Saffron uses and benefits (குங்குமப் பூ)

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#1
இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ


thumb_10ht89.jpg

  • பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.
  • கர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
  • குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் அழுக்குகள் நீங்கும்.
  • அதிக வயதைக் கடந்தும் பூப்பெய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைவார்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine April 2014. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#2
தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும். குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.

குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும். அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#3
Bit05.jpg

குங்குமப் பூவின் மகிமையை பெண்களைக் கேட்டால் சொல்வார்கள். நம் நாட்டிலும், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளிலும் குங்குமப் பூ பயிரிடப்பட்டு வருகிறது.
[TABLE="align: right"]
[TR]
[TD="align: center"][/TD]
[/TR]
[/TABLE]

காஷ்மீரில் பயிராகும் குங்குமப் பூ, மென்மையிலும், சிவப்பிலும், மணத்திலும் மிகச் சிறந்ததாக உள்ளது. ஈரானில் விளையும் குங்குமப் பூ தேனைப் போல மணக்கும். ஸ்பெயின் நாட்டுக் குங்குமப் பூவும் நல்ல மணம் வாய்ந்தது.


கிரேக்க நாட்டினரும், ரோமாபுரி மக்களும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திவரும் குங்குமப் பூ, இந்தியாவுக்குக் கடல் வணிகர்கள் மூலம் பரவியிருக்க வேண்டும் என்று `ராஜதரங்கிணி’ என்ற நூல் கூறுகிறது.


காஷ்மீரைத் தவிர உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குமாபுமிலும், உத்தரகாண்டிலும் இது பயிராகிறது. கி.மு. 750-ம் ஆண்டுக்கு முன்பே நம் நாட்டுக்குக் குங்குமப் பூ வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்பது பழம்நூல்கள் மூலம் தெரியவருகிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து சிறிது தொலைவில் உள்ள, பண்டைய காலத்தில் `பத்மபூர்’ என்றும் தற்போது `பாம்பர்’ என்றும் அழைக்கப்படும் கிராமத்தில் விளையும் குங்குமப் பூ மிகவும் பிரசித்தி பெற்றது.


சுமார் ஐயாயிரம், ஆறாயிரம் அடி உயரத்தில் இருக்கும் மலைப் பிரதேசங்களில், குளிரும் வெயிலும் ஒருங்கே கூடிய பள்ளத்தாக்குகளில் குங்குமப் பூ அமோகமாய் தளதளவென்று விளைகிறது. இதைத் தவிர மூவாயிரம், நான்காயிரம் அடி உயர்ந்த பிரதேசங்களில் 40-ல் இருந்து 60 அங்குல மழையும், குளிர்காலத்தில் பனியும் பெய்யும் இடங்களில் எல்லாம் குங்குமப் பூ பயிராகிறது.


குங்குமப் பூ செடி உயரமாக வளர்வதில்லை. ஆனால் ஐந்தாறு ஆண்டுகள் வரை குங்குமப் பூ இதில் மலர்கிறது. வெங்காய வடிவத்தில் உள்ள குங்குமப் பூ கிழங்கை பூமியில் நட்டு இதைப் பயிராக்குகிறார்கள். இந்தக் கிழங்கை மக்கள் உண்ணவும் செய்கிறார்கள்.


காஷ்மீரில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதக் கடைசியில் குங்குமப் பூக்களைச் சேகரிக்கும் வேலை தொடங்குகிறது. கைகளாலே பறித்து வெயிலில் மூன்று, நான்கு நாட்கள் உலர வைக்கிறார் கள். நன்றாக உலர்ந்த பிறகு மலரில் இருந்து இதழ் நரம்புகளைப் பிரித்தெடுக்கிறார்கள். நரம்பின் மேல்பாகம் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது உயர்தரமான குங்குமப் பூவாகக் கருதப்படுகிறது.-Senthilvayal
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#4
ஹாய் சக்தி, சுமதி,
குங்குமப்பூ பற்றி அருமையான பதிவு. குழந்தை சிவப்பாய் பிறக்க கர்ப்பிணிகளுக்கு குங்குமப்பூ கொடுப்பார்கள் என்பதை தவிர எதுவும் அறியாத எனக்கு இதை படிக்கையில் நிறைய விஷயம் தெரிந்தது. எப்போதும் போல நல்ல தகவல்கள் தந்து அசத்தும் தோழிகள் இருவருக்கும் பாராட்டுக்கள்.

அனிதா சங்கர்.
 

vaishnnavi

Citizen's of Penmai
Joined
Apr 22, 2014
Messages
502
Likes
1,197
Location
chennai
#9
இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ  • பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.
  • கர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
  • குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் அழுக்குகள் நீங்கும்.
  • அதிக வயதைக் கடந்தும் பூப்பெய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைவார்
இதைப் படிச்சிட்டு எல்லா gynacologists -ம் சண்டைக்கு வரப்போறாங்க :lalala:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.