psychotic treatment - ''மனநல சிகிச்சைக்கு மறுப்பவர்களை, மசி&#299

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,302
Likes
20,720
Location
Germany
#1
''மனநல சிகிச்சைக்கு மறுப்பவர்களை, மசிய வைப்பது எப்படி?''

"பொதுவாக மனநல மருத்துவம் மேற்கொள்பவர்கள் இரண்டு ரகம்.

முதலாவது ரகத்தினர்... 'நமக்குள் ஏதோ பிரச்னை இருக்கிறது' என்பதை உணர்ந்து, தாமாகவே மருத்துவரைச் சந்தித்து, தரப்படும் மனநல ஆலோசனைகளை முழுவதுமாக எடுத்துக் கொள்வார்கள்.

இரண்டாவது ரகத்தினர்... தனக்கான மனநல பாதிப்பு இன்னதென்று உணரமுடியாத அளவுக்கு வீரிய பாதிப்பில் இருப்பார்கள். மருத்துவரைச் சந்திக்கவோ, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைக்கு உடன்படவோ மறுப்பார்கள்.

இவர்களுக்கான சிகிச்சையைப் பொறுத்தவரை, மனநலம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் முதலில் மனநல மருத்துவரை சந்தித்து சில ஆலோசனைகளைப் பெற வேண்டும்.

நோயாளியின் சூழ்நிலை, நோயின் தீவிரம் போன்ற பின்னணிகளை அறிந்து கொள்வது முக்கியம் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

குடும்ப உறுப்பினர்களின் மனமாற்றம் மற்றும் அரவணைப்பில் ஏற்படும் மாற்றமேகூட நோயாளி குணமடைய உதவும் என்ற கூடுதல் பலனும் இதில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அடுத்ததாக நோயாளியைச் சந்திக்க மனநல ஆலோசகர்கள் அனுப்பப்படுவார்கள். அவர்கள் மூலமே கவுன்சிலிங் மற்றும் சிகிச்சையும் துவங்கி விடும். தனது மனநல பாதிப்பு குறித்து ஓரளவு புரிந்து கொண்ட பிறகு, நோயாளிகள் தாமாகவே மருத்துவமனைக்கு வரத் துவங்கிவிடுவார்கள். பெரும்பாலும் மனநல சிகிச்சை படிப்படியாக மேற்கொள்ளப்படுவதால், உடனடியாகத் தீர்வை எதிர்பார்க்க முடியாது. கூடுதல் கால அவகாசம் தேவைப்படும்.

குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், பாதிக்கப்பட்டவர் சிகிச்சையில் இருக்கும்போது அவருக்கு சிநேகமானவராக ஒரு உதவியாளர் கூடவே இருப்பது நலம். அப்படி வரும் உதவியாளர் மட்டுமல்லாது,
மனநல பாதிப்புள்ளவரை சூழ்ந்திருக்கும் உறவுகள் உள்ளிட்ட அனைவருக்குமான அடிப்படைக் குறிப்புகள் சில இருக்கின்றன. அவற்றைத் தெரிந்து வைத்துக் கொள்வது, மிகவும் அவசியமான ஒன்றாகும்.
அவை...
மனநோயாளிக்கு பிடிக்காத காரியத்தை அவர் அறியும் வண்ணம் செய்யவே கூடாது;

பிடிக்காத விஷயங்களைப் பேசக் கூடாது;

நேரடியாக கட்டுப்படுத்தக்கூடாது;

விஷம மான பொருட்கள், நெருப்பு, கத்தி, மருந்துகள், நச்சுப் பொருட்கள் போன்றவற்றை அவருக்கு அருகில் வைப்பதை தவிர்க்கவேண்டும்;

நாம் அவரை கண்காணிக்கிறோம் என்பது, அவர் உணரும் வண்ணம் இருக்கக் கூடாது;

தான் தனிமைப்படுத்தப்படுவதாகவோ, வெறுக்கப்படுவதாகவோ அவர் அர்த்தம் பண்ணிக்கொள்ளும்படியான விஷயங்களை நாம் மேற்கொள்ளக்கூடாது.
 

Mals

Guru's of Penmai
Joined
Sep 14, 2013
Messages
5,286
Likes
3,589
Location
Navi Mumbai
#2
Re: psychotic treatment - ''மனநல சிகிச்சைக்கு மறுப்பவர்களை, மசி&

Thanks for the share
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.