகளும் இயல்புக்கு மாறாக இருந்ததும் தெரியவந்தது.

இத்தகைய அசாதாரண மூளை இணைப்புகளே வளரும் நிலையில் அவர்களுக்கு ஏற்படும் நரம்பு, மூளை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு காரணம் ஆகின்றன. இதோடு வளரும் நிலையில் கவனக்குறைவும் கற்றலில் குறைபாடும், கேட்கும் திறன் இழத்தல், மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் பார்வைக் கோளாறுகளும் ஏற்படலாம்.

‘‘5 முதல் 10 வயது நிரம்பிய குறைமாதக் குழந்தைகளிடத்திலும் சோதனை மேற்கொண்டிருக்கிறோம்.

இவர்களின் மூளை நரம்புகளின் செயல்பாடுகளில் ஏதாவது முன்னேற்றம் செய்ய முடியுமா என்கிற ரீதியிலும் ஆராய்ச்சியைத் தொடர்கிறோம். ஆரம்ப நிலையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகளால் பின்னாளில் இக்குழந்தைகளுக்கு வரக்கூடிய நரம்பியல் பிரச்னைகளையும், உளவியல் பிரச்னைகளையும் குறைக்க முடியும்’’ என்று கூறி சற்று நிம்மதி அடையச் செய்கிறார் சிந்தியா.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
Re: Problems of Premature Babies-குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை&#296

விவரங்களுக்கு மிக்க நன்றி .
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.