Reason for Food Poisoning-உணவே விஷமானால்..? -காரணமும் காரியமும்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உணவே விஷமானால்..? -காரணமும் காரியமும்

உணவே மருந்து’ என்றனர் முன்னோர். ஆனால், மருந்தாக நம்மைக் காக்க வேண்டிய உணவே சில நேரங்களில் ஃபுட் பாய்ஸன் என்ற பெயரால் விஷமாகிவிடுகிறது. உயிர் காக்கும் உணவு இதுபோல விஷமாக ஏன் மாறுகிறது? இரைப்பை குடலியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் கணேஷ் விளக்குகிறார்...




‘‘உயிரினங்களைப் போலவே உணவுக்கும் ஆயுள் உண்டு. சமைக்கப்பட்ட உணவு 5 அல்லது 6 மணி நேரத்துக்குப் பிறகு நுண்கிருமிகளின் ஆக்கிரமிப்பால் கெட்டுப் போகத் தொடங்கும். பாக்டீரியாக்களாலும், சில நேரங்களில் வைரஸ்களாலும் ஏற்படும் இந்த நுண்கிருமிகளின் தாக்கம்தான் உணவை விஷமாக்கி விடுகிறது. கெட்டுப்போன உணவுகளை உண்ணும்போது ஏற்படும் ஒவ்வாமையையே
Food poison என்கிறோம்’’ என்று அறிமுகம் கொடுப்பவர், ஃபுட் பாய்ஸனின் அறிகுறிகள் மற்றும் தவிர்க்கும் வழிமுறைகளைப் பற்றியும் தொடர்கிறார்...

‘‘வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுவதுதான் பெரும்பாலும் இதன் அறிகுறி. உடல் கதகதப்பாக இருப்பது, காய்ச்சல், குமட்டல், பசியின்மை, களைப்பு, அடிவயிற்றில் வலி, மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.

ஒரு நாளுக்கு மேல் அறிகுறிகள் தொடர்ந்தால் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும், வாந்தியும் வயிற்றுப்போக்கும் இருப்பின் உடலில் நீர்ச்சத்து இழப்பு அதிக அளவில் ஏற்படும் என்பதால் சிகிச்சை பெற்றாக வேண்டியது கட்டாயம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், ஸ்டீராய்ட் போன்ற மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள், வயதானவர்கள், நீரிழிவு, புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஃபுட் பாய்ஸன் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். சாதாரணமாக, 2 நாட்களில் குணமாகிவிடும் ஃபுட் பாய்ஸன்கூட இவர்களுக்கு குணமாகாமல் பெரிய சிரமத்தை உருவாக்கிவிடலாம். அதனால், இவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

தேவையான மருந்துகளுடன் திரவ உணவு களை மட்டும் எடுத்துக் கொண்டு, ஒருநாள் உணவைத் தவிர்த்தாலே பெரும்பாலான ஃபுட் பாய்ஸன் தானாகவே சரியாகிவிடும் . மிதமான ஃபுட் பாய்ஸனாக இருந்தால் 4 நாட்கள் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட வேண்டியிருக் கும். காய்ச்சலும் இருந்தால் ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் வயிற்றுப்போக்கு நிற்பதற்கான மருந்துகளும் கொடுக்க வேண்டியிருக்கும். உடலில் சோடியம் அளவு குறைந்திருந்தால் ஐ.வி. என்கிற குளுக்கோஸ் போட வேண்டியிருக்கும்.

கெட்டுப்போன உணவுகளால்தான் ஃபுட் பாய்ஸன் ஏற்படும் என்று இல்லை. சுகாதாரமற்ற தண்ணீரால், சாப்பிட்ட பிறகு போடும் பீடாவால் கூட ஃபுட் பாய்ஸன் ஏற்படலாம். உணவில் கலப்படம் இருந்தாலும் ஃபுட் பாய்ஸன் ஏற்படும்.

பெரும்பாலும் வெளியிடங்களில் சாப்பிடும் உணவுகளால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது என்பதால், வெளியிடங்களில் சாப்பிடும்போது தரமான உணவகங்களில் சாப்பிடுவதே சிறந்தது. குளிர்ந்த உணவுகளில் கிருமிகளின் தாக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் என்பதால் சாலட் போன்ற குளிர்ந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சூடான உணவுகளே ஓரளவு பாதுகாப்பானவை.

வீடுகளில் தேவைக்கேற்ப மட்டுமே சமைக்க வேண்டும். அதிகமாக சமைத்த உணவு கெட்டுப் போய்விட்டால் அதைக் கொட்டுவதற்கு நமக்கு மனம் வராது. ‘வீணாகிறதே’ என்று அந்த உணவையே சாப்பிட்டுவிட்டு, அதன்பிறகு அவதிப்பட வேண்டியிருக்கும். உணவில் பூஞ்சைகள் உருவாவதாலும் ஃபுட் பாய்ஸன் ஏற்படுகிறது என்பதால் குளிர்சாதனப் பெட்டி யில் நாள்கணக்கில் வைத்துக்கொண்டு சாப்பிடுவதும் நல்லதல்ல.

காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை நன்றாகக் கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். குழந்தைகள் சுத்தமில்லாத கைகளுடனோ, சுத்தமில்லாத உணவுகளை சாப்பிடுவதாலோ ஃபுட் பாய்ஸனுக்கு அதிகம் ஆளாவார்கள். அதனால் குழந்தைகளிடம் சுகாதாரத்தை வளர்ப்பது அவசியம். வெளியிடங்களில் அரசு அதிகாரிகள் இன்னும் அதிகமான சோதனை களை நடத்தி தரமற்ற உணவுப் பொருட்களைக் கைப்பற்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உறுதியான குரலில் முடிக்கிறார் கணேஷ்.

பிரத்யேக உணவியல் நிபுணர், மருத்துவர் என உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டும் சச்சின், கமல்ஹாசன் போன்ற பிரபலங்களே ஃபுட் பாய்ஸனுக்கு ஆளானதாக அவ்வப்போது செய்திகளில் படிக்கிறோம். நாம் இன்னும் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே இதிலிருந்து யோசிக்க வேண்டியிருக்கிறது!கெட்டுப்போன உணவுகளால்தான் ஃபுட் பாய்ஸன் ஏற்படும் என்று இல்லை. சுகாதாரமற்ற தண்ணீரால், சாப்பிட்ட பிறகு போடும் பீடாவால் கூட ஃபுட் பாய்ஸன் ஏற்படலாம்...
 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Very useful information on food poisoning effects. thank you!
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
ஃபுட் பாய்சன் எப்படி எதிர் கொள்ளலாம்?

ஃபுட் பாய்சன் எப்படி எதிர் கொள்ளலாம்?


‘ஃபுட் பாய்சன் எதனால் ஏற்படுகிறது?’

- டாக்டர்.சந்திரமோகன், வயிறு மற்றும் குடல் நோய் நிபுணர்.

“சமைக்கும் காய்கறிகள் சரியாகக் கழுவப்படாமல் இருத்தல்; சமைத்த உணவை முறையாகப் பதப்படுத்தாமல் இருத்தல்; சாப்பிடும் தட்டை சரியாக கழுவாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஃபுட் பாய்சன் ஏற்படும். குறிப்பாக, வெளியிடங்களில் சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது. பெரும்பாலான ஹோட்டல்களில் சுத்தமான உணவு, சுத்தமான தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறிதான். ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை. அடுத்த நிலை, குமட்டல். அத்துடன், தலைவலி, ஜுரம் வருவது போல இருக்கும். கடைசி நிலை தீவிரமான வயிற்றுப்போக்கு, வாந்தி.

வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும் உடனே நிறுத்தக்கூடாது. படிப்படியாகத்தான் நிறுத்த வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கால், நமது உடலில் தேவையில்லாத உணவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகிறது; அது நல்ல விஷயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் இன்ஃபெக்*ஷன் ஏற்பட்டு அதனை வெளியேற்றத்தான் இப்படி நடக்கிறது; இதனை உள்ளேயே தடுத்து நிறுத்திவிட்டால் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும். ஃபுட் பாய்சன் முதல்நிலையில் இருந்தால், உணவைக் குறைத்துக் கொண்டாலே சரியாகிவிடும். இரண்டாம் நிலை, கடைசி நிலை ஏற்பட்டால் மருத்துவரிடம் தகுந்த சிகிச்சைகளைப் பெற வேண்டும்.”

ஃபுட்பாய்சன் பற்றி பாரம்பரிய மருத்துவம் சொல்வது என்ன?

- ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால்.

“ஃபுட் பாய்சனில் நிறைய விதங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான வீட்டு வைத்தியத்தை நாம் கொடுக்கக்கூடாது. பாதிப்பைப் பொருத்து வைத்தியம் செய்ய வேண்டும். வெயில் காலங்களில் ஐஸ் போட்ட ஜூஸ்களைக் குடிப்போம். சுத்தமில்லாத தண்ணீரில் தயாரிக்கும் ஐஸ், குல்பி போன்றவற்றால் கூட ஃபுட் பாய்சன் ஏற்படும். எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் வாந்தி, வயிற்றுப்போக்கை உடனடியாக நிறுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், கெட்ட கழிவுகள் உள்ளேயே தங்கி, உடலுக்குப் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்” என்ற சாந்தி விஜய்பால், சில மருத்துவ முறைகளைச் சொன்னார். அவை இங்கே உங்களுக்காக...


வயிற்றுப் போக்குக்கான வீட்டு வைத்தியம்:

* சீரகத்தை வெறும் வாணலியில் கருப்பாக்கித் தீயும் அளவுக்கு வறுத்துப் பொடி செய்து... ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கால் டம்ளர் மோரில் கலந்து குடிக்க வேண்டும்.

* சிலருக்கு வாந்தி வருவதுபோல தோன்றிக்கொண்டே இருக்கும். அதனால் எதுவும் சாப்பிட முடியாது. அப்படி இருந்தால், ஒரு டேபிள்ஸ்பூன் தேனில் அதே அளவு எலுமிச்சைச்சாற்றைக் கலந்து அவ்வபோது நாக்கில் தடவினால் சரியாகும்.

* கோடையில் கிடைக்கும் மாம்பழம், பலாப்பழம் ஆகியவற்றை அளவுக்கு மீறி சாப்பிட்டாலோ, அல்லது சரியாகக் கழுவாமல் சாப்பிட்டாலோ அஜீரணம் ஏற்படும். இதனால் மலம் கழிக்கும்போது புளித்த வாடையுடன் நெஞ்சு எரிச்சலும் ஏற்படும். சீரகத்தையும் வெந்தயத்தையும் சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பசுநெய்யில் பெருங்காயக்கட்டியைப் பொரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் அரைத்த பொடியுடன் இரண்டு சிட்டிகை பெருங்காயக்கட்டியைக் கலந்து, பசுநெய்யில் கலக்கி ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டால், அஜீரணம் சரியாகும்.

* உடல் சூட்டினாலும் ஃபுட்பாய்சன் ஏற்படும். இதனால், அடிவயிற்றில் வலி அதிகமாக இருக்கும். வயிற்று வலியை உடனே குறைக்க நாமக்கட்டியை குழைத்து அடிவயிற்றில் தடவ வேண்டும். வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். ஒரு பிடி சீரகத்தை லேசாக வறுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு லேசாகக் கொதிக்க வைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும்.

மாதுளம் பழத்தோலைக் காய வைத்துப் பொடி செய்து... ஒரு டேபிள்ஸ்பூன் பொடிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்கவைத்து குடித்தாலும் சூடு தணியும். சூடு உடம்புக்காரர்கள், அடிக்கடி இளநீர் குடிக்கலாம்.

மோரில் எலுமிச்சைச்சாற்றைப் பிழிந்து அதில் சிறிது ராக் சால்ட் (கடைகளில் கிடைக்கும்) கலந்து வெயில் காலங்களில் குடித்து வர உடல் சூடு தணியும். இது பித்தத்தையும் தணிக்கும்.

*ஒரே நேரத்தில் பல விதமான மாமிசங்கள் சாப்பிட்டாலும் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புள்ளது. சிக்கனில் ஒரு விதமான புரோட்டீன் இருக்கும். மீனில் வேறுவிதமான புரோட்டீன் இருக்கும். மட்டனில் உள்ள புரோட்டீன் இன்னொரு தன்மையில் இருக்கும். ஒரே நேரத்தில் சிக்கன், மட்டன், மீன் என்று சேர்த்து சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். பாலுடன் முட்டையைக் கலந்து பிரெட் டோஸ்ட் சாப்பிடுவது; மாமிசம் சமைக்கும் போது அதில் தயிர், பால் சேர்ப்பது ஆகியவையும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் வயிறு உப்புசம் ஏற்படும். சிறிது இஞ்சியை நசுக்கி, இதில் கல்உப்பைச் சேர்த்து மென்றால் உப்புசம் சரியாகி விடும்.

[HR][/HR]
நோயைக் காட்டிக் கொடுக்கும் நம்பர் டூ!
நாம் சாப்பிட்ட உணவு நன்றாக செரித்திருக்கிறதா? ஆரோக்கியமாகத்தான் சாப்பிட்டோமா என்பதை மலம் காட்டும் அறிகுறிகள் மூலமாகவே கண்டுபிடித்து விடலாம். மலம், தண்ணீரில் மிதந்தால், நன்றாக செரிமானம் ஆகியிருக்கிறது, ஆரோக்கியமான உணவைத்தான் உண்டோம் என்று அர்த்தம்.

மலம், தண்ணீரில் மூழ்கினால் கபம் அதிகமாகி விட்டது என்று அர்த்தம். அதாவது, நமது செரிமான சக்தியைத் தாண்டி அதிகமாக வேலை கொடுத்திருக்கிறோம். அதற்கு சீரகம், மிளகு, புளி சேர்த்த ரசம் குடித்தால் சரியாகி விடும். நாம் சாப்பிடும் ஹெவி மீல்ஸில் ரசம் இடம் பெறுவதற்கு இதுதான் காரணம்.

வாதம் ஜாஸ்தியானால், மலம் மிகவும் டைட்டாக போகும். அப்படியானால் உடலில் வறட்சி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். நிறைய தண்ணீர் குடிக்கலாம், உணவில் பசு நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

பித்தம் ஜாஸ்தியாக இருந்தால் மிகவும் தளர போகும். எரிச்சல், வலி அதிகமாக இருக்கும். அப்படி இருந்தால் நீர் மோர் அதிகம் குடித்து வர சரியாகும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.