Proper food & exercises keeps Women Healthy - உணவு உடற்பயிற்சி உற்சாகம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உணவு உடற்பயிற்சி உற்சாகம்​
[TABLE="align: right"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
''பெண்கள் தங்களின் 11 வயதில் இருந்து 35 வயதுக்குள் பூப்படைதல், திருமணம், குழந்தைப்பேறு போன்ற வாழ்வின் முக்கியமான கட்டங்களை எதிர்கொள்வார்கள். இந்தக் காலகட்டத்தில் கவனத்துடன் இருந் தால் எதிர்காலத்தில் பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.'' - நாளமில்லாச் சுரப்பிகள் மருத்துவர் ஆர்.பரத் மற்றும் வத்தலக்குண்டைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் மணிமேகலை ஆகியோர் சொல்லும் சேதி இது. மேலும் அவர்கள், பெண்களுக்கு ஏற்படக்கூடிய முக்கியமான நான்கு பிரச்னைகளைப் பற்றியும் இங்கே அலசுகிறார்கள்.

ஹைபோதைராடிசம்
அயோடின் பற்றாக்குறை, மரபியல் பிரச்னை, மருந்துகளின் பக்கவிளைவு போன்ற பல காரணங்களால் இந்தக் குறைபாடு ஏற்படலாம். சோர்வு, திடீரென உடல் எடை அதிகரித்தல், மாதவிலக்கில் ஒழுங்கின்மை, பொலிவற்ற சருமம் போன்றவை இந்தக் குறைபாட்டின் வெளிப்பாடுகள். ரத்தப் பரிசோதனை செய்து, அதன் முடிவுகளை வைத்து ஒருவருக்கு ஹைபோதைராடிசம் உள்ளதா இல்லையா என்பதை முடிவுசெய்வார்கள். ஹைபோதைராடிசம் இருந்தால், கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி போதுமான அளவுக்குத் தைராய்டை உற்பத்தி செய்யவில்லை என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.


கர்ப்பக் காலத்தில் தாயின் தைராய்டு குறைபாடு கருவைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது. கருவில் உள்ள குழந்தைக்கு முதல் 12 வாரங்கள் வரை தைராய்டு சுரப்பி உருவாவது இல்லை. எனவே, முதல் மூன்று மாதங்கள் வரை தாயின் உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன் அளவைக் கொண்டே கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, கருவுறும் முன்பு பெண்கள் தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுதல் நல்லது.

முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை எனில் மன அழுத்தம், கெட்ட கொழுப்பு அளவு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். கருச்சிதைவு மற்றும் குழந்தைப்பேறின்மைக்கும் இது வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் தாயின் தைராய்டு குறைபாடு கருவைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

ரத்த சோகை
ஒரு நாளைக்கு 10 முதல் 15 மில்லி கிராம் அளவுக்கு இரும்புச் சத்து தேவைப்படுகிறது. அதற்கும் குறைவான அளவில் இரும்புச் சத்து கிடைக்கும்போது ரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது.


ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்தான் ஆக்சிஜனை உடலின் எல்லாப் பகுதிக்கும் கொண்டுசெல்கிறது. ஆக்சிஜன் கொண்டு செல்லும் திறன் பாதிக்கப்படும்போது, உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்க அதிக அளவில் இதயம் துடிக்க வேண்டியதாகிறது. இதனால் இதயம் பெரிதாவது, செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். ரத்த சோகை இருந்தால் சோர்வு இருக்கும். சருமமும் வெளிறிவிடும்.

ஈரல், கோழி இறைச்சி, மீன், கீரை, மாதுளை, பேரீச்சம் பழம், கேழ்வரகு, வெல்லம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இரும்புச் சத்துக் குறைபாட்டைத் தவிர்க்கலாம். இதனுடன், வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இரும்புச் சத்தை கிரகிக்க அது உதவும்.

கால்சியம் பற்றாக்குறை
கால்சியமானது எலும்பு மற்றும் பற்களின் உறுதித்தன்மைக்கு அவசியமானது. மேலும் இதயம் சீராகத் துடிக்கவும், நரம்பு, தசைகள் ஒழுங்காகச் செயல்படவும் உதவுகிறது. உணவில் இருந்து போதுமான அளவு கால்சியம் (தினசரி உணவில் 600 மி.கி.) கிரகிக்கப் படவில்லை எனில், எலும்பு மற்றும் இதர உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்படும். இந்நிலை நீடித்தால் ஆஸ்டியோபோராசிஸ் ஏற்படலாம். குழந்தை மற்றும் பதின் பருவத்தில் எலும்பானது வளர்ந்துகொண்டே இருக்கும்.

30 வயதில் அது உச்சத்தை அடையும். எனவே, இந்தக் காலக்கட்டத்தில் பெண்களுக்கு அதிக அளவில் கால்சியம் தேவைப்படுகிறது. கால்சியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு, கால்சியம் சத்து மாத்திரையுடன் வைட்டமின் டி மாத்திரையும் பரிந்துரைக்கப்படும். பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் சத்து உள்ளது. முட்டை, எண்ணெய்ச் சத்து நிறைந்த மீன் போன்றவற்றில் வைட்டமின் டி உள்ளது.

உடல் பருமன்
நிறைய நோய்களுக்குக் கூடுதல் எடை காரணம் ஆகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டுத் தேய்மானம், நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு, மாதவிடாய்ப் பிரச்னை, குழந்தைப் பேறின்மை, மன அழுத்தம், மனச் சோர்வு என்பன அவற்றில் சில.சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்தாலே பல வியாதிகள் நம்மை அண்டாது.

 
Last edited:
Joined
Aug 9, 2014
Messages
83
Likes
112
Location
salem
#2
re: Proper food & exercises keeps Women Healthy - உணவு உடற்பயிற்சி உற்சாகம்

:thumbsup:thumbsup:thumbsup
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#3
re: Proper food & exercises keeps Women Healthy - உணவு உடற்பயிற்சி உற்சாகம்

Absolutely true.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.