Relationship tips for couples - கணவன் மனைவி உறவில் விரிசல் இல்லாமல&#3

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1
உறவுகளை கையாளுவதை பொறுத்தே இன்பமும் துன்பமும் உள்ளது. அப்படிப்பட்ட மென்மையான உறவுகள் பலவித பிரச்சனைகளால் உடைந்து போக வாய்ப்பு உள்ளது.

காதல், செக்ஸ் மற்றும் பணம் - இந்த மூன்றும் தான் உறவுகளில் சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கும் முக்கிய பிரச்சனைகளாகும். இதனை எப்படி சமாளிப்பது என்பதை பார்க்கலாமா?

* உங்கள் பிரச்சனைகளை பற்றி கணவன்/மனைவியிடம் பேச வெட்கப்படாதீர்கள். நீங்கள் இந்த விஷயத்தில் சந்தோஷமாக இல்லை என்பது நீங்கள் சொல்லாமல் இருந்தால், அவர்களுக்கு எப்படி புரியும்? ஆகவே எந்த பிரச்சனையாக இருந்தாலும் உங்கள் கணவர்/ மனையிடம் வெளிப்படையாக பேசுங்கள்.

* செக்ஸ் விஷயத்தினால் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கு ஒரு மருத்துவரை அணுகலாம். இதனால் ஒருவேளை படுக்கையில் அந்த விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது மறைமுக பிரச்சனை இருந்தால், உங்கள் மருத்துவர் உங்கள் பிரச்சனையை தீர்க்க உதவலாம் அல்லவா?

* பணம் தான் எல்லா பிரச்சனைக்கும் முதன்மையான காரணமாக விளங்குகிறது. கல்யாணத்திற்கு முன்போ அல்லது பின்போ, பணத்தினால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இப்போதெல்லாம் தம்பதிகள் தனித் தனியாகவே வங்கிக் கணக்குகள் வைக்க விரும்புகிறார்கள் என்று ஒரு சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இத்தகைய பிரச்சனைகளும் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட வழிவகை செய்கிறது.

* முதலில் கணவன்/மனைவியிடம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெளிவாக பேசி விடுங்கள். ஏதாவது ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, செலவளிப்பதற்கு ஒருவர், சேமிப்பதற்கு ஒருவர் என முடிவெடுக்கலாம் அல்லது சம அளவில் இருவரும் சேமிப்புக்கு கை கோர்க்கலாம். ஆனால் இருவரில் யாராவது ஒருவருக்கு பணப் பிரச்சினை ஏற்படும் போது இந்த அமைப்பை சற்று நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

* முக்கியமாக இருவருக்கும் ஏதாவது கடன் பிரச்சனை இருந்தால் அதை ஒருவருக்கொருவர் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும். மேலும் குறுகிய கால மற்றும் நீண்ட கால லட்சியங்களை திட்டமிட வேண்டும்.

* பல தம்பதியர்கள், தங்கள் கணவன் அல்லது மனைவி தங்களிடம் அன்பாக இல்லை என்றும், தங்கள் பேச்சை கேட்பதில்லை என்றும் நினைக்கிறார்கள். அதற்கு காரணம் உட்கார்ந்து பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்று இருவருமே நினைப்பதில்லை.

வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நடு நடுவே உங்கள் துணையிடம் பேசும் பழக்கத்தை தவிர்க்கவும். அதே போல் உங்கள் துணையிடம் பேசி கொண்டிருக்கும் போது, மெசேஜ் படிப்பதிலோ, தொலைபேசியில் உரையாடுவதையோ தவிர்க்கவும். ஆகவே இருவரும் பேசும் போது தொந்தரவு ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு நேரத்தை இருவரும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

* கோபத்தினால் பிரச்சினைகளை பேச முடியாவிட்டால் அதற்கு என்ன வழி என்பதை யோசியுங்கள். ஒருவரை பார்த்து மற்றொருவர் கத்த கூடாது என்று முடிவெடுங்கள். புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்றும் முடிவெடுங்கள்.










 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
Re: Relationship tips for couples - கணவன் மனைவி உறவில் விரிசல் இல்லாம&#2994

கல்யாணமான புதுசுல... எதுக்கெடுத்தாலும் ஸ்வீட்டா பேசுவார்... நடந்துக்குவார். நான்கூட இவரை மாதிரி ஒருத்தர் கிடைச்சது கடவுள் புண்ணியம்னு அவரை காலைத் தொட்டு அடிக்கடி கும்பிடுவேன்... போகப் போகத்தான் அவரோட மறுபக்கம் தெரியுது.

இவருக்குன்னு சுய அறிவே கிடையாது. அவுங்க அம்மா சொன்னா போதும்... அதையே வேத வாக்கா... எடுத்துக்கிட்டு உயிரை எடுக்குறார்?!" இவ்வாறு சொல்லும் பெண்களை பார்க்கலாம். திருமணமான புதிதோ அல்லது பல வருஷங்கள் கழிந்தோ...

சில பெண்களுக்குத் தங்களுடைய கணவரைப் புரிந்துக் கொள்ளாமல் இருப்பார்கள். இதற்கு மனைவி மட்டும் காரணம் அல்ல... கணவனும்தான். வெளியே... அலுவலகத்தில் ஏற்படும் கசப்புகளை வீட்டுக்குள் காண்பிக்கும்போதுதான் தம்பதிகளுக்குள் பிணக்கு ஏற்படுகிறது.

அளவோடு பேசுங்கள். அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.

* ஒரு செயலை செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்று நாம் சொல்வதற்கான காரணத்தை அவர்கள் தெரிந்து கொள்ள செய்ய வேண்டும். தம் மீது பெற்றோர்கள் சந்தேகப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை... கணவர் உங்களைத் திட்டுவதையோ... உங்களோடு சண்டை போடுவதையோ, பிறர் முன்பாக செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்பதை அவரிடம் தனியாக எடுத்து சொல்லுங்கள்.

* அவரைப் பற்றிய குறைகளை அம்மாவிடமும், தோழியுடனும் பேசுவதை விட, அவரிடமே பேசினால் நல்ல பலன் கிடைக்கும். நம் குழந்தைகள் சந்தோஷமான குழந்தைகளாக வளர்வதற்கும், நல்ல பண்புகள் கொண்ட வருங்கால இளைஞர்களாக இருப்பதற்கும், சாதனைகள் புரிவதற்கும் அடிப்படை காரணம் பெற்றோர்களின் வளர்ப்புதான்.

* கணவர், குழந்தைகள், கணவரின் குடும்பத்தார் என எல்லோருக்கும் நீங்கள் தேவை என்பதை ஏன் நெகட்டிவ்வாக எடுத்துக் கொள்கிறீர்கள்... அதையே பாசிட்டிவ்வாக நினைத்துப் பாருங்கள்...
 

jeyanthi raj

Friends's of Penmai
Joined
Nov 6, 2011
Messages
105
Likes
187
Location
chennai
#3
Re: Relationship tips for couples - கணவன் மனைவி உறவில் விரிசல் இல்லாம&#2994

wonderful n cent percent true info.Thanks for sharing
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#4
Re: Relationship tips for couples - கணவன் மனைவி உறவில் விரிசல் இல்லாம&#2994

Good info to all. Nallathoru kudumbam palgalaikazhgam allava? All couples must follow this. Nice sharing Jayanthi. Pudhu mana thambathikalukku ithai print out eduthu thara vendum nu thonuthu.
 
Last edited:

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#5
Re: Relationship tips for couples - கணவன் மனைவி உறவில் விரிசல் இல்லாம&#2994

very useful info jaya akka.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#6
Re: Relationship tips for couples - கணவன் மனைவி உறவில் விரிசல் இல்லாம&#2994

Thanks Jeyanthi, Shrimathi and Mythili akka.

Aamaam akka, apdi senjalavadhu sandai podama nalla badiya kudumbam nadathuvangala nu paarkanum
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,953
Location
Atlanta, U.S

Revathivenu

Friends's of Penmai
Joined
Jul 12, 2012
Messages
377
Likes
272
Location
chennai
#8
Re: Relationship tips for couples - கணவன் மனைவி உறவில் விரிசல் இல்லாம&#2994

hi jv
neengal sonna ovvaru pointum 100percent unmai.nice.
 

NivetaMohan

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 4, 2011
Messages
5,453
Likes
26,327
Location
Madurai
#9
Re: Relationship tips for couples - கணவன் மனைவி உறவில் விரிசல் இல்லாம&#2994

thank you jeyan............romba romba useful aana visayam..sollurikinga.............ennaku ithu romba useful ah irukum.....jeyan..thanks once again
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#10
Re: Relationship tips for couples - கணவன் மனைவி உறவில் விரிசல் இல்லாம&#2994

Thanks Thenu, Revathi and Nivi
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.