Protecting Your Teeth - பற்களை பாதுகாக்கும் முறைகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=3]பற்களை பாதுகாக்கும் முறைகள்[/h]பற்களின் வடிவமைப்பு தான் ஒரு மனிதனின் அழகுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள் வராமலிருக்க வழி செய்யும்.


பல் துலக்குதல்: இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.

கொப்பளித்தல்: சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சிறு சிறு உணவுத்துகள்களை எளிதில் அகற்றி விடும்.

நாக்கை சுத்தம் செய்தல்: பாக்டீரியாக்களின் வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது. அதனால் நாக்கின் மேலும், கீழும் நன்றாக சுத்தம் செய்வது அவசியம். தற்போது நாக்கைச் சுத்தம் செய்யும் வகையில் சொரசொரப்பான பிரஷ்களும் உள்ளன.

பரிசோதித்தல்: ஆண்டுக்கு இருமுறையாவது பல் மருத்துவரிடம் சென்று பற்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் பற்களுக்கும்,உடலுக்கும் உடனடியான தீர்வு கிடைக்கும்.

 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.