Prolapsed Uterus - கருப்பை இறக்கம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கருப்பை இறக்கம் – காரணங்களும்! தீர்வுகளும்!

கருப்பை இருக்கும் இடத்தில்இல்லாமல், சற்று அல்லது அதிகமாக கீழிறங்கி இருக்கும்நிலையே கருப்பை இறக்கம். இது பிரசவகால அஜாக்கிரதையால் பெரும்பாலும் ஏற்படுகிறது என்று கண்ட றியப்பட்டுள்ளது.

கருப்பை என்பது ஒரு உள்ளுறுப்பாகும். இது பெரும்பாலும் வெளியே வருவதில்லை. கருப்பையை முக்கிய தசைகள் கீழிருந்து தாங்கிக் கொண்டு இருக்கின்றன. கருப்பை சரியான இடத்தில் பத்திரமாக இருக்கும் வகையில்,
பல்வேறு அரண்கள் அதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

பல காரணங்களால், கருப்ப யை தாங்கிக்கொண்டிருக்கும் தசைகள் தளர்வடைந்தாலோ, கருப்பை அரண்கள் வலுவிழந்தாலோ, உள்ளுறுப்பாக இருக்கும் கருப்பை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கு கிறது.
இதுவே கருப்பை இறக்கம் எனப்படும். இது நான்கு வகைகளில்அமைகிறது. அதாவது, எப்போ தாவது முக்கும் போதும், இரும்பும் போதும், தும்பும் போதும் சிறிதளவு அடி இறங்குவது.

மற்றொன்று நாக்கின் நுனி போல எப்போதுமே ஓர் சதைப் பகுதி அடியில் தோன்றும். இந்த நிலையில் படுத்துக் கொள்ளு ம் போது அது உள்ளே சென்று விடும்.

மூன்றாவதாக, சற்று வெளியில் தொங்கும் சதையானது, எப்போதுமே வெளியே தொங்கியவா று இருத்தல். இந்த நிலையில், சிறு நீர் கழிக்கவும் சிக்கல் ஏற்படும்.

நான்காவது நிலைதான் மிகவும் மோசமான நிலையாகும். இதில், கருப்பை வெளியே தொங் கும். இதனால் பெண்களுக்கு பல சிரமங்கள் ஏற்படும்.
இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும் போது, பெண்கள் உடனடியாகமருத்துவமனையை அணுகுவது நல்லது.

முதல் கட்டத்திலேயே பெண் கள் மருத்துவரை அணுகுவ தால், சில தகுந்த உடற்பயிற் சிகள் மூலமாக சரி செய்யலா ம் என்பது ஆறுதலான விஷய மாகும்.

யோனி வழியே வெளிவரும் கருப்பைகள்
‘‘சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கு இந்தப் பிரச் னை அதிகம் பாதிக்கிறது. நீண்டநேரம் வலியுடன் அவதி, கஷ்டப் பட்டு, முக்கி, குழந்தை யை வெளித்தள்ளுவது, பிரசவ த்துக்குப் பிறகு ஓய் வெடுக்காதது என இதற்குப் பல காரணங்கள். பிரசவத்தின்போது தசைகள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல் வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள் களைத் தூக்குவது போன்றவற்றால்
இடுப் பெலும்புத் தசைப் பகு திகள் பலமிழக் கும்.

கருப்பை இறக்கம் (uterovaginal prolapse) என்பது வயதான பெண்க ளி ல் ஏற்படுகின்ற பொ துவான ஒரு பிரச்ச னையாகும்.

இதன் போது கருப் பைப் பையானது பெண்ணின் யோனி
வழியே கீழ் இறங்கும்.கீழிறங்கிய கருப்பை பெண்ணின் பிறப்பு உறுப்பினுள்ளே (vagina) இருக்கலாம் அல்லது சற்று தீவிரமடையும் போது பெண்ணுறுப்பின் வெளியே கருப்பையின் ஒருபகுதி வெ ளியே வரலாம், இந்தப் பிரச்சனை தீவிரமடையும் போது கருப்பை முழுமையாக வெளி யேறலாம்.முற்று முழுதாக கீழிறங்கிய கருப்பை
இந்நோயானது அதிகமான குழந்தைகளை சாதரணமாக பெற்று
எடுத்தவர்களிலேயே பொதுவாக ஏற்படும். அதாவது சீசர் முறை மூலம் குழந்தைகளை பெற்று எடுத்தவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவ தற்கான சந்தர்ப்பம் குறைவு.

மேலும்அதிகமான குழந்தைகளை பிறப்பு வழியே பெற்றெடுக்கும்போதுஇந்த கருப்பை இறக்கம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதி கமாகும்.

சிலவேளை இந்த கரு ப்பை இறக்கத்தோடு மூத்திரப் பையும்(blader) சேர்ந்து கீழ் இறங்கலாம். சில பெண்களுக்கு கருப்பையோடு குடலின் ஒருபகு தியும் சேர்ந்து கீழ் இறங்கலாம்.

கருப்பையின் ஒரு பகுதியோடு சிறுகுடலின் ஒரு பகுதியும் இறங்கியுள்ளது
அரிதாக கருப்பை இறக்கம் இல் லாமல் மூத்திரப் பை மட்டும் கீழ் இறங்கலாம். இப்படி கருப்பை பை இறக்கத்தால்பாதிக்கப்பட்ட பெண் களின் யோனி வழியே pessary எனப்படும் வளையங்களை உட் செலுத்தி தற்காலிக தீர்வு வழங் கப் படலாம்.


தற்காலிக தீர்வு வழங்கும் வளை யங்கள்

பெரும்பாலும் மெனோபாஸ் வயதில்தான் இது தன் வேலையைக்
காட்டத்தொடங்கும். அந்தரங்க உறுப் பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். கசிவும் அடிக்கடி இன்ஃபெக் னும் முதுகு வலியும் இருக்கும். முதல் மற்றும் இர ண்டாவது நிலைகளில், இறங்கிய கர்ப்பப் பை பகுதியை லேப்ராஸ்கோ ப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடு த்த சில வருடங்களுக்கு இருக்கும்.
3வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது. இந்நிலையில் கர்ப ப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும்.

சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழி க்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகு ம் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப் போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக் ஷன் உண்டாகி, சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மல ச்சிக்க லும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்ற வை யும் சேர்ந்து கொள்ளும்

இது தவிர சிலருக்கு பிறவியிலேயே திசுக்கள் பலவீனமாக இருந்து, குழந்தை பிறப்பதற்கு முன்பே கர்ப்பப்பை இறக்கம்
ஏற் படலாம். இது பரம்பரையாகத் தொ டர்ந்தால், மருத்துவரிடம் ஆலோ சனை பெற வேண்டும்.

ஆரம்ப நிலையிலேயே மருத்துவ ரை அணுகுவது, முதல் நிலை பாதி ப்பாக இருப்பின்,‘ஸ்லிங்’ எனப்படு கிற அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத்தவிர்ப்பது…

இவையெல்லாம் பிரச்சினை தீவிர மாகாமல்தடுக்கும் வழிகள்…’’

ஆனாலும் நிரந்தரமாக இந்த பாதிப் பில் இருந்து மீள வேண்டுமா னால் சத்திர சிகிச்சைமூலம் கருப்பைப்பை நிரந்தரமாக அகற்றப் பட வேண்டும்

 

Attachments

Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: Fruits and vegtables for Healthy life style And Healthy Life style Tips

[h=3]கர்ப்பப்பை இறக்கம் ஏன்[/h]
பெண்மையின் வரப்பிரசாதமே கர்ப்பப்பைதான். பூப்பெய்துவதில் தொடங்கி, குழந்தை பெறுவது வரை பெண்மையின் அடையாளமாகவும் கவசமாகவும் இருப்பது அதுவே. அப்படிப்பட்ட கர்ப்பப் பை, அதன் இடத்தில் இருக்கும் வரைதான் ஆரோக்கியம்.

இருப்பிடத்திலிருந்து இறங்கினாலோ ஆபத்துதான்! குழந்தை பெற்ற பெண்கள் பலரையும் பாதிக்கிற பிரச்னைகளில் ஒன்று கர்ப்பப்பை இறக்கம். அதற்கான காரணங்கள், தீர்வுகள், தவிர்க்கும் முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

‘சாதாரணமாக 2 செ.மீ. அளவுள்ள கர்ப்பப்பை, வயதுக்கு வரும் போது, 5 முதல் 6 செ.மீ. வரை வளர்கிறது. பிரசவத்தின் போது 5 கிலோ எடையுடன், 30 செ.மீ. நீளத்துக்கு விரிகிறது. குழந்தைப்பேற்றைத் தவிர, கர்ப்பப்பைக்கு வேறு வேலைகள் கிடையாது. பிரசவத்துக்குப் பிறகு அது சுருங்கி, மீண்டும் பழைய அளவுக்கு வரும்.

கர்ப்பப்பை இறங்க, அதிக பருமன், வயிற்றிலுள்ள கொழுப்பின் பளு போன்றவை முக்கியமான காரணங்களாக இருக்கும். ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக, உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி, கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம். பிரசவத்தின் போது எடை அதிகமாகி, அதிகம் முக்கி, குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பதும் கர்ப்பப்பை இறக்கத்துக்குக் காரணமாகலாம்.

பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்பே, அடுத்த கர்ப்பம் தரிப்பது, மலச்சிக்கல், இயற்கையாக கர்ப்பப் பையைச் சுற்றியுள்ள தசை நரம்புகள் பலவீனமாக இருப்பது போன்ற பிற காரணங்களாலும், ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை இறக்கம் வரலாம். கர்ப்பப்பை இறக்கத்தால் நடப்பது சிரமமாகும். கர்ப்பப்பை உரசி, புண் உண்டாகும்.

கர்ப்பப்பை இறங்கும் போது, முன் பாகத்திலுள்ள சிறுநீர் பையும், பின் பக்கத்திலுள்ள மலக்குடலும் சேர்ந்து இழுக்கப் படலாம். இறங்கிய கர்ப்பப்பையைத் தற்காலிகமாக மேலே தூக்கி வைக்க, பிளாஸ்டிக் வளையம் உண்டு. ‘ஸ்லிங் ஆபரேஷன்’ மூலம் வயிற்றின் வழியே, கர்ப்பப் பையை மேலே தூக்கிப் பொருத்தலாம்.

குழந்தை பெற்று அதிக வயதான பெண்களுக்கு மட்டுமே இப்பிரச்னையின் போது, கர்ப்பப்பையை அகற்ற வேண்டி வரும். பிரசவத்துக்குப் பிறகு இடுப்பெலும்புத் தசைகள் உறுதிபெற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

பிரசவத்தின் போது, ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுப்பது, அதிக சிரமப்பட்டுக் குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நலம். பருமன் இந்தப் பிரச்னைக்கான மிக முக்கிய காரணம் என்பதால், எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.’’
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3
பலருக்கும் உபயோகமாக இருக்கக்கூடிய விவரங்கள் . மிக்க நன்றி லக்ஷ்மி .







 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
அடி இறக்கம் எனப்படும் கருப்பை தளர்வின் அறிகுறி

தற்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது.
இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கான அறிகுறிகள் என்னவென்று பார்த்தால்...

இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.

ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.


எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பது.

பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மை

அடிக்கடி ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் புண்

சிலருக்கு இரும்பினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வு

அடிக்கடி சீறுநீர் வெளியேற்றம்

சிறுநீரை அடக்க முடியாத நிலை.

தன்னை அறியாமல் சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் நிலை

மலச்சிக்கல் போன்ற உணர்வு. அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவை கருப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இவற்றில் ஒரு சிலவோ, பல அறிகுறிகளோ இருப்பின், அவர்கள் மருத்துவரை அணுகி உரிய பயிற்சிகளைமேற்கொள்வது நல்லது.
 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#5
u have shared excellent info chan. Thanks alot :)
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
பைபிராய்டு கட்டிக்காக கர்ப்பப்பை அகற்ற தேவையில்லை

தாய்மை... இதற்கு நிகர் வேறு எதுவுமில்லை. தாய்மைக்கு முன்பும், தாய்மைக்கு பின்பும் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எவ்வளவோ வலிகளை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் முக்கிய பிரச்னை கர்ப்பப்பையில் ஏற்படும் பைபிராய்டு எனப்படும் கட்டிகள்தான். தற்போதைய காலகட்டத்தில், பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பப்பையில் கட்டி வளர்கிறது. இதனால், கர்ப்பப்பையையே இழக்கும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

ஆனால், மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் கர்ப்பப்பையை அகற்றாமலேயே பைபிராய்டு கட்டிகளை மிக எளிதாக அகற்றி விடலாம் என்கிறார் பாரத் ஸ்கேன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் டாக்டர் இம்மானுவேல். இதைப் பற்றி டாக்டர் இம்மானுவேல் சொல்கிறார்...

கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகள், கேன்சர் கட்டிகள் என நினைத்து பெண்கள் அச்சப்படுகிறார்கள். இந்த அச்சம் தேவையில்லை. சுரப்பிகள் மாற்றத்தால் இத்தகைய கட்டிகள் ஏற்படுகின்றன. தவிர, இவை கேன்சர் கட்டிகள் கிடையாது. பொதுவாக 25 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பைபிராய்டு கட்டிகள் ஏற்படும். 4 பெண்களில் ஒருவருக்கு இத்தகைய கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இந்த கட்டிகள் ஆண்டுக்கு ஒரு செ.மீ. அளவுக்கு வளரும் தன்மை கொண்டவை.

கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்பட்டால், அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் நேரத்தில் அதிக நேரம் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, மூச்சு திணறல், மயக்கம் வருதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மேலும், முதுகு வலி, கால் உளைச்சல், அடி வயிறு வலி போன்றவையும் ஏற்படும். கட்டி பெரிதாக, பெரிதாக பெண்கள் இன்னும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது.

கட்டிகளின் அழுத்தம் காரணமாக அடிக்கடி சிறுநீர் வரும். சிறுநீரை தாங்கிக் கொள்ள முடியாது. அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஒரு சிலருக்கு நீண்ட நேர இடைவெளிக்கு பிறகே சிறுநீர் வரும். அதே போல, மலச்சிக்கலும் ஏற்படும். மலக்குழாயை கட்டிகள் அடைப்பதால், வயிறு உப்புதல், முதுகு வலி போன்றவை ஏற்படும். மாதவிடாய் நேரத்தில் அதிக வலி ஏற்படும். உடலுறவின் போதும் அதிக வலி இருக்கும்.

இந்த வலிகளை எல்லாம் பெரும்பாலான பெண்கள் தாங்கிக் கொண்டுதான் வாழ்க்கை நடத்துகிறார்கள். காரணம்... தாய்மை என்கிற ஒரே காரணத்துக்காகதான். இந்த வலியிலிருந்து விடுபட வேண்டுமென்றால் ஆபரேஷன் செய்து கர்ப்பப்பையை அகற்றுவதுதான் தீர்வாக இருந்து வந்தது.
அவ்வாறு ஆபரேஷன் செய்தால் அதன் பிறகும் சிறுநீர் பிரச்னை, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்.

அதைவிட, தாய்மை அடையும் பாக்கியத்தை இழந்துவிட்டோமே என நினைத்து மனரீதியாக பெண்கள் உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். மேலும் ஆபரேஷனுக்கு பிறகு 4 மாதம் ஓய்வில் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் யார் குழந்தைகளையும், கணவரையும் கவனித்துக் கொள்வது, ஆபரேஷன், மருத்துவமனையில் தங்குவது என நிறைய செலவாகுமே என்று நினைத்து பல பெண்களும் ஆபரேஷன் செய்து கொள்ளாமல் வலியுடனே வாழ்கிறார்கள்.

இப்போது அந்த கவலை எல்லாம் தேவையில்லை. கர்ப்பப்பை கட்டியால் அவதிப்படும் பெண்களுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது லேட்டஸ்ட் மெஷின் எம்ஆர்ஜிஎஃப்யுஎஸ் (விணீரீஸீமீtவீநீ ஸிமீsஷீஸீணீஸீநீமீ நிuவீபீமீபீ திஷீநீusமீபீ ஹிறீtக்ஷீணீ ஷிஷீuஸீபீ). இந்த தொழில்நுட்பத்தில் ஆபரேஷன் கிடையாது. மயக்க மருந்து கிடையாது. தழும்பு கிடையாது. ரத்த இழப்பு இல்லை. கதிரியக்கம் இல்லை. முக்கியமாக கர்ப்பப்பை பாதிக்கப்படுவதில்லை, பாதுகாக்கப்படுகிறது.

2 அல்லது 3 மணி நேரத்தில் பைபிராய்டு செல்களை அழித்து விடலாம். சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமும் இல்லை. மறுநாளே வேலைக்கு போகலாம். சிகிச்சை முடிந்த 6 மாதத்துக்குள் பைபிராய்டு கட்டிகள் முழுமையாக தானாகவே கரைந்து விடும். அதுவரை எந்த தொந்தரவும் இருக்காது. இந்த சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானதும் கூட. வெளிநாடுகளில் கடந்த 2000ம் ஆண்டில் இருந்தே இந்த சிகிச்சை முறை இருந்து வருகிறது.

சிகிச்சை எப்படி?

எம்ஆர்ஐ ஸ்கேன் மெஷினுடன் ஃபோகஸ்ட் அல்ட்ரா சவுண்ட் உபகரணம் பொருத்தப்பட்டிருக்கும். இதில், சிகிச்சை க்கு வருபவர் படுத்துக் கொள்ள வேண்டும். ஃபோகஸ்ட் அல்ட்ரா சவுண்ட் உபகரணம், வயிற்றுப் பகுதியில் பைபிராய்டு கட்டிகள் எங்கிருக்கின்றன என்பதை ஆராய்ந்து தெளிவுபடுத்தும்.

அதனை மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் மானிட்டர் கவனித்து, ஃபோகஸ்ட் அல்ட்ரா சவுண்ட் உபகரணம் மூலம் வெப்பத்தை உண்டாக்குவர். இந்த வெப்பத்தின் மூலம் பைபிராய்டு செல்கள் அழிக்கப்படும். சிகிச்சையின் போது, எந்த வலியும் இருக்காது.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.