Renal System.

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#1
சிறுநீரகம்

கீழ்முதுகு பகுதியில், பக்கத்துக்கு ஒன்றாக முதுகுத் தண்டுக்கு இருபக்கமும் மொச்சைவடிவம் கொண்டவை சிறுநீரகங்கள்.

kidneyi.jpeg

சிறுநீரகம் ஒரு வடிகட்டி
2. இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற பொருட்களை வடிகட்டி தங்கவைத்து, பிறகு, அப்படி தங்கிப் போன அழுக்குகளைத் தண்ணீரோடு சேர்த்து சிறுநீராக வெளியேற்றுகிறது.
3. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம் நெஃப்ரான்கள் (Nephrons) உள்ளன.

kidnep.jpeg

ஒவ்வொரு நெஃப்ரானிலும் ஒரு கிண்ணம் போன்ற அமைப்பு. இந்த கி
ண்ணத்துக்கு இரண்டு சுவர்கள் – இது பௌமன்ஸ் காப்ஸ்யூல்(Bowmans Capsule).
4. கிண்ணத்துக்குள் நுழைந்து பல கிளைகளாகப் பிரியும் ஒரு சிறிய ரத்தக்குழாய். இந்த கிளைகளெல்லாம் மீண்டும் சேர்ந்து இன்னுமொரு ரத்தக்குழாயாக
உருவாகி, அது கிண்ணத்தைவிட்டு வெளிவரும். உள்நுழையும் ரத்தக்குழாய் – கிளைகள் வெளிவரும் ரத்தக்குழாய் – இவையெல்லாம் சேர்த்து க்ளாமெருலஸ் (Glomerulus)
எனப்படும்.

glom.jpeg
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#2
5. பௌமன் கிண்ணத்திலிருந்து புறப்படும் சிறுநீரகக்குழாயும், பல நெஃப்ரான்களின் சிறுநீரகக் குழாய்களும் ஒன்று சேர்ந்து, ஒரு சேகரிப்புக் குழாய்
உருவாகும். ஒரு சிறுநீரகத்தை நெடுக்காக வெட்டிப் பார்த்தால், குழிந்திருக்கும் பகுதியில், ஒரு பெரிய பை போன்ற அமைப்பு இருக்கும். இது ரீனல்
பெல்விஸ்
(Renal pelvis)ஆகும்.
renalpelvis.jpeg


6. ரீனல் பெல்விஸிலிருந்து ஒரு குழாய் புறப் பட்டு சிறுநீரகத்தைவிட்டு அதன் குழிவுப்பகுதியில் வெளிவரும். இரண்டு சிறுநீரகங்களிலிருந்தும் இப்படி
இரண்டு குழாய்கள் (யூரிட்டர்{Ureter}) – புறப்பட்டு, சிறுநீர்ப்பையில் சேரும்.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#5

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#6

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#7
கிளாமெருலஸ்ஸின் ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் பாய்ந்து அதில் இருக்கும் கனிம உப்புகள் வேதிமப் பொருட்கள் தேவையான அளவில் மட்டுமே
இருக்க வழி செய்கிறது.
8. வேண்டாத பொருட்கள் அல்லது அதிகப் படியாக இருக்கும் பொருட்கள், ரத்தத்திலிருந்து பிரிக்கப்பட்டு பௌமன் கிண்ணத்துக்குள் தள்ளப் படுகின்றன.
இவை கிண்ணம் வழியாக ரீனல் குழாய்க்குள் பாய்கின்றன.
9. பௌமன் கிண்ணத்தில் வடிகட்டப்பட்ட பொருட்கள் குழாயில் வந்து கொண்டிருக்கின்றன தேவைப்படுபவற்றை சிறுநீரகக் குழாய் சுவரின் அணுக்கள்,
மீண்டும் உறிஞ்சிக் கொள்ளும்.

kidneyfn.jpeg


10. யூரிட்டர் வழியாக சிறுநீர்ப்பையை அடையும். சிறுநீர், நிறைய சேர்ந்துவிட்டால், சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் உணர்வு ஏற்படுகிறது.
11. உடலிலும் ரத்தத்திலும் சரியான பொருட்களை சரியான அளவில் வைத்திருக்கும் முக்கியப் பணி சிறுநீரகத்தின் மூலமாகத்தான் நடக்கிறது. இப்படி
உடலுக்குள் இருக்கவேண்டிய பல பொருட்கள், இருக்கவேண்டிய விதத்தில் இருப்பது உடலின் உள்சூழல் ஆகும்.
12. உள்சூழலை சமநிலையில் வைக்க, வெயில் காலத்தில் உடலுக்குத் தண்ணீர் நிறைய வேண்டும் என்றால், தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளும். உப்பு
தேவையென்றால், உப்பை உறிஞ்சிக்கொள்ளும்.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#8
13. சிறுநீரக அணுக்களில் ரெனின்(Renin) என்றொரு பொருள் சுரக்கப்படுகிறது. இந்த ரெனின், ரீனல் குழாயில் உறிஞ்சப்படும். சோடியம் உப்புகளின் அளவைத் தீ
ர்மானிப்பதோடு, உடலின் ரத்த அழுத்தத்தை நிலைப்படுத்துவதிலும் பெரும்பங்கு ஆற்றுகிறது.
14. மூளைக்கு கீழ் உள்ள பிட்யூட்டரி(Pituitary Gland) என்னும் சுரப்பியில் இருந்து வரும் ஆன்ட்டி டையூரட்டிக் ஹார்மோன்(Anti Diueritic Hormone), அட்ரினல் சுரப்பிகளில்(Adrenal gland) சுரக்கப்படும்

kidneypituitary.jpeg


அல்டோஸ்டீரான்*(Aldosterone) ஆகிய முக்கிய சுரப்புகளும் சிறுநீரகப் பணிகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை.
உடலின் தேவைக்கேற்ப தண்ணீரையும் தாது உப்புகளையும் வெளியேற்றுகின்றன அல்லது உறிஞ்சிக் கொள்கின்றன.
15. உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகிய மூன்று வகை உணவுப் பொருட்களும் மற்றும் வைட்டமின்களும் சம நிலையில்
இருப்பதுதான் உடலுக்கு ஆரோக்கிய மானது.
அதுபோலவே நம் உடலில் பல்வேறு பொருட்களும், அழுத்தங்களும், வெப்பமும் சமநிலையில் இருக்க வேண்டும்.
நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படும் பல்வேறு உயிர்ச்சத்துக்களும், மின்னணுப் பொருட் களாகிய பொட்டாசியம், சோடியம் குளோரைடு மற்றும்
குளுக்கோஸ் போன்ற சத்துக்களும் சம நிலையில் இருக்க வேண்டும்
.
இந்த சமநிலைப்படுத்தும் பணியில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#10

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.