Proper polio vaccination is necessary - போலியோ...தேவை தடுப்பூசி!

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
குழந்தைபருவத்திலேயேகோடிக்கணக்கானநபர்களைமுடமாக்கியகொடியவைரஸ்கிருமிபோலியோ. தற்போது, இந்தியாவில்போலியோமுற்றிலும்ஒழிக்கப்பட்டுவிட்டதாகஉலகச்சுகாதாரமையம்அறிவித்துள்ளது.
கடந்தமூன்றுவருடங்களாகவெளியில்உள்ளபோலியோவைரஸால் (wild polio virus) எவரும்தாக்கப்படாவிட்டாலும், போலியோசொட்டுமருந்திலுள்ளபோலியோவைரஸால்பலகுழந்தைகள்போலியோதாக்குதலுக்குஆளாகியுள்ளனர்என்பதுஅதிர்ச்சியும், வேதனையும்கலந்தஉண்மை.
இனியும், இதுபோல்போலியோபாதிப்புஏற்படாமலிருக்க, பாதுகாப்பானபோலியோதடுப்பூசிக்குமாறவேண்டுமென்றகோரிக்கைகள்இந்தியாமுழுவதும்எழுந்துள்ளன. இந்தநிலையில், போலியோஒழிப்புமற்றும்போலியோதடுப்பூசிகள்பற்றிச்சமூகமருத்துவயியல்பேராசிரியர்டாக்டர். கிருஷ்ணசந்திரபானிக்ரஹியிடம்பேசினோம்.

‘‘
போலியோவைஉலகிலிருந்துஒழிக்கும்முயற்சியைஉலகச்சுகாதாரமையம் 1988ல்ஆரம்பித்தது. முதன்முதலாக, போலியோசொட்டுமருந்துஅளிப்பதன்மூலம், போலியோவைமுற்றிலும்ஒழித்தநாடாகச்செக்கோஸ்-லோவாகியாவிளங்கியது. அதனைத்தொடர்ந்து, உலகச்சுகாதாரமையம்அனைத்துநாடுகளிலும்போலியோசொட்டுமருந்துகள்குழந்தைகளுக்குஅளிக்கப்படுவதைஉறுதிப்படுத்தஅறிவுறுத்தியிருந்தது. போலியோசொட்டுமருந்தின்முக்கியத்துவம்ஊடகங்கள்வாயிலாகப்பிரசாரம்செய்யப்பட்டன.

பல்ஸ்போலியோதிட்டத்தின்படி, நாடுமுழுவதும்ஒரேநாளில்ஐந்துவயதுவரைஉள்ளகுழந்தைகளுக்குபோலியோசொட்டுஅளிக்கப்பட்டது. வீடுதோறும்சென்றுசொட்டுமருந்துபெறாதகுழந்தைகளைக்கண்டறிந்துஅவர்களுக்குச்சொட்டுமருந்துஅளிக்கப்பட்டது. மேலும்பேருந்துமற்றும்ரயில்நிலையங்களிலும்குழந்தைகளுக்குபோலியோசொட்டுமருந்துஅளிக்கப்பட்டன. இதெல்லாம்நமக்குத்தெரிந்தவிஷயங்கள்தான்.
இதன்மூலம், போலியோஇல்லாதநாடாகஇந்தியாஉருவாகியுள்ளதுமகிழ்ச்சிக்குரியது. 2020க்குள்போலியோ, உலகத்தைவிட்டேவிரட்டப்படுமென்றுஉலகச்சுகாதாரமையம்நம்பிக்கைதெரிவித்துள்ளது. ஆனால்நாம்நூறுசதவிகிதம்மகிழ்ச்சிஅடையமுடியாதபடிநெருடலானவிஷயமும்உள்ளது.

போலியோசொட்டுமருந்தில்நோய்ஏற்படுத்தும்வீரியம்நீக்கப்பட்டபோலியோவைரஸ்உள்ளது. அதைஉட்கொள்ளும்போது, குடல்பாதையில்போலியோவுக்குஎதிராகநோய்எதிர்ப்புச்சக்திஏற்படும். இதனால், போலியோவைரஸின் (wild polio virus) தாக்குதல்தடுக்கப்படுகிறது. சிலமாதங்களுக்குச்சொட்டுமருந்திலிருந்துபெறப்பட்டபோலியோவைரஸ், குழந்தைகளின்குடலில்பெருக்கமடைந்துமலத்துடன்வெளியேறும்.

 

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#2
Re: போலியோ...தேவை தடுப்பூசி!

போலியோ சொட்டு மருந்திலுள்ள போலியோ வைரஸ், நோய் ஏற்படுத்தும் வீரியமற்றதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தும் திறன் மட்டுமே கொண்டதாகவும் இருக்கும். சில நேரங்களில் போலியோ வைரஸ், மனித உடலில் பெருகும்போது மாற்றம் (mutation) உண்டாகி, மீண்டும் பழைய வீரியத்தைப் பெறுகின்றன. இவ்வாறு மாற்றம் அடையும் வைரஸால் ஏற்படும் முடக்குவாதம், வைல்டு போலியோ வைரஸால் ஏற்படும் முடக்குவாதம் போன்று இருக்கும் (vaccine-derived wild- like poliovirus). 7,50,000 போலியோ சொட்டு மருந்து பயனாளிகளில் ஒருவருக்குத்தான் இதுபோன்று ஏற்படும்.
மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இதுபோன்ற முடக்குவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சென்ற வருடம் மட்டுமே நான்கு குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்தினால் முடக்குவாத போலியோ ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டாலும், போலியோ சொட்டு மருந்தினால் போலியோ ஏற்படாமலிருக்கப் போலியோ தடுப்பூசிக்கு (IPV) மாற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் போலியோ தடுப்பூசியின் விலை அதிகம். போலியோ சொட்டு மருந்தை, சுகாதாரப் பணியாளாரால்கூட எளிதாகக் கொடுக்க முடியும். ஆனால், ஐபிவி-யை ஊசி மூலமே செலுத்த வேண்டும். ஐபிவி-யின் ப்ரைமரி டோஸ் 6, 10, 14 வாரங்களிலும், பூஸ்டர் டோஸ் 18 மாதங்களிலும் கொடுக்கப்படுகிறது.
பல நாடுகள் போலியோ சொட்டு மருந்திலிருந்து, போலியோ தடுப்பூசிக்கு மாறிவிட்டன. ஐபிவி-யில், பார்மலினால் (formalin) செயலிழக்கப்பட்ட போலியோ வைரஸ் உள்ளது. அதை ஊசி மூலம் நேரடியாகச் செலுத்துவதால், ரத்தத்தில் போலியோ வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படுகிறது. ஐபிவி, போலியோ சொட்டு மருந்தைவிட அதிகச் செயல்திறன் கொண்டது. மேலும் ஐபிவியில், தடுப்பூசியால் ஏற்படும் முடக்குவாத போலியோ ஏற்படாதென்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களில், போலியோ சொட்டு மருந்திலிருந்து ஐபிவி-க்கு இந்தியா மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' என விரிவான பதிலைத் தந்தார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.