Rmedies for tiredness - உடல் அசதி குறைய

#1
உடல் அசதி குறைய


1. கிராம்பு, நிலவேம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அசதி குறையும்.


2. ஒரு டம்ளர் அன்னாசிபழ*ச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.


3. முருங்கை ஈர்க்கை (குச்சிகள்) தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடிக்க அசதி நீங்கும்.


4. மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 1 டீ ஸ்பூன் அளவு சாப்பிட்டுவர உடல் சோர்வு குறையும்.


5. 5 அல்லது 6 பேரீச்சம் பழங்களை எடுத்து நன்கு கழுவி அரை டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு ஊற வைத்து காலையில் ஊறிய பேரீச்சம் பழத்தையும் அந்த தண்ணீரையும் அருந்த சோர்வு குறையும்.
 

Important Announcements!