purattasi maavilakku

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,501
Likes
84,479
Location
Bangalore
#2
Welcome to Penmai....friend.


Here is the method to prepare the Puratasi Maavilakku shared by our friend Aparna.




தேவையானவை:

பச்சரிசி-1 கப், வெல்லம் பொடித்தது-¼ கப், நெய் சிறிதளவு.

செய்முறை:

அரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, உலர்த்திக்கொள்ளவும். பிறகு இதனை அரைத்து சலித்துக்கொள்ளவும். இதனுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து ஈரமாக இருக்கும்போதே நடுவில் சிறு குழி செய்தவாறு உருண்டைகளாக பிடிக்கவும். குழியில் நெய் ஊற்றி விளக்கேற்றவும்.

 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,501
Likes
84,479
Location
Bangalore
#3
This one is shared by our friend, vijigermany


புரட்டாசி சனிகிழமை மாவிளக்கு

பொதுவாக எல்லா சனிக்கிழமைகளும் விஷேசம் என்றாலும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு மிகவும் உகந்த நாள். புரட்டாசி சனிக்கிழமை puratta மாவிளக்கு ஏற்றுவது வழக்கம். திருப்பதி பெருமாளை நினைத்து மாவிளக்கு ஏற்றுவார்கள். . சிலர் புரட்டாசி திருவோண நக்ஷத்திரத்தில் மாவிளக்கு ஏற்றுவார்கள். அவரவர் அகத்து வழக்கப்படி ஏற்றவும்.

புரட்டாசி சனிக்கிழமை காலை ஸ்நானம் நித்யகர்மனுஷ்டானம் செய்து பிறகு ஒரு மன்னார்குடி சோம்பு அல்லது ஒரு பாத்திரத்திற்கு நான்கு புறமும் திருமான் ஸ்ரீசூர்ணம் இட்டு அதை இரண்டு கைகளாலும் ஏந்திக்கொண்டு எழுமலையானை நமஸ்கொண்டு கரித்து வெங்கடரமணா கோவிந்தா என்று உரக்க சொல்லி அகத்தில் பெண்டிரை இரண்டு பிடி அரிசி சேர்த்து கொண்டு பிறகு அக்கம் பக்க வீடுகளில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் பிக்ஷை எடுத்து வரவேண்டும்.

அந்த அரிசியை பெருமாள் சன்னதியில் ஒரு குத்துவிளக்கு ஏற்றிவைத்து அதற்க்கு முன்பாக வைத்து பெரிய பெருமாளை நினைத்து சேவிக்கவேண்டும், பால் பழம் நிவேதனம் செய்து கற்பூர ஹாரத்தி செய்து சேவிக்கவேண்டும். பிறகுதான் காபி சாப்பிடவேண்டும். இதை போல பிரதி வாரம் அல்லது வசதிப்படி செய்யவேண்டும்

. பிறகு மாவிளக்கு ஏற்றுகின்ற அன்று அந்த அரிசியை கொண்டு தேவையான அளவு மாவு திரித்து வெள்ளம் முந்திரி பருப்பு முதலியன சேர்த்து நெய் சேர்த்து இரண்டு விளக்காக திரிபோட்டு பெருமாள் சன்னதிக்கு முன்பாக குத்துவிளக்கு ஏற்றிவைத்து அதை பெருமாளாக சேவித்து அதற்க்கு முன்பாக மாவிளக்கு ஏற்றி அதன் இருபுறமும் உடைத்த புது தென்கைகூடிகளையும் பழம் வெற்றிலை பாக்கு வைத்து தூபம் காட்டி நீர்விலாவி பால் நிவேத்யம் செய்து சேவிக்கவேண்டும்.

பிறகு காபி சாப்பிடலாம். அன்று பிக்ஷை அரிசி மீதம் இருந்தால் அதையும் சேர்த்து அலங்கார தளிகை வடை பாயசத்துடன் செய்து திருப்பதி பெருமாளை படத்திலோ பிரதிமையிலோ விளக்கிலோ ஆவாஹனம் செய்து வேங்கடேசா அஷ்டோத்திரம் செய்து பூஜிக்கவேன்டும். முடிந்த அளவு பிராமன போஜனம் ததியாரதனை செய்யவேண்டும். சில இல்லங்களில் புரட்டாசி திருவோணத்தில் மாவிளக்கு ஏற்றி பூஜை செய்வார்கள். பொதுவாக நவராத்திரி மஹாலய பக்ஷம் தவிர மற்ற சனிக்கிழமைகளில் மாவிளக்கு ஏற்றுவார்கள். அவரவர் இல்லத்து பெரியவர்களை கேட்டு அனுசரிக்கவேண்டும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.