Reason for Yawning -கொட்டாவி வரக் காரணம்

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#1
அடிக்கடி கொட்டாவி வர இதெல்லாம் கூட காரணமா???

பெரும்பாலும் நமது உடல், "போதும்டா சாமி போய் தூங்கு என்னால இதுக்கு மேல முழிச்சிருக்க முடியாது.." என்று சொல்லும் எச்சரிக்கை மணி தான் கொட்டாவி. ஆனால், கொட்டாவி வருவதற்கு தூக்கம் வருவதும், உடல் சோர்வும் மட்டும் காரணம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். சிலரை அலுவலகம் அல்லது நண்பர்கள் மத்தியில் நீங்கள் கண்டிருக்கலாம், அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார்கள். காலை, மதியம், மாலை என இவர்கள் கொட்டாவி விடாத நேரமே இருக்காது. இதற்கு என்ன காரணம்..?? சில உடல்நல குறைபாடுகளின் அறிகுறிகளாக கூட கொட்டாவி இருக்கிறது. வியப்பாக இருந்தாலும் கூட உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வர இதெல்லாம் கூட காரணமாக இருக்கலாம்...

கல்லீரலை பரிசோதியுங்கள் சோர்வின்றி அடிக்கடி உங்களுக்கு கொட்டாவி வந்துக்கொண்டே இருந்தால் நீங்கள் கல்லீரல் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். கல்லீரலில் பலவீனம், அல்லது செயல்திறன் குறைபாடு ஏற்பட்டால் கூட கொட்டாவி அடிக்கடி வருமாம்.

எம்.எஸ். (Multiple Sclerosis) தாக்கம் சமீபத்திய ஆய்வில், எம்.எஸ். (Multiple Sclerosis) தாக்கம் ஏற்பட்டவர்களுக்கு அவர்களது உடலின் வெப்ப நிலையை சமநிலையில் வைத்துக்கொள்ள முடிவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலை அதிகம் கொட்டாவி வர செய்கிறதாம்.

மூளையின் ஆரோக்கியம் அதிகமாக கொட்டாவி வர மற்றுமொரு காரணமாக கருதப்படுவது மூளையின் ஆரோக்கியம். மூளை அலர்ஜி, ஸ்ட்ரோக், போன்றவையின் அறிகுறி தான் அதிகமாக வரும் கொட்டாவி என்கின்றனர். மூளையின் தண்டில் ஏற்படும் புண்களினால் கூட அதிகம் கொட்டாவி வருமாம்.

கை-கால் வலிப்பு கொஞ்சம் அதிர்சியாக இருந்தாலும் கூட நம்பி தான் ஆகவேண்டும். சோர்வின்றி அடிக்கடி கொட்டாவி வருவது கை-கால் வலிப்பு ஏற்படுவதனால் கூட இருக்கலாம். வலிப்பு ஏற்படுவதால் மூளையில் ஏற்படும் எரிச்சல் ஓர் சிக்னலை வெளிப்படுதுமாம், அதனால் கூட அதிகம் கொட்டாவி வரலாம்.

மருந்துகளின் காரணமாக நீங்கள் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் விளைவால் ஏற்படும் சோர்வு கூட அடிக்கடி கொட்டாவி வர காரணமாக இருக்கலாம். மருந்து மாத்திரைகள் உங்களை தூக்க நிலைக்கு எடுத்து செல்ல கூடியவை. அந்த மயக்க நிலையின் காரணத்தினாலும் கொட்டாவி வருகிறது.

தூக்க குறைபாடு தூக்கமின்மை போன்ற தூக்க குறைபாடுகளினால் கூட அதிகம் சோர்வின்றி கொட்டாவி வரலாம்.










களைப்பு பெரும்பாலும் அனைவருக்கும் அதிகம் கொட்டாவி வருவதற்கு காரணமாக இருப்பது உடல் சோர்வும் மன அழுத்தமும் தான். சோர்வின்றி அதிகம் கொட்டாவி வந்தால், எதற்கும் மருத்தவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: கொட்டாவி

very good cautioning message! thank you!
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#3
Re: கொட்டாவி

கொட்டாவி ஏன் வருகிறது?

வழக்கமாக அப்பாவின் ஹிம்சை தாங்க முடியாமல் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிப்பது போல் பாவனை செய்யும் போது, சாப்பாட்டிற்குப் பிறகு, மதியம் முதல் வகுப்பில் ஆசிரியரின் பாடம் சுகமான தாலாட்டாகக் காதில் விழும் போது கொட்டாவி வருவது இயற்கை.

பக்கத்தில் அமர்ந்திருப்பவர் ஒரு கொட்டாவி விட்டால் நம்மை அறியாமல் அது தொற்றிக் கொள்கிறது. நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம்? கொஞ்சம் கொட்டாவி விடாமல் படியுங்கள். கொட்டாவி என்பது ஒரு அனிச்சைச் செயல்.

கொட்டாவி விடும்போது நாம் வாயை அகலத் திறந்து ஆறு விநாடிகளுக்கு எவ்வளவு காற்றை உள்ளே இழுக்க முடியுமோ அந்த அளவுக்கு இழுத்துக் கொள்கிறோம். அதெப்படிக் கொட்டாவியை அனிச்சைச் செயல் என்று சொல்ல முடியும் என்று ஆராய்ச்சி கேட்கலாம் கருவில் வளரும் 11 வார சிசுகூடக் கொட்டாவி விடுகிறது என்று சொல்கிறதே!

நீங்கள் கொட்டாவி விடும்போது உங்கள் உடல் ஓய்வு நிலையிலோ பலவீனமான நிலையிலோ இருப்பதில்லை. முதலில் உங்கள் வாய் அகலத் திறந்து தாடை கீழே செல்கிறது. அதனால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியுமோ அவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடிகிறது. கொட்டாவி விடும்போது உங்கள் இதயத்துடிப்பு 30 சதவிகிதம் வரை அதிகமாகலாம்.
உடல் சோர்வினாலோ களைப்பினாலோ அல்லது தூக்கம் வரும் போதோ கொட்டாவி விடுவதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இவை மட்டும் கொட்டாவிக்கான காரணங்கள் இல்லை.

நமது உடலே இயற்கையாக அதிகமான பிராணவாயு நமக்குத் தேவைப்படும் போதோ அல்லது உள்ளே சேர்ந்திருக்கும் கரியமில வாயுவை வெளியேற்றும் போதோ கொட்டாவி விடச் செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சில ஆராய்ச்சியாளர்கள் கொட்டாவி என்பது நமது மூதாதையர்கள் வாயைத் திறந்து பற்களை வெளிக்காட்டி மற்றவர்களை பயமுறுத்து வதற்காகக் கையாண்ட ஆயுதம் என்றும், சிலர் குட்டிபோட்டுப் பாலூட்டும் இனத்தைச் சேர்ந்த பூனை, நாய், மீன்கள் போன்று அனைத்துமே கொட்டாவி விடுவதால் இது ஒரு அனிச்சைச் செயல் என்றும் சொல்கிறார்கள்.

இன்னுமொரு ஆராய்ச்சி கொட்டாவி நமது நுரையீரலிலுள்ள எண்ணெய் போன்ற பொருளை உறைந்துவிடாமல் தடுக்க வாகனங்களுக்குக் கிரீஸ் போடுவது போன்ற ஒரு பாதுகாப்புச் செயல் என்றும் கருத்துத் தெரிவிக் கிறார்கள். இந்தக் கருத்துப்படி கொட்டாவி விடவில்லையென்றால் மூச்சை இழுத்து விடுவது கடினமாகலாம்.

எப்படியோ, மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இந்தக் கொட்டாவிப் பழக்கம் இருந்து வந்தாலும் இன்னும் ஏன் இந்தக் கொட்டாவி வருகிறது என்ற ஆராய்ச்சி முடிவடையவில்லை.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#4
Re: கொட்டாவி

அடிக்கடி வரும் கொட்டாவியை நிறுத்த சில வழிகள்!!!


தனிமையில் இருப்பதை தவிர்த்திடுங்கள்

தனியாக இருந்தால், போர் அடிக்க ஆரம்பிக்கும். எந்த ஒரு வேலையும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்த வண்ணம் இருந்தால், கொட்டாவி வரும். எனவே எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டு, பிஸியாக இருங்கள். இதனால் கொட்டாவி வருவதைத் தவிர்க்கலாம்.

தண்ணீர் குடியுங்கள்

அளவுக்கு அதிகமான உடல் சோர்வும் கொட்டாவிக்கான காரணங்களுள் ஒன்று. அதனை தவிர்க்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் கொட்டாவியைத் தவிர்க்கலாம். எப்படியெனில் தண்ணீர் குடிப்பதால், உடல் புத்துணர்ச்சி அடைந்து, அதனால் கொட்டாவி வருவது தடுக்கப்படும்.

ஆழ்ந்த மூச்சு விடுங்கள்

ஆக்ஸிஜன் உடலில் குறைவாக இருந்தாலும் கொட்டாவி வரும். எனவே இதனை நிறுத்த, அவ்வப்போது மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளி விடுங்கள். இதனால் கொட்டாவி நிற்கும். அதிலும் மூச்சை உள்ளிழுக்கும் போது, சிறிது நேரம் தாக்குபிடித்து, பின் வெளிவிடுங்கள். இப்படி விடுவதால் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் சீரான முறையில் செல்லும்.

மன அழுத்தத்தைக் குறைக்கவும்

அளவுக்கு அதிகமான வேலைப்பளு மற்றும் குறைவான துக்கம் இருந்தாலும், கொட்டாவி அதிகம் வரும். ஏனெனில் இந்த நிலையில் தான் மன அழுத்தம் அதிகமாகும். எனவே இவற்றை தவிர்க்க, போதிய நேரத்தில் தூங்கி எழுவதோடு, அவ்வப்போது உடற்பயிற்சியையும் செய்து வாருங்கள்.

கொட்டாவி விடுபவர்களைப் பார்க்காதீர்கள்

அருகில் யாரேனும் கொட்டாவி விட்டால், அது அப்படியே அருகில் உள்ளோரையும், தொற்றிக் கொள்ளும். எனவே கொட்டாவி விடுபவரைப் பார்க்கவோ அல்லது அவர்களது அருகில் இருப்பதையும் தவிர்த்திடுங்கள்

இதய நோய்கள்

பல மருத்துவர்கள் இதயம் மற்றும் நுரையீரலில் பிரச்சனைகள் இருந்தால், அடிக்கடி கொட்டாவி வருவதாக கூறுகின்றனர். அதிலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் மற்றும் இதய நோயாளிகளுக்கு கொட்டாவி அதிகம் வரும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். எனவே எதற்கும் ஒருமுறை மருத்துவரை பரிசோதித்துப் பாருங்கள். இதற்காக அஞ்ச வேண்டாம். கொட்டாவி ஒரு இயற்கை நிகழ்வே. இதனால் பலரும் பல முக்கியமான நேரங்களில் கட்டுப்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டிருப்போம். ஆனால் மேற்கூறிய சில டிப்ஸ்களை பின்பற்றி வந்தால், அடிக்கடி கொட்டாவி வருவதைத் தவிர்க்கலாம்.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#5
Re: கொட்டாவி

என் வயது 25. ஒரு நாளைக்கு அடக்க முடியாத அளவிற்கு கொட்டாவி வருகிறது. இது எதனால் உண்டாகிறது. இதைத் தடுக்க ஆயுர்வேதத்தில் ஏதேனும் மருந்து உண்டா?


மூளையின் எல்லையற்ற சக்தியானது அங்குள்ள நரம்புகள் மற்றும் ரசாயனிகளால் வலுப்பெறப்படுகிறது. அதிக சிந்தனை அல்லது ஒரு செயலில் ஏற்படும் அதிக சிரத்தையின் மூலமாக மூளைப் பகுதியில் ஏற்படும் பிராண சக்தியின் குறைவும், கரியமில வாயுவின் தேக்கமும் காரணமாக அதிகமான கொட்டாவியை மூளையே ஏற்படுத்தி பிராண சக்திக்கான வரவை அதிகப்படுத்திக் கொள்வதற்கான ஓர் ஏற்பாடே கொட்டாவி எனலாம். பிராண சக்தியை மூளை பெறுவதன் மூலமாக மூளையானது குளிர்ச்சியடைகிறது. கரியமில வாயுவின் தேக்கமும் வெளியேறுகிறது. பிராணசக்தியைப் பெறுவதற்கான பல வழிகளில் ஒரு சிறந்த வழியாக காலை நேரத்தில் சுறுசுறுப்புடன் உடலில் மேற்பகுதி சிறிது முன்புறம் சாய்ந்தவாறு சிறிது தூரம் நிமிர்ந்து நடை பழகுவது நல்லது. காலை நேரத்துத் தூய காற்றும் சூழ்நிலையும் மிகவும் இதமானது. நுரையீரல் முழு அளவு விரிந்து சுருங்கும் தன்மையிழந்து மேலெழுந்தவாரியாக கால் பங்கு கூட நிறையாமல் மூச்சு இழுத்து விடும் நபர்களுக்கு இந்த மூளைப் பகுதியில் களைப்பும், பெருமூச்சும் ஏற்படும். அதனால் பிராண சக்தியை நிரம்பப் பெற காலை நடை மிகவும் உதவும். பெருநடையாக மூச்சுத் திணறலின்றி நடக்குமளவிற்கு நடந்தால் போதுமானது. உடலை மிகவும் வருத்தாமல் உற்சாகத்துடன் நடை பயிலுவது ஆயுள், பலம், மேதை, ஜீரணசக்தி, கண்-காது முதலியவற்றின் கூர்மை ஆகியவற்றை அளிக்கவல்லது.தொண்டை க்ரந்தி வீக்கம் எனப்படும் தைராய்டு உபாதையில் அதிகக் கொட்டாவி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான பிரத்யேக சிகிச்சைகளை ஆயுர்வேத மருத்துவரின் உபதேசப்படி செய்து கொள்வது நல்லது. அதிக கொட்டாவியைத் தவிர்க்கவும், தலையில் உள்ள ஐம்புலன்களையும் பாதுகாக்கவும் ஒருசில ஆயுர்வேத சிகிச்சைமுறைகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரலாம்.நயனாம்ருதம் எனும் கண்சொட்டு மருந்தை தினமும் காலையில் கண்ணிலிட்டு கண்களை மூடி சிறிது நேரம் பொறுத்திருந்து பிறகு தண்ணீரில் நனைத்த பஞ்சால் கண்களைத் துடைத்துவிட்டுக் கொள்வது கண்கள் அழகாக காட்சி தருவதற்கும், தெள்ளிய பார்வை பெறுவதற்கும் உதவும். நெருக்கமுடன் நெய்ப்புடன் இமைகள் வழவழவென்றிருக்கும்.இரண்டாவதாக, அணு தைலம் என்ற ரசாயனக் கல்பமாக உள்ள தைலம் ஆயுர்வேத முறையில் பிரசித்தம். மூளை நரம்புகளுக்கு வலிவு தர மிகச் சிறந்தது. காலையிலும் இரவு தூங்கும் முன்னும் மல்லாந்து தலையணையின்றி படுத்து தலையை சிறிது மேலெழுமாறு வைத்துக் கொண்டு மூக்குத் துவாரங்களில் இரண்டு சொட்டு விட்டு நன்கு உறிஞ்சி நெற்றி, மூக்கின் இருபுறங்கள், மென்னி இவற்றை அழுத்தி தேய்த்துவிட்டுக் கொள்ள வேண்டும். முகம் நல்ல மழமழப்பு, பூரிப்பு, நித்திய யொவனத்தைக் காட்டும். தலையிலுள்ள இரத்தக் குழாய்கள் அடைபடாது மூளை தளர்ச்சியுறாமல் பாதுகாக்கக் கூடியது. அரிமேதஸ் எனும் தைலத்தை வாயினுள் விட்டுக் கொப்பளிப்பதால் வாய்ப் பகுதி சுத்தமாவதுடன் பற்கள் வலுப்பெறும். நாக்கின் சுவைக் கோளங்கள் நன்கு செயல்படும். மூளைக்கு இரத்த ஓட்டத்தைச் சீராக்கித் தரும்.வசாலஸூனாதி எனும் தைலத்தை நான்கைந்து சொட்டுகள் காதினுள் விட்டு வர மூளை மற்றும் காதிலுள்ள நுட்பமான நரம்புகளில் வாயுவின் வறட்சி ஏற்படாமல் வலிவூட்டும். க்ஷீரபலா எனப்படும் தைலத்தை வெதுவெதுப்பாக தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் மூளை நரம்புகள் வலுப்படும். இவை ஐந்தும் புலன்களின் வழியாக மூளையைச் சுறுசுறுப்பாக்கி அதிகக் கொட்டாவியைத் தவிர்க்க உதவிடும் சில எளிய கை வைத்திய முறைகளாகும்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#9
thanks for shairng... nice piece of info... mr.dangu sir and selvi mam
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.