Relaxing techniques from Mental depression-மன அழுத்தம் விலக்கி மனசே ரிலாக்ஸ்

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
நாம் எல்லோருமே அவ்வப்போது கவலையும், மன வருத்தமும் அடையத்தான் செய்கிறோம். கவலையையும், மன வேதனையும் அனுபவிக்கும் போதெல்லாம் மனம் தளர்வதும் சோர்வடைவதும் சகஜமானதுதான். அனேகமாக பல நேரங்களில் இது இயல்பாக மறைந்துவிடுகிறது. ஆனால் டிப்பிரஷன் என்ற மனோவிரக்தி நிலை அடையும் போது இந்த சோர்வும் கவலையும் இடைவிடாது நீடித்து விடுகிறது. அல்லது இந்த கவலையும் சோர்வும் அடிக்கடி அன்றாட வாழ்கையில் அதிகரித்து குழப்பமடைய செய்கின்றன.

டிப்பிரஷனால் பாதிக்கப்படுபவர்கள் பொதுவாக சமூகத்தை விட்டுவிலகியும் மறைந்தும் இருக்க முற்படுகின்றனர். தம்மைச் சுற்றியுள்ள விஷயங்கள் மீதான ஆர்வமும் அவர்களுக்கு அற்றுப்போகிறது. இதனால் வாழ்வில் மகிழ்ச்சியையோ இன்பத்தையோ அனுபவிக்க முடியாது தனித்து விடுகிறார்கள்.

டிப்பிரஷனுக்கான அறிகுறிகள்

நித்திரைக் குழப்பம், கடும் களைப்பும், சோர்வும், காலையில் எழுந்திருக்க முடியாமை, பசியின்மை, தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மை, தான் எதற்கும் லாயக்கில்லை என்று தோன்றுதல் போன்ற இதன் அறிகுறிகளாக இருக்கின்றன. ஆனால் இதில் நீங்கள் முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால், இதுபோன்ற மனோ நிலையுடன் ஒருவர் தொடர்ந்து இருக்கபோவதில்லை. அவரை சுற்றி இருக்கும் சூழ்நிலை மாறிவிட்டால், இந்த டிப்பிரஷனும் மாறிவிடும். அல்லது அவர் நினைத்தது நடந்துவிட்டால் அதன் பின்னர் அவருக்கு டிப்பிரஷன் என்பது வராது. சிறுவயதில் ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்ற விரக்தியிலும் சிலருக்கு இந்த டிப்பிரஷன் ஏற்படுகிறது. டிப்பிரஷன் பொதுவாகவே சமூகத்தில் காணப்படக்கூடிய சாதாரண நோய் நிலைதான்.

இளம் வயதில், குறிப்பாக ரத்த அழுத்தம் அதிகமான நேரத்தில் இந்த டிப்பிரஷன் ஏற்படுகிறது. நம்மில் ஐந்தில் ஒருவருக்கும் இந்த டிப்பிரஷன் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இது பற்றி அச்சப்படவோ, வெட்கப்படவோ, சங்கடப்படவோ கூடாது. இதனைப் புறக்கணிக்கவும் கூடாது. டிப்பிரஷன் இதற்கு உட்பட்டவர்கள் பொருத்தமான சிகிச்சைகளுக்கு பின்னர் முழுவதுமாக குணமடைந்துவிடுகின்றனர். இதற்கு சுகமளிக்ககூடிய மூலிகைகள் உணவுக்குறை நிரப்பிகள் என்று பார்க்கும்போது, செயிண்ட் ஜோன்ஸ் வோர்ட் என்ற மூலிகை மிகுந்த பயன்மிக்கதாக விளங்குகிறது. டிப்பிரஷனை வெகுவாகக் குணப்படுத்துவதில் இம்மூலிகைகயின் ஆற்றல் அபாரமானது. ஆனால் டிப்பிரஷனுக்கு எடுக்கும் ஏனைய மருந்துகளுடன் சேர்த்து இதனை எடுக்கக்கூடாது.


அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்

உணவின் ஊடாக உடலுக்குத் தேவையான ஓமேகா-3 முதல் ஓமேகா-6 வரையிலுமான கொழுப்பு அமிலங்களை ஆரோக்கியமாக சமப்படுத்தி பேணாவிட்டால் டிப்பிரஷன் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது. இதில் ஓமேகா 3 என்ற கொழுப்பு அமிலமானது நரம்புக் கலங்களின் முக்கியமான அங்கமாகும். கலங்கள் ஒன்றுடன் ஒன்று தமக்கிடையே தொடர்பு கொள்வதற்கு இது உதவுகின்றது. மனநல ஆரோக்கியம் நன்றாக பேணப்படுவதற்கு கலங்களுக்கு இடையேயான இந்த தொடர்பு ஆரம்ப அடிப்படையாக அமைகின்றது.

உயிர்ச் சத்து வி.எம்.2000

இக்குளிகைகளை நாளுக்கு இரண்டு வீதம் உட்கொண்டு வந்தால் டிப்பிரஷனை வெற்றி கொள்ளக்கூடிய அனைத்து வைட்டமின் பி உயிர்ச்சத்துக்களையும் உடல் பெற்றுக்கொள்ளும்.

மூலிகைக்கலவை-அஸ்வகந்தா பிளஸ்

மன அழுத்த அளவு மற்றும் பதற்றத்தின் அளவுகளை நெறிப்படுத்த உதவக்கூடிய பல்வேறு மூலிகைகளைச் சேர்வையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகைக் கலவையே அஸ்வகந்தா பிளஸ். மனமற்றும் உடல் ரீதியான அல்லது உணர்ச்சிவசப்படல் காரணமாக அல்லது ஏதோ ஒரு விதத்தில் மனத்தாக்கத்திற்கு அழுத்தத்திற்கு உட்படும் போது ஒருவரை நடத்திச் செல்வது உடலில் உள்ள அட்ரீனல் சுரப்பிகளாகும். அஸ்வகந்தா பிளஸ் ஆனது ஒருவரின் ஞாபகத்தையும் நிதானத்தையும் விருத்தி செய்யவும், களைப்படைந்த அட்ரீனல் சுரப்பிகளுக்கு மீள சக்தியை வழங்கி பலப்படுத்தவும், பதற்றத்தை விடுவிக்கவும், நரம்புத் தொகுதியை அமைதிப்படுத்தியும், நரம்புத் தொகுதிக்கு புத்துணர்ச்சியளிக்கவும் வேண்டிய உடல் ஆற்றலுக்கு உதவுகிறது. -
 

Attachments

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: மன அழுத்தம் விலக்கி மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ&#3

Very useful suggestion to overcome depression! thank you!
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#3
Re: மன அழுத்தம் விலக்கி மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ&#3

Useful Info.Jay.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,946
Location
Atlanta, U.S

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#6
Re: மன அழுத்தம் விலக்கி மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ&#3

பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி.
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#7
Re: மன அழுத்தம் விலக்கி மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ&am

Very useful suggestion to overcome depression! thank you!
Most welcome sis.....
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#8
Re: மன அழுத்தம் விலக்கி மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ&am

Thank u sarala.......
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#9
Re: மன அழுத்தம் விலக்கி மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ&am

Thanks kkkaaa....very usefull information...
Most welcome uma....
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#10
Re: மன அழுத்தம் விலக்கி மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ&am

பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி ஜெயா..
Nandri thenu sis....
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.