Relationship between Mother in Law & Daughter in Law

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#1
மறையாத `மாமியார் ராஜ்ஜியம்’

மாமியார் ராஜ்ஜியம் எனப்படும் சர்வாதிகாரப்போக்கு பெண்களிடம் இன்னும் இருக்கவே செய்கிறது. புகுந்த வீட்டிற்கு வரும் மருமகள்கள் என்னதான் சிறப்பாக செயல்பட்டாலும் இப்படிப்பட்ட மாமியார்களிடம் சிக்கிக்கொண்டு தவிக்கவே செய்கிறார்கள். மருமகள்கள், எப்படித்தான் தலைகீழாக நின்றாலும், மாமியாரிடம் மகள் என்ற அந்தஸ்தை பெற முடிவதில்லை.

மாமியார்கள் இப்படி ராஜாங்கம் செய்ய என்ன காரணம்?



மருமகள்களை மாமியார்கள் அன்னிய பெண்ணாக பார்க்கிறார்கள். அவர்களால் தங்கள் அதிகாரம் பறிபோய்விடுமோ என்று அஞ்சுகிறார்கள். தன் மகனை, மருமகள் தன்னிடம் இருந்து பிரித்து-தனக்கு எதிரியாக மாற்றிவிடுவாளோ என்றும் அவர்கள் பதற்றம் அடைகிறார்கள்.


மகன் மீது ஒவ்வொரு அம்மாவும் அலாதியான அன்பு வைத்திருக்கிறார்கள். தன் எதிர்காலமே மகனை நம்பித்தான் இருக்கிறது என்றும் கருதுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு மகன் மாறிவிடுவானோ என்று பயந்து, தன்னுடைய எதிர்காலத்தை நிலைநாட்டி கொள்ளவும், மகன் மீது உள்ள உரிமையை நிலைநிறுத்தி கொள்ளவும் கடுமையான முயற்சிகளை எடுக் கிறார்கள். அந்த முயற்சியில் மருமகள் என்ற உறவு நசுக்கப்படுகிறது.


தன்னுடைய மகன் எப்போதும் தன்னையே பிரதானமாக நினைக்கவேண்டும், தனக்கே முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எண்ணம் எல்லா அம்மாக்கள் மனதிலும் விடாப்பிடியாக இடம் பெற்று இருக்கிறது. அதற்கு தடையாக இருக்கும் ஒரே எதிரி தங்கள் மருமகள்தான் என்று நினைக்கிறார்கள். அப்போது அவர் களை அறியாமலே அவர்களுக்குள் ஒரு மனப் போராட்டம் உருவாகிவிடுகிறது. அதை முறை யாக கையாளத் தெரியாத பெண்கள் மாமி யார்- மருமகள் என்ற புனித உறவை காயப்படுத்திவிடுகிறார்கள்.


உண்மையில் யாரையும் கஷ்டப் படுத்தவேண்டும் என்ற எண்ணம் மாமியார்களுக்கு இல்லை. ஆனால் மகன் மீதுள்ள உரிமை போராட்டத்தால், தங்கள் வீட்டிற்கு வாழ வந்த மருமகள்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர் கள் உணர்வதில்லை. இந்த பாதிப்பு கள் மாமியார்- மருமகள் இடையே உறவு சிக்கல்களை உருவாக்கி, பகையாளிகள் போல் ஆக்கிவிடுகிறது. அப்போது அந்த குடும்பத்தின் வளர்ச்சியும், மகிழ்ச்சியும், எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடுகிறது.


`அனுபவம் என்ற பள்ளியில் மூடன் கற்றுக்கொள்ள மாட்டான்’ என்பது பழமொழி. இது சிந்தித்து செயல்படத் தெரியாத மாமியார்களுக்கும் பொருந்தும். மனிதர்கள் தன்னைத்தானே உணர்ந்தாலே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.

ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தில் தனக்கு தரப்பட்டிருக்கும் இடம் என்ன, புதிதாக வந்திருக்கும் மருமகளுக்கு தரப்பட்டிருக்கும் இடம் என்ன என்பதை புரிந்துகொண்டு செயல்பட்டால் அவர்கள் மனதில் தேவையற்ற அகங்காரம் தலைதூக்காது. இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு போராடும் நிலையும் மகனுக்கு ஏற்படாது. மகனுடன் தேவை யற்ற வாக்குவாதம், மருமகளை பற்றி குறை கூறி வெட்டி பஞ்சாயத்து செய்வது இதை யெல்லாம் தவிர்த்தால் அது மன அமைதிக்கும், மகனுடைய நல்வாழ்வுக்கும் வழிவகுக்கும். மகன் மீது வைத்திருக்கும் அன்பை விஷமாக மாற்றி எதிர்காலத்தை இருட்டாக்கும் செயல்களில் அவர்களுக்கே தெரியாமல் சில அம்மாக்கள் இறங்கி விடுகிறார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் பதில் மிக விசித்திரமாக இருக்கும். `திருமணத்திற்கு முன் இருந்த மகன் இப்போது இல்லை. வெகுவாக மாறிவிட்டான் அல்லது மருமகள் மாற்றிவிட்டாள்` என்று சொல்வார்கள்.


அந்த மகனின் மனநிலையை நினைத்துப்பாருங்கள். அவன் என்ன நினைப்பான் என்றால், `நமது திருமணத்திற்கு பின்பு அம்மா மாறிவிட்டார். நமது வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்கு பதில் தம் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கிறார்’ என்று நினைத்து தன் அமைதியை தொலைத்து அம்மாவை எதிரிபோல் பாவித்துக்கொண்டிருப்பார் என்பதை பல அம்மாக்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை.


திருமணம் ஆன புதிதில் வாழ்க்கையை அனுபவிப்பது என்பது மிக அற்புதமான விஷயம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் விஷயம். ஆனால் அதை தொடக்கத்திலே அனுபவிக்க விடாமல் ஆக்கி, காலம் முழுக்க கசப்பை உருவாக்கிவிடுகிறார்கள் சில மாமியார்கள்.


மாமியார் அந்தஸ்து என்பது மரியாதைக்குரிய ஒரு கவுரவமான உறவு. அந்த மரியாதைக்கு தகுதியானவராக அவர் தன்னை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அன்பான அணுகு முறை, பரிவான பேச்சு, விட்டுக்கொடுக்கும் பண்பு, `எதற்கும் கவலைப்படாதே நான் இருக்கிறேன்’ என்று மருமகளிடம் காட்டும் நேசம் இவைகள் இருந்தால் போதும் எல்லா மருமகள்களும் வசப்பட்டுவிடுவார்கள். இதுவே வாழ்க்கையின் வெற்றி. இதற்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேண்டும். இதை மனோபலத்தால் மட்டுமே பெறமுடியும்.


மகனுக்கு சரியான துணையை தேர்ந்தெடுத்து கொடுத்து அவனது வாழ்க்கையை பிரகா சிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒவ்வொரு அம்மாவும் மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் அதற்கு தான் செய்யவேண்டியதை செய்ய மறந்துவிடுகிறார்கள். புதிதாக வந்த பெண்ணுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து குடும்ப வாழ்க்கை நன்றாக செல்ல உதவாமல், உபத்திரவம் செய்பவர்களாக மாறிவிடு கிறார்கள்.


ஒரு மாமியார், தனது மருமகளிடம் நல்லுறவை பேண வேண்டும் என்றால், அவர் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அந்த ஒரு விஷயம் அவர், அந்த மருமகளுக்கு தான் மாமியார் என்று கருதாமல் அவளுக்கும் தான் ஒரு தாய் என்ற சிந்தனை இருந்தால் போதும். அதற்கு அவர் செயல்வடிவம் கொடுத்தால் நல்ல மாமியார் ஆகிவிடுவார்.


குற்றங்குறை என்பது மனிதர்களின் இயல்பு. அதனால் அதை ஏற்றுக்கொண்டு பக்குவப்பட முன்வர வேண்டுமே தவிர, அதை மற்றவர்களிடம் சொல்லி பெரிதுபடுத்தி அதற்கு ஒரு பூதாகரமான வடிவத்தை கொடுக்கக்கூடாது.

குடும்பத்தில் தனது முடிவுகள் மதிக்கப்படவேண்டும் என்று மாமியார்கள் விரும்புவது நியாயம் தான். அதற்கு அவர்கள் மருமகளும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பரந்தமனப் பான்மையுடன் முடிவுகளை எடுக்கவேண்டும். அப்படியானால் அந்த முடிவுகளை எல்லோருமே ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். மற்றவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் முடிவுகளை கைவிடவேண்டும்.


ராஜ்ஜியம் செய்யவேண்டும் என்ற மனப்போக்குடன் மருமகள்களுக்கு வேண்டாத கட்டளை கள் இடுவது, வில்லங்கமாக பேசுவது, அவர்களது விருப்பங்களுக்கு இடையூறாக இருப் பது போன்றவைகளை மாமியார்கள் தவிர்க்கவேண்டும். நல்ல வார்த்தைகளை பேசி, நயமான அறிவுரைகளை வழங்கி, அன்போடும், அனுசரணையோடும், ஆதரவோடும் இருந்தால் மருமகள்கள் மனதிலும் மாமியார்கள் நிரந்தரமாக ராஜ்ஜியம் செய்யலாம். :thumbsup
 

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#2
re: Relationship between Mother in Law & Daughter in Law

ஒரு மாமியார், தனது மருமகளிடம் நல்லுறவை பேண வேண்டும் என்றால், அவர் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அந்த ஒரு விஷயம் அவர், அந்த மருமகளுக்கு தான் மாமியார் என்று கருதாமல் அவளுக்கும் தான் ஒரு தாய் என்ற சிந்தனை இருந்தால் போதும். அதற்கு அவர் செயல்வடிவம் கொடுத்தால் நல்ல மாமியார் ஆகிவிடுவார்.


nam anaivarin kanavaaga irukkum ithu nijamaagattum...


 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#3
re: Relationship between Mother in Law & Daughter in Law

மாமியார் - மருமகள் உறவு முறையில் உள்ள நிதர்சனத்தை படம் பிடித்து காட்டியது போல் உள்ளது இந்த கட்டுரை. இதில் உள்ள வரிகள் ஒவ்வொன்றும் மருமகள் ஸ்தானத்தில் உள்ள பலரின் மன உணர்வைப் பிரதிபலிப்பதாக இருப்பதை எவரும் மறுக்க முடியாது.
 

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,533
Location
Hyderabad
#4
re: Relationship between Mother in Law & Daughter in Law

Hi Sumi

Very true and well said
How do we change the MIL what step a DIL can take for the same

Please Sumi and suganthi share your views which will help many of our penmai members
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#5
re: Relationship between Mother in Law & Daughter in Law

நிச்சயமாக உமா... இதில் ஆரோக்கியமான ஒரு கலந்துரையாடல் இருந்தால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

வீட்டுக்கு புதிதாக வரும் மருமகள்களும் மாமியாரிடம் சகஜமாக பழகாமல், ஒரு ஒதுக்க மனோ பாவத்திலேயே இருக்கிறார்கள். இது இருவருக்கும் இடையே இருக்கும் தலைமுறை இடைவெளியால் இருக்கலாம் அல்லது... மாமியார் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று அவர்கள் மனதில் யாரோ விதைத்த விளைவாகக் கூட இருக்கலாம். அந்த எண்ணத்தை மாற்றி, எந்த ஒரு காரியம் செய்யும் முன்னும் (தனக்கு தெரிந்திருந்தாலும் கூட) மாமியாரின் ஆலோசனைக் கேட்டு அதன்படி நடந்தால், அவர்களிடையே அன்னியோனியம் ஏற்ப்பட வாய்ப்பாக இருக்கும் என்பது என் கருத்து.

வாங்க பிரெண்ட்ஸ்... உங்களுக்கு தோன்றும் அல்லது அனுபவத்தில் உணர்ந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.


 

Guruji

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 13, 2011
Messages
3,154
Likes
2,017
Location
Puducherry
#6
re: Relationship between Mother in Law & Daughter in Law

Ithu pengalukku mattumae undaana topic aa?
illai, naangalum, kalanthu kollalaama..

becoz, maamiyar is of course husband's mom...
athanaala kaetaen...
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#7
re: Relationship between Mother in Law & Daughter in Law

Ithu pengalukku mattumae undaana topic aa?
illai, naangalum, kalanthu kollalaama..

becoz, maamiyar is of course husband's mom...
athanaala kaetaen...
மகனாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி... ஆரோக்கியமான, நடுநிலையான ஆலோசனை வரவேற்க்கப்படுகிறது.
 

Guruji

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 13, 2011
Messages
3,154
Likes
2,017
Location
Puducherry
#8
re: Relationship between Mother in Law & Daughter in Law

என் experience சொல்றேன்..கல்யாணாம் ஆச்சுனா, கணவன் செய்ய வேண்டிய ஒரே ஒரு விஷயம் தான்...
உடனே பொண்டாட்டிய கூட்டிகிட்டு தனி குடித்தனம் போய்டணும்.....
ஒரு ௧ வருஷம் கழிச்சி வரும்போது, ரெண்டு பேருக்கும் அப்போ தான் பாசம் இருக்கும்.
இது என்னோட அனுபவம்....
மத்தத அப்றமா சொல்றேன்...
 

abiamu

Yuva's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
9,416
Likes
7,162
Location
chennai
#9
re: Relationship between Mother in Law & Daughter in Law

ஒரு விதத்துல வீட்டுக்கு வரும் மருமகளும் அனுசரித்து போகணும்.
ஒதுக்கம் வேணும்தான்...அதுக்காக ஒதுங்கியே இருக்கணும் என்று
நினைக்க கூடாது ...மாமியார்களின் பயம் நியாயமானது தானே!!!!!
நாமும் ஒரு காலத்தில் மாமியார்கள் ஆவோம் என்று ஒவ்வொரு பெண்ணும்
எண்ணினாலே இங்கே மாமியார் ,மருமகள் என்ற பேர் பொய் தாய்,மகள்
என்ற நிலை வந்துவிடும்.....பிறகு என்ன சந்தோஷம்தானே!!!!!!!!!!
 

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#10
re: Relationship between Mother in Law & Daughter in Law

எனக்கு தோண்றது நாலே நாலு விஷயம் தான்....

இந்த காலத்து பொண்ணுங்க கிட்ட ஓவரா பார்மாலிடீஸ் எதிர் பாக்காதீங்க.....அவங்க வொர்க் அவங்க கரெக்டா முடிச்சாங்கலானு பாத்தா போதும்..... நாங்க எல்லாம் அந்த காலத்துல நாலு மணிக்கே எந்திரிசுன்னு பாட்டு பாடினா தகராறுதான் வரும்....

மத்தவங்க முன்னாடி மருமகள மட்டம் தட்டி பேசறது.....தன் பொண்ண ஆஹா...ஊஹூனு ஒசத்தியா பேசிட்டு அதே நேரம் மருமகள வேணும்னே மட்டம் தட்டறது...... இந்த சேட்டையெல்லாம் இப்போ ரொம்ப காமனா போயிடிச்சு...... எந்த அம்மாவும் பொண்ண வளர்க தெரியாம வளர்த்து கல்யாணம் பண்ணிக் குடுக்கல.....

வீட்டுக்கு வர்ற மருமக சமைச்சும் போடணும்..... சம்பாதிச்சும் குடுக்கணும்னா அப்போ மாமியாரும் அதுக்கு தகுந்த மாதிரி மருமகள மதிக்கணும்...... கொண்டு வர காசு மட்டும் தான் இனிக்கும்னா எப்படி....

கடைசியா ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்..... மாமியார் மருமக பிரச்சனைல எந்த காரணத்த கொண்டும் வீட்டு ஆம்பளைங்க நடுவுல வரக் கூடாது..... நாங்க அடிச்சிக்குவோம்... புடிச்சிக்குவோம்........ ஒண்ணும் தெரியாத மாதிரி ஆண்கள் விலகிப் போயிட்டா கண்டிப்பா பிரச்சன பெருசு ஆகாது....

 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.