Puberty, Mensuration in girls - பூப்பெய்துதல்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]பூப்பு- அறிந்ததும் அறியாததும்![/h]பெண்மை மலர்வதன் முதல் அறிகுறி பூப்படையும் சம்பவம். பெண்ணின் உடலில் நிகழக்கூடிய மிக இயல்பான அந்தச் சம்பவம், அவளது உடல் மற்றும் மனத்தில் மிகப் பெரிய மாற்றங்களை உண்டாக்கக்கூடியது. மாதவிலக்கின் போது என்னதான் நிகழ்கிறது? அதன் பின்னணியில் அறியாத தகவல்கள் என எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறார் டாக்டர் நிவேதிதா.

‘‘மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் பகுதியானது Gonadotropin Releasing Hormone(GnRH) என்கிற ஹார்மோனை விடுவிக்கத் தொடங்கும் போது ஒரு பெண் பருவமடைகிறாள். இந்த ஜிஎன்ஆர்ஹெச் ஹார்மோனானது, எல்.ஹெச் (Luteinizing Hormone (LH) மற்றும் எஃப்.எஸ்.ஹெச் (Follicle Stimulating Hormone (FSH) என மேலும் இரண்டு ஹார்மோன்களை சுரக்கச் சொல்லி, பிட்யூட்டரி சுரப்பிக்கு சிக்னல் அனுப்பும். பருவமடைகிற இந்த நிகழ்வானது பெண்களுக்கு 10 முதல் 14 வயதில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

பூப்படையும் பருவத்து அறிகுறிகள்...


  • பருவமடையப் போவதன் அல்லது அடைந்து விட்டதன் முதல் அறிகுறியாக ஒரு பெண்ணுக்கு மார்பக வளர்ச்சி படிப்படியாக அதிகரிக்க ஆரம்பிக்கும்.

  • அக்குள், அந்தரங்க உறுப்புகளில் ரோம வளர்ச்சி தென்படும்.

  • சில பெண்களுக்கு முகம், நெற்றி மற்றும் முதுகில் பருக்கள் வரலாம்.
  • மாதவிடாய் அதாவது, உதிரப் போக்கு வரத் தொடங்கும்.

  • முதல் மாதவிலக்கு வந்ததை அடுத்து பெண்களின் உயரமும் கிடுகிடுவென அதிகரிப்பதைப் பார்க்கலாம்.

  • 2 முதல் 3 வருடங்களில் அவர்களது உயரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

அனுபவங்கள் வேறுபடலாம்...

மேலே சொன்ன அறிகுறிகள் பருவ வயதில் இருக்கிற எல்லாப் பெண்களுக்கும் பொதுவானவை. அதே நேரம் முதல் மாதவிலக்கும் அதையடுத்த அவர்களது சுழற்சியும் எல்லோருக்கும் ஒன்று போல இருக்காது. இந்த வித்தியாசம் பெண்களின் பூப்பெய்தும் வயது, மாதவிடாயின் போதான ரத்தப் போக்கு, அது நீடிக்கும் நாட்கள் என எல்லாவற்றிலும் இருக்கலாம்.

10 முதல் 14 வயது என்பது பெண்கள் பூப்பெய்தும் வயது என்பது பொதுவான விதி. ஆனாலும், இது ஒவ்வொருவருக்கும் கூடவோ, குறையவோ செய்யலாம். உதாரணத்துக்கு சில பெண்கள் 7 அல்லது 8 வயதில் கூட பூப்பெய்தலாம். அந்த நிலையை Precocious Puberty என்கிறோம். இன்றைய உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, இளவயது மன அழுத்தம் எனப் பல விஷயங்களின் காரணமாக பெண் குழந்தைகளின் பூப்பெய்தும் வயதானது குறைந்து விட்டது உண்மைதான். ஆனாலும், 7 வயதுக்கு முன்பாகவே ஒரு பெண் குழந்தைக்கு பருவமடைதலின் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

இன்னும் சில பெண்களுக்கோ பூப்பெய்தும் வயது வழக்கத்தைவிட தள்ளிப் போகலாம். பெரும்பாலும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்தப் பிரச்னை இருப்பதைப் பார்க்கலாம். 14 வயதுக்கு மேலும் பூப்படையாத பட்சத்தில் மருத்துவப் பரிசோதனையும் ஆலோசனையும் அவசியம். பூப்படையாததற்கு வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் காரணமா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மிக மிக அரிதாகவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என்பதால் பயப்படத் தேவையில்லை.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: பூப்பு- அறிந்ததும் அறியாததும்!

Really very important information! thank you for sharing!!!!!!!!!!!!!!
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
மென்ஸுரேஷன் -ஏன்? எதற்கு? எப்படி?

மென்ஸுரேஷன் -ஏன்? எதற்கு? எப்படி?

பெண்களின் முதல் மாதவிடாய் நிகழ்வைத்தான் பூப்படைதல் என்று சொல்கிறார்கள். மென்ஸுரேஷன் என்பது அதற்கான மருத்துவ வார்த்தை.

மென்ஸுரேஷன்ஸ் இயல்பான உடல் வளர்ச்சி நிலை. பூப்படையும் பெண்ணின் மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ், அதன் அருகில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டுகிறது. இந்த பியூட்டரி சுரப்பி இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது.

ஒன்று எஃப்.எஸ்.ஹெச் (ஃபாலிகல் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (FSH)). இன்னொன்று எல்.ஹெச் (லுயூட்டினைஸிங் ஹார்மோன்(LH)). இந்த இரண்டு ஹார்மோன்களும்தான், பெண்ணின் இனப்பெருக்க வாழ்வுக்கான, செக்ஸ் உறுப்புகளை வளர்ச்சியடைய வைப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த எஃப்.எஸ்.ஹெச், எல்.ஹெச் உடன், இன்னும் இரண்டு ஹார்மோன்களும் மாதவிடாய் சுழற்சிக்கு உதவுகின்றன. அவை, புரோஜெஸ்ட்ரான் மற்றும் ஆக்ஸிடோசின்.

இந்த ஹார்மோன்கள் பெண்ணின் 10 வயதில் இருந்து 14 வயது பருவத்தில் செயல்படத் தொடங்குகின்றன. முதல் மாதவிடாய் அல்லது பூப்படைதல் நிகழ்வது இதனால்தான். பொது
வாக 30 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. சிலருக்கு இது 28 நாட்களில் நடக்கும். சீரான இந்தச் சுழற்சி, மனஅழுத்தம், கடுமையான பணிச்சுமை, திடீர் அதிர்ச்சி ஆகியவற்றின் காரணமாகப் பாதிக்கப்படுவது உண்டு
.

முதல் மாதவிடாய் சுழற்சிக்குப் பிறகு, ஆரம்ப நாட்களில் மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது. ஹார்மோன் செயல் பாடு, ரத்தத்தில் அணுக்களின் அளவைப் பொறுத்து, சீரற்ற சுழற்சி ஏற்படும். 16 முதல் 18 வயதில் இந்தச் சுழற்சி சரியாகி, சீரான இடைவேளைகளில் ஏற்படத் தொடங்கும்.

மாதவிடாய் நேரத்தில் பெண்களை வீட்டுக்கு ஒதுக்குப்புறமாக இருக்கச் சொல்லுவது ஏன்?

மாதவிடாய் பற்றி சமூகத்தில் பலவிதமான கட்டுக்கதைகள், நம்பிக்கைகள் காணப்படுகின்றன. அவற்றுள் பலவும் நம்ப முடியாதவை. விஞ்ஞானப்பூர்வமற்றவை. ரத்தப் போக்கு இருப்பதால், அந்தப் பெண் சுத்தமாக இல்லை என நினைக்கிறார்கள். மாதவிடாய் நேரத்தில், நாப்கின்கள் அணிந்து சுத்தமாக இருந்தால், அவள் மற்றவர்களைப் போல சுத்தமானவள்தான்.

ரத்தப் போக்கின் காரணமாகப் பெண் பலவீனமடைகிறாளா?

உடல்சோர்வு ஏற்படுவது உண்டு. ஆனால் ரத்தப்போக்கு முடிந்ததும், ரத்தம் சுரந்து, பழைய நிலைக்கு வந்துவிடுவார்கள். ரத்தம் வீணாகிவிட்டதே என்று பயப்பட வேண்டியது இல்லை.

மாதவிடாய் நேரங்களில் ஒரு நாளைக்கு எத்தனை நாப்கின்கள் மாற்ற வேண்டும்?

ரத்தப் போக்குக்கு ஏற்ப எண்ணிக்கை மாறுபடும். அதிகமாக ரத்தப் போக்கு இருந்தால் 4, 5 மாற்றலாம். மற்றபடி ஒரு நாளைக்கு 2 நாப்கின்கள் மாற்றினால் போதும்.

நன்றி டாக்டர் விகடன்

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
நான் வளர்ந்துவிட்டேன் அம்மா...​
பூப்பெய்துதல்​
ஶ்ரீகலா பிரசாத்
மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்
மு
கப்பரு, உடலில் முடி வளர்தல், மார்பக வளர்ச்சி, திடீர் திடீர் மனமாற்றம் போன்ற அறிகுறிகள் உங்கள் செல்ல மகளிடம் தென்பட்டால், அவள் பூப்பெய்துதலை நோக்கிப் பயணிக்கிறாள் என்று அர்த்தம். பெண்ணோ ஆணோ, அவர்களது இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சியடைந்து, இனப்பெருக்கத்துக்குத் தயாராகும் நிலை பூப்பெய்துதல் (Puberty) எனப்படுகிறது. போன தலைமுறை வரை, பெண்கள் பூப்பெய்தும் வயது, 14-15 ஆக இருந்தது. வாழ்க்கைமுறை மாற்றத்தினால், இன்றைக்கு 10-12 வயதுக்குள்ளாகவே பூப்பெய்துகின்றனர். அந்த நேரத்தில், அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்வார்கள். பூப்பெய்துதல் என்றால் என்ன, அது எப்படி நிகழ்கிறது, அதற்கு எப்படித் தயாராவது, இயல்பாக எதிர்கொள்வது எப்படி என்பதைப் பெற்றோர் தங்கள் மகளுக்குச் சொல்லித்தருவது மிக அவசியம்.


பூப்பெய்துவதற்கு முன்பு ஏற்படும் உடல் மாற்றங்கள்:

பூப்பெய்துவதற்கு முன் (Pre-pubertal period) குறைந்தது ஓர் ஆண்டு காலமாகவே உடலில் ஏற்படும் மாற்றங்களை பெண்களால் உணர முடியும். இந்த மாற்றங்கள் நிகழ்வதற்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான் காரணம். ஈஸ்ட்ரோஜென் சுரந்து, குழந்தையின் உயரம் அதிகரிக்கும். மொட்டு போல ஒரு பக்கம் மட்டும் மார்பகம் வளர ஆரம்பிக்கும். பிறகு, இன்னொரு பக்க மார்பு வளரத் தொடங்கும்.

முலைக்காம்பும் அதைச் சுற்றிய இடமும் கருப்பாக மாறும். அக்குள் மற்றும் அந்தரங்க உறுப்புப் பகுதியில் முடிவளரத் தொடங்கும். இதே நேரத்தில், உடலின் உள்ளும் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும். கர்ப்பப்பை மற்றும் சினைப்பை வளர்ச்சி அடையும். இரண்டு சினைப்பை இருந்தாலும், மாதத்துக்கு ஒரு முட்டை மட்டும் முதிர்ச்சியடைந்து வெளிப்படும். (இந்த முட்டையுடன், விந்தணு இணையும்போது கரு உருவாகும்.) கரு வளர்ச்சியடைய கர்ப்பப்பையில் சில மாறுதல்கள் ஏற்படும். முட்டையும் விந்தணுவும் சேரும் சந்திப்பு நிகழாமல், கரு உருவாகவில்லை எனில், கர்ப்பப்பையில் இருந்து முட்டையும் கர்ப்பப்பையில் கருவை வரவேற்க செய்யப்பட்ட மாறுபாடுகளும் வெளியேற்றப்படும். இப்படி, முதன்முறை வெளியேற்றப்படுவதைத்தான் பூப்பெய்துதல் என்கிறோம்.

மிக இளம் வயதிலேயே குழந்தைகள் வயதுக்கு வரும்போது, அதிர்ச்சிக்கு உள்ளாகிவிடுகின்றனர். வயிற்று வலியுடனோ வலி இல்லாமலோ அந்தரங்க உறுப்பிலிருந்து, ரத்தம் வழிந்தால், பயப்பட வேண்டாம் எனப் பெற்றோர் சொல்லித்தர வேண்டும். இது நோயோ, பிரச்னையோ இல்லை. இது மாதாந்திர சுழற்சி. வளர்ந்த பெண்களுக்கு, மாதந்தோறும் வரும் இயற்கைக் கழிவு எனப் புரியவைக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் பூப்பெய்திவிட்டால், ஆசிரியரிடம் சொல்லி உதவி கேட்க சிறுமிகளைத் தயார்ப்படுத்த வேண்டும்.

மாதந்தோறும் ரத்தப்போக்கு சரியாக வருகிறதா, எத்தனை நாட்கள் ரத்தப்போக்கு இருக்கிறது, ஒருநாளைக்கு எத்தனை சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர் போன்றவற்றையும் கவனிக்க வேண்டும். மாதவிலக்கின்போது வலி இருக்கிறதா, வயிற்று வலியுடன் வேறெந்த இடங்கள் வலிக்கின்றன என்பதையும் கவனிப்பது நல்லது.

மனதில் ஏற்படும் மாற்றங்கள்

மனரீதியான வளர்ச்சியில் ‘நான் குழந்தை இல்லை. பெண். நான் பெரியவள் ஆகிவிட்டேன்’ என்ற எண்ணம் தோன்றும். சுயமாகச் சிந்தித்து, முடிவெடுக்கும் மனநிலை உருவாகும். பெற்றோர், சிறிய பெண்ணாக நடத்துவதை நினைத்துக் கோபம் தோன்றும். இந்த வளர் இளம் பருவத்தில் எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு ஏற்படும். ஒரு ஆண் “நீ அழகாக இருக்கே” என்று சொன்னால் ஈர்ப்பும் கிளர்ச்சியும் தோன்றுவது இயல்பு. இந்த வயதில் தோன்றும் கிளர்ச்சியான எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாதுகாப்பற்ற உடலுறவினால் நிறைய பெண்கள் கர்ப்பம் அடைகின்றனர். பால்வினை நோய்களுக்கும் ஆளாகின்றனர். இதைத் தடுக்க, பிள்ளைகளிடம் பெற்றோர் பேசுவது அவசியம். படிக்கும் வயதில் இதுபோன்ற எண்ணங்களுக்கு மதிப்பு அளித்தால், எதிர்காலம் என்னவாகும் என்பதைப் புரியும் வகையில் விளக்க வேண்டும்.

பள்ளிக்கூடங்களில் இதைச் சொல்லிக் கொடுக்கும் செக்ஸ் கல்விக்கு முக்கியத்துவம் தந்தால், தேவையற்ற பிரச்னைகளிலிருந்து பெண் பிள்ளைகளைப் பாதுகாக்க முடியும்.


வெள்ளைப்படுதல் ஏன்?

அந்தரங்க உறுப்பில் இருந்து வெள்ளையாகத் திரவம் கசிவதே வெள்ளைப்படுதல். மாதவிடாய் சமயங்களில், சில பெண்களுக்கு இந்த வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கலாம். இது இயல்புதான். சாதாரண நாட்களிலும் வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தால், மலத்தின் மூலம் குடற்புழு அந்தரங்க உறுப்பில் பட்டு, தொற்று ஏற்பட்டு வெள்ளைப்படுதல் பிரச்னையை உருவாக்கி இருக்கலாம். வெள்ளைப்படுதலால் உடல் பலவீனமாகிறது என்று சொல்லும் கருத்து தவறு. வெளியாகும் திரவம் நாற்றத்துடனோ, நிறம் மாறியோ, அரிப்புடனோ இருந்தால், அதற்கு நிச்சயம் சிகிச்சை தேவை.

மாதவிலக்கு வலி ஏன்?
மாதவிலக்கு சமயத்தில் கருமுட்டை வெளியேறுவதால், வயிற்று வலி ஏற்படுகிறது. இதனுடன் ஹார்மோன் மாற்றங்கள் பிரச்னை இருந்தால் வலி அதிகரிக்கும். குழந்தை பெறாத பெண்களுக்கு வயிறு வலித்து, மாதவிலக்கு வருவது நல்ல அறிகுறிதான். இதற்குப் பயம் தேவை இல்லை. குழந்தை பிறந்த பெண்களுக்குக் கர்ப்பப்பையின் வாய் பெரிதாகிவிடுவதால் மாதவிலக்கு நேரத்தில் வலி இருக்காது. ஆனால், குழந்தை பெறாத பெண்களுக்குக் கர்ப்பப்பை வாய் (Pin hole) மிகவும் சிறியதாக இருப்பதால், ரத்தப்போக்கை வெளியேற்ற, கர்ப்பப்பை சுருங்கி விரியும்போது வலி உண்டாகிறது.

அதிகமான வலி இருந்தால், வலி அறிகுறிகள் தெரிந்ததுமே, பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். இளஞ்சூடான நீரில் குளித்தால், வயிறு, கால், முதுகுவலிகள் குறையும். தாங்க முடியாத வலி வந்து, அன்றாட வாழ்க்கையைப் பாதித்தால், நிச்சயம் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற வேண்டும்.

சீரற்ற மாதவிலக்கு?
தற்போது பல பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிலக்கு வருவது இல்லை. இதற்கு முக்கியக் காரணம், வாழ்க்கைமுறை மாற்றங்கள். பெரும்பாலானோர், ‘பிசிஒடி’ எனும் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சினைப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுவதால், சரியான மாதவிலக்கு ஏற்படுவது இல்லை. இதற்கு, மருத்துவர் ஆலோசனையுடன் மாத்திரையை சாப்பிட்டுவர, முன்னேற்றம் தெரியும். தைராய்டு பிரச்னையாலும் சீரற்ற மாதவிலக்கு ஏற்படலாம்.

இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, கொழுப்பு நிறைந்த, துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றைச் செய்யலாம்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
பெண் குழந்தைகள் பருவமடையும் போது ஏற்படும் மாற்றங்கள்


அந்தந்த வயது வரும்போது, அதன் உடலில் ஏற்படப்போகும், பாலியல் ரீதியான மாற்றங்களை அக்குழந்தையின் தாயோ, மூத்த* சகோதரியோ, அத்தையோ, பாட்டியோ, சொல்லி விளங்க வைக்க* வேண்டும். அதாவது அந்த மாற்ற*ங்கள் உடலில் இருக்கும் ஹார்மோன்களால்தான் இந்த மாதிரியான மாற்ற*ங்கள் நிகழும் என்பதையும் இந்த மாற்ற*ங்கள் நிகழ்ந்தால், நீ சிறுமி என்ற அந்தஸ்த்தில் இருந்து பெண் என்ற நிலைக்கு உயர்கிறாய்!

என்பதையும் சொல்லி அக்குழந்தையின் மனதில் பயத்தை போக்குவதன் மூலம், அக்குழந்தைக்கு தைரியத்தையும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அக்குழந்தை பூப்பெய்தும் போது தனது உடலில் ஏற்படும் மாற்ற*ங்களை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தையும், மனோதிடத்தையும் ஏற்படுத்த* வேண்டும்.

அப்ப*டி உங்களுக்கு சொல்ல*த் தெரியவில்லை என்றால், தகுதியான பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும். அவரும் உங்கள் முன்னிலையிலேயே அக்குழந்தையின் உடலில் ஏற்படும் மாற்ற*ங்களை தெரியப்படுத்தி, அக்குழந்தையின் மனதை பக்குவப்படுத்த*லாம்.

பெண்ணுக்கு ஏற்படக்கூடிய பொதுவான பாலியல் மாற்ற*ங்கள் :

மார்பகங்களில் ஏற்படக்கூடிய மாற்ற*ங்கள்
பெண் உறுப்பில் ஏற்படக்கூடிய மாற்ற*ங்கள் (முடி வளர்தல் உட்பட*)

மாத விடாய் வருவதால் உடலில் ஏற்படும் மாற்ற*ங்கள் :

1. எத்தனை நாளைக்கு இரத்தப் போக்கு இருக்கும்?

2. மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற்படுமா?

3. மாதவிடாய் காலத்தில் தான் தலைக்கு குளிக்கலாமா?

4. மாதவிடாய் காலத்தில் தான் விளையாடலாமா?

5. மாதவிடாய் காலத்தில் மேற்கொள்ள* வேண்டிய முன்னெச்ச*ரிக்கைகள் என்னென்ன?

என்பதை பற்றி பெண் குழந்தைகளுக்கு பக்குவமாக சொல்லி தர வேண்டும். ஆண்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கண்டிப்பாக சொல்லி தரவேண்டும்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#7
according to me, iopine we must do the following :-

1) we must teach them ot be self prepared all the time to face menstrual problems.
2) we must teach them not to be afraid.
3) we must teach them tht it is quite natural and not to feel ugly or ashamed because of it.
4) we must also educate them that they can carry on their tasks as usual without refraining from any work.
5) i had seen students taking leave for 4 days every month... i used to call the parents and advise them.
6) nowadays it is said that certain simple yogas could be done at that time... to reduce stomach pain and over flow...
7) it is not good to do self medication.

my mother will not allow me to eat barolgon or any tablets.... (iam proud of my mom. she taught me how to face pains... probably she knew earlier that i would face more and more pains in life...)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.