Relaxing techniques - ரிலாக்ஸ் டெக்னிக்!

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#1
[TABLE="width: 100%"]
[TR]
[TD="align: left"]
[h=2][/h][h=1]ரிலாக்ஸ் டெக்னிக்![/h]
* நீங்கள் இருக்கும் சூழலை பிடித்தமானதாக மாற்றிக் கொள்ளுங்கள். தோழியை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் செல்லலாம்.

*குழந்தைகள் நிறைந்த இல்லங்களுக்கு சென்று சிறு உதவிகள் செய்யலாம்.

*இயற்கையான சூழலில் பேசியபடியை காலாற நடக்கலாம். பசுமையும், அழகும் டென்சன் குறைக்கும்.

*வீட்டில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் நேரம் செலவளித்தால் மனதில் மகிழ்ச்சி ததும்பும்.


* வீட்டில் நீண்ட நாள் அடுக்கப்படாத அலமாரியை சுத்தம் செய்தல், தோட்ட வேலைகள், வீட்டில் உள்ள பொருட்களை இடம் மாற்றி தோற்றத்தை புதிதாக்குவது என உடலுக்கு வேலை கொடுக்கும் போது மனம் அமைதி அடைகிறது.

*வீட்டின் அல்லது தோட்டத்தின் புதிய தோற்றம் மனதை அழகாக்கும்.


* இசைப்பிரியர்கள் பிடித்த பாடல்களை ஓட விட்டு கண்களை மூடியபடி இசையில் கரையலாம்.

*மாற்றுச் சிந்தனை உள்ள புத்தகங்கள் படிக்கலாம். இதன் மூலம் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் பிரச்னையின் தீவிரம் குறையும்.
[/TD]
[/TR]
[/TABLE]
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#2
* எந்த ஒரு பிரச்னையையும் நேர்மறையாக அணுகுவது கூடுதல் பலன் தரும். அப்போது தான் பிரச்னையை முழுமையாகப் புரிந்து கொண்டு அதனை தீர்ப்பதற்கான வழி வகைகளை உருவாக்க முடியும். பிரச்னை என்பது இயல்பானது என்ற புரிதல் தைரியத்தை அளிக்கும். பிரச்னைகளே நம்மை அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றன என்ற பார்வை நம்மை வெற்றியை நோக்கி நகர்த்தும். பிரச்னைகள் வேலையில் அல்லது நமது திறமையில் நம்மை ஒரு படி அதிகமாக வளர வைக்கின்றன. பிரச்னையை சமாளிப்பதற்காக நாம் எடுக்கும் முயற்சிகள் முன்னோக்கித் தள்ளுகின்றன.

தான் என்கிற எண்ணம் மனிதர்கள் மத்தியில் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. தன்னை மிகச்சாதாரணமான விஷயத்துக்காக யாராவது குறை கூறினாலும் அதை அவமானமாகக் கருதி கோபம் கொள்ள இந்த எண்ணம் வழிவகுக்கிறது. இன்றைய குட்டிச் செல்லங்களிடம் இந்தப் போக்கைக் காணலாம். இதுவே மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த மன அழுத்தம் மூளையின் ரசாயன சுரப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் உடலைத் தாக்கும் நோய்களுக்கு அடித்தளம் இடுகிறது. மன அழுத்தம் ரத்த அழுத்தத்துக்கு காரணம் ஆவதுடன் மாரடைப்பு போன்ற பாதிப்புகளை உருவாக்கும் அளவுக்கு கொடுமையானது. இந்த மன அழுத்தம் எனும் வில்லனை ரிலாக்ஸ் டெக்னிக் மூலம் கிச்சுக் கிச்சு மூட்டி சிரிக்க வைக்கலாம்.

தான் என்ற எண்ணத்தை விட்டு கீழே இறங்கி வாருங்கள். ஆம் நீங்கள் இந்த உலகில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவர். இந்த உலகம் தோன்றியதில் இருந்து உருவான புல், பூண்டு, பூச்சிகள் வரிசையில் நீங்கள் எத்தனையாவது பிறப்பு என்று யோசித்திருக்கிறீர்களா? நாம் அவ்வளவு சாதாரணமானவர்களே. எதற்கு இவ்வளவு ஈகோ! உங்கள் முன் நடக்கும் எந்த விஷயத்தையும் எளிமையாக எடுத்துக் கொள்ளுங்கள்.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#3
* ஓரளவுக்கு மனம் சமாதானப்படுவதற்கான இது போன்ற செயல்முறைகளை பின்பற்றலாம். பிரச்னையின் விளைவாக உடலில் உண்டான சோர்வினைப் போக்க தரையில் மல்லாந்து படுத்து கைகளை விரித்தும் சேர்த்தும் எளிய பயிற்சிகள் செய்யலாம். மன உளைச்சல் ஏற்படும் போது கழுத்து, மேல்முதுகு ஆகியவற்றின் தசைகள் மன அழுத்தத்தின் காரணமாக இறுகி விடுகிறது. கழுத்துப் பகுதி தசைகளைப் பிடித்து விடுவதன் மூலம் மன அழுத்தம் குறைந்து இதமாக உணரலாம்.

* யோக பயிற்சிகள் மூலம் உடலில் சேர்ந்த சோர்வை விரட்டலாம். தியானப் பயிற்சி செய்து மனதை ஒருநிலைப் படுத்தலாம். மனம் சிறகடிப்பதன் மூலம் மீண்டும் உற்சாகத்துடன் நம் செயல்களைத் துவங்கலாம். இப்போது திரும்பிப் பாருங்கள் பிரச்னை துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டம் எடுத்திருக்கும்.

புன்முறுவலுடன் அதனை எதிர்கொள்ளுங்கள். மிகப்பெரிய பிரச்னைகள் கூட உங்களைப் பார்த்து பயப்பட ஆரம்பிக்கும். எல்லாம் புரிகிறது. என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியலையே என்று தவிப்பவர்களுக்கு இருக்கவே இருக்கு ரிலாக்ஸ் டெக்னிக்.

* மனசு குழப்பமா இருக்கா? உங்களுக்கு நம்பிக்கையான நண்பர் மற்றும் மனதுக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். இப்போது மனதின் பாரம் கொஞ்சம் குறைந்த மாதிரித் தோன்றும். அவர்கள் அளிக்கும் யோசனை பிரச்னையின் இறுக்கமான பிடியில் இருந்து உங்களை தளர்த்திக் கொள்ள உதவும்.

* நீங்கள் இருக்கும் சூழலை பிடித்தமானதாக மாற்றிக் கொள்ளுங்கள். தோழியை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் செல்லலாம். குழந்தைகள் நிறைந்த இல்லங்களுக்கு சென்று சிறு உதவிகள் செய்யலாம். இயற்கையான சூழலில் பேசியபடியை காலாற நடக்கலாம். பசுமையும், அழகும் டென்சன் குறைக்கும். வீட்டில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் நேரம் செலவளித்தால் மனதில் மகிழ்ச்சி ததும்பும்.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,665
Likes
140,723
Location
Madras @ சென்னை
#4
Nice Info

:thumbsup​
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,091
Likes
106,984
Location
Atlanta, U.S

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#9
இந்த காலக்கட்டத்தில் அனைவருக்கும் தேவையான தகவல்கள்...
தேங்க்ஸ் சரளா...
நன்றி தேன்மொழி .
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.