Pudhina helps to get rid of Bad Breath & Gas problems-வாய் துர்நாற்றம் மற்றும் வாயுப

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வாய் துர்நாற்றம் மற்றும் வாயுப் பிரச்சனைக்கு உடனடி தீர்வளிக்கும் புதினா!

தினமும் நாம் காய்கறி சந்தையில் பார்க்கும் ஒரு உணவுப் பொருள் மட்டுமல்ல புதினா. இது ஒரு சிறந்த மூலிகை உணவும் கூட. சொல்லப் போனால் இது ஒருவகை மூலிகை உணவென்றும், இதனால் பல உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வுக் காண முடியும் என பலருக்கும் தெரியாது.

புதினாவை உணவில் சேர்த்து தான் சாப்பிட வேண்டும் என்றில்லை. வெறுமென அதை நீரில் கழுவி வாயில் மென்று கூட சாப்பிடலாம்.

தினமும் புதினாவை உணவில் சேர்த்துக் கொள்வதால் வாய் துர்நாற்றம் என்ற பிரச்சனையை தூர விரட்ட முடியும். மற்றும் புதினாவில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் செரிமான கோளாறுகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது. உங்கள் உடலில் செரிமான கோளாறு ஏற்படுவதற்கு முக்கிய காரணமே நார்ச்சத்து குறைபாடு தான், இதை சரி செய்ய நீங்கள் தானிய உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் புதினா, கர்ப்பக் காலத்தில் ஏற்படும் காலை நேர உடல்நல குறைபாட்டை சரி செய்ய வெகுவாக பயனளிக்கிறது. மற்றும் முகப்பரு, முகப்பொலிவு, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, நோய் தொற்று, இருமல், சளி, வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, வயிற்று உப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள் போன்ற பல உடல்நலக் கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.
 

cuteyammmu05

Friends's of Penmai
Joined
Jun 26, 2012
Messages
312
Likes
258
Location
chennai
#2
Re: வாய் துர்நாற்றம் மற்றும் வாயுப் பிரச்ச&#29

useful tips
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3
Re: Pudhina helps to get rid of Bad Breath & Gas problems-வாய் துர்நாற்றம் மற்றும் வாயு&#2

Very useful detail
 
Thread starter Similar threads Forum Replies Date
kasri66 Snacks, Sweets & Festival Recipes 13
U Ask Question 2
U Ask Question 2
U Ask Question 2
U Ask Question 1

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.