Reason for Body Fatigue -உடல் விரைவில் களைப்படைய காரணம் என்ன?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உடல் விரைவில் களைப்படைய காரணம் என்ன?


நம் முன்னோர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் எவ்வளவு தான் முக்கிய வேலையாக இருந்தாலும், அந்த வேலை செய்ய எண்ணம் இல்லாமல் விரைவில் களைப்படைந்து விடுகிறோம். இதற்கு காரணம் நமது வாழ்க்கை முறை தான்.

உடலில் அதிக களைப்பு இருந்தால், உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். களைப்பு பலவித நோய்களுக்கும் அறிகுறியாக உள்ளது. உதாரணமாக, உடலில் தைராய்டு, எய்ட்ஸ், அனீமியா போன்ற நோய்களுக்கு உடல் களைப்பு ஒரு அறிகுறி.

மேலும் அதிக வேலையின் காரணமாக மனஅழுத்தம் இருந்தாலும், உடல் மிகுந்த சோர்வடைந்துவிடும்.

சரியான உணவு பழக்கம் இல்லாதது, நாள்பட்ட வலி போன்றவையும் உடல் சோர்வுக்கு காரணங்களாகும். ஆகவே இவற்றை சரிசெய்ய வேண்டுமென்றால், நாம் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ வேண்டும்.

• சரியாக தூங்காமல் இருந்ததால் உடலில் சோர்வு ஏற்படும். அதிலும் உடலுக்கு குறைந்தது 6-8 மணிநேர ஓய்வானது தேவைப்படுகிறது. அவ்வாறு சரியான ஓய்வு உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் உடல் சோர்வு ஏற்படும்.

• எப்போது பார்த்தாலும் உடல் களைப்புடன் இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்று இருந்தால், அது உடலில் ஏற்படும் நோயான அனீமியா, தைராய்டு போன்றவற்றிற்கு அறிகுறியாகும்.

• இன்றைய மார்டன் உலகில், வேலைக்கு சென்றால், குறைந்தது 8-9 மணிநேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது. மேலும் அலுவலகம் நீண்ட தூரத்தில் இருப்பதாலோ அல்லது வேறு ஏதாவது வேலைக்காவோ, பயணம் செய்யும் நிலை உள்ளது. ஆகவே உடல் பலமிழந்து சோர்வடைகிறது.

• ஒருவர் அதிக மன அழுத்ததுடனோ அல்லது மன இறுக்கத்துடனோ இருந்தால், அவையும் உடலை அதிக அளவில் களைப்படையச் செய்கின்றன.

• உடல் ஆரோக்கியத்துடன் இருக்க போதுமான அளவு ஆரோக்கியமான உணவானது உடலுக்கு தேவைப்படுகிறது. ஆனால் நிறைய பேர் உடல் எடையை குறைக்க, உடலை பிட்டாக வைப்பதற்கு என்று நிறைய ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்து, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை அதிகம் சேர்க்கின்றனர். இதனால் உடல் விரைவில் களைப்படைகிறது.

• ஒல்லியாக இருப்பவர்களை விட குண்டாக இருப்பவர்களின் உடல் விரைவில் களைப்படைந்துவிடும். ஆகவே அதிக உடல் எடையும் களைப்படைவதற்கு ஒரு காரணம்.

எனவே நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டு, உடலுக்கு தேவையான ஓய்வை கொடுத்து, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
Re: Reason for Body Fatigue -உடல் விரைவில் களைப்படைய காரணம் என்ன

Thanks for the suggestions.
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#3
Re: Reason for Body Fatigue -உடல் விரைவில் களைப்படைய காரணம் என்ன

Very good info, Latchmy.
 

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,225
Likes
12,698
Location
chennai
#4
Re: Reason for Body Fatigue -உடல் விரைவில் களைப்படைய காரணம் என்ன

nice sharing
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.