Remedies for grey hair - கிரே ஹேர்... கிரேட் எஸ்கேப்!

chan

Well-Known Member
#1
கிரே ஹேர்... கிரேட் எஸ்கேப்!

டாப் டு பாட்டம் ட்ரெண்டியாக வும் ஸ்டைலாகவும் இருந்தாலும், சில டீன்களின் பெருங் கவலை... இளநரை. ‘இது `தல'யோட சால்ட் அண்ட் பெப்பர் லுக்’ என்று என்னதான் சமாளிஃபிகேஷன் அடித்தாலும், அவர்கள் மனதின் ஓரத்தில் ஒரு நிரந்தரக் கவலையாக தங்கியிருக்கும் இந்த நரை. அதற்குத் தீர்வு சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஆர்த்தி.

காரணம் என்ன?

கூந்தலின் கருமை நிறத்துக்குக் காரணம், முடியில் இருக்கும் மெலனின் நிறமி (melanin pigment). இந்த நிறமி குறையும்போது, முடியின் நிறம் மாறுகிறது. அதற்கான காரணங்கள்...

குடும்பத்தில் யாருக்கேனும் இளநரை இருந்தால், மரபு பாதிப்பாக ஏற்படலாம்.

தைராய்டு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும் பிரச்னை உள்ளவர்கள் இளநரைக்கு ஆளாகலாம்.

விட்டமின் B-12 குறைபாடு உள்ளவர்களுக்கு முடியின் நிறம் வெள்ளையாக மாறும்.

வெண்புள்ளிகள் போன்ற சருமப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இளநிரை ஏற்படும்.

கொழுப்புச்சத்து உணவுகளை அதிகமாக உட்கொள்வது, புகை, மது பழக்கங்கள், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையும் இளநரையை ஏற்படுத்தும்.

தீர்வுகள் என்ன?!


கறிவேப்பிலை, தேங்காய், நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து, தினமும் காலை 200 மில்லி குடித்து வர, ஹீமோகுளோபின் (haemogoblin) அதிகரிக்கும். நரை முடி நிறம் மாறும்.

தினமும் வெள்ளித் தட்டில் உணவு சாப்பிட்டு வருவது, நாளடையில் பலன் தரும்.

தேங்காய், கறிவேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர, நரை முடியைப் போக்கும்.

நரைமுடி அங்கிங்கென முளைக்க ஆரம்பிக்கும் முதல் கட்டத்திலேயே மருத்துவரின் பரிந்துரையுடன் ஷாம்புகளைப் பயன்படுத்தவும்.

நிறைய நரை முடி உள்ளவர்கள், முடியின் ‘பிஎச்’ தன்மையை சேதப்படுத்தாத லோஷன்களை மருத்துவர் பரிந்துரையின்படி கேட்டு வாங்கிப் பயன்படுத்தி வர... பலன் கொடுக்கும்.

வெகு நாட்களாக இளநரை பிரச்னை உள்ளவர்கள், பக்கவிளைவில்லாத எளிய மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம்.

இளநரையில் இருந்து எஸ்கேப் ஆக...


விட்டமின் பி-12 கொண்ட உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தைராய்டு பிரச்னை கொண்டவர்கள் அடிக்கடி தைராய்டின் அளவுகளை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

மது, புகை பழக்கங்கள் அறவே கூடாது.

டீ, காபி அதிகம் எடுப்பவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்.
 
Last edited: