Romance Ragasiyangal - ரொமான்ஸ் ரகசியங்கள் !

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#1
ரொமான்ஸ் ரகசியங்கள் !

டாக்டர் ஷாலினி


இந்த ரொமான்ஸ் விஷயத்தில் மட்டும் சம்பந்தமே இல்லாமல் பறவைக்கும், மனிதனுக்கும் அப்படி என்ன ஒற்றுமை? அது ஏன் பாலூட்டிகள் எதற்குமே இல்லாத ஓர் அதிசய உணர்வாக, இந்த மனிதன் மட்டும் காதலிக்கிறான்? குரங்குப் பரம்பரையில் வேறு எதுவும் இந்தக் காதல் கத்திரிக்காய் சமாசாரத்தில் ஈடுபடுவதில்லையே... அப்புறம் ஏன் வானர வம்சாவழியில் வந்த மனிதன் காதலிக்கிறானாம்... பறவைகளைப் போல?!
சிம்பிள்! பறவைக்கும் மனிதனுக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை இருக்கிறது... இந்த இரண்டுக்குமே பிறக்கும் குட்டீஸ்கள் ரொம்ப காலத்துக்கு சுயமாக இயங்காமல்... பெற் றோரையே நம்பி வாழ்கின்றன. அதனால் இந்த இரண்டுக்கும் பிள்ளை வளர்ப்புச் சுமை (parental burden) மிகவும் அதிகம்.
ஆடு, மாடுகளில் எல்லாம் ஈன்ற சில கணங்களிலேயே குட்டி தானாக எழுந்து போய், தாயைக் கண்டுபிடித்து எம்பிப் பாலைக் குடித்துக் கொள்ளும். அம்மாவை ஒட்டிக் கொண்டே நடந்து சீக்கிரம் சுயமாக இயங்கப் பழகிக்கொள்ளும். ஆனால் பறவைகள்? குறைந்த எண்ணிக்கையில் சில முட்டைகளை மட்டுமே இட்டு, நாள் கணக்கில் அடைகாக்க வேண்டும். வேறு ஜந்து ஏதும் வந்து அதைத் தின்றுவிடாமல் இருக்க காவல் நிற்க வேண்டும். இப்படி, அம்மா பறவை அடைகாத்து காவல்புரிய, அப்பா பறவை வேட்டையாடி உணவைக் கொண்டு வந்து குட்டிகளுக்குப் புகட்ட வேண்டும்.
இப்படி ஒரு நாள்... இரண்டு நாள் அல்ல, அந்தக் குஞ்சு வளர்ந்து ஆளாகி, சிறகு முளைத்துத் தானாகப் பறந்து பிழைத்துக் கொள்ளும்வரை. அதாகப்பட்டது... பறவையின் பாதி ஆயுள் காலத்துக்கு தாய், தந்தை என்கிற இரண்டும் சேர்ந்தே இருந்தால்தான் குட்டிக்கு அனுகூலம். தாயோ அல்லது தந்தையோ கூடு மாறிப் போனால்... குட்டியின் கதி பரிதாபம்தான்.
இதே அமைப்புதான் மனிதர்களுக்கும். குரங்குக் குட்டிகள் பிறந்த உடனேயே தன் தாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். ஆனால், மனிதக் குழந்தைக்கு அது முடியாது. அது தலையை நிமிர்த்தி, பார்க்கவே மூன்று மாதமாகிவிடும். புரண்டு, எழுந்து, தவழ்ந்து, நடக்க ஒரு முழு ஆண்டு ஆகிவிடும். அப்புறம் அதன் மூளையைத் தீட்டி வளர்த்து, சுயமாக யோசித்து வாழ கிட்டத்தட்ட 25 வயதாகிவிடும். இத்தனை ஆண்டுகளும் அதைப் பத்திரமாக பாதுகாத்து புத்தி சொல்லிக் கொடுத்து வளர்க்க, பெற்றோர் ஒருவரை ஒருவர் பிரியாமல் இருக்க வேண்டுமே!
பறவைகளைப் போலவே அப்பா வேட்டையாடி உணவு கொண்டு வர, அம்மா பக்கத்திலேயே இருந்து வளர்த்தெடுக்க என... பெற்றோர் இருவருமே ஒன்றிணைந்து செயல்பட்டாலே ஒழிய, மனிதக் குட்டியின் கதையும் பரிதாபம்தானே!
அதனால்தான் மன முட்டல்கள் பெரிதாகிப் பிரியும் சந்தர்ப்பத்திலும், 'பிள்ளையை வளர்த்தெடுக்கணுமேனு பார்க்கிறேன்’ என்று மீண்டும் இணையும் கணவன், மனைவி எத்தனை எத்தனையோ பேர் இங்கு!
யோசித்துப் பாருங்களேன்... ஒரு ரயில் பயணத்தில் நமக்குப் பக்கத்து ஸீட்டில் உட்காரும் நபரை சகித்துக்கொண்டு இன்முகமாக பழகுவதே பலருக்கு ரொம்பக் கஷ்டம். இதில் வாழ்க்கை முழுக்க கிட்டத்தட்ட 40, 50 ஆண்டுகள் ஒரே நபருடன், ஒரே வீட்டில், அதே முகத்தைப் பார்த்துக் கொண்டு வாழ்வது எவ்வளவு பெரிய கஷ்டம்?! ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்று... காலம் செல்லச் செல்ல சகிப்புத்தன்மை தேய்ந்து போய்விட்டால், குட்டிகள் எப்படிப் பிறக்கும்? அப்படியே பிறந்தாலும் பெற்றோருக்குள் ஒற்றுமை இல்லாமல் அதனை எப்படிச் சிறப்பாக வளர்க்க முடியும்?
இன்று வளர்ந்து ஆளாகிவிட்ட 30 வயதுக்காரர்கள்கூட, பால்யத்தில் தாங்கள் கடந்த தங்கள் பெற்றோர்களின் விரோதத்தை நினைத்துப் பார்த்தால்... வருத்தமும் கவலையும் மன சஞ்சலமும் கொள்கிறார்கள். காரணம்... குழந்தையின் உடல், மனநலத்துக்கு பெற்றோரின் ஒற்றுமையான செயல்பாடும், வீட்டு அமைதியும் அவ்வளவு அத்தியாவசியம்.
அதெப்படி வெவ்வேறு பாலினம், வெவ்வேறு வளர்ப்புச் சூழ்நிலை, வெவ்வேறு குணநலம், வெவ்வேறு மூளை அமைப்பு என்று எல்லாமே வித்தியாசமாக இருக்கும் இரண்டு அந்நியர்கள் வாழ்நாள் முழுக்கச் சேர்ந்தே இருந்து செயல்பட முடியும்? நடைமுறைக்கு ரொம்ப அசாத்தியமாச்சே?!
அதிசயமான விஷயங்களைச் சாத்தியமாக்குவதுதானே இயற்கையின் அழகு! இரண்டு அந்நியர்களை இணைத்து அவர்களுக்குள் ஓர் வலிமையான பந்தத்தை ஏற்படுத்த இயற்கை ஓர் சுவாரசியமான வழியை உருவாக்கியது... அதை 'இம்பிரின்டிங்’ என்பார்கள்.
'என்னது... இம்பிரின்டிங்கா? புதுசா இருக்கே!’ என்று யோசிக்கிறீர்களா? ஆக்சுவலி இது புதுசே இல்லை... பலகாலமாக நாம் கொண்டாடி வரும் ஓர் உணர்வுக் கிளர்ச்சி. தமிழில் நாம் அதை 'காதல்’ என்று குறிப்பிடுவோம். அறிவியலில் இதை 'இம்பிரின்டிங்’ என்கிறார்கள்.
காதலை 'லவ்’ என்று சொல்லாமல், அதென்ன 'இம்பிரின்டிங்’ என்று புதிய வார்த்தை?
அந்த வார்த்தைக்குள் ஒரு விஷயம் இருக்கிறது!


 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#2
உன்னைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும், ரசிக்க வேண்டும் என்று எத்தனையோ ஆசைகளை மனதில் கொப்பளித்து வெடிக்கச் செய்யும் இந்தக் காதல்... அண்ட சராசரத்தில் மிகச் சில உயிரினங்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் ஓர் அரிய அனுபவம். இப்படி அரிதாக இருப்பதால்தான், இதை நாம் ரொம்பவும் ஸ்பெஷலான ஓர் உணர்வு என்று கொண்டாடுகிறோம். எந்த அளவுக்கு ஸ்பெஷல் தெரியுமா? வாழ்நாளில் காதல் என்கிற உணர்வை ஒரு முறைகூட அனுபவித்திராத நபரை, 'அப்நார்மல் ஆசாமி' என்று முத்திரை குத்தும் அளவுக்கு!'ஏன் அப்படி? காதல் என்கிற உணர்வை அனுபவிக்காதது மிகப்பெரிய குற்றமா?' என்று கேட்க உங்களுக்குத் தோன்றுகிறதா?காதல் வயப்படாமல் இருப்பது குற்றம் மட்டும் அல்ல, அது மனித இனத்துக்கே ஆபத்தான ஒரு தன்மை என்றால், ஆச்சர்யமாக இல்லையா?! ஒரு தனி மனிதனோ, மனுஷியோ காதலிப்பதினால் மனித இனத்துக்கு என்ன ஆதாயம்? அட, மனிதர்களை விடுங்கள்... உலகில் காதலிக்கும் அத்தனை ஜீவன்களுக்கும், இந்தக் காதலினால் கிடைக்கும் பயன்கள்தான் என்ன?இதைப்பற்றி அறிந்து கொள்ள... அன்டார்டிகா பனிப் பிரதேசத்தில் வாழும் 'எம்பரர் பென்குவின்' எனும் பறவையை இங்கே உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.இது எப்படிக் காதலிக்கும் தெரியுமா?குளிர்காலத்தின் துவக்கத்தில், ஆண் பென்குவின்கள் எல்லாம் ஒன்று கூடி, 'லெக்கிங்’ (Lekking) செய்யும். அதாவது, 'என்னைப் பார், என் அழகைப் பார்’ என்று அவையெல்லாம் வரிசையாக நின்று, பெண்களைக் கவரும் நடவடிக்கையில் ஈடுபடும். இதைப் பார்த்ததும்... பெண் பென்குவின்கள், குடுகுடு என்று ஓடி வந்து, ஆண்களோடு டமாரென மோதி விளையாடும். கொழுகொழுவென இருக்கும் ஆண்களைத்தான், பெண் பென்குவின்களுக்குப் பிடிக்கும். அதற்காகத் தான் இந்த மோதல் விளையாட்டே. மோதும்போதே வாட்டசாட்டமான குண்டு புஸ்காவை, ஒவ்வொரு பெண் பென்குவினும் தனக்கெனத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும். உடனே இரண்டும் ஓரம் கட்டி, பலத்த ஓசை எழுப்பியபடி கொஞ்சி, கூடி மகிழும்!இது முடிந்த சில வாரங்களில் ஒரே ஒரு முட்டையை இடும் பெண், இட்ட சூட்டோடு அதை அப்படியே அப்பா பென்குவினின் காலடியில் சமர்ப்பிக்கும். அது, தன் அலகால் மெள்ள முட்டையை நகர்த்தி, தன் காலில் ஏந்தி, தன் அடி இறக்கைகளால் அப்படியே பொத்தி வைத்துக் கொள்ளும். உடனே 'டாடா பை பை’ என்று சமுத்திரத்தில் குதித்துவிடும் அம்மா. கடும் குளிரில் ஒருவரை ஒருவர் ஒண்டிக்கொண்டு நெருங்கிய வட்டமாக அப்பா பென்குவின்கள் அப்படியே நின்றுகொண்டிருக்க, அம்மா பென்குவின்கள் எல்லாம் கடலில் கிடைக்கும் மீன்களை வேக வேகமாக வேட்டை ஆடும். ஒரு நாள், இரண்டு நாளைக்கு அல்ல... மொத்தமாக இரண்டு மாதங்களுக்கு!
ஒட்டுமொத்த வேட்டையும் முடிந்த பிறகு, எல்லா அம்மா பென்குவின்களும் கடலில் இருந்து எழுந்தருளி... அண்டார்டிகா மண்ணில் காலை வைக்கும் போதே, அப்பா பென்குவின்கள் எல்லாம் கூவ ஆரம்பித்துவிடும். பதிலுக்கு கூவிக்கொண்டு அம்மா பென்குவின்கள் தத்தித் தத்தி நடந்து போய் தன் துணையை மிகச் சரியாகக் கண்டுபிடிக்கும்.ஒரே ஒரு தடவைக் கூடி, கொஞ்ச நாள் மட்டுமே பழகிய அந்த ஆணை அவ்வளவு பெரிய கூட்டத்திலும் இந்தப் பெண் எப்படி அடையாளம் கண்டுபிடிக்குமாம்?அதில்தான் சூட்சமமே இருக்கிறது. கொஞ்சம் நாள் என்றாலும், ரொம்பவும் நெருக்கமாக பழகியதால், அந்த ஆணின் குரல் ஒலியின் தனித்துவம் அந்த பெண்ணின் மனதில் ஆழப் பதிந்திருக்கும். அதைத்தான் 'இம்பிரின்டிங்’ என்கிறோம். அதேபோல் அந்த ஆணின் அம்சங்கள் எல்லாமே அந்தப் பெண்ணின் மூளையில் ஆழப் பதிந்திருப்பதால், அத்தனை ஆண்களிலும் தன் துணை எது என்று மிகச் சரியாகக் கண்டுபிடித்து, தன் இணையை அடையும். இத்தனை நாளும், குளிரில் கொலை பட்டினியாக கிடந்து, கிட்டத்தட்ட ஒரு தவம் மாதிரி தன் முட்டையை அடைகாத்து வந்ததால் அந்த அப்பா பென்குவின் மெலிந்து எலும்பும் தோலுமாக ஆகியிருக்கும். இந்த இரண்டு மாத பட்டினியையும் மீறி, குட்டிக்குத் தேவையான உஷ்ணத்தை தர வேண்டுமே என்றுதான்... கொழுப்பு அதிகமாயிருக்கும் 'குண்டு புஸ்கா'வாய் பார்த்துத் தேர்ந்தெடுத்ததே! இப்போது ஒல்லி பிச்சானாகிவிட்டிருந்தாலும், அந்த ஆணின் காலடி றெக்கைக்குப் பின்னால், ஒரு பென்குவின் குஞ்சு... ஆவலாகக் காத்திருக்கும். அதை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, களைப்பாக நடந்து போய் கடலில் குதித்து, தன் உபவாசத்தை முடித்துக்கொண்டு விடும் அப்பா.
அம்மா பென்குவின் கூப்பாடு போட்டு, அந்தக் குஞ்சை இழுத்துப் பிடித்து, இத்தனை வாரங்களாக தன் இரைப்பையில் சேகரித்து வைத்த தீனியை எல்லாம் கக்கி, குஞ்சின் வாயில் புகட்டும். குட்டி 'மடக்மடக்’ என்று விழுங்கி, 'கடகட’ என்று வளர்ந்து, சில வாரங்களிலேயே 'கிடுகிடு’ என்று ஓட ஆரம்பிக்க, அம்மா - அப்பா பென்குவின்கள் அதைத் துரத்திக்கொண்டு போய் சமுத்திரத்தில் தள்ளி, நீந்துவதற்கும், வேட்டையாடுவதற்கும் கற்றுத் தரும். இப்படியாக அண்டார்டிகா பனிப்பாறைகளில் இன்றும் வெற்றிகரமாக உயிர்வாழ்கின்றன எம்பரர் பென்குவின்கள்.இப்போது சொல்லுங்கள்? இந்த அம்மா பென்குவினும் அப்பா பென்குவினும் ஒன்றின் மீது மற்றொன்று 'இம்பிரின்ட்' ஆகவில்லை, இரண்டுக்கும் இடையே 'கெமிஸ்ட்ரி' ஏற்படவில்லை என்றால்... இவை இவ்வளவு வெற்றிகரமாக இனவிருத்தி செய்ய முடியுமா?இதே விதிதான் மனிதர்களுக்கும்! ஆணும் பெண்ணும் இம்பிரின்ட் ஆகாமல் எத்தனை குட்டிகள் பெற்றாலும் பயனில்லை. காரணம், பெற்றோரின் ஒருங்கிணைந்த கவனம் இல்லாவிட்டால்... மனிதக் குட்டி தடம் மாறிப் போய் விடும் ஆபத்து அதிகம். மற்ற விலங்குகளுக்காவது ஊடகங்களின் உபத்திரவம் இல்லை. ஆனால், மனிதக் குட்டிக்கு என்னதான் அபார மூளை இருந்தாலும், அதை நல்வழிப்படுத்த பெற்றோரின் முழு நேரக் கவனம் தேவை. அப்படி முழு நேரக் கவனம் செலுத்த... பெற்றோர்களுக்குள் நிறைய இம்பிரின்டிங் தேவை. காதல், ரொமான்ஸ், செக்ஸ் எல்லாம் தேவை.
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#5
Imprint-Impress (each other)
 
Joined
May 21, 2012
Messages
21
Likes
25
Location
France
#7
அற்புதமான தகவல் !.. நம்பலாம் ,"யாருக்கு முக்கியத்துவம், ?,.ஆணுகா,? பெண்ணுக்க?..... அப்பாக்க?... அம்மாக்கா ? அப்டீன்னுலாம் .,, debate பண்றத விட்டுட்டு ,இந்த ஐய்ந்தறிவு .,,பறவைங்க ., கிட்டேந்து ., கத்துக்கணும்., எப்படி ரெண்டுபேருமே ., equalla ., resposbilities ஷேர் பண்ணிக்கிட்டு பாசமும் .,, கொறையாம, romaance ம் கொறையாம., நடந்துகிதுங்க.., ன்னு ., excelent
creatures of தி almighty , அதுங்களுக்கு obedience பாருங்க ...!. இதுபோல நிறைய விஷயங்கள் ., அன்பை பகிர்ந்து ., கிட்டு ,discipline ன்னோட வும் சந்தோஷமாவும் வாழ,, நிறைய.,, படைப்புக்கள் ., இருக்கு., இந்த., பூமியிலே., நல்லத கத்துக்கனும்ன்னு ., நேனேச்சா., ., எங்கேயும் இருக்கு., நம்ப தேடற attitude positive ஆ இருந்தா இந்த., அற்பமானவைகளும் ., அறிவுபுகட்டும்., " நம்ப அன்ன ., பறவைபோல இருந்தா போதுங்க.,..
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.