Puberty of Girls at younger age-சின்ன வயதில் பெண் குழந்தைகள் பருவம&#29

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சின்ன வயதில் பெண் குழந்தைகள் பருவமடையும் பிரச்சினைஅதிகப்படியான கொழுப்புச் சத்து மற்றும் வேதியல் பொருட்கள் நிறைந்த உணவுகளாலும், முறை தவறிய உணவுப் பழக்கங்களாலும் சீக்கிரமே உடல் பருமன் அடைந்துவிடுவார்கள். அதனால் சிறுவயதிலேயே பெண்கள் பூப்படைந்து விடுகிறார்கள். பரம்பரை காரணமாகவும், உடல் மன ரீதியாக எதாவது பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் சிறுவயதிலேயே பூப்படைந்துவிடுவார்கள்.


அதுமட்டுமல்ல, இயல்பாகவே பருவம் அடையும் வயது இப்போது குறைந்துவிட்டது. அதனால், இதுபற்றி கவலைப்படவேண்டிய தேவையில்லை. ஆனால், மனதளவில் குழந்தைக்கு பயம் ஏற்படாத அளவுக்கு மாதவிடாய் பற்றி தாய் எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளியில் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு இதுபற்றிய கல்வியை புகட்டவேண்டும்.

பருவம் வந்த பெண்களுக்கு ஓரளவு கொழுப்புச் சத்து, அதிகமான புரதச் சத்து தேவைப்படுகிறது. கருப்பை வளர்ச்சிக்கு கொழுப்பும் புரதமும் மிகவும் அவசியம். அதனால்தான் நம்முடைய முன்னோர் பெண் குழந்தைகள் பூப்படைந்ததும் கொழுப்பு, புரதம் உள்ள உளுந்து கஞ்சி, உளுந்து களி செய்து கொடுத்தார்கள். முட்டை கொடுத்து பிறகு நல்லெண்ணெய் உட்கொள்ள வைத்தார்கள்.

பெண்கள் பருவம் அடைந்த காலங்களில் மேற்கண்ட உணவுகளை கொடுத்து வருவதே உடல் ரீதியாக அவர்களுக்கேற்ற சிறந்த மருத்துவம் ஆகும்
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: சின்ன வயதில் பெண் குழந்தைகள் பருவமடையு

Premature sexual maturation is a common reason for referral to a pediatric endocrine unit. There is a significant overlap between precocious puberty and normal variations. The timing of onset of puberty seems to be decreasing all over the world especially in girls and newer age limits for the diagnosis of precocity are being suggested.

It is therefore important to clearly differentiate between the normal and the abnormal and longer periods of observation are often needed before a precise diagnosis is made. Parental concerns about sexual precocity appear to be greater in girls than in boys but as pediatricians we need to address these issues in both sexes.

Variations in the timing of normal puberty

Puberty results from the awakening of a complex neuroendocrine mechanism. Menarche is a major landmark event in girls but no such event occurs in boys, making it difficult to interpret historic data in boys.


The generally accepted starting point of puberty in boys is enlargement of the testes beyond 3 ml and the equivalent change in girls is breast budding (Tanner breast stage

2). Appearance of axillary and /or pubic hair is not necessarily a sign of onset of puberty in either sex because adrenarche occurs independently of pituitary-gonadal maturation (gonadarche).

Similarly menarche in girls and appearance of facial hair in boys are late signs and mark almost the end of the pubertal process.

The timing of onset and tempo of puberty are not inter-linked and early onset does not necessarily mean a rapid progression of the pubertal process.The mean age of attainment of testicular volume of 4 mL has not shown much change and is largely constant at around 11.4 years but the mean age at which girls attain breast stage two (B2) seems to be declining around the world.

It has also been noted that although the onset of breast development is seen earlier in girls, the duration between breast budding and menarche is increasing, suggesting that unidentified external factors may cause breast development earlier without affecting menarcheal age.Food and energy availability influence sexual maturation and these are unequally distributed around the world. Even within countries the age of beginning of puberty needs to be assessed separately in urban and rural areas and in well-off and under-privileged conditions, especially in the developing parts of the world such as India.In Western Europe where data for nearly last 200 years is available, the age of menarche can be observed to have decreased from 17 years to 12.8 years.

In urban India the age of menarche was shown to be 12.6 years as per Agarwal’s data, which is similar to the age of menarche in the developed world.


Although large-scale data on the recent age of menarche in rural India is lacking, there is a general observation that age of menarche is late, around 15-16 years in rural girls who are relatively thinner and undernourished.In countries such as China and Senegal from where large data is available, the mean age of menarche in rural areas is still as high as 16.1 years.

Taken together these data highlight the crucial role of socio-economic and nutritional conditions on the timing of puberty. There also seems to be a negative impact of early involvement in intense physical activity and energy expenditure on the timing of puberty.Secular trends: As stated earlier the age of menarche has been shown to have reduced from the 19th to 21st century.

A decline of about 0.3 year per decade could be calculated from Norwegian and Finnish data(8). This secular trend of progressive reduction in the age of menarche was very pronounced in US and Western Europe from 1960 to the 1990s.

Recently however, the secular trend towards earlier menarche in US and Western Europe seems to have halted(1,11). Agarwal, et al. have mentioned the age of menarche to be 12.6 years in their paper in 1992 and in author’s own studies done in 2005 the age of menarche is 12.5 suggesting that even in urban India the drop in age of menarche could be slowing down (unpublished observations).

There is a north to south gradient in the age of menarche with girls in the southern parts achieving an earlier menarche suggesting the influence of climatic conditions. It has also been shown that more girls attain menarche in winter than summer suggesting inhibitory effect of photo stimulation on puberty.Mechanisms and hypotheses for the secular trend and variation in the timing of puberty: Inquisitive researchers and clinicians have tried to find the reasons for the phenomenon of decreasing menarcheal age and certain conclusions have been reached. Improved nutrition and body mass seem to be the most important contributors to early sexual maturity. Frisch, et al. have shown that a critical amount of fat mass is needed for the onset of puberty and this has been confirmed by many others.With urbanizations, sedentary life style and improving nutrition, there is a sharp rise in urban obesity in India as shown by many recent reports(15-17). Leptin, IGF-1, ghrelin and most importantly insulin are related to energy availability and body size and they have a permissive role in the initiation of puberty. In fertile races like Indians and Africans the onset of puberty is probably programmed to be early and with improved nutrition, circulating levels of energy availability markers such as leptin and insulin are high, allowing the puberty to start early.Various genes, such as CYP17, and androgen receptor genes have been shown to be involved in the determination of timing of puberty and it is suggested that a cascade of genes may determine the variations in the timing of pubertal onset. Estrogens metabolizing gene polymorphism, but not estrogens receptor gene polymorphisms, have been shown to be associated with the early onset of menarche.Protein source of food in early life could also influence the timing of puberty because high animal vs. vegetable protein ratio at ages 3-5 yr is associated with early puberty even after controlling for body size. The sum effect of phytoestrogens in the diet is clearly anti-estrogenic. A phytoestrogens rich diet may delay puberty and the converse may initiate the puberty early.Intense psychological stress such as at the time of war is known to delay the onset of menarche significantly as suggested by data from Bosnia and Croatia. Finally, many endocrine disrupting chemicals such as Dichloro-Diphenyl-Trichloro-Ethane (DDT) have been shown to be in a higher quantity in children who enter puberty early. The timing of exposure to these chemicals probably influences the timing of puberty and may explain the phenomenon of early puberty in adopted children from the developing countries.Age thresholds for the definition of sexual precocity: Establishing appropriate age limits for the distinction between precocious and early (premature) puberty is crucial to restrict diagnostic evaluation and therapeutic intervention.The standard accepted age limit of precocious puberty until late 1990 was onset of puberty before the age of 9 years in boys and 8 years in girls. In the United States of America, due to the general trend of early sexual maturation in the population of children, particularly colored races, there is a suggestion for changing the age limits for defining precocious puberty.

The Lawson Wilkins Pediatric Endocrine Society has recommended that these limits may be lowered further to 7 years in Caucasian and 6 years in African-Americans girls whereas there is no change suggested for boys this phenomenon appears to be global and the situation may be similar in India in urban well-nourished areas.The disadvantage of lowering the age limits is that we could miss major medical problems such as intracranial pathology in girls between the ages of 6 and 8 who present with premature sexual maturation. In a recent review of 223 patients referred for sexual precocity occurring between 7 and 8 years in white girls and 6 and 7 years in black girls, Midyett et al found that the occurrence of sex characteristics between 6 and 8 years is not necessarily benign and needs diagnostic and therapeutic intervention.


Thus, the question of age thresholds for definition of sexual precocity does not have an unequivocal answer, at least at the present timeTo conclude, the individual variability in the timing of onset of puberty seems to be determined by genetic control of a complex cascade of signals in the hypothalamus. This process is partially influenced by peripheral and environmental signals, which essentially play a permissive role. Explanation of the phenomenon of early and precocious puberty thus remains a continuing challenge to clinicians and researchers alike. Newer age limits for the diagnosis of precocious puberty should be used with caution at least at the present time.
V.V. Khadilkar,
Consultant Pediatric Endocrinologist,
Hirabai Cowasji Jehangir Medical Research
Institute and Jehangir Hospital,
Pune and Bombay Hospital,
Mumbai, India
and

R.G. Stanhope,

Consultant Pediatric Endocrinologist,
Great Ormond Street Hospital and Institute of Child Health,
Guildford Street, London.
Correspondence to:

Dr. Vaman Khadilkar,

Consultant Pediatric Endocrinologist,
Hirabai Cowasji Jehangir Medical Research Institute,
Jehangir Hospital, 32, Sassoon Road,
Pune 411 001, India.

courtesy: indianpediatrics.net
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3
Re: Puberty of Girls at younger age-சின்ன வயதில் பெண் குழந்தைகள் பருவம

Useful guidance for the necessary parents.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்

மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்!
''பட்டுப் பாவாடை, இரட்டைச் சடைன்னு துள்ளித் திரிந்த இந்தக் குட்டிப் பெண்ணா பெரிய மனுஷியாகிவிட்டாள்!?'' - சற்றே அதிர்ச்சி கலந்த இந்த ஆச்சரியக் குரல்களை இப்போது அதிகம் கேட்க முடிகிறது.

10 வயதில் பாவாடை அணிந்த பட்டாம்பூச்சியாகக் குதூகலித்தப் பருவத்தை இன்று நினைத்தாலும் நமக்குத் தித்திக்கிறது. உறவுக்காரர்களின் மடியில் படுத்துறங்கி, அவர்களின் விரல் பிடித்து வெளியிடங்களுக்குச் சென்று ஆனந்தப்படும் வாய்ப்புகள் இப்போதைய சிறுமிகளுக்கு வாய்ப்பது இல்லை. காரணம், பள்ளிக்குச் செல்லும் பால்யம் மாறாத பருவத்திலேயே உடலாலும் உணர்வாலும் அவர்கள் பெரும் மாற்றத்தைச் சந்திக்கின்றனர்.

[TABLE="align: right"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
10 வயதுக்குள்ளாகவே பூப்பெய்திவிடும்போது, உடல் - மனரீதியாக ஒரு சிறுமி எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன? அவர்களுக்கான தீர்வு என்ன என்பதைப் பற்றி ஒவ்வொரு பெற்றோரும் அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.

''சமீப காலமாக 8-9 வயதிலேயே சிறுமிகள் பூப்பெய்திவிடுகின்றனர். இதற்கு மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் என இரண்டு காரணங்கள். சுற்றுச்சூழல் சார்ந்த காரணியில், உடல் பருமன் அதிகரிப்பதுதான் பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. அவர்கள் சாப்பிடும், உபயோகப்படுத்தும் சில பொருட்களில் பெண் ஹார்மோன் என்று சொல்லக்கூடிய ஈஸ்ட்ரோஜென் அதிகமாக இருக்கிறது. ஈஸ்ட்ரோஜென்னில் ஜீனோ ஈஸ்ட்ரோஜென், பைட்டோ ஈஸ்ட்ரோஜென் என்று இரண்டு வகைகள் உண்டு.

இதில் ஜீனோ ஈஸ்ட்ரோஜென் என்பது பிளாஸ்டிக் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பதப்படுத்தப்பட்ட சில உணவுகள், ஃபேஷியல் போன்ற காஸ்மெட்டிக் பொருட்களில் அதிகமாக இருக்கிறது. சோயா போன்ற உணவுப் பொருட்களில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென் அதிகமாக உள்ளது. ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற பொருட்கள் மற்றும் உணவு வகைகளைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகி, பூப்பெய்தலும் மிகக் குறைந்த வயதிலேயே நிகழ்கிறது.மரபியல் ரீதியான பிரச்னையில், பூப்பெய்துவதைத் தூண்டும் எல்.ஹெச். மற்றும் எப்.எஸ்.ஹெச். ஹார்மோன்கள் இளம் வயதிலேயே அதிகமாகச் சுரப்பது ஒரு முக்கியக் காரணம். இவை தவிர, பிட்யூட்டரி சுரப்பியின் அருகிலேயே கட்டி உண்டாகுதல், தலையில் அடிபடுவது, மூளைக்காய்ச்சல் நோய், கருப்பையில் நீர்க்கட்டி உண்டாதல் போன்ற பிரச்னைகளால் பெண் குழந்தைகளுக்கு மேற்கண்ட ஹார்மோன்கள் முன்கூட்டியே சுரக்க ஆரம்பிக்கின்றன.

சிறுவர்களுக்கு பிட்யூட்டரி சுரப்பி அருகில் கட்டி அல்லது பிட்யூட்டரி சுரப்பியில் பாதிப்பு, விரைப்பையில் கட்டி போன்ற காரணங்களால் பருவம் அடைதல் விரைவாக நடக்கிறது (இது வெளியே தெரிவது இல்லை என்றாலும், மன ரீதியாக சில மாற்றங்களை ஏற்படுத்தும்).

ஒரு சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ பருவம் அடைவதற்கான அறிகுறிகள் 7-8 வயதுக்கு முன்பாகவே தெரிய ஆரம்பித்தால், உடனடியாக என்டோகிரைனாலஜி அல்லது மகப்பேறு மருத்துவர்களைச் சந்தித்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.

மிக சீக்கிரத்தில் பருவம் அடைவதால், 'என்ன பிரச்னை?’ என்று நினைக்கலாம். ஒரு ஆண் அல்லது பெண் பருவம் அடையும்போது அவர்களின் எலும்பின் வளர்ச்சி நின்று, ஒன்றுகூடுகிறது. இதனால் கடைசிக் கட்ட உயரம் என்பது குறைகிறது.

பெண்களுக்கு உடல் ரீதியாக, சமூக ரீதியாகப் பல்வேறு பிரச்னைகளும் வர ஆரம்பிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மருத்துவச் சிகிச்சை மூலம் பூப்பெய்துதலை சில வருடங்கள் தள்ளிப்போட முடியும்'' என்கிறார் சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முதுநிலை நாளமில்லா சுரப்பிகள் சிகிச்சை நிபுணர் (என்டோகிரைனாலஜிஸ்ட்) ஆர்.பரத்.

குழந்தைகள் இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச்சத்து மற்றும் உடல் எடை மேலாண்மை நிபுணர் ஷைனி சந்திரன் கூறும் யோசனை இது...
''உடல் பருமன் அதிகரிப்பது மட்டும் அல்ல... உடல் உழைப்பு குறைந்துபோனதும்கூட இந்தப் பிரச்னைக்கான காரணம். எனவே, குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கச் செய்யாமல், ஓடியாடி விளையாட உற்சாகப்படுத்த வேண்டும்.

கொழுப்புமிக்க உணவு வகைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடலாம். இறைச்சிக்காக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடையை அதிகரிக்க ஹார்மோன் மருந்து வகைகள் தரப்படுகின்றன. எனவே பிராய்லர் வகைக் கோழிக் கறியைத் தவிர்த்து, நாட்டுக் கோழி இறைச்சியைச் சாப்பிடலாம்.

கால்சியம் சத்துக்காக அதிக அளவில் பால் அருந்துவது தவறு. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், கீரை வகைகளைச் சாப்பிடலாம். இவற்றில் கால்சியமும் நிறைய உள்ளது'' எனப் பட்டியல் இடுகிறார் ஷைனி.

சிறுமிகள் பூப்பெய்தும்போது ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளைச் சரிசெய்வது குறித்துப் பேசும் மன நல மருத்துவர் செந்தில்வேலன், ''நம் கலாசாரத்தில், 'ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால், அவள் திருமணத்துக்குத் தயார்’ என்பதை ஊராருக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் சடங்கு செய்வார்கள். இது அந்தப் பெண்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரு பெண் பூப்படைந்துவிட்டாள் என்றாலே, 'ஆண்கள் எதிரில் செல்லக் கூடாது; தொட்டுப் பேசக் கூடாது’ என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போடுவார்கள். நேற்றுவரை தன்னுடன் விளையாடிய பையன்களுடன் பேசவே கட்டுப்பாடு எனும்போது, அது அவர்களது மனதில் பெரும் குழப்பத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

பருவம் அடையும்போது செக்ஸ் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன. இதனால் மன ரீதியாக சில பிரச்னைகள் எழும். வளர்நிலைப் பருவத்தில் ஒரு பெண் தன் வயதுக்கு நிகரான மற்ற பெண்களைப் பார்த்துத்தான் தன்னை ஒப்பிட்டுக்கொள்வார். பூப்பெய்தும் பருவத்தில், சக வயது நண்பர்களைவிட அவர்களது உயரம், உடல் எடை போன்றவை அதிகரிக்கும். இது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.

தவிர, முகப்பரு, மாதவிடாய் போன்ற மாற்றங்கள் அசௌகரியமாக, தினசரி வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியவையாக இருப்பதால், மன ரீதியான பாதிப்புகளும் அதிகரிக்கும்.

சிறு வயதிலேயே ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டாலும், மனதளவில் அவள் இன்னமும் குழந்தையாகத்தான் இருப்பாள். இந்த மாதிரியான நேரத்தில் பெற்றோர்கள் அவளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதற்குப் பதில், அன்பாக, ஆதரவாக இருக்க வேண்டும். அவளுக்குப் புரியும் விதத்தில் சில விஷயங்களை பக்குவமாக, நாசூக்காகச் சொல்லித்தர வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் அவளுக்கு ஆதரவாக இருப்பதன் மூலமும் மன ரீதியாக எழும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கலாம்'' என்கிறார் நம்பிக்கையோடு.

தள்ளிப்போடுவது சாத்தியமே!


சென்னை அடையாறைச் சேர்ந்த சைல்ட் மற்றும் அடலசன்ட் நியூராலஜிஸ்ட் மருத்துவர் வி.முருகன், ''சங்க காலத்தில், 'பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை’ என வகைப்படுத்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கைப் பருவங்களுக்கு இடையே இருந்த இடைவெளி இப்போது சுருங்கிவிட்டது. 100 வருடங்களுக்கு முன்பு, சராசரியாக 15 முதல் 17-வது வயதில்தான் பெண்கள் பூப்பெய்தினார்கள். ஆனால், இன்றோ, 6 முதல் 13 வயதுக்குள் சிறுமிகள் பூப்பெய்திவிடுகின்றனர்.

நம் மூளையில் 'ஹைபோதலாமஸ்’(hypothalamus) எனும் ஒரு பகுதி பிறந்ததில் இருந்தே சுவிட்ச் ஆஃப் மோடில்தான் இருக்கும். உரிய வயது வரும்போது அந்த சுவிட்ச் ஆன் ஆகி பால் உணர்வுத் தூண்டுதலை ஏற்படுத்தும்.

அடுத்து, 'ஹைபோதலாமஸ்’ பிட்யூட்ரியைத் தூண்டிவிட்டு, மாதவிடாய் சுழற்சிக்கான ஹார்மோனைத் தூண்டும். அப்போது கட்டிகள் தோன்றும். இந்த கட்டிகள் ஹைபோதலாமஸிலும் வரலாம்; பிட்யூட்ரியிலும் வரலாம்.

பூப்பெய்தும் பருவத்தில், பெண்கள் உடல்வாகைப் பொறுத்து இந்தக் கட்டிகள் உருவாகும். சிறு வயதிலேயே கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகள் செய்து பூப்பெய்தும் காலத்தை தள்ளிப் போடலாம்.

குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு, பாரம்பரிய உணவுப் பழக்கத்தையும் போதிய உடல் பயிற்சிகளையும் கற்றுத் தருவது பெற்றோர்களின் கடமை!''
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.